Thursday, September 17, 2015

திரைக்கதை எழுதுவது ஒரு கலை அல்ல அது தொழில்நுட்பம் V scene sequence screen play technology V

திரைக்கதை எழுதுவது ஒரு கலை அல்ல அது தொழில்நுட்பம் V 

சீன் சிக்வன்ஸ் [காட்சிகளின் தொடர்சி  Raja Rani Tamil Movie Case Study ]

சமிபத்தில் வந்த திரைப்படங்களில்  பாசாங்கு இல்லாத கதை, தெளிவான திரைக்கதை,  தவறில்லாத ஷாட் ,கேமிரா கோணங்கள் , எடிட்டிங் என்று பார்த்தால் அட்லியின்  ராஜா ராணி படத்தை கூறலாம். இந்த படத்தின் முதல் சீன் சிக்வன்ஸ் என்பது நயந்தரவுக்கும், ஆர்யாவுக்கு நடக்கும் திருமணம். அதனை  டைரக்டர் அட்லி கீழ் வருமாறு காட்சிகளாக பிரித்து இருப்பார். இந்த சீன் சீக்வன்ஸ் சரியாக 5 ல் இருந்து 6 நிமிடங்கள் திரையில் காட்சிப்படுத்தப்ட்டு உள்ளது.

படம் :ராஜா ராணி
டைரக்டர் : அட்லி

சீன் சிக்வன்ஸ் 1 : திருமண நிகழ்வு

கிருஸ்துவ தேவாலையம் [வெளி -உள் ]
[s1 ] மனமகனை காணமல் சந்தானமும் அவரின் நண்பர்களும் தேடுதல்.

[s2]தம் அடிக்கப்போன மணமகன் திரும்பி வருதல்

[s3] மணமகளும் அவளின் தந்தையும் காரில் வருதல்

[s4]மணமகளும் அவளின் தந்தையும் கிருஸ்துவ தேவாலையம் உள் நடந்து செல்லுதல்

[s5]பாதிரியார் திருமண ஏற்பாடுகளை செய்தல் [மணமகன்
திருமணத்துக்குசம்மதம் கூற நிறைய யோசிப்பான்..., மணமகள் சூரியா என்று வேறு பெயரை கூறி தடுமாறுவாள்]
[s6] திருமணம் முடிந்து இருவரும் வெளியே வருதல்.


இந்த சீன் சிக்வன்ஸ் ரசிகனுக்கு கூறும் விவரங்கள் என்ன? காட்சி 2 ல் திருமணம் நடக்கும் நேரத்தில் தம் அடிக்க செல்லும் ஆர்யாவின் மனநிலை..., காட்சி 5 ல் பாதிரியாருடன் திருமணத்துக்கு சம்மதம் கூற தயங்கும் ஆர்யாவின் மனநிலை..., அதே காட்சியில் வேறு ஒருவனின் பெயரை கூறும்  நயன்தாராவின் மனநிலை...., இவை எல்லாம் சேர்த்து இருவருக்குமே திருமணத்தில் விருப்பம் இல்லை என்பதை காட்டுகின்றது அல்லவா?


இருவருக்குமே திருமணத்தில் விருப்பம் இல்லை என்றால் என்ன காரணமாக இருக்கமுடியும் என்ற கேள்வியை  ரசிகன் தன் மனதில் எழுப்ப முடிகிறது அல்லவா? அது தானே இந்த சீன் சிக்வன்சின் வெற்றி!

இந்த படத்தின்  பிற முக்கிய சீன் சிக்வன்ஸ்களை பற்றியும் ஆராய ஆர்வம் வந்து விட்டதே! நான் என்ன செய்ய? சரி  ஆர்வத்தை கட்டுப்படுத்திக்கொண்டு இன்னும் ஒரு Hollywood படத்தை பற்றி (எல்லாருக்கும் தெரிந்த படம் தான் )  அடுத்த அத்தியாயத்தில் பார்க்கலாமா?

தொடரும்

 previous Chapters :

http://vansunsen.blogspot.in/2015/09/i_17.html
http://vansunsen.blogspot.in/2015/09/ii-screen-play-is-not-art-but.html
 http://vansunsen.blogspot.in/2015/09/iii-screen-play-is-not-art-but.html 
http://vansunsen.blogspot.in/2015/09/iv.html

திரைக்கதை எழுதுவது ஒரு கலை அல்ல அது தொழில்நுட்பம் IV screen play is not an art but technique IV

திரைக்கதை எழுதுவது ஒரு கலை அல்ல அது தொழில்நுட்பம் IV 

சீன் சிக்வன்ஸ் [காட்சிகளின் தொடர்சி]

காட்சிகளின்  தொடர்ச்சி தான் சீன் சிக்வன்ஸ்சா ?

 ரொம்ப எளிய தெரிந்த உதாரணத்துடன் சீன் சிக்வன்ஸ் பற்றி பேசிப்பார்ப்போம்.

காட்சி 1: ஒரு மாணவி தன் கல்லூரியில் நடைபெற உள்ள  தன் துறை சார்ந்த போட்டிக்கான விளம்பரத்தை அறிவிப்பு பலகையில் காண்கின்றாள்.

காட்சி 2:அவளின் வகுப்புஆசிரியரை சந்தித்து  போட்டிக்கான விதிகளை கேட்டு தெரிந்து கொள்கின்றாள்.

காட்சி 3:அந்த போட்டி குழுவாக பங்கு எடுத்துகொள்ளவேண்டியது என்பதால்  தன் நெருங்கிய சிநேகிதிகளை  சந்தித்து  குழு அமைக்கின்றாள்.

காட்சி 4: நூலகம் சென்று தேவையான தகவல்களை சேகரிக்கின்றாள்.

காட்சி 5:போட்டியில் பங்கு பெற்று வெற்றியும் பெறுகின்றாள்.

மேல் உள்ள நிகழ்வுகளை  காட்சி படுத்தும் போது அதில் பொருள் பொதிந்த தொடச்சி  இருக்கும் அல்லவா?     மேல் உள்ள தொடர் காட்சிகள் ஒரு குறிப்பிட்ட பாகத்தை  கதையில் நடத்திக்காட்டுகின்றது அல்லவா? அது தான்  காட்சிகளின் தொடர்சி அல்லது    சீன் சிக்வன்ஸ்  என்பது ஆகும்.

அடுத்த காட்சிகளின் தொடர்சி [சீன் சீக்வன்ஸ்]என்பது அந்த போட்டியில் தோல்வி அடைந்த அதே வகுப்பை சேர்ந்த   வேறு ஒரு மாணவனின்  எதிர்வினையாக கூட இருக்கலாம். அவன் கதையின் நாயகனாகவோ அல்லது   வில்லனாகவோ கூட இருக்கலாம்.  அவர்கள் இந்த போட்டியில் தோல்வி அடைந்ததற்கான எதிர்வினைகள்  என்னவாக இருக்கும் என்று நினைத்துப்பாருங்கள்.

வில்லன் தோல்வி அடைந்து இருந்தால் :

[1] நண்பர்களுடன் மது அருந்த செல்கின்றான்

[2] டாஸ்மாக் பாரில்  அமர்ந்து தன் நண்பர்களுடன் வெறுப்புடன் பேசிக்கொண்டு இருக்கிறான்.

[3]டாஸ்மாக் பாரை விட்டு வெளிவந்த உடன் அவனின் நெருங்கிய நண்பனுடன் ரகசியமாக என்னமோ பேசுகிறான்.

[4]அடுத்தநாள் வெற்றி பெற்ற மாணவியின் இரு சக்கர வண்டியின் பெற்ரோல் டேங்கில்  சக்கரை கொட்டப்பட்டு  அந்த வண்டி பழுதாக்கப்படுகின்றது.

கதாநாயகன் தேல்வி அடைந்து இருந்தால் :

[1] அந்த மாணவி செமினோர் எடுத்தபோது அவளின் முக பாவனைகளை ,பேசும் அழகை யோசித்து பார்க்கின்றான்.  [அவள் பேசிய காட்சிகள் காட்டப்படுகிறன.]

[2]அடுத்த நாள் கல்லூரியில் சந்திக்கும் அவளை பார்த்து புன்னகை செய்கிறான்.

[3]வகுப்பு அறையில் ஆசிரியர் பாடம் நடத்தும் போது அவள் நோட்ஸ் எடுக்கும் அழகை ரசிக்கின்றான்.

[4] அவளிடம் அவளின் ஈமெயில் ஐடியை கேட்டு வாங்கிக்கொண்டு செல்கிறான்.

[5] அவன் வீட்டில் இருந்து  அவளுக்கு காதல் கடிதம் அவளுக்கு அவளின் ஈமெயில் ஐடிக்கு   அனுப்புகின்றான்.    


மேல் உள்ள கதாநாயகனின்/வில்லன்  எதிர்வினைகள்  கதையை அடுத்த கட்டத்துக்கு நகர்த்துவதுடன்   ஏன் ,எதற்கு , எப்படி என்ற கேள்விகளை எழுப்பிக்கொண்டே ஒரு கருத்தாக்கத்தை கதையில்  கொடுகிறது அல்லவா? அதனால்  அடுத்தது என்ன என்ற கேள்வி தவிக்க இயலாதது அல்லவா? அடுத்தது என்ன என்ற கேள்வியை எழுப்பாத காட்சி தொடர்கள் [சீன் சீக்வன்ஸ்]மூலம் எந்த பயனும் திரைக்கதையின்  முன்னேற்றத்துக்கு உருவாகாது. அடுத்த அத்தியாயத்தில் ராஜா ராணி படத்தின்  சீன் சீக்வன்ஸ் பற்றி சிந்தித்து பார்த்து இந்த சீன் சிக்வன்ஸ்சை  முடித்துக்கொள்ளலாம்.


தொடரும் .......

previous Chapters :

http://vansunsen.blogspot.in/2015/09/i_17.html
http://vansunsen.blogspot.in/2015/09/ii-screen-play-is-not-art-but.html
 http://vansunsen.blogspot.in/2015/09/iii-screen-play-is-not-art-but.html 

திரைக்கதை எழுதுவது ஒரு கலை அல்ல அது தொழில்நுட்பம் III Screen play is not an art but Technology III

திரைக்கதை எழுதுவது ஒரு கலை அல்ல அது தொழில்நுட்பம் III 

பேசும் வசன-பட காட்சி எப்படி இருக்கும் ?


முந்தைய  அத்தியாயத்தில்  "IIM-B கல்லூரி  வளாகத்துள் விடுதியில் வாழும் கார்திக் அதே கல்லூரி வளாக பெண்கள் விடுதியில் வாழும் அவனது சினேகிதியை காலையிலேயே காண விரும்புகிறான். " அதனை ,அந்த காட்சியை வசனம் இன்றி  திரைக்கதையாக்கினோம் அல்லவா? அதே காட்சியை  எம் ஜி ஆர் ,சிவாஜி காலத்து   டைரக்டர்கள்  காட்சி படுத்தினால் எப்படி இருக்கு என்று பார்ப்போமா? 

காட்சி 1 வெளி காலை 
Fade In 

[1]கார்திக் காலையில் கல்லூரி வளாக ரோட்டில் நடந்து வருகிறான். செல்போனை எடுக்கிறான்.சினேகிதியை அழைக்கிறான்.....ரிங்டோன்... மீண்டும் மீண்டும் செல்போனில் அழைகின்றான்.   [லாங் ஷாட் ] 

[2] சிநேகிதி போனை எடுத்தஉடன்  போனில் [மிட்லாங்ஷாட்]

              கார்திக் : ஹாய் சிவசங்கரி குட்மார்னிங் ... எப்படி இருக்க? 
             
[3] இண்டர்கட் பெண்கள் விடுதி அறையில் 
              சிவசங்கரி: குட் மார்னிங் கார்திக்... எழுந்திட்டேன் ... 5 மினிட்ஸ் பா வெயிட் பண்ணு 

[4] இண்டர்கட் சாலையில் 
            கார்திக்  : நேத்து டான்ஸ் புரோகிராம் டயர்ட் ஆ... இன்னும் தூக்கமா? 

[5]   இண்டர்கட் பெண்கள் விடுதி அறையில்                     
             சிவசங்கரி: இல்ல கார்திக் இதோ வந்துட்டேன்....

[6] அதிகாலைக்காண சூரியன், மீண்டும் பணி மூட்ட காட்சி ,மரம் செடி கொடிகள் [ஜூம் செய்யபடும் ஷாட்கள்]

Dissolve 


பேசி பேசியே பழகிப்போன தமிழர் ரசிக்க  மனதுக்கு  சினிமாவிற்கான மொழியை ,காட்சி படுத்தும் கலையை, பழகிக்கொள்ள  சில கால அவகாசம்    தேவைப்படும் என்பது உண்மையாயினும்  , அத்தகைய நிலைக்கு ரசிகர்களின் மனம் தள்ளப்படுதவற்கு  டைரக்டர்களின் பங்கும்,   பயிற்றுவிப்பும் மிகவும் முக்கியமானது. ஒரு காட்சியை திரைக்கதையாக எழுதும் போது ஒன்றுக்கும் மேற்பட்ட முறைகளில் எழுதிப்பார்ப்பது என்பது சிறந்த திரைக்கதை எழுதுவதற்கான முறையாகும். சமிபத்தில் எனது  அபிமான டைரக்டர் பார்திபனின் ஒரு பத்திரிக்கை செய்தியில் " இப்போது இணையத்தில் அருமையாக திரைக்கதையை எழுதிக்கொண்டு இருகின்றார்கள்..... நான் கூட எனது  திரைக்கதையை எழுதி எழுதி கிழித்து கிழித்து எறிந்து விட்டு மீண்டும் மீண்டும்  சிறப்பாக எழுத முயற்சிக்கிறேன். " என்று கூறியதன் அர்த்தம் என்ன? செந்தமிழும் நா பழக்கம்   நல்ல திரைக்கதையும் கை பழக்கம் என்பது தானே?    

தொடரும் .....

previous Chapters :

http://vansunsen.blogspot.in/2015/09/i_17.html
http://vansunsen.blogspot.in/2015/09/ii-screen-play-is-not-art-but.html

           


      

திரைக்கதை எழுதுவது ஒரு கலை அல்ல அது தொழில்நுட்பம் II screen play is not an art but technology II

திரைக்கதை எழுதுவது ஒரு கலை அல்ல அது தொழில்நுட்பம் II 

பேசும் படமா அல்லது பேசா படமா?

வசனங்களின் தேவை இல்லாத  காட்சிகளாக உங்கள் கதையின் காட்சிகளை சிந்தித்து பாருங்கள். இது சத்தியமா?  இன்றும் நம் ரசனைக்கு உரியதான சார்லி சாப்ளினின்  நகைசுவை திரைப்படங்களில் பெரும்பாலானவை  வசனங்கள் அற்ற  சாட்சிகளின் தொகுப்பாக இருக்க நாம் என் அந்த வழியில் முயற்சிக்கக்கூடாது. தக்க பின்ண்ணணி இசை இந்த வசனமற்ற காட்சிகளை  உயிரூட்டும் அல்லவா? ஒரு உதாரணத்தை பார்ப்போமா? IIM-B கல்லூரி  வளாகத்துள் விடுதியில் வாழும் கார்திக் அதே கல்லூரி வளாக பெண்கள் விடுதியில் வாழும் அவனது சினேகிதியை காலையிலேயே காண விரும்புகிறான். எப்படி காட்சி படுத்தலாம்?

காட்சி 1 வெளி காலை
Fade In

[1]காலையில் பெங்கலூரூ  பனிமூட்டட்தில்  கல்லூரி சாலியில் நடக்கும் கார்திக் தெளிவற்ற உருவம்.......[லாங் ஷர்ட்]

[2] நடந்து வரும் கார்த்திக் -கையில் போக்கேயுடன்..., காலை உடற்பயிற்சிக்கான  உடை, காலணியுடன் [மிட்லாங்ஷாட்]

[3]ஒற்றைகாலை பின்பக்கமாக மரத்தின் மீது ஊன்றி நின்று கொண்டு போக்கேவை இடது கைகளால் அணைத்துக்கொண்டு  செல்போனில் "I am waiting" என்று sms தகவல் அனுப்புவது.[மிட் ஷட்]

[4] கார்திக்கின் view வில் இருந்து  பெண்கள் விடுதியை கேமரா பார்ப்பது.  [லாங் ஷாட்]

[5]கார்திக்கின் செல் போன் "coming soon wait karthik " என்று இசையுடன் மின்னுவது.[மிட் ஷாட்]

[6] சினேகிதியை காண ஆவளுடன் இருக்கும் கார்திக்கின் முகம் [க்ளோசப் up ]

Dissolve

எதேனும் வசனம் இங்கு பேசப்பட்டு உள்ளதா?


வசனமே இல்லை என்றால் டைரக்டருக்கு என்ன வேலை கமிரா மேன் அவர்களே படத்தை எடுத்து விடலாமே என்று  நீங்கள் நினைக்கலாம்.  ஆமாம் எந்த ஒரு சிறப்பான திரைக்கதையும் டைரக்டர் அவர்களின் வேலையை  மிகவும் எளிமைப்படுத்தும். திரைக்கதை என்பது ஒரு நேர்மையான கல்லூரி ஆசிரியர்  தன் மாணவர்களுக்காக நேரத்தை செலவு செய்து  அடுத்த நாள் வகுப்புக்கு  தயாரிக்கும் பாடம் போன்றது. ஒரு மணி நேர வகுப்புக்கு குறைந்தது ஒரு மணி நேரமாவது தயாரிப்புக்கு  அந்த ஆசிரியர்  செலவு செய்வார் எனில்  பாடத்தை எப்படி மாணவர்களிடம் கொண்டு செல்லவேண்டும்?  என்னை முதலில் கூரவேண்டும் எந்த எந்த கேள்விகளை இடை இடையே கேட்கவேண்டும் என்று முடிவுடன் வகுப்புக்கு செல்வார் எனில் அந்த வகுப்பு அவருக்கும்  மாணவர்களுக்கு நிறைவு தரும் அல்லவா?   அது போன்றது தான் திரைக்கதையின் ஒரு  பகுதியான குறிப்பிட்ட காட்சியை தயாரிப்பதும். திரைக்கதையை ஒரு முழுமையான பாடத்துக்கு [ex Operating System subject] உதாரணமாக கொண்டால்  காட்சியை அந்த பாடத்தில் உள்ள உட்பிரிவிற்கு [ex  Evaluation ஒப் Operating System ]  உதாரணமாக கொள்ளலாம்.


வசனமே இல்லாத இந்த காட்சியை பின்னணி இசை மேலும் மெருகூட்டும்  என்பதனை மறவாதிர்கள்.


தொடரும் ...


Previous Chapter:

http://vansunsen.blogspot.in/2015/09/i_17.html
    
திரைக்கதை எழுதுவது ஒரு கலை அல்ல அது தொழில்நுட்பம் I

சில அடிப்படைகள் :

கதையை காட்சி படுத்துகின்ற சினிமா என்ற வெகுசன கலையின் ஆதார அம்சம் திரைக்கதை எழுதுவது. ஒரு சாதாரண கதை பலவாறாக பலராலும் திரைக்கதையாக்கப்பட்ட முடியும்.  ஆனால் அவை அனைத்துமே வெற்றிகரமான சினிமாவாக்கப்பட்ட  முடியமா என்பது சந்தேகத்துக்கு உரியதே. நாடகக்கலை அனுபவம் உள்ள ஒருவர் அந்த கதையை    திரைக்கதையாக்கும் போது  என்ன செய்வார்? உதாரணத்துக்கு கலைஞனின்  பராசக்தியையும் மகேந்திரனின் முள்ளும் மலரும் படத்தையும்  ஆய்வுக்கு எடுத்துக்கொள்வோம்.  1950களில் இருந்து  நாடகங்களில் ஆழ ஒன்றியிருந்த  தமிழ் மக்களுக்கு சிவாஜி கணேசனின் பராசக்தி வசனங்கள்  கண்டிப்பாக மெய் சிலிர்க்க வைப்பதாக தானே இருந்து இருக்கும்?  அதுவும் அந்த படம்  சிவாஜி கணேசனின்  முதல் திரைப்படம் என்று நினைக்கின்றேன்.  முதல் படத்திலேயே  தமிழக மக்களை கவர்ந்து இருக்கும்  அவரின்  நடிப்புக்கு காரணம் சிறப்பான நாடகத்தன்மைவாய்ந்த வசனங்களே என்று கூறினால் அது மிகையாகாது.  அதே நேரத்தில் அபூர்வ ராகங்கள் திரைப்படத்தில் அறிமுகமான  ரஜனி , தொடர்ந்து  மகேந்திரனின் முள்ளும் மலரும் படத்த்தில் நடித்த ரஜனியின் நடிப்பு என்பது சிறப்பானதாக இருந்ததற்கு  காரணம் நாடகத்தன்மை  வாய்ந்த வசனங்களா அல்லது கதை காட்சி படுத்தப்பட நவீன முறையா?  50களுக்கு  70களுக்கு இடைப்பட்ட காலங்களில் தமிழ் சினிமா என்பது  பழைய நாடக-வசன  திரைக்கதை முறைக்கும்  நவீன காட்சி படுத்தும் திரைக்கதை முறைக்கும் இடையே பெரும் போராட்டங்களை நடத்தியுள்ளது என்பதனையும் நாம்   யூகிக்க முடிகிறது.  50களில் நாடகத்துறையில் இருந்து சினிமாவிற்கு  வந்த  சிவாஜியின்  வசன உசரிப்பு , நடிப்பாற்றலையும் மீறி தமிழ் சினிமா பரிணாமவளர்ச்சி அடைந்து  உலக திரைப்படங்களுடன்  இயைந்து பயணித்ததை நம்மால் உணர முடிகின்றது அல்லவா?  நடிப்புலக ஜாம்பவான் சிவாஜி அவர்கள் தொடந்து    நாடக-வசன  திரைக்கதைகளில் நடித்து வந்தாலும்  அத்தகைய திரைக்கதை  வடிவம்   காலத்தாலும் , கலை அம்சத்தாலும் , தொழில் நுட்பத்தாலும் மிகவும் பின்தங்கிய ஒன்று தான் என்பதை  இறுதி காலங்களில் அவர் நடித்த இருபடங்கள் கமலின் தேவர் மகன்  மற்றும்  பாரதி ராஜாவின்  முதல் மரியாதை ஆகியவை நிருபித்துவிட்டன அல்லவா? எனவே 50களில் இருந்து 70களுக்கு தமிழ் சினிமா  நாடக-வசன முறை திரைக்கதை முறையில் இருந்து காட்சி படுத்துதலுக்கு  உரிய ஊடகமாக மாறியது என்பதை நாம் உறுதியாக கூறமுடியும்.


தொடரும்