Saturday, January 31, 2015

How to write like Saru தேகம் எழுதுவது எப்படி ? பாகம் 3




தன் வாழ்க்கையையே குடிப்பது ,பிச்சைபெற்றும் குடிப்பது ,பிச்சைபெற்றும் வெள்ளைக்காரன் சரக்கை மட்டுமே குடிப்பது அதன் பின் இணைய உரையாடலில் பெண்களுடன் வக்கிரமாக புணர்வது என்ற உன்னதமான கொள்கைகளுடன் வாழும் வக்கிர எழுத்தாளனுக்கு ,வாழ்க்கையை தினம் தினம் சிரித்துக்கொண்டே ஆனால் கடின உழைப்புடன் கழிக்கும் ,12 மணி நேரத்துக்கு மேல் வேலை செய்யும் தேனீர் கடை சிறுவனின் வாழ்க்கை எல்லாம் எச்சமாகத்தான் தெரியும். எனக்கு ஏனோ கற்றது தமிழ் படத்தில் திரு ராம் காட்சி படுத்தும் ஒரு உணர்வு பூர்வமான காட்சி தான் சாருவை நினைக்கும் போது நினைவுக்கு வருகின்றது. இரவு வரும் காரை வழிமறித்து கற்றது தமிழ் பிரபாகரன் BPO ஊழியரிடம் போசும் காட்சித்தான் அது.


தொடரும் .....

How to Write like Saru தேகம் எழுதுவது எப்படி ? பாகம் 2

தேகம் எழுதுவது எப்படி ? பாகம் 2




விளிம்புநிலை மனிதர்கள் குற்றவாளிகளாக தான் இருப்பார்கள் என்று தமிழர்களின் பொது சிந்தனைக்கு காட்சி படுத்திய பெருமை சாருவையும் ,செல்வராகவனையுமே சேரும். விளிம்பு நிலை மக்களும் உழைப்பாளிகள் தான் என்று போன தலைமுறை இலக்கியத்திலேயே காட்சி படுத்திய ஜெயகாந்தன் போன்றவர்கள் சாருவுக்கு கோமாளிகளாகவே தெரிவார்கள். வழக்கு எண் 18/9 என்ற படம் காட்டும் படிமங்களும் ,தேகம் காட்டும் விகற்பங்களும் நேர் எதிரானவை. முன்பே கூறியது போன்று தேகமும் ,புதுப்பேட்டையும் வக்கிர இலக்கிய கூட்டாளிகள் என்றால் JK வின் படைப்புகளும் ,பாலாஜியின் வழக்கு எண் 18/9 என்ற படமும் வாழ்வின் உன்னதமான ஆனால் வலிமிகுந்த ஏடுகளை காட்சிபடுத்தும் இலக்கிய வகைமைகளை சாரும் அல்லவா சாரு?


தொடரும் .....

How to write Novel Like Saru தேகம் எழுதுவது எப்படி ? பாகம் 1

தேகம் எழுதுவது எப்படி ? பாகம் 1



பின்நவினத்துவம் ஆராதிக்கும் விளிம்புநிலை மனிதர்களை [குற்றவாளிகளை] பற்றி நாவல் எழுதவது எப்படி என்ற கேள்வியுடன் தொடங்கும் இந்த பதிவுக்கு செல்வதற்கு முன்நிபந்தனையே தனுஷ் ரவுடியாக நடித்த செல்வராகவன் படமும் ['புதுப்பேட்டை'] பாலியல் சார்ந்த கெட்டவார்த்தைகளை பற்றிய அறிவின் அறிதலுமே ஆகும். தேகத்தை புதுப்பேட்டையின் மற்றும் ஒரு பிரதி என்றால் சாரு நிவேதிதா- விமர்சகர் வட்டத்தை சேர்ந்த நண்பர்கள் நம்புவீர்களா ? என்ன செய்வது குமுதத்தில் உள்ள ஆறு வித்தியாசத்தை போன்றே 69 [பாலியல் குறியீடு ] ஒற்றுமைகளை எம்மால் சாருவுக்கு சமர்பணம் செய்ய முடியும் ! மேலும் இரண்டாம் நிபந்தனையாக தேவை படுவது என்னவென்றால் மின்னஞ்சல், காதல் கடிதங்கள் , இணைய பில்கள் , EB-பில்கள் போன்றவையே !


