Thursday, July 31, 2014

தீக்குளித்த செங்கொடி-தமிழச்சி-நம் தங்கையின் கதை அத்தியாயம் 3 Fired Sengodi True Story Chapter 3

தமிழச்சி 


நம் தங்கையின் கதை

அத்தியாயம் 3

நான் முன்பு முன்னுரையில் எழுதியது போன்று வினவு தளத்தின் நம் தங்கை பற்றிய ஒரு கட்டுரையீன் பீன்னுட்ட பகுதியில்  எனது நம் தங்கை பதிவுகளை  பதிக்க முயன்றேன். வினவு அதனை வெட்டி எறிந்து விட்டது.

தீக்குளித்த செங்கொடி மூட்டிய தீ! நெஞ்சை உலுக்கும் நேரடி ரிப்போர்ட்!! படங்கள்!!!
http://www.vinavu.com/2011/08/29/senkodi/

இக் கட்டுரைக்கு தொடர்பு உடைய என் பதிவுகளை வெட்டி எறியும் அளவுக்கு வினவுக்கு வந்த கோபத்துக்கு காரணம் என்னவாக இருக்க முடியும் ? வினவு கட்டுரையீன் இருதியில் அவர்கள்[வினவாளர்கள்] நம் தங்கைக்கு அஞ்சலி செலுத்தும் போது கூறும் வார்த்தைகளை பார்ப்போம் :


 
தோழர் செங்கொடி சென்று வாருங்கள்,

உங்களைப் புரிந்து கொண்ட தோழர்கள்

பலர் இங்கிருக்கிறார்கள், உயிரைக் கொடுத்து நீங்கள்

எழுப்பியிருக்கும் கோரிக்கையை அவர்கள் நிறைவேற்ற

போராடுவார்கள். உங்கள் தீக்குளிப்பு அந்தப் போராட்டத்தின்

மீது ஒரு நெருப்பாய் பற்றவைக்கும், போய் வாருங்கள்!


உண்மையில் வினவாளர்களுக்கு  சிறிதாவது நம் தங்கை மீது, தமிழர் மீது அன்பு ,பாசம் இருபின் ஒருபுறம்  அஞ்சலி செலுத்திக்கொண்டு மறுபுறம்  நம் தங்கை மீதான என் பதிவுகளை வெட்டி எறிவார்களா?  

 
தோழன்மையுடன்   ,
கி.சிவகார்த்திகேயன்

Wednesday, July 30, 2014

தீக்குளித்த செங்கொடி-தமிழச்சி-நம் தங்கையின் கதை அத்தியாயம் II Fired Sengodi True Story Chapter 2

தமிழச்சி 


நம் தங்கையின் கதை

அத்தியாயம் 2  

 

சுய நலம் ததுப்பும்  மக்கள் யார் என்று கேட்டால் எம்மால் கூற முடியும் அது நாம் தான் ,தமிழர்கள் தான் என்று. முத்துகுமரனின் பினத்தின் மீதும் பாகா அரசியல் வியாபாரம் செய்த வைகோகளும், திருமாக்களும்    ஒருபுறம்இருக்க... ......  


 ஊரின்   தண்ணிர்  பஞ்ச  குழாய்களில்
ஒசு போட்டு தன் வீட்டு தொட்டியை
நிரப்பும் சமுகம்  யார் சமுகம் ?

அடுத்த தெரு பெண்ணுக்கு ஒரு
குடம் தண்ணிர் கூட கொடுக்கா
சமுகம் யார் சமுகம் ?

நம் தமிழ் சமுகம்.

 
தமிழர் இவ்வாறு சுய நலமாய் இருக்க 
எம்  தமிழச்சிக்கு மட்டும் பொது நலம் வந்தது ஏன் ?

 தனக்கு என்று வீடு , உறவு , உணவு ,என்று 
எத்னையும் தமக்கு என தனிமை படுத்தா எம் தமிழச்சி, 
ஊரே உறவை, உலகமே வீடாக நினைத்து வாழ்ந்தாள். 

அவள் தியாக செய்தி  கண்டு மார்க்ஸ் துயில் இடம் 
அவளுக்காக  இருதி கண்ணிர்  வடிக்காதா  என்ன ?
தோழன்மையுடன்   ,
கி.சிவகார்த்திகேயன்
தீக்குளித்த செங்கொடி-தமிழச்சி-நம் தங்கையின் கதை அத்தியாயம் I Fired Sengodi True Story Chapter I

தமிழச்சி 


நம் தங்கையின் கதை

அத்தியாயம் I  

                 நம்பிக்கையே வாழ்க்கை  நம்பிக்கையின்மையே மரணம்  என்ற எளிய சமன்பாடு படி வாழும் மானுட சமுகம் இத் தமிழச்சியின்  பொது காரியத்துக்கான  உயிர் தியாகத்தை  எப்படி தரிசனம்[vision] செய்கின்றது?  


தோழர் முத்துக்குமாரின் உடல் தமிழகத்தை எழுப்பியது போல், என்னுடைய உடல் இந்த 3 தமிழர்களின் உயிரை காப்பாற்ற பயன்படும் என்ற நம்பிக்கையுடன் செல்கிறேன்.
இப்படிக்கு
தோழர் செங்கொடி
                               "ஐந்தாம் வகுப்பு தான்டா இருளச்சிக்கு

                              இறுதி கடிதம் எழுத தெரிந்தது எப்படி?

                              என்று தினமலர் தன் சுய வெறியை

                              அரசியல் அற்ற மொக்கை தமிழரிடம் கூவி கூவி

                              விற்க ,அதையும் மானம் கெட்டு 
 
                              நாமும் படித்து மவுனமாக இருக்க


                            தானே செய்தோம் "

தோழன்மையுடன்   ,
கி.சிவகார்த்திகேயன்தீக்குளித்த செங்கொடி-தமிழச்சி-நம் தங்கையின் கதை முன்னுரை Fired Sengodi True Story Preface

தமிழச்சி 

நம் தங்கையின் கதை

 

முன்னுரை :

தீக்குளித்த செங்கொடி, யார் இவள் ? யாருக்காக அழுதாள் ? எதற்காக தீயை  தண்ணிராய் கொண்டு குளித்தாள்? இவளுக்கு என்று ஏதேனும் சிறப்பு வரலாறு உண்டா ? முருகன் ,சாந்தான்,பேரறிவாளன் இவர்களுக்கும் இத் தமிழச்சிக்கும் என்ன உறவு முறை ? 


தீக்குளித்த செங்கொடி மூட்டிய தீ! நெஞ்சை உலுக்கும் நேரடி ரிப்போர்ட்!! படங்கள்!!!


தமிழ் சமுகத்தால்  சமுக ,பொருளாதார அடுக்குகளில் கடைகோடியில் நிறுத்தபட்ட  இவளுக்கு  ஏன் அச் சமுக்த்திற்காக  உயிர் துறக்கும் அளவுக்கு பாசம்? இவளுக்கு என்று எந்த தனிபட்ட வாழ்வும்,கனவும்  ஏதும் இல்லையா?  இந்த எளிய ஆனால்  வலி எடுக்கும் கேள்விகளுக்கு எல்லாம் பதில் தேடும் முயற்சி தான் இந்த "நம் தங்கையின் கதை".இனி இவளை செங்கொடி என்று அழைக்க போவது இல்லை. அவள் பெயர் இனி தமிழச்சி  மட்டுமே. 

குறிப்பு :

இவள் வரலாற்றை வினவின் பின்னூட்ட பெட்டி மூலமும் , என் வலை தளத்திலும் பதிந்து தமிழ் கூறும் மனங்களை நோக்கி கேள்வி கேட்டு மனஅதிர்வுகளை உண்டாக்குவது மட்டுமே என் நோக்கம்.

தோழன்மையுடன்   ,

கி.சிவகார்த்திகேயன்
Sunday, July 27, 2014

வினவில் தென்றலின் உளறல்களும் அதற்கான பதில்களும் replay to Thendral Part I

தென்றல் அவர்கள், சிதைவடைந்த மனதின் காரணமாக,மன பிரம்மை காரணமாக இட,கால தொடர்பு அற்ற விடயங்களை முடிச்சு போட்டு அவரை மலையகத் தமிழர் நலனுக்காக பேசுவது போல காட்டிகொள்கின்றார். தென்றல் அவர்களீன் ஒவ்வொரு சுய முரண்பாடுகளையும் தொகுப்பது என்பது சிந்துபாத் கதை போல நீளும் என்பதால் ஒருசில முரண்பாடுகளை மட்டும் ஆய்வு செய்ய போகின்றேன்.
---------------------------
தென்றல் உளறல் I ://இதுவும் உங்கள் தவறுதான். வட கிழக்கிலே வாழும் மலையகத் தமிழர்களை அறியாதவராக இருப்பது எந்த விதத்தில் நியாயம்? வாசிக்க வேண்டுமென்ற எண்ணம் சிறிதும் இல்லையா?//

[1]இலங்கையின் மலையகம் இலங்கை தீவின் நடுப்பகுதியில் அமைந்துள்ளது. மலையகத் தமிழர் என்போர் 19ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்தில், தேயிலை, இறப்பர், கோப்பி முதலிய பெருந்தோட்டப் பயிர்ச் செய்கைகளுக்காக தமிழ்நாட்டில் இருந்து அழைத்துவரப்பட்ட மக்களை குறிக்கும். இலங்கையின் மலையகம் மாத்தளை, கண்டி, நுவரெலியா, பதுளை, இரத்தினபுரி, கேகாலை மாவட்டங்கள், சிங்கள மக்கள் அதிகம் வாழும் இலங்கை தீவின் நடுப்பகுதியில் அமைந்து உள்ளன.தென்றல் கூருவது போல் வட கிழக்கில் மலையகத் தமிழர் வாழுகின்றனர் என்ற கருத்து தவறானது. ஒருவேளை மலையகத் தமிழர் இன்று தமிழ் ஈழத்தீன் வடக்கு ,கீழக்கு பகுதியில் இடம் பெயர்ந்தால் அப்போது அவர்கள் தம்மை ஈழ தமிழர்களாக அடையாளம் காட்டி கொளவதில் தென்றலுக்கு என்ன பிரசனை ?

--------------------------


தென்றல் உளறல் II//இதுதவிர 3இலட்சம் மலையகத் தமிழர்கள் அக்காலத்திலேயே நாடற்றவர்களாக அறிவிக்கப்பட்டிருந்தனர். அதாவது இலங்கையின் மத்தியப்பகுதியோ, வடக்கு கிழக்கு அல்லாமல், இந்திய பிரஜையாகவோ அல்லாமல் வைக்கப்பட்டிருந்தமைக்கு யார் பொறுப்பேற்றுக்கொண்டது?ஈழத் தமிழர் ஈழத் தமிழர் என்று வாய் கிழிய கத்தினால் போதுமா?//

இங்கு உங்களுடன் வாதாடும் நானோ, வியசனோ, மலையகத் தமிழர்களீன் ஞாயமான அபிலாசைகளை, உரிமைகளை எதிர்த்து குரல் கொடுத்தால் வேண்டுமானால் எம்மை பார்த்து நீங்கள் இந்த கேள்விகளை எழுப்பலாம். மலையகத் தமிழர்களீன் விடயத்தில் வியாசன் வைக்கும் கருத்துகள் [feedback 59] தவறு என்று நீங்கள் வாதாடும் போது ,நீங்கள் கூறுவது என்ன ?
“மலையகத் தமிழர்களை ஈழத் தமிழர்கள் என்ற பட்டிக்குள் அடைக்கலாம் என்பது உமது வாதம். ஆனால் வரலாறு அதுவல்ல. ஈழப் போராளி குழுக்கள் ஆரம்பத்திலிருந்தே மலையகத் தமிழர்களின் நலன்களை பிரதிபலிக்கவில்லை.”

ஆனால் நீங்கள் எம்முடன் வாதாடும் போது [feedback 58.1.1.1] “சிறுபான்மை தேசிய இனம் குறித்த கீழ்கண்ட விளக்கத்தைக் கொஞ்சம் கவனியுங்கள். ஈழம் தேவை ஒரு நேர்மையான மீளாய்வு-பக்கம் 13-15″ இதை மேற்கோள் காட்டி கூருவது என்ன ?

“மலையகத்தில் தோட்டத் தொழிலில் இருக்கக்கூடிய, பூர்விகமாகத் தமிழ்நாட்டைச் சேர்ந்த தமிழர்கள், நம்முடைய வார்த்தைகளில் சொல்லப்போனால் சிறுபான்மை தேசிய இனத்தைச் சேர்ந்தவர்கள் கூட. ஈழத் தமிழர்கள் எனும் தேசிய இனத்திற்குக் கீழே இருக்க வேண்டியவர்கள் என்ற கண்ணோட்டத்தில் சொல்கிறார்கள்.தனி ஈழம் என்று சொன்னால், விடுதலைப் புலிகளினுடைய கண்ணோட்டத்தில் மலையகத் தமிழர்களும் சேர்ந்துதான். அவர்கள் வெளியிட்டிருக்கும் வரைபடத்தில் தமிழீழம் மலையகத்தையும் உள்ளடக்கியதாக இருக்கிறது. ஆனால் உண்மையில் 1815-க்கு பிறகு ஆங்கிலேயர்களால் குடியமர்த்தப்பட்ட, தமிழ் நாட்டை பூர்விகமாக கொண்ட தமிழர்கள் தனி இனத்தவர், தேசிய சிறுபான்மை இனத்தவர்கள்.”

My question:
——————–
தென்றல், மேல் உள்ள மேற்கோள், சிங்களவன் மலையகத் தமிழர்களை குடிமக்களாகவே அங்கிகரிக்காத நிலையில், விடுதலை புலிகள் மலையகத் தமிழர்களை தம் இனமாக[ஈழ தமிழராக] சேர்த்து அவர்களுக்காகவும் போராடியதை தானே காட்டுகின்றது???????????? இந்த நீலையீல் ஈழ தமிழர்களை பிரித்து வைக்க நினைக்கும் உள் அடி தன வேலை உங்களுக்கு எதற்கு தென்றல் ?
------------------------

தென்றல் உளறல் III//இது இரட்டை வேடமாகும். என் பார்வையில் ஈழத்திற்கு விமர்சனம் வைத்திருப்பதைப்போன்று பாராளுமன்ற ஜனநாயகத்தில் சீரழிபவர்களை அடையாளங்கண்டு நேபாள் சூழ்நிலையை ஒட்டி பல கட்டுரைகள் வெளிவந்திருக்கின்றன. ஒரு பக்கம் பாராளுமன்ற ஜனநாயகத்தில் சீரழிந்தவர்கள் மாமா வேலை என்று சொல்கிற நீங்கள் செல்வநாயகம் போன்றவர்கள் அதே பாராளுமன்ற ஜனநாயகத்தில் சுயஆட்சியை தேடுகிற பொழுது தந்தை என்று சொல்கிறீர்கள்.//

[1]வர்க்க போராட்டத்தை காட்டிகொடுத்த,பாராளுமன்ற பன்றி தொழுவத்தீல் ருசி கண்ட நேப்பாள கம்யுனிஸ்டுகளை, தனி தமிழர் மாநிலம் கோரிய தந்தை செல்வநாயகம் அவர்களுடன் நீங்கள் ஒப்பீடு செய்து பார்க்கும் அறிவு மெய் சிலிர்க்கீன்றது.வர்க்க போராட்டம் என்பதும், தம் தேசிய மக்களுக்கான குறைந்த பட்ச உரீமையான தனி தமிழர் மாநிலம் என்ற கோரிக்கைகாக ஜனநாயக முறையில் போராடுவதும் ஒன்றா ? வர்க்க போராட்ட நோக்கமும் ,பண்புகளும் தேசிய இன உரிமைகான நோக்கமும்,பண்புகளும் வேறு வேறு என்னும் போது, அதை பற்றிய அடிப்படை அறிவு தென்றலுக்கு இல்லாமைக்காக நான் வருந்துவதை தவீர வேறு என்ன செய்ய முடியும் ?

தென்றல் உளறல்IV//நேபாளை சூழ் கொண்ட தரகுமுதலாளித்துவம், ஏகாதிபத்திய நலன்கள், ரா போன்ற உளவுபிரிவுகளின் இந்திய உள்ளடி வேலைகள் இலங்கைக்கும் பொருந்தும் என்கிற பொழுது அங்கே பிராபகரன் போன்றோர் பாசிச நடவடிக்கைகளில் சீரழிந்ததை மறைத்துவிட்டு போரிலே இறந்தது தியாகம் என்று நிலீக்கண்ணீர் வடிக்கீறிர்கள்.//

[2]விமர்சனம் இன்றி விடுதலை புலிகளை ஆதரிக்கும் முட்டாள்களீடம் வேண்டுமானால் நீங்கள் இக் கேள்வியை எழுப்பலாம். எம் நிலை என்ன எனில் இஸ்லாமிய தமிழர்களை வடக்கில் இருந்து வீரட்டியது, கீழக்கீல் கொன்றது ஆகிய இரண்டுமே விடுதலை புலிகள் செய்த மாபெரும் தவறுகள் ,பாசிச நடவடிக்கைகள். வியசனுடன் நான் நடத்தும் விவாதங்களில் இக் கேள்விகளை எழுப்பியது நான் தான் என்பதை குறிப்பிட விறுப்புகின்றேன்.

[3]ஈழத்து மே 2009 மானுட பேரழீவுக்காக நான் வடிப்பது நிலீக்கண்ணீர் என்று அவதுறு செய்யும் தென்றல், அதே பேரழீவுக்காக தமிழகத்தில் தன் உயிரை தீயீட்டு துறந்தானே எம் தம்பி அவனின் இருதி ஊர்வளத்தில் கலந்து கொண்ட ம க இ க தோழர்களை பார்த்தும் இக் கேள்வியை கேட்க துப்பு இருக்கா சனியன் பிடித்த,சிங்கள பேரினவாத அடிவருடி,சிங்கள கைகூலீ தென்றலுக்கு ??????


-----------------------------

தென்றல் உளறல் V//மறுபக்கம் ஒடுக்கப்பட்ட மக்களின் வாழ்நிலைக்கு வருந்துவதாக சொல்லும் தாங்கள் மலையகத் தமிழ்ர்கள் என்று வரும் பொழுது மட்டும் ஈழத் தமிழர் குழுக்கள் போடுகிற பிச்சையை வாங்கிக்கொள்ளவேண்டும் என்று அடம்பிடிக்கீறிர்கள்.//

எத்துனை முறை உளறினாலும் ஒரே பதில் தான் சித்தம் கலங்கிய தென்றலுக்கு :

சிங்களவன் மலையகத் தமிழர்களை குடிமக்களாகவே அங்கிகரிக்காத நிலையில், விடுதலை புலிகள் மலையகத் தமிழர்களை தம் இனமாக[ஈழ தமிழராக] சேர்த்து அவர்களுக்காகவும் தான் போராடினார்கள்

--------------------------

தென்றல் உளறல் VI //இது தான் உங்கள் சுயமுகம். நீங்கள் மட்டுமில்லை தான் சார்ந்து இருக்க விரும்புகிற அரசியலுக்கு மார்க்சியம், கம்யுனிசம், பாட்டாளிவர்க்க சர்வாதிகாரம் என்ற பல வார்த்தைகளை அலங்கரித்துவிட்டு அண்ணன் பிராபகரன் என்பார்கள் பலபேர்.//

மார்சியம்-லெனினியம் வழிகாட்டும் வர்க்க போராட்டத்துக்கான வழி முறைகள் தேசிய இன உரிமைகளீன் சுய நிர்ணய உரிமையையும் உள்ளங்கியது தான் என்ற விடயத்தை ம க இ க தொழர்கள் தென்றலுக்கு வகுப்பு எடுத்தால் நலம்

--------------------------

தென்றல் உளறல் VII//நீங்களாவது பராவயில்லை. கலாச்சாரப் புரட்சி சர்வாதிகாரம் என்று சொல்பவர்கள் எத்துணை கம்யுனிஸ்டுகளை கொன்றழித்தார்கள் தெரியுமா என்று கதறுவார்கள். கூரிய விமர்சனத்தை கம்யுனிஸ்டுகளுக்கு வைத்துவிட்டு, அமெரிக்க ஜனநாயகம் ஆகா ஒகோ என்று சொல்வதைப்போல தந்தை செல்வநாயகம், அண்ணன் பிராபகரன் என்று போரிலே உயிர் துறந்தார்கள் என்று வியந்து ஓதுகிறீர்கள்.//

எத்துனை முறை உளறினாலும் ஒரே பதில் தான் சித்தம் கலங்கிய தென்றலுக்கு :

ஈழத்து மே 2009 மானுட பேரழீவுக்காக நான் வடிப்பது நிலீக்கண்ணீர் என்று அவதுறு செய்யும் தென்றல், அதே பேரழீவுக்காக தமிழகத்தில் தன் உயிரை தீயீட்டு துறந்தானே எம் தம்பி அவனின் இருதி ஊர்வளத்தில் கலந்து கொண்ட ம க இ க தோழர்களை பார்த்தும் இக் கேள்வியை கேட்க துப்பு இருக்கா சனியன் பிடித்த,சிங்கள பேரினவாத அடிவருடி,சிங்கள கைகூலீ தென்றலுக்கு ??????

-------------------------

தென்றல் உளறல் VIII//1815இல் குடியேறுகிற மலையகத் தமிழர்கள் இலங்கை நாட்டு பொருளாதாரத்திற்கு கணிசமான அளவு உழைத்து ஓய்ந்திருக்கின்றனர். அவர்கள் உழைப்பை எல்லாம் உறிஞ்சி கொழுத்த இலங்கைப் பேரினவாதம் அவர்களில் கணிசமான ஒரு பகுதியினரை இந்தியாவிற்கு திருப்பி அனுப்பிய பொழுது ஈழப்போராளிக்குழுக்களின் நிலைப்பாடு என்னவாக இருந்தது? தப்பித்து ஓடாமல் தாங்களும் முடிந்தால் சரவணனும் பதில் சொல்லவும்.//

இலங்கைப் பேரினவாதம் மலையகத் தமிழர்ககளில் கணிசமான ஒரு பகுதியினரை இந்தியாவிற்கு திருப்பி அனுப்பிய பொழுது ஈழப்போராளிக்குழுக்களின் நிலைப்பாடு என்னவாக இருந்தது என்று கேட்கும்  தென்றலுக்கு மூளை ,அறிவு சிறிதும் இல்லை என்பது  மட்டும் உறுதி. அவர்களை தீருப்பி அனுப்பும் கால கட்டத்தில்  ஈழப்போராளிக்குழுக்கலே இல்லை என்பது தான் நிசம். அதற்க்கு பின் உருவான வீடுதலை புளீகள் இயக்கம், சிங்களவன் மலையகத் தமிழர்களை குடிமக்களாகவே அங்கிகரிக்காத நிலையில், விடுதலை புலிகள் மலையகத் தமிழர்களை தம் இனமாக[ஈழ தமிழராக] சேர்த்து அவர்களுக்காகவும் தான் போராடினார்கள்

----------------------------

தென்றல் உளறல் IX //அப்பொழுது மெளனியாக இருந்துவிட்டு மலையகத் தமிழர்கள் ஈழத் தமிழர்கள் என்ற தேசிய இனத்திற்குள் இப்பொழுது வருவார்கள் என்று கதைகட்டுவது எதற்காக?//

