Thursday, July 31, 2014

தீக்குளித்த செங்கொடி-தமிழச்சி-நம் தங்கையின் கதை அத்தியாயம் 3 Fired Sengodi True Story Chapter 3

தமிழச்சி 


நம் தங்கையின் கதை

அத்தியாயம் 3

நான் முன்பு முன்னுரையில் எழுதியது போன்று வினவு தளத்தின் நம் தங்கை பற்றிய ஒரு கட்டுரையீன் பீன்னுட்ட பகுதியில்  எனது நம் தங்கை பதிவுகளை  பதிக்க முயன்றேன். வினவு அதனை வெட்டி எறிந்து விட்டது.

தீக்குளித்த செங்கொடி மூட்டிய தீ! நெஞ்சை உலுக்கும் நேரடி ரிப்போர்ட்!! படங்கள்!!!
http://www.vinavu.com/2011/08/29/senkodi/

இக் கட்டுரைக்கு தொடர்பு உடைய என் பதிவுகளை வெட்டி எறியும் அளவுக்கு வினவுக்கு வந்த கோபத்துக்கு காரணம் என்னவாக இருக்க முடியும் ? வினவு கட்டுரையீன் இருதியில் அவர்கள்[வினவாளர்கள்] நம் தங்கைக்கு அஞ்சலி செலுத்தும் போது கூறும் வார்த்தைகளை பார்ப்போம் :


 
தோழர் செங்கொடி சென்று வாருங்கள்,

உங்களைப் புரிந்து கொண்ட தோழர்கள்

பலர் இங்கிருக்கிறார்கள், உயிரைக் கொடுத்து நீங்கள்

எழுப்பியிருக்கும் கோரிக்கையை அவர்கள் நிறைவேற்ற

போராடுவார்கள். உங்கள் தீக்குளிப்பு அந்தப் போராட்டத்தின்

மீது ஒரு நெருப்பாய் பற்றவைக்கும், போய் வாருங்கள்!


உண்மையில் வினவாளர்களுக்கு  சிறிதாவது நம் தங்கை மீது, தமிழர் மீது அன்பு ,பாசம் இருபின் ஒருபுறம்  அஞ்சலி செலுத்திக்கொண்டு மறுபுறம்  நம் தங்கை மீதான என் பதிவுகளை வெட்டி எறிவார்களா?  

 
தோழன்மையுடன்   ,
கி.சிவகார்த்திகேயன்