Saturday, September 19, 2015

திரைக்கதை எழுதுவது ஒரு கலை அல்ல அது தொழில்நுட்பம் X  

E.T நம் இதயங்களை துளைத்தது ஏன் ? V 


சூழ்நிலை (Context) : அடுத்த ஒரு முக்கியமான விறுவிறுப்பான காட்சியை விவாதிப்பதற்கு முன்பாக அந்த சீனுக்கு நாம் போவதற்கு உரிய சூழ்நிலையை கூறிவிடுவோம். அமெரிக்க அரசாங்கம் வேற்று கிரக விண்கலம் அவங்க நாட்டில் இறக்குவதை ரேடாரில் பார்த்து இருப்பார்கள் அல்லவா? எனவே அமெரிக்க ராணுவம் அல்லது போலிஸ் அந்த காட்டுக்கு  வந்துடுவாங்க... எனவே அவசர அவசரமாக  விண்கலம் தவறுதலாக  ஒரு வேற்றுகிரக மனிதனை  மட்டும் புவியில் விட்டுவிட்டு மேல் எழும்பி  சென்றுவிடும். அந்த சீனில் நம்ம இயக்குனர் ஸ்பீல்பர்க்  விண்கலம் வருவதை எல்லாம் ரேடாரில் காட்டமாட்டாரு. அந்த காட்சி படத்தினுள்  மறைத்து வைக்கப்பட்டு உள்ள காட்சி.(implicit scene). இதே வேறு இயக்குனர் படம் என்றால் என்ன செய்வாங்க? விண்கலம் வருவதையும் ,ரேடாரில் அது தெரிவதையும்  மாற்றி மாற்றி  இன்டர் கட்டில்(inter cut ) காட்டி  இருப்பாங்க அல்லவா?   என்னை பொறுத்த வரைக்கும்  இந்த implicit sceneஐ வெளிப்படையாக காட்டாமல்  பார்வையாளனின்  புரிதலுக்கே விட்டுவிடுவது தான்  படத்தின் ஓட்டத்தை விரைவு படுத்த உதவும். ஆனாலும் ஸ்பீல்பர்க்  இந்த காட்சியை அதாவது போலிஸ் அல்லது ராணுவம் வரும் காட்சியில் சிறிய தவறு செய்து விடுவார்.  கையில் டார்ச் லைட் , இடுப்பில் கைவிலங்கு மட்டும் வைத்துக்கொண்டா போலிஸ் விண் மனிதர்களை தேடி வரும்? ஆயுதங்கள் எதுவும் இல்லாமலா வரும்? ஆயுதங்கள் எதுவும் போலிஸ் அல்லது ராணுவம் வரும் சீனில் காட்டப்படாது  தவறு தானே ?  நம்ம யானைக்கே அடி சறுக்கிவிட்டது பார்திர்களா ?


சரி விசயத்துக்கு வருவோம். புவியில் தனித்து மாட்டிக்கொண்ட அந்த விண்கல மனிதன் ஒரு சிறுவனிடம் வந்து   அடைகலம் பெறுவான்.   அவனும் ,சிறுவனும் நண்பர்கள் ஆகிவிடுவார்கள். முதல் நாள் தனக்கு காய்ச்சல் என்று ஏமாற்றும் அந்த சிறுவன் தினமும் ஏமாற்ற முடியாது அல்லவா?  அடுத்த நாள் அந்த விண்கல மனிதனையும்  ,தன் வளர்ப்பு நாயையும் வீட்டில் தனித்துவிட்டு விட்டு பள்ளிக்கு சென்று விடுவான். 


சிறுவனின்  வீடு  INT: KITCHEN: DAY 

விண்மனிதன்  குளிர்சாதன பெட்டியை திறபான். நாயிக்கும் பசி. உண்ண எதாவது கிடைக்குமா என்று எதிர்பார்புடன் அந்த மனிதனை பார்க்கும்.அதில் உள்ள உருளைக்கிழங்கு கலவையை [potato salad] எடுத்து திறந்து  நாக்கால் நக்கிபார்க்கும்.  சுவை பிடிக்காததால் அதனை  தூர எறிவான். அதனை நாய் உண்ணும். இவன் பீர் கேன் ஒன்றை எடுத்து குடிப்பான். 

பள்ளிக்கூடம் INTERCUT: SCHOOL

பள்ளியில் chairல் அமர்ந்து ஆசிரியர் கூறுவதை  கவனிக்கும் சிறுவன் பெரிய ஏப்பம்(protrud) விடுவான்.
மற்ற குழந்தைகள் இவனை திரும்பி பார்ப்பார்கள்.
( சிறுவனும் , விண்மனிதனும் ரொம்ப க்ளோஸ் ப்ரிண்ட்ஸ்  என்பதற்கு இந்த காட்சிஒருத்தன் பீர் குடித்தால் அடுத்தவனுக்கு ஏப்பம் வருது! தமிழில் இது போன்ற ஒரு படத்தை உதாரணமாக கூறமுடியும் அல்லவா? கூறுங்கள் பாப்போம்!) 

INTERCUT: KITCHEN

பீர் குடித்த போதையில் அந்த விண்மனிதன் சமையில் அறையில் தடுமாறிக்கொண்டு இருப்பான்.


INTERCUT: SCHOOL

சிறுவனுக்கும் போதை ஏறிவிடும். தலையில் கை வைப்பான்.ஆசிரியர் தவளையை இரண்டாக கட் செய்தாலும் அதன் இதயம் துடிக்கும்(beats) என்று கூறிக்கொண்டு இருப்பார். 


INTERCUT: KITCHEN

விண்மனிதன் திரும்பி வேறு திசையில் நடந்து கொண்டு இருப்பான். நாய் இன்னும் அந்த உருளைக்கிழங்கு கலவையை [potato salad] சாப்பிட்டுக்கொண்டு இருக்கும். 

INTERCUT: KITCHEN

அவன் திரும்பி நடந்து நடந்து கிழே விழுந்து விடுவான். 
(E.T. turns, walks, then collapses head first onto the floor.)

INTERCUT: SCHOOL

சிறுவனும் போதையில் மயங்கி chairல் இருந்து சறுக்கிவிழுந்து விடுவான். அந்த சத்தம் ஆசிரியருக்கு கேட்காது ஏன் என்றால் அந்த நேரத்தில் அவர் ஒரு தவளையின் வரைபட wall chart ஐ இழுத்து  சத்தம் ஏற்படுத்தி இருப்பார்.

(Elliott slides under his desk and falls onto the floor. The teacher doesn't
hear this because at that moment he pulls down a wall hanging which
contains pictures of a frog's anatomy.)

இப்படியாக இந்த காட்சி அங்கும் இங்கும் என்று வீட்டிலும் , பள்ளியிலும் காட்சி படுத்தப்படும்.  ....இதற்கு பெயர் தான் inter cut என்பது. ஒரே காட்சியில் ஒரு ஷாட்டை  இங்கும் , மற்றும் ஒரு ஷாட்டை அங்கும் காட்டினால் அதுதாங்க இன்டர் கட் என்பது. தமிழ் படங்களில் நாயகி வில்லனின் பிடியில் இருக்க , நாயகன் பைக்கில் வருவான் அல்லவா ? இரண்டையும் மாற்றி மாற்றி காட்டுவார்கள் அல்லவா? அது தாங்க இன்டர் கட் !


என்னுடைய கேள்வி என்னவென்றால்  இந்த சீன் தர்க்க ரீதியில் சரியானதா? E.T  பீர் குடித்தால் சிறுவனுக்கு மயக்கம் வரும் என்ற காட்சி சரியானது தானா ? E.T க்கு ஏதாவது extraordinary பவர் இருபதாக இயக்குனர்  நிறுவ பார்கின்றாரா? ஆனால் இது சிறுவர்களுக்கான படம் என்பதாலும் அந்த சிறுவனுக்கும் E.T க்கும் நட்பு மிகவும்  நெருக்கமானது என்பதாலும் இந்த சீனை மக்கள் ஏற்றுக்கொண்டார்கள் என்று நினகின்றேன்.  ஆனாலும் இது லாஜிக் இல்லாத காட்சி தான். இளம் இயக்குனர்கள் இத்தகைய காட்சிகளை தவிர்ப்பது நலம்.  இந்த காட்சியின் விடியோ கிளிப்யை கீழே இணைத்து உள்ளேன். 

https://www.youtube.com/watch?v=0xWMqsZOYWg


முழுமையான E.T படத்தை you-tubeல் பார்க்க கிழே உள்ள லிங்கை copy செய்து browserல் past செய்து பாருங்கள்.  

https://www.youtube.com/watch?v=s5Z8T6WsWy0

தொடரும்...... 



திரைக்கதை எழுதுவது ஒரு கலை அல்ல அது தொழில்நுட்பம் IX E.T penetrating into Heart IX

திரைக்கதை எழுதுவது ஒரு கலை அல்ல அது தொழில்நுட்பம் IX  

E.T நம் இதயங்களை துளைத்தது ஏன் ? IV 

பொதுவாகவே ஸ்பீல்பர்க் படங்களின் ஒப்பனிங் சீக்வன்ஸ் (முதல் காட்சி தொடர்) வசனற்ற  காட்சிகளாகவே இருக்கும்.  வசனம் அற்ற ஒவொரு காட்சியிலும் அவர்   கதையின் நகர்த்தலுக்கு தேவையான  சில செய்திகளை  visual ஆக கொடுத்துக்கொண்டே செல்வார். அத்தகைய visual ஷாட்கள்  பார்வையாளனின் அறிவிற்குள் உள்ளீடாக சென்று (input) அவனின் சிந்தனைமூலம் அவற்றுக்கு அவனுக்கு பொருள் கிடைக்கும்.  இத்தகைய வசனம் அற்ற visual ஆன கட்சிகளை எடுக்கும் போது பார்வையாளனின் புரிதலை  இயக்குனர் கருத்தில் கொள்ளவேண்டியது மட்டும் அல்லாமல் அதற்காக பார்வையாளனுக்கு தேவையான அளவு புரிதலுக்கான நேரத்தையும் ஒவொரு ஷாட்திலும் கொடுக்க வேண்டும்.  இத்தகைய போக்கில் non verbal but visual ஷாட்கள் சில வேளைகளில்  மந்தமாகவும், சுறுசுறுப்பு இல்லாமலும்   அமையலாம். பார்வையாளனின் புரிதலுக்காக   இயக்குனர் தேவைபட்டால்  சில மேலதிக ஷாட்களை  எடுத்து இணைத்தாலும் தவறு இல்லை. முடிந்தவரையில் வசனமின்றி , கதாபாத்திரங்களின் செயல்பாட்டின் ஊடாக, அவற்றின் எதிர்வினைகள் ஊடாக   கதையை காட்சி படுத்துவது என்பது மிக சிறப்பான   முறையே. 


INT: SPACECRAFT'S GREENHOUSE: NIGHT

The inside of the ship appears to be a greenhouse. There are sounds of
water dripping. Cone shaped objects (possibly alien plants) sit among earth
plants. Vapors flow up from the plants.

[These images all appear non-threatening. The aliens are inferred to be
collecting vegetation, and are thereby inferred to be harmless.]

[Like many of Spielberg's other films, the opening sequences contain almost
no dialogue. The story is told without verbal exposition. He forces the
audience to become engaged in the storytelling process by giving them just
bits of information that they have to piece together into the story. He
doesn't insult their intelligence.]