 மூளை கொட்ட தென்றல் ,ஈழம் தேவை ஒரு நேர்மையான மீளாய்வு-பக்கம் 13-15″  கூருவது என்ன ? “மலையகத்தில் தோட்டத் தொழிலில் இருக்கக்கூடிய, பூர்விகமாகத் தமிழ்நாட்டைச் சேர்ந்த தமிழர்கள், நம்முடைய வார்த்தைகளில் சொல்லப்போனால் சிறுபான்மை தேசிய இனத்தைச் சேர்ந்தவர்கள் கூட. ஈழத் தமிழர்கள் எனும் தேசிய இனத்திற்குக் கீழே இருக்க வேண்டியவர்கள் என்ற கண்ணோட்டத்தில் சொல்கிறார்கள்.தனி ஈழம் என்று சொன்னால், விடுதலைப் புலிகளினுடைய கண்ணோட்டத்தில் மலையகத் தமிழர்களும் சேர்ந்துதான். அவர்கள் வெளியிட்டிருக்கும் வரைபடத்தில் தமிழீழம் மலையகத்தையும் உள்ளடக்கியதாக இருக்கிறது. ஆனால் உண்மையில் 1815-க்கு பிறகு ஆங்கிலேயர்களால் குடியமர்த்தப்பட்ட, தமிழ் நாட்டை பூர்விகமாக கொண்ட தமிழர்கள் தனி இனத்தவர், தேசிய சிறுபான்மை இனத்தவர்கள்.”

By the way You can understand and conclude that…

சிங்களவன் மலையகத் தமிழர்களை குடிமக்களாகவே அங்கிகரிக்காத நிலையில், விடுதலை புலிகள் மலையகத் தமிழர்களை தம் இனமாக[ஈழ தமிழராக] சேர்த்து அவர்களுக்காகவும் தான் போராடினார்கள்


---------------------------

Friday, July 25, 2014

Rachel Corrie the light-ரச்சேல் என்னும் ஒளி

ரச்சேல் என்னும் ஒளி 

ஈழம் என்றாலும் காசாவென்றாலும்

முதலில் நினைவுக்கு வருவது எம் களமாடும் தங்கைகள் தான்.

மனிதம் சிதவுரும் உலகில்

தன்னை சிதைத்து மனிதம்படைத்த

என் அன்பு தங்கைக்கு

என் விழிகள் ஈரத்துடன்

மனம் நெகிழ்ந்து உருகும்

இருதி வணக்கம்

அன்புடன் ,

சிவகார்த்திகேயன்

July 16-சூலை 16

சூலை 16

எம் குழந்தைகளை நம் சமுகம் தீயிட்ட நாள்

உண்மையில் வேலையில் கொடைகானலில் இருந்தேன்

குளிர் அற்ற வெப்பம் அற்ற இளம் குளிர்-சூட்டு பருவத்திலும்

என் வேலை தோழர்கள் மனவெப்பத்தில் தகித்து போனோம்!

மது-தனிமை விரும்பா நான் மது உடன் தனிமைபட்டு போனேன்

தந்தையின் மரணம் பதின்வயதில் சிறு துளி விழி நீருடன் கரைந்தாலும்,

கண்ணைவிட்டு கரையா தொலைகாட்சி காட்சிகள் இன்றும்…

ஆம் சூலை 16

எம் குழந்தைகளை நம் சமுகம் தீயிட்ட நாள்

அன்புடன்,

சிவகார்த்திகேயன்

Saturday, July 19, 2014

அரவிந்தன் நீலகண்டனுக்கு ஒரு கடிதம் Letter to Arvindan Neelakandan

அரவிந்தன் நீலகண்டன்,

மனு தர்மம் , அதன் மீது கட்டமைக்க பட்டு உள்ள பார்பனிய ஹிந்து மதம் ,அதை சார்ந்த ஹிந்து RSS ,VHP போன்ற இயக்கங்கள் ,அவற்றின் மதத்தீன் பெயரால் மக்களை கொல்லும் பாசிச மக்கள் விரோத தன்மை இவை அனைத்தையும் முற்றும் உணர்ந்த அரவிந்தன் நீலகண்டன் அவர்கள் இன்னும் தொடர்ந்து அவ்வியக்க சார்பு உடன் இருப்பதற்க்கு என் ஆழ்ந்த அனுதாபங்கள் மற்றும் கடுமையான கண்டனங்கள்.

உங்கள் மனு தர்ம ,பார்பனிய பாசீச ஹிந்து மதம் கூறுவது படி …..

முகத்தில் பிறந்தவன் பிராமணன்,
தோளில் பிறந்தவன் சத்திரியன்,
தொடையில் பிறந்தவன் வைசியன்
காலில் பிறந்தவன் சூத்திரன்

எனில் ,பஞ்சமர்களுக்கு[தளித்தியர்களுக்கு] எங்கே இடம் ?இது தான்ஹிந்து மத சனநாயகமா அரவிந்தன் நீலகண்டன்?பஞ்சமர்களுக்கு[தளித்தியர்களுக்கு] ஹிந்து மத, மனு தர்மம் இருதியில் கூட இடம் கொடுக்காத போது பஞ்சமர்களுக்கு[தளித்தியர்களுக்கு] ஏது ஜனநாயகம் உங்கள் ஹிந்து மதத்தில் ?

 
பார்பனியத்தில் மூழ்கி திளைக்கும் 

மனு தர்ம ஹிந்து மதம் வெட்கி தலைகுனியுமா 

ஆசான் அம்பேதகாரின் பார்பனிய எதிர்ப்பை கண்டு ?

பார்ப்பானுக்கு கொடிகட்ட,பார்பன கொலை வெறிக்கு

கட்டை தூக்க வேறு இடம் பாருமையா !

எம் தளித்தியர் வரமாட்டார் உம்மோடு 

RSS கொலை வெறிக்கு கட்டை தூக்க வேறு ஆள் 

பாருமையா மேற்கு மாம்பல அயோத்தி மண்டபத்தில் !


அரவிந்தன் நீலகண்டன் நீர் நீண்ட மவுனம் சாதிப்பது ஏன் ? [OR] மோடி மயக்கம் ஏன்? 
 
[1]ஆசான் அம்பேத்கர் அவர்களுக்கு இந்து ஆன்மீக சேவைக் கண்காட்சியின் இடம் அளிக்கபட்டது பற்றி பேசும் நீர் ஆசான் பார்பனிய ஹிந்து மதம் பற்றி கூறி உள்ள எதீர் கருத்துக்களை பற்றி ஏதும் கூறாமல் மவுனம் சாதிப்பது ஏன் ?

[2]உம் மோடி ஆண்ட குஜராத் மாநிலத்தில் அரசு உயர் அதிகாரிகளிடத்திலும் வேற்றுமை ஏற்படுத்தி தளித்தியர் சமுக உயர் அதிகாரிகளை தனி குடிஇருப்புகளில் குடிஅமர்தீய மோடி பற்றி ஏது கூறாமல் பல ஆண்டுகளாக நீண்ட மவுனம் சாதிப்பது ஏன் ?

[3] தளித்தியர் சமுக துப்புரவு தொழிலாளர்கள் அவர்கள் செய்யும் தொழிலாள் புன்னியம் அடைகின்றார்கள் என்ற மோடியீன் கருத்துக்கு நீர் கண்டனம் தெரிவிக்காது பல ஆண்டுகளாக நீண்ட மவுனம் சாதிப்பது ஏன் ?

Tuesday, July 15, 2014

Discussion with vinavu about the word Dalith-தலித் என்ற மாற்று மொழி[மராட்டிய] பெயர்ச் சொல்லுக்கு!

வினவு,
[1]இன்றைக்கு பிராமணர்கள், பார்ப்பனர்கள், அந்தணர்கள் என்ற சொற்கள் ஒரு குறிப்பிட்ட ஜாதியினரைக்[பன்மை] குறிக்க வழங்குகின்றன.பிராமணர், பார்ப்பனர், அந்தணர் என்ற சொற்கள் ஒருமையில் குறிப்பிட்ட வழங்குகின்றன. இதை வினவு நினைவு கொள்ள வேண்டும்.
நன்றி தமிழ் பேராசிரியர். க.பூரணச்சந்திரன்
http://siragu.com/?p=2623
//பிராமணன் அல்லது பிராமணர், சூத்திரன் அல்லது சூத்திரர் என்று அன் இர் விகுதி வேறுபடுவதாக நாம் பயன்படுத்துவது ஒருமை, பன்மைக்காக மட்டுமே//
[2]நான் பிராமணர், சூத்திரன் என்று “இர்”, “இன்” என்று கொடுத்த உதாரணத்தை திரித்து “சூத்திரர் என்று அழைத்தால் பாராட்டு-கௌரவம் என்று நீங்கள் புரிந்து கொள்வது இந்த உலகில் மிகப்பெரும் அறியாமையாகும் அல்லது அடிமுட்டாள்தனமாகவும் எடுத்துக் கொள்ளலாம்” என்று வினவு என்னை இட்டு கட்டி பேசுவது கயமை தனம்.
//அடுத்து ஒருவர் பிராமணன் என்று அழைக்கப்பட்டால் இழிவு, சூத்திரர் என்று அழைத்தால் பாராட்டு-கௌரவம் என்று நீங்கள் புரிந்து கொள்வது இந்த உலகில் மிகப்பெரும் அறியாமையாகும் அல்லது அடிமுட்டாள்தனமாகவும் எடுத்துக் கொள்ளலாம்//
[3]முதலில் தலித் என்பதை பெயர் சொல் என்றது வினவு. இப்போது போராட்ட உணர்வை குறிக்கும் பண்புப் பெயர் ஆக்குகின்றது வினவு.
//தலித் என்பது ஒருமை பன்மையைத் தாண்டிய போராட்ட உணர்வைச் சுட்டுகிற ஒரு சொல் தலித் இளைஞர், தலித் மக்கள், தலித் பெண் என்ற பயன்படுத்துவதுதான் சரி.//
[4]வினவு கொள்கை படி ஒடுக்க பட்ட மக்களீன் சாதிகளை குறிக்க “இர்” அல்லது “இன்” பயன்படுத்துவார்களா என்பதை வினவு தான் உணர்த்த வேண்டும்.
//மற்றும் தலித் என்றே சொல்லை ஒடுக்கப்ப்ட்டோரின் எதிர்ப்பு உணர்வை பிரதிபலிக்கிறது.இர் இல்லை என்பதால் இது தகுதிக் குறைவு என்று நீங்கள்தான் அறியாமையால் கருதிக்க கொள்கிறீர்கள். //
[5]வினவுக்கு என்ன அனைத்து இந்திய மொழிகளும் அத்துபடியா ? வினவுக்கு என்ன அனைத்து இந்திய மொழிகளும் அத்துபடியா ? பிற இந்திய மொழிகளில் தலித் என்ற சொல்லின் இயல்பு [Grammar meaning ] , [Singular,plural ][பயன்பாட்டின் உயர்வு தாழ்வு] வினவுக்கு தெரியுமா என்ன ?
//மேலும் முழு இந்தியாவும், தமிழகமும் தலித் என்றே பயன்படுத்தி வருகிறது.ஆகையால் நாங்களும் தலித் என்றே எழுதுகிறோம், எழுதுவோம். நீங்கள் தளித்தியர் என்று தாராளமாக எழுதிக் கொள்ளலாம். ஆனால் நாங்கள் அப்படித்தான் எழுத வேண்டும் என்று உத்திரவு போடாதீர்கள்.//

Discussion with Tendral-வட மொழி கலப்பு ,மாவோவுடன் விவாதம்,எண்ணிகையில் ஏன் மனபிழர்வு,ஈழ தீர்வு என் பார்வையில்

தென்றல்,

தமிழ் சமய இலக்கியத்தில் வட மொழி கலப்பு 

[0]வியசனுடன் செய்யும் முடிவில்லாத இவ் விவாதத்தில் தேவாரம் பற்றீய வீமர்சனம் தேவை தானா என்பதை என் கேள்வி. மற்ற படி தேவாரம்,தீருவாசகம் போன்ற சமய இலக்கியத்தில் உள்ள வட மொழி கலப்பு பற்றீய ஆய்வு மிக்க அவசியம்.தனி கட்டுரையாக எழுதலாம். அத்தகைய ஆய்வு எந்த தளத்தில் [பக்தி இலக்கியங்களில்] தமிழ், வட மொழி கலப்பு அடைந்து உள்ளது என்பதையும் யார்[ ஒடுக்க பட்ட உழைக்கும் மக்கள் ] தமிழ் வேர்களை காத்தார்கள் என்பதையும் உலகத்துக்கு உணர்த்தும். 

//இன்னும் வியாசருடன் தேவாரம் பற்றி விமர்சிக்கவில்லை. அப்படியொரு எண்ணம் இருக்கிறது. சைவம் குறித்து எழுத வேண்டும். அதை ராம், வெங்கடேசன், வியாசர் உங்களைப் போன்றவர்கள் பரிசிலீக்க வேண்டும் என்பது ஒரு திட்டம். முடியுமா என்று பார்ப்போம்.//


மாவோவுடன் விவாதம்

[1]நீங்களும், வெங்கட்டும் உயர் கணிதத்தை வாதம் செய்த போது, மாவோ கணிதத்தை வரட்டு சூத்தீரம் என்றார் ; நான் உழைக்கும் மக்கள் எண் கணிதத்தை எவ்வாறு எல்லாம் பயன் படுத்துகீன்றார்கள் என்பதை தொகுத்து அளித்தேன்.பதில் இல்லை
[2]தமிழ் இலக்கணம் கணிதத்துடன் இணைந்தது என்பதை எளிமையாக நான் வீளக்கும் போது அவர் வெறுப்பு அடைந்தார்.
[3]கணிதம் கஞசி காச்ச உதவுமா என்று மாவோ கூறி கொண்டே , “கணிதமும், அறிவியல் பற்றீ வீவாதீக்கும் “இயற்கையின் இயக்க இயலுக்கு” என்ற பி.எங்கெல்ஸ்சின் சில முக்கிய பகுதிகளை மாவோ கொடுத்து தன் கருத்தில் இருந்து முரண்பட்டார். அதை சுட்டி காட்டினேன் . இருதியாக அவர் சம்மந்தம் இல்லமால் “அந்த ஒண்னு தான் இதுவென்றால்; நான்னென்ன யாராலும் ஒன்றும் செய்ய முடியாது” என்று கூறும்போது நான் மாஒ[mao] வின் அரசியல் அறிவு இப்போது வாழை பழத்தில் போய் சறுக்கி விழுந்து முடிந்து விட்டது தான் இப்போது பெரும் சோகம் என்று கூறினேன். இது தான் நான் இப்பொது வாழைப்பழ கம்யூனிஸ்டு என்று அவரை அழைப்பதற்க்கு காரணம்.
[4]தயவு செய்து மார்சீய-லெனினிய நூல்களில் வாழைப்பழ கம்யூனிஸ்டு என்ற பதத்துக்கு வீளக்கம் தேடவேண்டாம். 

//மாவோ குறித்த உங்களது கருத்துக்கள் தனிமனித தாக்குதல் வகையைச் சார்ந்தவை என்பது என் புரிதல். டார்வின் தொடர்பான பதிவில் அவரது கருத்தைப் புரிந்துகொள்ளாமல் முரண்பட்டுவிட்டு இன்றைக்கு வேறு வகைகளில் வெளிப்படுத்துகிறீர்கள்.//


எண்ணிகையில் ஏன் மனபிழர்வு 

[5]டார்வின் தொடர்பான பதிவில் நான் பலவாறு முயன்றும் தன் சுய முரண்பாடுகளை ஏற்காத மாவோ, இங்கு வந்து “ஒரு லட்சத்திற்கு மேலான அப்பாவி முஸ்லீம் வடபகுதியில் இருந்து விரட்டியடிக்கப்பட்டிருக்கிறார்கள்.இதை செய்தவர்கள்கள் சிங்கள அரசியல்வாதிகளோ இராணுவமே அல்ல. தமிழ்மக்கள் தமிழ்அரசியல்வாதிகள் என தமக்கு தாமே பெயர் சூட்டிக் கொண்டவர்களே!.” என்று ஹிட்லர் கோயபல்ஸ் போன்று கூறும் போது அதற்கு எதிராக ஏதும் பேசாதீர்கள் என்று வியாசனுக்கு கூறினேன் இப்படி :
“வியாசன் வேண்டாம் எஸ்கேப் ஆயிடுங்க. மன பிரழ்வு உள்ள ஒருவரின் வாதம் இது :)
1 லச்சம் மேட்டரை கீழ்பாக்கம் மனிதரோ கூட நம்ப மாட்டார்கள். அதனால் “அதை” விட்டு தள்ளுங்க !”
மேலும் நான் எழுப்பீய கேள்விகள் மூலம் இஸ்லாமிய மக்கள் ஈழ வடக்கில் இருந்து துரத்த பட்ட வரலாற்று நீகழ்வையும், கீழகில் இஸ்லாமிய மக்கள் கொல்ல பட்ட நிகழ்வையும் வியாசன் இடம் இருந்தே ஒப்புதல் வாக்கு மூலம் வாங்கி உள்ளேன்.
வியாசனின் கமெண்ட்ஸ் :
28 :புலிகளுக்கும் முஸ்லீம்களுக்கும் பிரச்சனை வரக் காரணமே கருணா தான் என்பதால் தான் இன்றும் முஸ்லீம்கள் கருணா தண்டிக்கப்பட வேண்டும் என்கிறார்கள்
27.1:நம்ம அண்ணன் தனது தவறுக்கு மன்னிப்புக் கேட்டது மட்டுமல்ல, யாழ்ப்பாணத்து ஆடுகளை வரவழைத்து, வன்னியில் முஸ்லீம் தலைவர்களுக்கு விருந்தும் வைத்தாராம்.

//மாவோ வைக்கிற எண்ணிக்கையில் உடன்பாடு எட்டாமல் இருக்கலாம்; ஆனால் அது கள்ள பரப்புரையல்ல. ஆழ்ந்து விவாதிக்க அதில் பல விசயங்கள் உண்டு. மாவோ நான் வைக்கிற கருத்துக்களிலும் மறுத்து கருத்துக்கள் வைத்திருக்கிறார். ஆனால் என்றைக்குமே பதிவை ஒட்டி அவர் விவாதிக்க தவறியதில்லை. ஆனால் தாங்கள் மாவோவை கருத்துத்தளத்தில் விமர்சிக்கவில்லை. விளக்கம் கூறுமுன்னரே அவரை கீழ்பாக்கம் மருத்துவமனையில் சேர்த்தாயிற்று. இது எப்படி சரி?//ஈழ தீர்வு என் பார்வையில்

ஈழ பிரச்சனைக்கான தீர்வு என் பார்வையில் கஷ்மீர் இன, குர்தீஸ் இன மக்களுக்கான, தீர்வுடன்[சுய நீர்ணய உரிமை] உடன் பட்டது. What about You?

//என் பார்வையில் இனமுரண்பாடுகளை முன்னிட்டு தேசிய இன உரிமைக்காக தனித்துப் போராடுவது என்ற ஒன்று கிடையாது. பொதுவாக தாங்கள் முன்வைத்த கருத்துக்கள் என் பார்வையில் தவறானவை. இதையும் விளக்க முடியும். //

The Word Dalith A Discussion-தலித் என்ற மாற்று மொழி[மராட்டிய] பெயர்ச் சொல்லுக்கு “இன் இர்” விகுதி பொருந்தா?

வினவு,

[1]தலித் என்ற மாற்று மொழி[மராட்டிய] பெயர்ச் சொல்லுக்கு “இன் இர்” விகுதி பொருந்தா என்று தமிழுக்கு தொல்காப்பியம், நன்னூல் இவைகளையும் தாண்டி புது இலக்கணம் படைக்கும் வினவின் புத்தமிழ் முயற்சிக்கும் என் வாழ்த்துக்கள்.

[2] பிராமணர் என்ற வட மொழி பெயர்ச் சொல் “இர்” விகுதியுடன் பயணிப்பதையும் ,வினவு நோக்கி அறிக !

[3]சூத்திரன் என்ற வட மொழி பெயர்ச் சொல் “இன்” விகுதியுடன் பயணிப்பதையும் ,வினவு நோக்கி அறிக !

[4]சிவகாமியின் தலித்திய சபதம் – குற்றம் நடந்தது என்ன ? வினவு கட்டுரையீல்

“அதில் முக்கியமானது ‘தலித் அல்லாதவர் அம்பேத்கரை குறித்து எழுத தகுதியில்லை’ என்பது. இது தலித்திய அரசியல், தலித் தலைமை….”
“தலித்திய” என்று “இர்” விகுதி வராமல் வராமல் தயங்கும் காரணம் என்னவோ ?

//இது வேற்று மொழியில் இருந்து வந்த ஒரு பெயர்ச் சொல். அதை அப்படியே பயன்படுத்துவதுதான் சரி. இன் இர் விகுதி இங்கே பொருந்தாது. எந்த இலக்கணத்தை எங்கே பயன்படுத்த வேண்டும் என்று நீங்கள் ஒரு தமிழாசிரியரிடமாவது அறிந்து கொள்ள வேண்டும்.//

Sunday, July 13, 2014

[My confession about Christianity and Communism] கிறித்துவம்,கம்யுனிசம் பற்றி ஒப்புதல் வாக்குமூலம்

கிறித்துவம் பற்றி ஒப்புதல் வாக்குமூலம்[My confession about Christianity]

Benefits :

[1]தளித்தியர் மக்களுக்கு கிருஸ்துவம் கல்வி அறிவு புகட்டுவது மூலம் அவர்கள் பொருளாதார முன்னேற்றத்துக்கு செய்த நன்மைகளை யாரும் மறுக்க முடியாது. தளித்தியர் மக்கள் கல்வி அறிவு பெறுவதன் மூலம் பொருளாதார நன்மை அடைந்து சமுகத்தில் உள்ள சாதீய ஒடுக்கு முறையில் இருந்து விடுபட முடியும் என்பதையும் யாராலும் மறுக்க முடியாது. உதாரணத்துக்கு திரு கார்டுவெல் அவர்கள் ஆய்வு செய்த நாடார் சமுகத்தீன் உட் பிரிவான சாணர் சாதி மக்கள், தம்மை கிருஸ்துவர்களாக மாற்றிய பின் அவர்கள் அடைந்த சமுக பொருளாதார முன்னேற்றங்கள் வியப்பு அடையும் அளவுக்கு உள்ளது. நாடார் மக்களை பார்த்து தோளுக்கு சீலைப் போடகூடாது என்று திருவாஇங்கூர் சமஸ்தான மன்னனும், நாயர்களும், நம்பூதிரிகளும் கட்டளை இட்ட போது நாடார் மக்களுக்கு கை கொடுத்து மானம் அவர்கள் காத்ததும் கிருஸ்துவமே. 

[2]அதே சமயம் தளித்தியர் மக்களுக்கு மட்டும் தான் கிருஸ்துவம் நன்மை செய்ததா என்ற கேள்வியும் எழுகின்றது. நம் சமுகத்தில் மேல் கட்டுமானதில் உள்ள பிராமணர்கள்[FC] மக்கள் முதல் பின் தங்கீய சமுகத்தை சேர்ந்த பிற சாதி [BC ,MBC ] மக்கள் வரை அனைவருக்கும் கிருஸ்துவம் கல்வி அறிவு புகட்டுவது மூலம் அவர்கள் பொருளாதார முன்னேற்றம் அடைய நன்மை செய்ததை நாம் தமிழர் அனைவருமே நன்றியுடன் நினைவில் கொள்ள வேண்டும். 

[3]மேலும் என் 12 +3+2 =17 ஆண்டு கால கல்வியையும் நான் கிருஸ்துவ நிறுவனங்களில் கற்றதால் எம்மால் உறுதியாக சொல்ல முடியும். பெந்தகொஸ்து மத மக்கள் இடுபடும் மத மாற்ற நடவடிக்கைகள் போல நான் படித்த RC, CSI கல்வி நீறுவனங்கள் மத மாற்ற நடவடிக்கைகளில் நேரடியாகவே அல்லது மறைமுக மாகவே ஈடுபட்டது இல்லை.

[4]மேலும் என் 12 +3+2 =17 ஆண்டு கால கல்வியையும் நான் கிருஸ்துவ நிறுவனங்களில் கற்றதால் எம்மால் உறுதியாக சொல்ல முடியும். பெந்தகொஸ்து மத மக்கள் இடுபடும் மத மாற்ற நடவடிக்கைகள் போல நான் படித்த RC, CSI கல்வி நீறுவனங்கள் மத மாற்ற நடவடிக்கைகளில் நேரடியாகவே அல்லது மறைமுக மாகவே ஈடுபட்டது இல்லை. இவை எல்லாம் கிருஸ்துவம் ஒட்டு மொத்த தமிழர்க்கு செய்த மாபெரும் நன்மைகள்.

Disadvantages

[5]பாதிரியார்கள் செய்யும் பொருளாதார,பாலியல் முறைகேடுகள் [Irregularities and Abuse]
[6]தளித்தியர் மக்களுக்கு கிருதுவ மதத்திலும் உள்ள சாதீய அடக்கு முறைகள்

கம்யுனிசம் பற்றி ஒப்புதல் வாக்குமூலம்[My confession about Communism]

[7]டாங்கே போன்ற பார்பன சாதியில் பிறந்து பின்பு கம்யூனிஸ்ட் ஆனாவர்கள் தளித்தியர் மக்கள் மீது செய்த பாகுபாட்டை திரு அம்பேத்கார் அவர்கள் பல முறை சுட்டி காட்டி உள்ளார்.அதை கம்யூனிஸ்ட்களாகீய அனைவரும் ஏற்று கொண்டு சுய பரிசீலனை கண்டீப்பாக செய்து கொள்ள வேண்டும். அதே நேரத்தில் கம்யூனிஸ்ட்கள் தளித்தியர் மக்களுக்காக ஏதும் செய்ய வீல்லையா ? என்ற கேள்விக்கு நாம் மனசாட்சியுடன் பதில் அளிக்க வேண்டும். 

[8]தளித்தியர் மக்களீன் அரசியல் விடுதலைக்கும், பொருளாதார உயர்வுக்கும் இந்தியா முழுவதும் போராடி கொண்டு தான் உள்ளனர். ஆனால் அதனை உழைக்கும் மக்களுக்காக போராடுவதாக தான் மார்க்ஸ்ய-லெனினிய கொள்கை படி கூறுவார்கள் இந்த அப்பாவி கம்யூனிஸ்ட்டுகள். 

[9]அன்று தஞ்சை-வெண்மணி [தளீத்] கூலி விவசாய தொழீலாளர் பீரசனை முதல் முதல் ,கேரள பழங்குடி மக்கள் நிலம் பறிப்பு வரை அனைத்துக்கும் போராடி உயிர் கொடுத்தவர்கள் இந்த அப்பாவி கம்யூனிஸ்ட்டுகள் தான். இன்றும் பழங்குடி மக்களீன் வாழ்வாதரத்தை காக்க அம் மக்களுகடன் சேர்ந்து போராடுபவர்களும் மாஒயீடுகள் என்ற பெயரில் உள்ள ந்க்சல்பாரி கம்யூனிஸ்ட்டுகள் தான்.

முடிவுரை

[10] தளித்தியர் மக்களீன் முன்னேற்றத்துக்கு கிருஸ்துவம் கல்வி அளிப்பதன் மூலமும், கம்யுனிசம் அரசியல் தளத்திலும் போராடி சேவை செய்கின்றன என்பதை வினவு தளத்தில் பின்னுட்டம் இட்டு யாரேனும் மறுக்க முடியுமா ?

Saturday, July 12, 2014

Poem to Viyasan :இன உணர்வு மிக்க யூதர்களும், கனடா ஈழ அதிதி வியாசனும்

அகதி வாழ்வின் வலி யாருக்கு தெரியும்?

அதிதியாய் உண்டு, ஊர் சுற்றி, கும்மாளம் இட்டு வாழும் வியாசனுக்கா ?

இல்லை வட துருவ நாடுகளில் கடுங்குளிரில் மீன்

வெட்டி; பொருளிட்டி ஆகாரம் உண்ணும் எம் ஈழத்து உழைபாளிக்கா ?

அகதி தன்மை வலி வியாசன் அறிய……

யுதர்கள் திருணத்தன்று பழம் கொடும் வரலாற்றை

மறக்காமல் இருக்க மணமக்களுக்கு கடும் கசப்பு ரசம் கொடுப்பார்களே

அதை தினமும் வியாசன் வாயில் ஊற்ற வேண்டும்!

விழுங்கும் வரை வியாசன் வாயை கொட்டியாக மூடி

துரோகிகளுக்கும், ஈனர்களுக்கும் இடையீலும் வீரமாய்

விளைந்த ஈழ வரலாற்றை வியாசன் மண்டையில் உரைக்க

உரக்க கூற வேண்டும்!

கி.சரவணன்

Related Topis :

http://vansunsen.blogspot.com/2014/07/explanation-about-refugee-to-viyasan.html

http://vansunsen.blogspot.com/2014/07/univerbuddy-answer-to-univerbuddy.html

http://vansunsen.blogspot.com/2014/07/who-are-guard-dogs-of-american-wolf.html

 http://vansunsen.blogspot.com/2014/03/final-song.html


Explanation about Refugee to Viyasan அகதி பற்றி வியாசனுக்கு ஒரு விளக்கம்

அகதி என்ற வார்த்தையீன் வலி தெரிந்த எம் ஈழ தமிழன், ஈழக்கவிஞர் வ.ஐ.ச.ஜெயபாலன் போன்றவர்கள் இருக்க, NRS[Non Resident Srilankan] நிலையில் கனடாவில் அதிதி யாய் உண்டு, ஊர் சுற்றி, கும்மாளம் இட்டு வாழும் வியாசன் போன்றவர்களுக்கு அகதி என்ற சொல் அதன் ஊடே அது கூறும் பொருள் எப்படி வீளங்கும் ?


அகதி 

யாழ் நகரில் என் பையன்

கொழும்பில் என் பெண்டாட்டி

வன்னியில் என் தந்தை

தள்ளாத வயதினிலே

தமிழ் நாட்டில் என் அம்மா

சுற்றம் பிராங்பேட்டில்

ஒரு சகோதரியோ பிரான்ஸ் நாட்டில்

நானோ

வழி தவறி அலாஸ்கா வந்து விட்ட ஒட்டகம் போல்

ஒஸ்லோவில்

என்ன நம் குடும்பங்கள்

காற்றில்

விதிக்குரங்கு கிழித்தெறியும்

பஞ்சுத் தலையணையா?”