குறிப்பு : தேகம் நாவலை படிக்க கொடுத்த நண்பன் சாருவிடம் வதைபடுவானாக!


தொடரும் ......

Friday, January 23, 2015

சென்னைப் புத்தகக்காட்சியில் அன்று: Chennai Book fare on 20th Jan,2015

சென்னைப் புத்தகக்காட்சியில் அன்று: Chennai Book fare on 20th Jan,2015

தலைகீழான நூழைவில் நான் மாட்டிக்கொண்டது காலச்சுவடு மற்றும் பெருமாள் முருகனிடம் . புத்தகம் வாங்க வைத்து இருந்த பணம் எல்லாம் கீழ்கண்ட புத்தகங்கள் வாங்கியதால் கரைய பட்டிக்காட்டார் மிட்டாய் கடையை வேடிக்கை பார்ப்பது போன்று மீதி கடைகளை வேடிக்கை பார்த்தபடியே சென்றேன் .

[1] ஆலவாயன் நாவல் -பெருமாள் முருகன்
[2] அர்த்த நாரி நாவல் -பெருமாள் முருகன்
[3]ஏறுவெயில் நாவல் -பெருமாள் முருகன்
[4]நிழல்முற்றம் நாவல் -பெருமாள் முருகன்
[5]கூளமாதாரி நாவல் -பெருமாள் முருகன்
[6]சாதியும் நானுன் கட்டுரை -பதிப்பாசிரியர் பெருமாள் முருகன்
[7] கெட்ட வார்தை பேசுவோம் கட்டுரை – பெருமாள் முருகன்
[8]தோழர்களுடன் ஒரு பயணம் – அருந்ததி
[9] இராஜாராஜா சோழனின் காந்தளூர் சாலை போர் பற்றிய ஒரு நூல் 

என்ன தான் பெருமாள் முருகனின் தீவிர வாசகராக நான் இருந்தாலும் என்னை மிகவும் ஈர்த்து கிழைக்காற்று கடையில் வாங்கிய தோழர்களுடன் ஒரு பயணம் – அருந்ததி புத்தகமும் ,வேறு ஒரு கடையில் வாங்கிய இராஜாராஜா சோழனின் காந்தளூர் சாலை போர் பற்றிய ஒரு நூலும் தான்.

Monday, January 19, 2015

Tholkuti E-Publishing பதிப்பகம் : எமது கன்னி முயற்சி

பதிப்பகம் :  எமது கன்னி முயற்சி 

தமிழ் கூறும் உலக தமிழ் மக்களுக்கு எனது வணக்கங்கள். இன்றைய  அரசியல்,சமுக ,பண்பாட்டு சூழலில் எழுத்துலகின் பங்கு எம்மை  சிந்திக்க வைக்கின்றது. தமிழ் உலகில் எழுத்து எழுத்து போதுமானது தானா?  ,சமுக சிக்கல்களை எதிர்கொள்ளும் அளவிற்கு போதுமானது தானா? ,என்று எல்லாம் யோசிக்கையில் நாமே நல்ல எழுத்துகளை பதிபித்தால் என்ன என்று தோன்றியது. பதிப்பகம் என்றால் அலுவலகம் ,அச்சு இயந்திரம் ,பணி ஆட்கள் போன்ற விடயங்களுக்கு அதிக பொருள் செலவு ஆகுமே என்று பயப்பட தேவை ஏதும் இல்லாத மின் பதிப்பகம் போன்ற அமைப்பு எமக்கு கைகொடுக்கும் என்று நினைக்கின்றேன். பேப்பர் ,மை செலவு இல்லாத ,மார்க்கெட் செய்வதற்கு  விளம்பர செலவு செய்ய தேவை இல்லாதா மின் பதிப்பக[e-publishing] முயற்சி இது.

என்ன பெயர் வைக்கலாம் பதிப்பகத்துக்கு ? என்ற கேள்வியுடன் தினம் தினம் வாழ்வை நகர்தியவன் இன்று பெற்ற பதில் தான் "தொல்குடி மின்  பதிப்பகம்"[Thol kuti   e-publishing].  புத்தகங்களை வாசகர்களுக்கு அனுப்பும் முறை மிக எளிதானது. புத்தகம் வேண்டுவோர் எமது வங்கி கணக்கிற்கு பணம் செலுத்தினால் புத்தகம் உடனே ஈமெயில் மூலம் அனுப்பி வைக்கப்படும்.

 விரைவில் நூல் வெளியீடு இணையத்தில் !


அன்புடன் ,

தொல்குடி மின் பதிப்பகம் சார்பாக 
கி.செந்தில்குமரன்  
19, January 2015
Chennai

Tuesday, January 13, 2015

எழுத்தாளர் பெருமாள்முருகன் அறிக்கை தொடர்பாக [Regarding Writer Perumal Murugan Announcement ]

எழுத்தாளர் பெருமாள்முருகன் அறிக்கை தொடர்பாக :



மனிதன் இயற்கையில் தனியானவன் கிடையாது. சமுகமயம் ஆக்கப்பட்டவன். IT துறை சார் ஊழியர்கள் வேலை இழக்கும் போது அடையும் மன நெருக்கடி , பெமு இன்று உணரும் தனிமை இதற்கு எல்லாம் மூல காரணம் இன்றைய நாகரிக மனிதர்கள் தம்மை தனிமை படுத்திக்கொண்டு தீவுகளாக வாழ்வது தான் . Let them socialize ! அப்படி என்ன தவறாக இறைவனை பற்றி எழுதப்பட்டு உள்ளது மாதொருபாகனில் ? நாவலை முழுமையாக படிப்பவருக்கு , அத் தம்பதிகள்[காளி-பொன்னா] குழந்தை பேறுக்காக அபாயகரமான சுற்றுதலை தி.கோடு மலையில் செய்யும் போது அடையும் மன உணர்வுகள் காய்நத மனதையும் ஈரமாக்குமே ! நான் கதையில் உள்ஆழ்ந்தபோது காளி-பொன்னா ஆகியவர்கள் இருவரையும் சிவனும் -சக்தியுமாகத்தான் நான் சிந்தனை செய்தேன் . நாத்திகனாக் இருந்த என்னை சிவன் மீது பக்தி ஏற்பட செய்தது இந்நாவல் [மாதொருபாகன்] தான் .சிவனுக்கும் ,சக்திக்கு பிறந்த முருகனின் பிறப்பு இயற்கையில் நடைபெறாதது , முருகனின் கருபிண்டத்தை கார்திகை மகளிர் புவியுலகில் பெற்று கொண்டது , பின்பு சக்தி அக்கருபிண்டங்களை ஒருங்கினைத்து ஆறுமுகனாக மாறியது இவை எல்லாம் அந்நாவல் காட்டிய ஆனால் நாவலில் வெளிப்படையாக இல்லாத படிமங்கள். என் தனிப்பட்ட வாழ்வில் சிவனின் மீது பற்றுடன் மதசார்பற்ற ஹிந்துவாக வாழ்வதே இன்று கேள்விக்குறியாவதால் , இனி என்ன மனதில் உள்ள சிவனையும் ,எதார்தத்தில் ,உண்மையில் சிவனின் புகழ் பாடும் இந்த மாதொருபாகன் நூலையும் எரிக்கத்தான் போகின்றேன் திருசெங்கோடு மலை ஏறிச்சென்று.

pk என்ற திரைபடத்தில் வெளிகிரகவாசியாகிய நாயகன் கேட்பது போன்று கூட கடவுள் மீது எக் கேள்வியும் எழுப்பாத இன் நாவலில் உள்ள ஒரே குறைபாடு திருச்செங்கோட்டை களமாக கொண்டு பதினான்காம் நாள் திருவிழாவையும் [ carnival ]சமுகத்தில் நடைபெறும் விதிவிலக்கான இருதி காட்சிகளையும் கதையாசிரியர் நிகழ்தியதே ![[கள்ளக்காதல் மற்றும் பிற பாலியல் குற்றங்கள் நிகழாத  ஊராக அவ்வூர் இருக்க எனது வாழ்த்துக்கள் ]   ஊர் ,சாதி பெயர் இன்றி எழுதப்பட்ட ஆனால் வலிமையான் பூக்குழி நாவல் போன்று பொதுமைபடுத்த பட்டு இருப்பின் நன்றாக இருந்து இருக்கும். பிரச்சனையில் நகைமுரண் என்னவென்றால் இக்கதையில் நான் சென்சார் செய்யபட்ட வேண்டிய காட்சிகள் என்று உணர்ந்த பக்கங்கள் ஆயிரக்கணக்கில் பிரதி எடுக்கபட்டு ஊர் முழுவதும் விநியோகம் செய்யபட்டதே ! இனி பெருமாள் முருகனே நினைத்தாலும் இந்நாவலை மட்டும் அல்ல ,அவரின் என் நாவலையும், எந்த எழுத்தையும் வாசகர்களிடம் இருந்து நீக்கவோ ,தடை செய்யவோ முடியாது. எழுத்து எழுதப்பட உடன் அதன் எழுத்தாளன் மரணிக்கின்றான் அவன் எழுத்து மட்டுமே வாழும் எனற நவினத்துவ கருத்தாக்கதிற்கு ஏற்ப இன்னும் ஆயிரம் ஆயிரம் ஆண்டுகள் கழித்தும் பெமுவின் எழுத்துக்கள் உயிர் வாழும் . ஒரு பிரதி கூட மிஞ்சாமல் அனைத்து பிரதிகளையும் எரித்து நூலின் கருத்துகளை மறைக்க இது ஒன்றும் சமண மத சுவடிகள் அல்ல !

Saturday, January 10, 2015

ஒரு எழுத்தாளரின் உள் முகம் : பெமுவின் நல்கை முரண் Inner Face of the writer Perumal Murugan

ஒரு எழுத்தாளரின் உள் முகம் : பெருமாள் முருகன்  நல்கை முரண் 
--------------------------------------------------------------------------------------------



ஒருபக்கம் போர்ட் நிறுவனத்தின் , டாட்டா நிறுவனத்தின் கொடுங்கரங்கள் ஏழை எளிய இந்திய மக்களின் வாழ்வு ஆதரங்களை அபகரிக்க மறுபக்கம் பெமு போன்ற முன்னாள் புரட்சியாளர்கள் அந்நிறுவனங்க்ளுடன் சமரசம் செய்துகொள்ள அதை பார்த்துக்கொண்டு எல்லாம் நாம் சும்மா இருக்க முடியாது.



காசு பெறுவது என்பதற்கு நாகரிகமான வார்த்தை நல்கை என்று நான் அறிவேன் . ஆனால் மக்கள் வாழ்வை அழிக்கும் டாட்டா ,போர்ட் போன்ற நிறுவனங்க்ளிடம் நல்கை பெறுவதை அநாகரிகமான வார்த்தையில் காசு பெறுவது என்று தானே கூற முடியும் ? நூறு கணக்கான ஏக்கர் விளைநிலங்களை போர்ட் அபகரிக்க , பல ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பு இந்திய இயற்க்கை வளங்கள் டாட்டா வால் கொள்ளை அடிக்கபட அதன் காரணமாக பழங்க்குடி மக்கள் தங்கள் வாழ்விடங்களில் இருந்து விரட்டப்பட அத்தகைய கொள்ளையர்களிடம் இருந்து பெருமாள் முருகன் போன்ற எழுத்தார்கள்  பெறும் நல்கைக்கு காசு பெறுவது என்று தான் கூறமுடியும்



இதை எல்லாம் ,இந்த அவலங்களை எல்லாம் எழுத்தாளர்கள் தன் எழுத்தில் வெளிக்காட்ட கூடாது என்பதற்காக தானே நல்கை என்ற கையுட்டு டாட்டா ,போர்ட் போன்ற நிறுவனங்களால் இவர்களுக்கு அளிக்கபடுகின்றது.



எழுதுங்க எழுதுங்க ..., புளியமரத்தின் கதையில் மரத்தடியில் சிறு வியாபாரம் செய்யும் ஏழை எளிய பொண்ணை  விபச்சாரமும் செய்வாள் என்று அடங்காம எழுதுங்க ...., அப்படி பட்ட எழுத்தாளர்கள் தானே பெமுவும் !

கேட்ட கேள்விகளுக்கு பதில் கூற முடியாமல்பெமு என்னை FB நட்பு வட்டத்தில் இருந்து விடுவித்து விட்டார் .அவர் ரசிகர் கிருஷ்ண பிரபுவும் ஒடிபோயிட்டார் !





Friday, January 9, 2015

ராஜபக்சவின் தோல்வியும் சிறிசேனாவின் வெற்றியும் Wining of Srilanka Election Results

ஜனவரி 9,2015 : ராஜபக்சவின் தோல்வியும் சிறிசேனாவின் வெற்றியும்ஈழ தமிழருக்கு இனி என்ன ?


                   ராஜபக்சவின் வெற்றிக்காக மறைமுக களம் கண்ட தெற்காசிய பிராந்திய வல்லரசான இந்திய வல்லான் அரசுக்கும் அதன் மதவாத பிராதமர் மோடிக்கும் கொடுக்கப்பட்ட மறைமுக எச்சரிக்கை மணியோசை தான் சிறிசேனவின் வெற்றியும், ராஜபக்சவின் தோல்வியும். ராஜபக்சவின் தோல்வி முகம் போன டிசம்பர் மாதமே ஒளிர தொடங்கினாலும் அதனை முழுமையாக காட்டிய நாள் இன் நாள்.   ஈழ தேர்தல் பிரச்சாரத்தின் போது இந்திய வல்லான் அரசு எடுத்த நேரடியான ராஜபக்ச ஆதரவு கைகோர்ப்புகள் ,அனுப்பிவைக்கபட்ட ஆதரவு பிரச்சசார நடிப்புலக பிரங்க்கிகள் ஈழ மக்கள் சனநாயக சக்தியின் முன் செய்லிழந்தது ஒன்றும் உலக அரசியலில் முதலும் அல்லது இருதியுமானது அல்ல.ஆனால் வடக்கு மாகாண தமிழ் மக்கள் ,வடகிழக்கு தமிழ் மற்றும் சிறுபான்மை முஸ்லிம் மக்கள் ,இந்திய வம்சாவழி மலையகத்து தமிழ் மக்களின் ஒட்டுமொத்த எதிர்ப்பும்  ராஜபக்சவின் தோல்விக்கு மிக நேரடியான காரணமாக அமைந்தது என்பதனை பெரும்பான்மை சிங்கள பொதுமக்களே மறுக்க இயலாத நிலையில்  அடுத்து பதவி ஏற்க்க வரும் சிறிசேனாவிற்கு ஒன்று பட்ட ஈழத்துக்கும் ,அதில் வாழும் அனைத்து இன மக்களின் அதிகார பகிர்விக்கும்,வாழ்வுரிமைக்குமான  அரசியல் செயல்பாட்டுக்கு உரிய அதிகப்ச்ச புரிதலை கொடுக்கும் ,கொடுக்க வேண்டும் என்பதில் எந்த அய்யமும் இல்லை.  

                   இன ,மத வேறுபாடுகளை கடந்த ஈழத்து எளிய மக்களிடம் நடைமுறைக்கு வரவேண்டிய அரசியல் ,பொருளாதார ஐக்கியமும் ,அதனை நேக்கிய நீண்ட புரிந்துணர்வு பயணமும் ,இன சீற்றத்தை கடந்த வர்க்க ஒற்றுமையும் மட்டுமே அம்மக்களின் நீண்ட , நிலைத்த எதிர்கால வாழ்வுக்கு உறுதுணையாக இருக்கும் என்பதனையும்  ,உலக ,பிராந்திய வல்லரசுகளின் ஆதிகத்தில் இருந்து ஈழத்தை மீட்டெடுக்கும் என்பதனையும் ,அவர்களின்  நாட்டின்  இறையாண்மையை காக்கும் என்பதனையும் ஈழ மக்கள் அனைவருமே புரிந்து கொள்ளவேண்டிய நாள் ஜனவரி 9,2015.


அனைத்து இலங்கை[ஈழ] மக்களுக்கு எனது மணமார்ந்த வாழ்த்துகள்  !


இவன் ,

கி .செந்தில்குமரன் 
சென்னை