இது போன்ற காட்சிகள் E.T பட காட்சிகள் பார்வையாளனின் பங்களிப்பை கோரும் நிலையில் உள்ளதால்  , மேலும் அவை   பார்வையாளனின் நுண்அறிவிற்கும் கொடுக்கும்  முக்கியத்துவம் காரணமாக  காலம் கடந்து நிற்க சாத்தியங்கள் அதிகம் உள்ளன.  

தொடரும்....

திரைக்கதை எழுதுவது ஒரு கலை அல்ல அது தொழில்நுட்பம் VIII E.T Pierced into Heart III

திரைக்கதை எழுதுவது ஒரு கலை அல்ல அது தொழில்நுட்பம் VIII 

E.T நம் இதயங்களை துளைத்தது ஏன் ? III 

அடுத்த காட்சிக்கு போவதற்கு முன்னால் E.T யின் ஒரிஜினல் DVD அய் காசுகொடுத்து வாங்கிடுங்க. இன்னும் கொஞ்சம்  செலவுகூட ஆகும். ஆமாங்க கிரீன் டீ ரூ 90 கொடுத்து வாங்கிவைத்துக் கொள்ளுங்கள். நாம செய்யப்போகும் காரியம் வெற்றி அடைய மூளைக்கு அதிக   antioxidant தேவை அல்லவா? மேலும் ஸ்கிரிப்ட் எழுதும் போது அல்லது எப்படி நல்ல ஸ்கிரிப்ட் எழுதுவது என்று கற்கும் போது,  நாம அதிகமா புகைக்கும் போது உடலில் ஏற்படுகிற கெட்ட விளைவுகளை தவிர்க்க  antioxidant தேவை அல்லவா? அதுக்கு தான் கிரீன் டீ. எலுமிச்சை பழமும்  கூட இருந்தால் நல்லது. ராவா கிரீன் டீயை குடித்தால் பயங்கரமா கசக்கும். எலுமிச்சை சாறு  கொஞ்ச்மா சக்கரை சேர்த்து கூட்டிக்கலாம். சரி விசயத்துக்கு வருவோம். டைட்டில் போடப்பட்டு ஆயிற்று. அடுத்தது கதாபாத்திரங்களை பற்றிய அறிமுகம் தானே என்று கேட்கின்றீர்களா ? க்தாபாத்திரங்ககளை அறிமுகம் செய்துகொண்டே நேரடியாக கதைக்குள் போவது தானே நம்ம  ஸ்டீவென் ஸ்பீல்பர்க்கின் பாணி(style). 

EXT: LANDING SITE: NIGHT

In an opening in the forest stands a spacecraft. The view of the craft is
obscured by tree branches. The atmosphere is misty, with blue lights coming
from the spacecraft.

[The opening scene is misty and diffused. This forces the audience to pay
close attention to the images on the screen. The characters are not clearly
seen. This engages the audience, as they attempt to see what the aliens
really look like.]
One creature walks up the gang blank and into the ship.

INSERT: ALIEN HAND

A strange hand, with two long and slender fingers protruding, move aside a
branch that obstructs the view.

[This concentrates the audience's attention. The creature going into the
ship is being observed by another creature. Who are they? What's going on?
This is another technique that forces the audience to focus on the action.]


மேல் உள்ள இந்த காட்சியில் ஒரு விண்கலம் அது காட்டில் உள்ள மரங்களின் கிளைகளால் மறக்கப்பட்டு உள்ளது. பனி மூட்ட சூழல். இந்த காட்சியை படமாக்க நீல ஒளி பயன்படுத்தப்பட்டு உள்ளது. மூடு பனி , காட்சிகளில் தெளிவின்மை இவற்றுக்கு எல்லாம் காரணம் என்ன? ஸ்பீல்பர்க் இந்த கட்சியை படமாகும் போது தூங்கிட்டாரா? அல்லது கேமிரா மேன் அனுபவம் அற்றவரா? எளிமையான காரணம் பார்வையாளர்களின் (படத்துக்கு வெளியில் உள்ள கதாபாத்திரங்கள்)  கவனத்தை வெளிகிரக ஜீவிகள் மீது ஈர்க்க வைப்பது தான்.பார்வையாளர்கள் அமர்ந்து உள்ள சீட்டின் நுனிக்கு வராவிட்டாலும் சற்று நிமிர்ந்து அமருவார்கள் என்பது தான் இந்த காட்சியில் உள்ள உளவியல்(psychology)


இதன் ஊடாக நல்ல திரைக்கதை ஆசிரியருக்கு   Human  psychology[ மானுட உளவியல்] கண்டிப்பாக தெரிந்து இருக்க வேண்டியது அவசியம் தானா என்ற கேள்வி எழுகின்றது அல்லவா?  இதற்கு பதில் ஆம், இல்லை இரண்டுமே தான். உங்கள் இரண்டு வயது குழந்தையை , நண்பர்களை , உங்கள் ஆசிரியரை,  மனைவியை எந்த அளவுக்கு புரிந்து வைத்து உள்ளீர்களோ அந்த அளவுக்காவது மானுட உளவியல்  பற்றிய அறிவு கண்டிப்பாக ஒரு இயக்குனருக்கு , திரைக்கதை ஆசிரியருக்கு    இருவருக்குமே கண்டிப்பாக தேவை. அதே சமையத்தில்  டாக்டர் ஐயா ருத்ரன் அளவுக்கு எல்லாம் மானுட உளவியல் அறிவு கண்ண்டிப்பாக தேவை இல்லை. மானுட உளவியல் பற்றிய அளவுக்கு மீறிய அறிவு அனுபவம் அற்ற இயக்குனருக்கு அவரை காட்சிகளின் ஊடாக கதைசொல்வதை விட கதாபாத்திரங்களின் மன வெளிக்குள் புகுந்து  கதையில் ஓட்டத்தை சிதைத்துவிடும். உதரணத்துக்கு ராமின்  கற்றது தமிழ்திரைப்படம். படம்.  அதே நேரத்தில்   ராமின் அடுத்தப்படமான  தங்க மீன்களில்    அவர் கதாபாத்திரங்களின் மனோவெளியை  கட்டிக்கொண்டே கதையை  நகர்த்தும் போக்கு சிறப்பானதாக இருக்கும்.  

மேலும் பார்த்திர்கள் என்றால்  கட்சிகளை வடிவமைக்க  "Enter Late Exit Earlier" என்ற ஒரு கோட்பாடு (விதி அல்ல)  Hollywood  திரைக்கதைகளில் பயன்படுத்தப்படுகின்றது. அந்த கோட்பாடு இந்த காட்சியிலும் சரியான முறையில் பயன்படுத்தப்பட்டு உள்ளது. விண்கலம் விண்ணில் பறந்து வருகின்றனது. சுத்தி சுத்தி வருகின்றது.. புகை விட்டுக்கொண்டே வருகின்றது ... மெல்ல இறங்குகின்றது என்று எல்லாம் ஸ்பீல்பர்க் காட்ட மாட்டார். ஆனால் விண்கலம்(spacecraft)  மிக எளிமையாக காட்டு மரங்களின் ஊடேபனி மூட்டத்தில்  நீல ஒளியில் அது இருபது காட்டப்படும். மேலும் ஒரு விண்வெளி மனிதன் விண்கலத்துக்குல் போவது போன்றும் அதனை வேறு ஒரு விண்வெளி மனிதன் இரண்டு விரல்களால் இலைகளை நீக்கிவிட்டு பார்ப்பது போன்றும் காட்சி இருக்கும். பார்வையாளர்களுக்கு அது என்ன  என்பது புரிந்த உடனேயே அந்த காட்சியில் இருந்து அடுத்த காட்சிக்கு ஸ்பீல்பர்க் சென்று விடுவார். (நேரம் மிச்சம்.., budget  மிச்சம் ) 


இந்த காட்சியை தமிழ் படங்களில் எப்படி எடுப்பார்கள் என்று கற்பனை செய்து பாருங்கள் ! 

"Enter Late Exit Earlier" என்ற காட்சிவடிவமைப்பு கோட்பாட்டை முக்கிய விதியாக கொள்ளவேண்டியது இன்றைய இளம் இயக்குனர்களின் கடமையாகவே நான் நினைக்கிறேன். இந்த காட்சியில் பார்வையாளர்களுக்கு விடுபட்ட செய்தி என்ன? யார் இவர்கள்? நல்லவர்களா? கெட்டவர்களா? என்ன நோக்கத்துடன் வந்து உள்ளார்கள்? போன்ற கேள்விகளுக்கான பதில்கள் தானே? அவை அடுத்த காட்சிகளில் ...... 

"Yes We travel along with Steven Spielberg few more chapters " 


தொடரும்

previous Chapters :

http://vansunsen.blogspot.in/2015/09/i_17.html
http://vansunsen.blogspot.in/2015/09/ii-screen-play-is-not-art-but.html
 http://vansunsen.blogspot.in/2015/09/iii-screen-play-is-not-art-but.html 
http://vansunsen.blogspot.in/2015/09/iv.html
http://vansunsen.blogspot.in/2015/09/v-scene-sequence-screen-play-technology.html
http://vansunsen.blogspot.in/2015/09/e.html
http://vansunsen.blogspot.in/2015/09/viii-et-pierced-into-heart-iii.html

திரைக்கதை எழுதுவது ஒரு கலை அல்ல அது தொழில்நுட்பம் VII penetrating heart E.T II

திரைக்கதை எழுதுவது ஒரு கலை அல்ல அது தொழில்நுட்பம் VII 

E.T நம் இதயங்களை துளைத்தது ஏன் ? II 

இன்றையடைரக்டர்களுக்கு நான் சொல்லிக்கொள்ள விரும்புவது என்ன என்றால்  படத்தின் தலைப்பை காட்டும் போது (Title)தேவையில்லாமல் கிராபிக்ஸ் அனிமேசன் என்ற பகட்டுகளுக்கு movie budget ஐ  செலவு செய்யாதிங்க.  Hollywood படங்களுக்கு படத்தின் பெயரும் , படத்தின் முக்கியமானவர்களின் பெயரும் மட்டுமே   தான் முதலில் வரும். பிற டைட்டில்கள் படம் முடிந்த பின் தான் வரும். ஆனால்தமிழ் படங்களில் தான் பிற டைட்டில்கள்,  எழுத்தும்- இயக்கமும் வரைக்கும் முதலிலேயே வருகிறன. சரி பரவாயில்லை இதனை தமிழ் திரைப்பண்பாடாக நாம எடுத்துக்கொண்டாலும்   100%   கிராபிக்ஸ் அனிமேசன் போன்ற படத்துக்கு தேவையற்றவற்றை தவிர்த்துவிடுங்கள்.  உதாரணத்துக்கு ... E .T யின் டைட்டில் எப்படி இருக்கு என்று பாருங்கள்....

TITLES: "E.T. - THE EXTRA-TERRESTIAL"

[The letters are in soft-purple against a black background. Purple is
traditionally the color of that which is sacred.]


ஸ்டீவென் ஸ்பீல்பர்க்  எவ்ளவு அனுபவப்பட்ட டைரக்டர் ? அவரே அவரின் E.T  என்ற படத்தில்  கருப்பு நிற பின்னியில்  மென்மையான-ஊதா கலரு நிற எழுத்துக்களில்  "E.T. - THE EXTRA-TERRESTIAL" என்று டைட்டில்  போட்டு விட்டு காட்சியை அடுத்தது  காட்டுவதற்கு போய்விடுகின்றார். சரி இது தமிழ் படம் எனவே அனைத்து டைட்டில்களையும் கண்டிப்பாக காட்டியே ஆகவேண்டும் என்ற கட்டாயம் இருப்பதால் முழு படத்தின் காட்சிகளையும் சுருக்கி  2 நிமிட தொகுப்பாக [montage] காட்டிக்கொண்டே  அதன்  மீது அனைத்து டைட்டில்களையும் எழுத்தும்- இயக்கமும் வரை போட்டுவிடலாம். கிராபிக்ஸ் அனிமேசன் மூலம் டைட்டில் காட்ட வேண்டாம் என்று கூறியதற்கு காரணம் budget பிரச்சனை மட்டும் காரணம் அல்ல. இந்த வேண்டா வேலைகள்   கதையின் மீதான பார்வையாளர்களின் கவனத்தை சிதைக்கவும் சந்தர்ப்பங்கள் அதிகமாக இருக்கின்றன.

 previous Chapters :

http://vansunsen.blogspot.in/2015/09/i_17.html
http://vansunsen.blogspot.in/2015/09/ii-screen-play-is-not-art-but.html
 http://vansunsen.blogspot.in/2015/09/iii-screen-play-is-not-art-but.html 
http://vansunsen.blogspot.in/2015/09/iv.html
http://vansunsen.blogspot.in/2015/09/v-scene-sequence-screen-play-technology.html
http://vansunsen.blogspot.in/2015/09/e.html

திரைக்கதை எழுதுவது ஒரு கலை அல்ல அது தொழில்நுட்பம் Extra-Terrestrial (Director Steven Spielberg)penetrating in to viewers Heart

திரைக்கதை எழுதுவது ஒரு கலை அல்ல அது தொழில்நுட்பம் VI

E.T நம் இதயங்களை துளைத்தது ஏன் ?


நல்ல படங்கள் அது எந்த மொழியை பேசினாலும்  கண்டிப்பாக சிறிது நேரத்தை  செலவு செய்து பார்பவர்களுக்கு   கண்டிப்பாக மன உணர்வுகளை கிளறிஎழச்செய்யும். கோபம், வருத்தம், பாசம் போன்ற உணர்வுகளையும்[mood]   அவற்றின் வெளிப்பாடான முறையே கண்கள் சிவப்பது , கன்னத்தில் கைவைத்து சோர்வாய் இருப்பது,  குழந்தையை கட்டி அனைத்து முத்தமிடுவது   பேன்ற வெளிப்பாடுகளையும்  [expressions]        தின தின வாழ்வில்  நாம் பார்த்துக்கொண்டு தானே இருக்கின்றேம்.?  எனது நண்பர் ஐயா பேட்டைகார ஈழத்து கவி ஜெயபாலன் அவர்கள்  இதை தான் நான் சோர்வுறும் தருணங்களில் "life is not a tea party" என்று அழகாக கூறுவார். சரி இத்தகைய உணர்வுகள் திரைப்படத்தில் எப்படி பிரதான கதாபாத்திரங்கள் மூலமாக வெளிப்படும்  அவற்றுக்கு மற்ற கதாபாத்திங்க்ளின்  எதிர்வினை எப்படி இருக்கும் என்பதை நம்ம E.T. the Extra-Terrestrial (Director Steven Spielberg) என்ற திரைப்பட காட்சிகள் மூலமாக பார்க்கலாமா? கதாபாத்திரங்கள் மட்டும் தான் ஒரு சினிமாவை  முடிவு செய்கின்றனவா? வேறு எவரும் இல்லையா என்ற கேள்வி நம்முள் எழுமாயின் அதற்கு பதிலையும்  நாம் சிந்தித்து கூற முடியும். ஆம் பார்வையாளர்கள் , அந்த திரைப்படத்தின் பார்வையாளர்களும்  அவர்களின்  திரைப்பட காட்சிக்கான மன உணர்வுகளும் தான் திரைக்கு வெளியில் உள்ள முக்கியமான  கதாபாத்திரங்கள். [external Roles to a Movie] அந்த வெளி-கதாபாத்திரங்களின் உணர்வுகள் காட்சிகளை காணும் போது தட்டையாக இருப்பின் நாம் செத்தோம் ....அந்த திரைப்படத்துக்கு தொடர்புடைய  டைரக்டர் அல்லது திரைகதை ஆசிரியர் மூட்டை முடிச்சிக்ளுடன்  விருதுபட்டிக்கும் , கோவில்பட்டிக்கும் திரும்பி செல்லும் நிலை தான் ஏற்படும். ஆடோகிராப் படத்தின் வெற்றியை தொடர்ந்து சேரன் அளித்த பேட்டியில் அவரும் இதை தான் கூறினார். ['இந்த படம் மட்டும் flop ஆயிருந்தால் தான் சொந்த ஊருக்கு தான் போய் இருக்கவேண்டி இருந்து இருக்கும்']

சரி விடயத்துக்கு மீண்டும் வருவோம். கதாபத்திரங்கள் அவரின் உணர்வுகள் , உணர்வுகளின் வெளிப்பாடுகள், அதற்கு பார்வையாளர்களின் மனஉணர்வுகள் அவற்றின் வெளிப்பாடுகள் தான் ஒரு திரைப்படத்தின் வெற்றியை தீர்மானிக்கின்றன என்பதை  நாம் புரிந்துக்கொண்டு இதயத்தை  துளைத்த E.T. யில் இருந்து ஒரு சில காட்சிகளை திரைக்கதை வடிவிலேயே காண்போம். 


TITLES: "E.T. - THE EXTRA-TERRESTIAL"

[The letters are in soft-purple against a black background. Purple is
traditionally the color of that which is sacred.]

EXT: NIGHT SKY: NIGHT

The black screen becomes a night sky. The camera angles lowers to show a
forest against the night sky.

EXT: LANDING SITE: NIGHT

In an opening in the forest stands a spacecraft. The view of the craft is
obscured by tree branches. The atmosphere is misty, with blue lights coming
from the spacecraft.

[The opening scene is misty and diffused. This forces the audience to pay
close attention to the images on the screen. The characters are not clearly
seen. This engages the audience, as they attempt to see what the aliens
really look like.]

One creature walks up the gang blank and into the ship.

INSERT: ALIEN HAND

A strange hand, with two long and slender fingers protruding, move aside a
branch that obstructs the view.

[This concentrates the audience's attention. The creature going into the
ship is being observed by another creature. Who are they? What's going on?
This is another technique that forces the audience to focus on the action.]

INT: SPACECRAFT'S GREENHOUSE: NIGHT

The inside of the ship appears to be a greenhouse. There are sounds of
water dripping. Cone shaped objects (possibly alien plants) sit among earth
plants. Vapors flow up from the plants.

[These images all appear non-threatening. The aliens are inferred to be
collecting vegetation, and are thereby inferred to be harmless.]

[Like many of Spielberg's other films, the opening sequences contain almost
no dialogue. The story is told without verbal exposition. He forces the
audience to become engaged in the storytelling process by giving them just
bits of information that they have to piece together into the story. He
doesn't insult their intelligence.]

தொடரும் .......


 previous Chapters :

http://vansunsen.blogspot.in/2015/09/i_17.html
http://vansunsen.blogspot.in/2015/09/ii-screen-play-is-not-art-but.html
 http://vansunsen.blogspot.in/2015/09/iii-screen-play-is-not-art-but.html 
http://vansunsen.blogspot.in/2015/09/iv.html
http://vansunsen.blogspot.in/2015/09/v-scene-sequence-screen-play-technology.html