Thursday, September 17, 2015

திரைக்கதை எழுதுவது ஒரு கலை அல்ல அது தொழில்நுட்பம் V scene sequence screen play technology V

திரைக்கதை எழுதுவது ஒரு கலை அல்ல அது தொழில்நுட்பம் V 

சீன் சிக்வன்ஸ் [காட்சிகளின் தொடர்சி  Raja Rani Tamil Movie Case Study ]

சமிபத்தில் வந்த திரைப்படங்களில்  பாசாங்கு இல்லாத கதை, தெளிவான திரைக்கதை,  தவறில்லாத ஷாட் ,கேமிரா கோணங்கள் , எடிட்டிங் என்று பார்த்தால் அட்லியின்  ராஜா ராணி படத்தை கூறலாம். இந்த படத்தின் முதல் சீன் சிக்வன்ஸ் என்பது நயந்தரவுக்கும், ஆர்யாவுக்கு நடக்கும் திருமணம். அதனை  டைரக்டர் அட்லி கீழ் வருமாறு காட்சிகளாக பிரித்து இருப்பார். இந்த சீன் சீக்வன்ஸ் சரியாக 5 ல் இருந்து 6 நிமிடங்கள் திரையில் காட்சிப்படுத்தப்ட்டு உள்ளது.

படம் :ராஜா ராணி
டைரக்டர் : அட்லி

சீன் சிக்வன்ஸ் 1 : திருமண நிகழ்வு

கிருஸ்துவ தேவாலையம் [வெளி -உள் ]
[s1 ] மனமகனை காணமல் சந்தானமும் அவரின் நண்பர்களும் தேடுதல்.

[s2]தம் அடிக்கப்போன மணமகன் திரும்பி வருதல்

[s3] மணமகளும் அவளின் தந்தையும் காரில் வருதல்

[s4]மணமகளும் அவளின் தந்தையும் கிருஸ்துவ தேவாலையம் உள் நடந்து செல்லுதல்

[s5]பாதிரியார் திருமண ஏற்பாடுகளை செய்தல் [மணமகன்
திருமணத்துக்குசம்மதம் கூற நிறைய யோசிப்பான்..., மணமகள் சூரியா என்று வேறு பெயரை கூறி தடுமாறுவாள்]
[s6] திருமணம் முடிந்து இருவரும் வெளியே வருதல்.


இந்த சீன் சிக்வன்ஸ் ரசிகனுக்கு கூறும் விவரங்கள் என்ன? காட்சி 2 ல் திருமணம் நடக்கும் நேரத்தில் தம் அடிக்க செல்லும் ஆர்யாவின் மனநிலை..., காட்சி 5 ல் பாதிரியாருடன் திருமணத்துக்கு சம்மதம் கூற தயங்கும் ஆர்யாவின் மனநிலை..., அதே காட்சியில் வேறு ஒருவனின் பெயரை கூறும்  நயன்தாராவின் மனநிலை...., இவை எல்லாம் சேர்த்து இருவருக்குமே திருமணத்தில் விருப்பம் இல்லை என்பதை காட்டுகின்றது அல்லவா?


இருவருக்குமே திருமணத்தில் விருப்பம் இல்லை என்றால் என்ன காரணமாக இருக்கமுடியும் என்ற கேள்வியை  ரசிகன் தன் மனதில் எழுப்ப முடிகிறது அல்லவா? அது தானே இந்த சீன் சிக்வன்சின் வெற்றி!

இந்த படத்தின்  பிற முக்கிய சீன் சிக்வன்ஸ்களை பற்றியும் ஆராய ஆர்வம் வந்து விட்டதே! நான் என்ன செய்ய? சரி  ஆர்வத்தை கட்டுப்படுத்திக்கொண்டு இன்னும் ஒரு Hollywood படத்தை பற்றி (எல்லாருக்கும் தெரிந்த படம் தான் )  அடுத்த அத்தியாயத்தில் பார்க்கலாமா?

தொடரும்

 previous Chapters :

http://vansunsen.blogspot.in/2015/09/i_17.html
http://vansunsen.blogspot.in/2015/09/ii-screen-play-is-not-art-but.html
 http://vansunsen.blogspot.in/2015/09/iii-screen-play-is-not-art-but.html 
http://vansunsen.blogspot.in/2015/09/iv.html

No comments: