Saturday, September 19, 2015

திரைக்கதை எழுதுவது ஒரு கலை அல்ல அது தொழில்நுட்பம் X  

E.T நம் இதயங்களை துளைத்தது ஏன் ? V 


சூழ்நிலை (Context) : அடுத்த ஒரு முக்கியமான விறுவிறுப்பான காட்சியை விவாதிப்பதற்கு முன்பாக அந்த சீனுக்கு நாம் போவதற்கு உரிய சூழ்நிலையை கூறிவிடுவோம். அமெரிக்க அரசாங்கம் வேற்று கிரக விண்கலம் அவங்க நாட்டில் இறக்குவதை ரேடாரில் பார்த்து இருப்பார்கள் அல்லவா? எனவே அமெரிக்க ராணுவம் அல்லது போலிஸ் அந்த காட்டுக்கு  வந்துடுவாங்க... எனவே அவசர அவசரமாக  விண்கலம் தவறுதலாக  ஒரு வேற்றுகிரக மனிதனை  மட்டும் புவியில் விட்டுவிட்டு மேல் எழும்பி  சென்றுவிடும். அந்த சீனில் நம்ம இயக்குனர் ஸ்பீல்பர்க்  விண்கலம் வருவதை எல்லாம் ரேடாரில் காட்டமாட்டாரு. அந்த காட்சி படத்தினுள்  மறைத்து வைக்கப்பட்டு உள்ள காட்சி.(implicit scene). இதே வேறு இயக்குனர் படம் என்றால் என்ன செய்வாங்க? விண்கலம் வருவதையும் ,ரேடாரில் அது தெரிவதையும்  மாற்றி மாற்றி  இன்டர் கட்டில்(inter cut ) காட்டி  இருப்பாங்க அல்லவா?   என்னை பொறுத்த வரைக்கும்  இந்த implicit sceneஐ வெளிப்படையாக காட்டாமல்  பார்வையாளனின்  புரிதலுக்கே விட்டுவிடுவது தான்  படத்தின் ஓட்டத்தை விரைவு படுத்த உதவும். ஆனாலும் ஸ்பீல்பர்க்  இந்த காட்சியை அதாவது போலிஸ் அல்லது ராணுவம் வரும் காட்சியில் சிறிய தவறு செய்து விடுவார்.  கையில் டார்ச் லைட் , இடுப்பில் கைவிலங்கு மட்டும் வைத்துக்கொண்டா போலிஸ் விண் மனிதர்களை தேடி வரும்? ஆயுதங்கள் எதுவும் இல்லாமலா வரும்? ஆயுதங்கள் எதுவும் போலிஸ் அல்லது ராணுவம் வரும் சீனில் காட்டப்படாது  தவறு தானே ?  நம்ம யானைக்கே அடி சறுக்கிவிட்டது பார்திர்களா ?


சரி விசயத்துக்கு வருவோம். புவியில் தனித்து மாட்டிக்கொண்ட அந்த விண்கல மனிதன் ஒரு சிறுவனிடம் வந்து   அடைகலம் பெறுவான்.   அவனும் ,சிறுவனும் நண்பர்கள் ஆகிவிடுவார்கள். முதல் நாள் தனக்கு காய்ச்சல் என்று ஏமாற்றும் அந்த சிறுவன் தினமும் ஏமாற்ற முடியாது அல்லவா?  அடுத்த நாள் அந்த விண்கல மனிதனையும்  ,தன் வளர்ப்பு நாயையும் வீட்டில் தனித்துவிட்டு விட்டு பள்ளிக்கு சென்று விடுவான். 


சிறுவனின்  வீடு  INT: KITCHEN: DAY 

விண்மனிதன்  குளிர்சாதன பெட்டியை திறபான். நாயிக்கும் பசி. உண்ண எதாவது கிடைக்குமா என்று எதிர்பார்புடன் அந்த மனிதனை பார்க்கும்.அதில் உள்ள உருளைக்கிழங்கு கலவையை [potato salad] எடுத்து திறந்து  நாக்கால் நக்கிபார்க்கும்.  சுவை பிடிக்காததால் அதனை  தூர எறிவான். அதனை நாய் உண்ணும். இவன் பீர் கேன் ஒன்றை எடுத்து குடிப்பான். 

பள்ளிக்கூடம் INTERCUT: SCHOOL

பள்ளியில் chairல் அமர்ந்து ஆசிரியர் கூறுவதை  கவனிக்கும் சிறுவன் பெரிய ஏப்பம்(protrud) விடுவான்.
மற்ற குழந்தைகள் இவனை திரும்பி பார்ப்பார்கள்.
( சிறுவனும் , விண்மனிதனும் ரொம்ப க்ளோஸ் ப்ரிண்ட்ஸ்  என்பதற்கு இந்த காட்சிஒருத்தன் பீர் குடித்தால் அடுத்தவனுக்கு ஏப்பம் வருது! தமிழில் இது போன்ற ஒரு படத்தை உதாரணமாக கூறமுடியும் அல்லவா? கூறுங்கள் பாப்போம்!) 

INTERCUT: KITCHEN

பீர் குடித்த போதையில் அந்த விண்மனிதன் சமையில் அறையில் தடுமாறிக்கொண்டு இருப்பான்.


INTERCUT: SCHOOL

சிறுவனுக்கும் போதை ஏறிவிடும். தலையில் கை வைப்பான்.ஆசிரியர் தவளையை இரண்டாக கட் செய்தாலும் அதன் இதயம் துடிக்கும்(beats) என்று கூறிக்கொண்டு இருப்பார். 


INTERCUT: KITCHEN

விண்மனிதன் திரும்பி வேறு திசையில் நடந்து கொண்டு இருப்பான். நாய் இன்னும் அந்த உருளைக்கிழங்கு கலவையை [potato salad] சாப்பிட்டுக்கொண்டு இருக்கும். 

INTERCUT: KITCHEN

அவன் திரும்பி நடந்து நடந்து கிழே விழுந்து விடுவான். 
(E.T. turns, walks, then collapses head first onto the floor.)

INTERCUT: SCHOOL

சிறுவனும் போதையில் மயங்கி chairல் இருந்து சறுக்கிவிழுந்து விடுவான். அந்த சத்தம் ஆசிரியருக்கு கேட்காது ஏன் என்றால் அந்த நேரத்தில் அவர் ஒரு தவளையின் வரைபட wall chart ஐ இழுத்து  சத்தம் ஏற்படுத்தி இருப்பார்.

(Elliott slides under his desk and falls onto the floor. The teacher doesn't
hear this because at that moment he pulls down a wall hanging which
contains pictures of a frog's anatomy.)

இப்படியாக இந்த காட்சி அங்கும் இங்கும் என்று வீட்டிலும் , பள்ளியிலும் காட்சி படுத்தப்படும்.  ....இதற்கு பெயர் தான் inter cut என்பது. ஒரே காட்சியில் ஒரு ஷாட்டை  இங்கும் , மற்றும் ஒரு ஷாட்டை அங்கும் காட்டினால் அதுதாங்க இன்டர் கட் என்பது. தமிழ் படங்களில் நாயகி வில்லனின் பிடியில் இருக்க , நாயகன் பைக்கில் வருவான் அல்லவா ? இரண்டையும் மாற்றி மாற்றி காட்டுவார்கள் அல்லவா? அது தாங்க இன்டர் கட் !


என்னுடைய கேள்வி என்னவென்றால்  இந்த சீன் தர்க்க ரீதியில் சரியானதா? E.T  பீர் குடித்தால் சிறுவனுக்கு மயக்கம் வரும் என்ற காட்சி சரியானது தானா ? E.T க்கு ஏதாவது extraordinary பவர் இருபதாக இயக்குனர்  நிறுவ பார்கின்றாரா? ஆனால் இது சிறுவர்களுக்கான படம் என்பதாலும் அந்த சிறுவனுக்கும் E.T க்கும் நட்பு மிகவும்  நெருக்கமானது என்பதாலும் இந்த சீனை மக்கள் ஏற்றுக்கொண்டார்கள் என்று நினகின்றேன்.  ஆனாலும் இது லாஜிக் இல்லாத காட்சி தான். இளம் இயக்குனர்கள் இத்தகைய காட்சிகளை தவிர்ப்பது நலம்.  இந்த காட்சியின் விடியோ கிளிப்யை கீழே இணைத்து உள்ளேன். 

https://www.youtube.com/watch?v=0xWMqsZOYWg


முழுமையான E.T படத்தை you-tubeல் பார்க்க கிழே உள்ள லிங்கை copy செய்து browserல் past செய்து பாருங்கள்.  

https://www.youtube.com/watch?v=s5Z8T6WsWy0

தொடரும்...... No comments: