Saturday, June 21, 2014

கலாஷ்நிகோவ்க்கு எம் பதில்கள் [Answer to kalashnicov]

கலாஷ்நிகோவ்[kalashnicov]க்கு எம் பதில்கள்


உங்கள் பெயரில் உள்ள Avtomat Kalashnikova [AK-47] துப்பாகியை நினைத்துகொண்டு இவ்விவாதத்தை நான் தொடங்கவில்லை.ஆனால் இரண்டாம் உலக போருக்கு பின் தம்மை சுயவீமர்சனம் செய்து கொண்டு தன் தந்தையர் நாட்டுக்கு, அதன் பாதுகாப்புக்கு வலிமையான ஆயுதம் தேவை என்று முடிவு செய்து முயன்று,ஆய்ந்து கண்டு பிடித்தானே என் ரஷ்ய தோழன்,ரஷ்ய இராணுவ விரன் அவனின் ஆற்றலை நினைவுகூர்ந்தும் , அவன் பெயரை உங்கள் புனைபெயராக வைத்து உள்ளதை நினைத்து மகீழ்ந்து எம் பதிலை தொடங்குகிறேன்.

கலாஷ்நிகோவ்://பாட்டாளி வர்க்க இலக்கியம் என்பது அனைத்து சமூகத்தின் உழைக்கும் மக்களின் விடியலுக்குமானதுதான், மேலும் இதிலிருந்து தலித் இலக்கியம் எவ்வாறு வேறுபட்டது என்றும், அது தலித் சமூகத்தின் விடியலுக்காக எந்த வகையில் பங்காற்றுகிறது என்பதையும் தெரிவியுங்கள்.//

[1]தோழர்,எம் ஆசான் லெனின் அவர்களுக்கு இருந்த பாட்டாளி வர்க்க எதிரிகள் ,பாட்டாளி வர்க்க தோழர்கள் என்ற நேர்கோட்டு தன்மை[linear] உள்ள வர்க்க பேராட்ட களம் சாதீயம் காரணமாக இந்திய வர்க்க போராளிகளுக்கு நேரற்ற[nonlinear] களமாக உள்ளதை நீங்கள் உணருவீர்கள் என்பதை நான் அறிவேன். உதாரணமாக இளவரசன் திருமணத்துக்கு பின் அடித்து நொறுக்கப்பட்ட தலித்தியர் வீடுகள் யாரால் நடத்த பட்டது ? வன்னிய சாதீக்குள் இருக்கும் மார்சீய அறிவு அளிக்கபடாத பாட்டாளி வர்க்க மக்கள் தானே தலைமை ஏற்று நடத்தீனர்.இங்கு பாட்டாளி வர்க்க மக்களே தம்முடன் வேலை செய்யும் தலித்தியர் பாட்டாளி வர்க்க மக்கள் மீது அடக்கு முறையை செலுத்தும் போது, அதனால் பாட்டாளி வர்க்க மக்களுக்குள் சாதியம் சார்ந்த உள் முரண்பாடுகள் முற்றுகின்றது அல்லவா ?? இத்தகைய சூழலில்…..

[i]இத்தகைய சூழலில் நம் தலித்தியர் மக்கள் தம் வாழ்வியல் வலிகளையும்,அவர்கள் மீதான சாதீய அடக்கு முறைகளையும் இலக்கியத்தில் பதிவு செய்வது அவர்களுடைய கடமையும், உரிமையும் ஆகும் 

[ii]அதனை ம க இ க போன்ற மா லெ அமைப்புகள் ஊக்குவிக்க வேண்டும் அல்லவா ? 



கலாஷ்நிகோவ்://தலித்களின் துயரம் மற்ற சாதி உழைக்கும் மக்களின் துயரங்களை விட மிகுதியானதுதான். ஆனால் தலித் இலக்கியம் இத்துயரங்களிலிருந்து எப்படி வெளிக்கொணரும், இயங்கியல் பார்வையில் அதற்கான சாத்தியக் கூறுகளாக எதை கொண்டுள்ளன?//

[1]அரசியல் களத்தில் தலித்தியர் மக்களுக்காக,அவர்கள் சமுக பொருளாதார விடுதலைக்கு போராட தயங்காத, அவர்களுக்கு தலைமை ஏற்க தயங்காத ம க இ க …,

[i]தலித்தியர் மக்கள் வலிகளை பிரதிபலிகும் தலித்தியர் இலக்கியங்களும் எம் பாட்டாளி வர்க்க இலக்கியமே என்று உரக்க உரிமை கூரல் கொடுத்து முற்போக்கான தலித்தியர் எழுத்தாளர்களை ஒருங்கினைத்து இலக்கிய/அறிவு தளத்திலும் கருத்தியல் போரை வர்க்க எதிரிகளுக்கு எதிராக தொடுக்க வேண்டும் அல்லவா ? இதை நான் முன்பே கூறிஉள்ளேனே இப்படி…..

“ஆம் தலித்தியர் இலக்கியங்கள் எமது பாட்டாளி வர்க்க இலக்கியங்கலே ; ஆம் தலித்தியர் எம் பாட்டாளி வர்க்க மக்கள் தான் என்று கூற வக்கு/துப்பு/ பாட்டாளி வர்க்க உணர்வு இல்லாத ம க இ க வும் அதன் தலைமையும் வரட்டு சித்தாந்தத்தை முன்னெடுக்கும் வரட்டு மார்சியவாதிகள் என்பது மட்டும் உண்மை ஆகிறது “

என் நோக்கம் நிறைவேறும் எனில் எம் கடுமையான விமர்சனத்துக்காக நிபந்தனை அற்ற மன்னிப்பு [ ம க இ க விடம் ] கோரவும் தயங்க மாட்டேன் என்பதை உண்மையுடன் கூறுகின்றேன்.




கலாஷ்நிகோவ்//பாட்டாளி வர்க்க இலக்கியங்கள் சாதியை மறப்பீர், வர்க்கமாய் ஒன்று திரள்வீர் என்பதை அடிப்படையாகக் கொண்டது. தலித் இலக்கியம் தலித் மக்களின் விடியலை, தனியொரு சக்தியாய், தலித்களை மட்டுமே கொண்டுவரும் எனில் அது உங்களுக்கு சாத்தியம் என்று தோன்றுகிறதா? இதில் மற்ற சமூக மக்களையும் கொண்டிருந்தால், தலித் இலக்கியங்கள் மற்ற சமூகங்களிலுமுள்ள உழைக்கும் மக்களின் உயர்வுக்கான கோட்பாடுகளையும் கொண்டிருந்தால் அதுவே பாட்டாளி வர்க்க இலக்கியம் எனப்படும்.//
[1]எம் தலித்தியர் மக்களுக்கு மட்டும் அல்ல , இந்த உலகில் வாழும் எல்லா உழைக்கும் மக்களுக்குமே திரிபு இன்றி மார்சியத்தை நடைமுறை படுத்துவதில் தான் முழு தீர்வு உள்ளது என்பதை நான் உளபூர்வமாகவும் /அறிவுபூர்வமாகவும் நம்புகின்றேன்
[2] அதனால் தான் மார்சியத்தை நடைமுறை படுத்தும் போது பாட்டாளி வர்கத்துக்குள் சாதியத்தால் ஒடுக்கபட்டு உள்ள எம் தலித்தியர் மக்களீன் இலக்கியத்தையும் நம்முடையதாக்கி இலக்கிய/அறிவு தளத்திலும் கருத்தியல் போரை வர்க்க எதிரிகளுக்கு எதிராக தொடுக்க வேண்டும் என்று முன்பே கூறினேன். உங்களுடன் விவாதிபது எம் ருஷ்ய தோழன் Avtomat Kalashnikova [AK] உடன் விவாதிபது போல் உணர்கின்ரேன். துப்பாக்கி உள் உள்ள உங்கள் தோழமை கண்டு எம் கண்கள் இரமாகின்றன.