–ஈழக்கவிஞர் வ.ஐ.ச.ஜெயபாலன் 


Related Topis :

http://vansunsen.blogspot.com/2014/07/poem-to-viyasan.html

http://vansunsen.blogspot.com/2014/07/univerbuddy-answer-to-univerbuddy.html

http://vansunsen.blogspot.com/2014/07/who-are-guard-dogs-of-american-wolf.html

http://vansunsen.blogspot.com/2014/03/final-song.html

Friday, July 11, 2014

Univerbuddy க்கு என் பதில்கள் Answer to Univerbuddy

Univerbuddy,

[1]உமது பிளாக்அய் பார்க்கவும் என கூறி இருந்திர். மொத்தம் 24 கட்டுரைகள் உள்ள உமது பிளாக்கில் 24மே ஒற்றை எதிர்ப்பு தன்மையுடன் இஸ்லாமிய மக்களை பற்றி அவர்களுக்கு எதிராக எழுதப்பட்டவைகள்.இவ் உலகில் உள்ள ஒரே பிரச்சனை இஸ்லாமிய மக்கள் மட்டுமே , எனவே அவர்களை அழீத்து விட்டால் எல்லாம் ஒழுங்கு அடைந்து விடும் என்பதாக பேசுகின்றீர். வினவுக்கும்,வினவு வாசகர்களும் உம்மை அடையாளம் காண வைப்பதற்காக, அம்பலபடுத்துவதற்காக அந்த ப்ளாக் லிங்க்கை கீழ் கொடுக்கின்றேன்.


அதிலும் 

I am a humanist. I am concerned about the madness(s) that cripple(s) the humanity. I am trying to bring some sense to human beings through my questions and parody. 

சுய பொருமை வேறு அடித்துகொள்கின்றீர்கள். 

[2]திப்புவை , PJ[பி.ஜைனுலாபிதீனுடன்] நீர் சமம் செய்து இஸ்லாமியர்கள் அனைவரையும் மத அடிப்படை யாளர்கள் என்று நீர் வரையறை செய்வதில் இருந்து உன் மனதில் உள்ள குரோதம்,வன்மம், காழ்ப்புணர்ச்சி,காலித்தனம் இவை அனைத்தும் ஒருங்கே வெளிபடாமல் வேறு என்ன வெளிப்படுகின்றது.இந்த ஈனமான வேலையை உம்மை தவீர வேறு யாரும் செய்ய முடியாது. 

//விவாதம் திப்புவைப் பற்றியதில்லை. திப்புவும் PJயும் பின்பற்றும் முகமதியத்தைப் பற்றியது. அந்த எளிய மனிதர்தான் தான் முகமதியனே இல்லை என்று பொய் பேசினார். பதில் சொல்லத் தெரியாமல் என்னை அக்ரினையில் விளிக்கிறார். எனது ப்ளாகில் உள்ள திப்புவிற்கான பதிலை படித்தீர்களா? எதை உளறல் என்கிறீர்கள்? பார்ப்பனியத்தைப் பற்றி பேச வரும் திப்புவிடம் முகமதியத்தைப் பற்றி கேள்வி கேட்பதில் என்ன தவறு கண்டீர்கள்?//

[3] மேலும் வினவில் பின்னுட்டம் ஈடும் நண்பர்கள் சரவணன்,செந்தில்குமரன், தென்றல், திப்பு,வியாசன் என்று தமிழ் பெயர்களுடனும் சிகப்பு, இந்தியன் என்று தம் கொள்கையை குறிக்கும் புனை பெயர்களுடனும் பேசுகீன்ரார்கள். ஆனால் உம் பெயர் Univerbuddy எந்த விதத்தில் சேர்ந்தது? ஏன் இந்த முகத்துக்கு முகமூடீ இடும் வேலை உமக்கு ? இதை யாராவது கேட்டால் இஸ்லாமியர்கள் அமெரிக்கர்களையே கொல்கின்றார்கள். அவர்களுக்கு நான் எம்மாதிரம் என்று கூறும் கோழைத்தனம் வேறு. ஒற்றை மனிதனாய் PJ ஆட்களை நேர் கொண்டு அவர்களை ஓட செய்த வினவு தோழர் பாண்டியன் அவர்களுக்கு இருக்கும் வீரத்தில் 1% மாவது பேர முயலவும்.

[4]இஸ்லாமிய மார்கத்தை பின்பற்றும் எளீய மனிதர்கள், இஸ்லாமிய மத அடிப்பட்டை வாதிகள், இஸ்லாமிய தீவீரவாதிகள் என்று பீரித்து பார்க்கும் அறிவு கூட உமக்கு இல்லை என்றால் நீர் மண்ணடிக்கும் போகலாம் இல்லை ஆப்கானுக்கும் போகலாம். 

Note:
I do not know that vinavu will publish this or not!

//‘திறன்’ இருந்தால் எனது கேள்விகளுக்கு எந்த முகமதியரும் பதில் சொல்லலாம். இல்லையென்றால் விட்டுவிடலாம். கட்டாயமில்லை. PJ வினவுக்கு விவாதத்திற்கு வருவதில்லை. PJ தளத்திலும் பின்னூட்டமிட முடியாது. நேரில் செல்லவேண்டும். நான் மண்ணடிக்குப் போக வேண்டும் என்று விரும்புகிறீர்களா?//

Wednesday, July 9, 2014

அமெரிக்க ஒநாயீன் விசுவாச காவல் நாய்கள் யார் தெரியுமா தென்றல்?Who are the Guard dogs of American wolf?

அமெரிக்க ஒநாயீன் விசுவாச காவல் நாய்கள் யார் தெரியுமா தென்றல்?

தென்றல்,
[1]இவர்கள்[People Like Univerbuddy] அமேரிக்க வெறி ஏற்றபட்ட கண்களுக்கு திப்பு போன்ற மனிதர்களும் , இஸ்லாமிய மத அடிப்படை வாத சக்திகளும் ஒன்றாக தான் தெரிவார்கள். மத நல் இணக்கம் சிறிதும் இன்றியும், திப்புவின் பெயரில் உள்ள மதத்தை வைத்து திப்புவை நோக்கி வன்மம்,காழ்ப்புணர்ச்சி ஆகிய தீய குணங்களுடன் அவதூறு செய்தும் மட்டுமே பேசுவார்கள்.

[2]இஸ்லாம் மத அடிப்படை வாத சக்திகளையும், இஸ்லாம் மதத்தீன் மீது பற்று உடைய எளீய மனிதர்களையும் வேறுபாடு காணும் அறிவு அவர்களுக்கு இருப்பீனும் அதை ஒதுக்கி தள்ளிவிட்டு எசமானனுக்கு விசுவாசமான நாய் குரைப்பு வேலையை தான் தொடர்ந்து செய்வார்கள் . இவர்கள்[People Like Univerbuddy] விசுவாசம் யார் மீது என்பதை இவர்கள் இவர்களுடைய பின்னுட்டங்கலீல் ஒப்புதல் அளிக்கும் வாக்கு மூலம் மூலம் அறிய முடியும்.

Univerbuddy://In the conflict between Sunni & Shia, I don’t see any role to US, other than, selling weapons and safeguarding its regional interests.//

மேல் உள்ள வாக்குமூலத்தை பாருங்கள். வளைகுடா நாடுகலின் பெட்ரோல் சார் பொருளாதாரத்தை கபலிகரம் செய்ய வளைகுடா நாடுகள் மீது நீண்ட யுத்தத்தை தொடுத்து உள்ள அமேரிக்க அரசு பற்றிய இவர்கள் புரிதலில் ஒன்றும் தவறு தவறு இல்லை. ஏன் என்றால் இவர்கள் அமேரிக்க எசமானனுக்கு விசுவாசமான நாய் குரைப்பு வேலையை செய்யாமல் அமேரிக்க அரசு கட்டவீழத்து விட்ட யுத்தத்தால் பால் இன்றி,உணவு இன்றி, மருந்து இன்றி உயிர் இழந்த 2 லட்சம் ஈராக்கிய குழந்தைகளுக்காகவா இவர்கள் குரல் கொடுப்பார்கள் ?

[3]இந்த இலச்சனத்தில் நம்மையும் பார்த்து தோழர் என்றும் அழைப்பார் இந்த அமெரிக்க அடிவருடி Univerbuddy.இவர்களை பார்த்து நீங்களும் மயில் இறகால் தடவி கொடுப்பது போல மென்மையாக வீமர்சனம் செய்வது தான் அனைத்தையும் விட கொடுமை