கலாஷ்நிகோவ்,

Kalashnikov said he would have been better off designing a lawnmower, given that he didn’t actually make a ton of money off his invention, and in retrospect, he said he would rather “help farmers with their work” than have helped kill people. He didn’t regret building a weapon to defend Mother Russia, but he did regret its later spread into the hands of terrorists.
I love you Avtomat Kalashnikova [AK]

 I love you Avtomat Kalashnikova [AK]

vinavu conflicts and Wrong replaysவினவை நோக்கி நான் கேட்ட கேள்வியும் வினவு செய்யும் அவதூருகளும்

ம க இ க தோழர்ளீன் முரண்பாடுகளும் ,அவதூருகளும்

வினவை நோக்கி நான் கேட்ட கேள்வியும் வினவு செய்யும் அவதூருகளும் ::

அஜித்தின் தத்துவம் – அண்ணாச்சியின் நாக் அவுட் !,ஓடு “தலைவா” ஓடு – பாகம் 3 வரை விமர்சனம் செய்ய நேரமும் ,மனசும் இருக்கும் வினவுக்கு தலித்தியர் மக்களீன் எழுத்துகளை பற்றி விமர்சனம் செய்ய நேரமும் மனசும் இல்லாமைக்காக சுய விமர்சனம் [Self-criticism]செய்து கொள்ளுமா ?

இக் கேள்விக்கு ஒன்று வினவு கொள்கை நேர்மையுடன் பதில் அளித்து இருக்க வேண்டும் அல்லது வழக்கம் போல் கண்டும் காணமலும் சென்று இருக்க வேண்டும்.

அதை விட்டு அவர்கள் செய்து உள்ள அவதூருகளை பாருங்கள் :

[1]தலித் இளைஞர்கள் சினிமா மாயையில் சிக்கி சீரழியட்டும் என்ற உங்களது வன்மம் கண்டிக்கப்படவேண்டியது. இது போதையில் இளைஞர்கள் சீரழியட்டும் என்று ஆளும் வர்க்கம் நினைப்பதற்கு ஈடானது.

[2]…….எகத்தாளத்துடன் கேட்டதற்கு நீங்கள்தான் சுயவிமரிசனம் ஏற்க வேண்டும்.

[3]நீங்கள் நாலு நாவல்கள் படித்து விட்டால் உங்களுக்கு முக்கியம் என்று தோன்றிவிட்டால் உலகமே அதை அங்கீகரிக்க வேண்டும் என்பது நிச்சயம் மேட்டிமைத்தனமாக அணுகுமுறை

[4]நீங்கள் படித்ததை மற்றவரும் படிக்கலாம் என்று ஆலோசனை கூறலாமே தவிர, இதையெல்லாம் ஏன் நீ படிக்கவில்லை என்று குதிப்பது சரியா? தலித் மக்கள் கூட இத்தகைய இலக்கியங்களை படிக்கும் வாய்ப்பற்றவர்கள். அதனால் அவர்களும் அதற்கு எதிரானவர்கள் என்று கத்துவீர்களா?

[5]தலித் இலக்கியம், பாட்டாளி வர்க்க இலக்கியம், மார்க்சிய அழகியல் எது குறித்தும் உங்களுக்கு எதுவும் தெரியாது. தெரியாது என்பதை புரியுமளவு உங்களுக்கு பணிவோ, கற்கும் ஆர்வமோ கிடையாது. மாறாக அதை யாராவது சுட்டிக் காட்டினால் உடனே கம்பையெடுத்து தீர்ப்பு கொடுக்க துடிக்கிறீர்கள்!

தென்றல் அவர்கள் செய்து உள்ள அவதூருகளை பாருங்கள் :

[6]சோ போன்ற எதிரிகள் அ.மா போன்ற பிழைப்புவாதிகள் கருத்துக்களை நைச்சியமாக தந்திரமாக வைக்கிற பொழுது அவர்களிடம் நாம் இருந்து கற்றுக்கொள்ள வேண்டும் சரவணன். சோ, அ.மா போன்று குழந்தை பால்குடிக்கும் பொழுது குறுக்கே புகுந்து முலை அறுக்கிற வகையறாக்கள் அல்லர் தாங்கள். அதனால் தான் அவர்களை எதிரி, பிழைப்புவாதி என்று அடையாளங்கண்டு உங்களை அற்பவாதி என்கிறார் சுகதேவ். என் பார்வையிலும் இது அற்பத்தனம் தான் சரவணன். நேர்மறையில் பரிசீலியுங்கள்.

இவ்வாறு எல்லாம் நீங்களும் எம்மை அவதூரு செய்ய மாட்டீர்கள் என்ற நம்பிக்கையுடன் உங்களீன் விவாதத்தை கூர்மை படுத்தும், செழுமையான கேள்விகலுக்கு பதில் அளிக்க போகிறேன்