Monday, February 3, 2014

பாமாவின் "கருக்கு"களை தீய்க்கும் பெருமாள் முருகனின் "ஆளண்டாப் பட்சி" -விமர்சனம் [karukku And Aalanta Patsee A Complete Working Class View]

".........ஆளண்டாப்   பட்சி தீய்க்கும்  கருக்குளின்  [கருக்குகளின்  கலகக்  குரலை மொக்கையாக்கும் ஆளண்டாப்   பட்சியின் சமரசத்தை  வாசத்தை  என்னால்    உணராமல்   இருக்க  முடியவில்லை. ........"

ஒரே காலக்  கட்டத்தில்  [1990களின்  ஆரம்பத்தில்நாவல்  வடிவ  சுய மற்றும் புனைக்  கதைகளை  எழுதத்  தொடங்கிய   பாமா  ,பெமுவின்  முதல் ,ஆறாம்  கதைகள்  தான் கருக்கு மற்றும் ஆளாண்டாப்   பட்சி. இரு  கதைகளுமே  நாட்டார்  வழவியலை  மையமாக  கொண்டு, "மதுரை--தலித்மற்றும்  "கொங்கு--கவுண்ட" வட்டார  வழக்கில்  எழுதப்பட்ட   மண்  சார்  கதைகள். இக்  கதைகளை  படித்து  உனர   மண்  சார்ந்த  மக்கள்  மீது  கரிசனமும் , மொழி மீது  குறைந்த  பற்றும் இருந்தாலே  போதும்.


கருக்கு,ஆளண்டாப்   பட்சி   கதைகள்   மனிதர்களின்  வலிகளையும்,தேடல்களையும்  முன்னிலைப்  படுத்தும் வகையில்  அமைந்து  இருந்தாலும்  கதை  மாந்தர்கள்  வெளிப்  படுத்தும் உள்ளார்ந்த அரசியலும்  ,வர்க்கப்  பார்வையும்  வேறு  வேறாக  உள்ளது. துறவு  வாழ்வை  துறந்த  பாமாவின்   கருக்கு நிலம்  இல்லாத தலித் விவசாயத்   தொழிலாளர்களின்   வாழ்க்கையையும்  ,முன்னால்  புரட்சியாளர்  பெமு வின்  ஆளாண்டாப்   பட்சி  நிலவுடைமை  கவுண்ட விவசாயிகளையும்    முன்னிலை  படுத்துகின்றன.


எல்லா மனிதர்களுக்கும்    வலியும்,தேடல்களும் பொதுவனது தான் என்றாலும்   அவர்கள் வர்க்கம்  சார்ந்து அதன்  நோக்கம்  வேறுபடுகின்றது. கருக்கு  நாவலில்  நிலம்  இல்லாத தலித்தியர்  கூலித் விவசாயத்   தொழிலாளர்களின்   வழ்க்கையை  தன்  சுய  கதையுடன்  இணைத்து  கூறும் பாமா அவர்கள் ,பக்கத்துக்கு  பக்கம் ,வார்த்தைக்கு  வார்த்தை  நிலம்  உடமை  சாதிகளுக்கு எதிராக வலிக்  குரல்  எழுப்புகின்றார்ஆளாண்டாப்   பட்சி நாவலில் பங்காளிச்  சூழ்ச்சியில்  நிலம்  இழந்த     நிலம்  உடமை  கவுண்டர்  சாதியை  சேர்ந்த ஒருவரின் புது  நிலம்  நோக்கிய  அகதிப்  பயணத்தில்  தன்  அடிமையுடன்  நடத்தும்  கதையாடல்களில்  பெமு அவர்கள் வார்த்தைக்கு  வார்த்தை  கவுண்டர்  சாதியை ,தலித்தியர்களுடன் சமரசம்  செய்து  கொள்ள  சொல்கின்றார்.  

சாதீய   அடக்கு  முறைகளுக்கு  எதீராக மூத்த தமிழர்களிடம்[ தலித்தியர்களிடம்] கலகக்  குரல்  எழுப்புச்  சொல்லும்   கருக்குவின்  வர்க்கப்  பார்வையும்   ,   தலித்தியர்களிடம் சமரசம்  செய்து  கொள்ள  சொல்லும் ஆளண்டாப்   பட்சியின்  சமரசப் [வர்க்கப்பார்வையும்  முறையே அடிமை ,ஆண்டான் வர்க்கங்களை   சார்ந்து  உள்ளன.

கருக்கு நாவலின்  கதைக் களம் , தலித்தியர் சமூகத்தைச் சேர்ந்த பாமா என்ற பச்சை  தமிழச்சியின்  வாழ்வில் நடைபெற்ற தீண்டாமை கொடுமைகளைகளால் கட்டியமைக்கப்பட்டது மட்டுமல்ல. அதன்வழியே  தலித்தியர்களின் நிலையை  எடுத்துக்காட்டுவதாகவும் அமைந்திருக்கிறது. இதனை மூன்று பிரிவுகளாக ஆசிரியர் கையாண்டுள்ளதாகவே தோன்றுகிறது. பள்ளி செல்லும் பிராயத்தில் தீண்டாமை கொடுமை அவரை எவ்வாறு தீண்டியது. அப்போது ஊரில் நிலவிக் கொண்டிருந்த சூழல் என்ன என்பதையும், வெளியூர் சென்று கல்வி கற்கும் போது ஏற்பட்ட அனுபவங்கள் என்ன என்பதையும், படித்து பட்டம் பெற்று வேலை செய்த கால கட்டங்களிலும், கன்னியாஸ்திரி மடங்களில் சேர்ந்து பணியாற்ற வேண்டும் என்ற எண்ணத்தில் முயற்சித்தப் போதும் அனுபவித்த கொடுமைகள் என்ன என்பதையும் எழுத்தில் வடித்துள்ளார் பாமா.

 ஆளண்டாப்   பட்சி நாவலின்  கதைக் களம், பங்காளிச்  சூழ்ச்சியில்  நிலம்  இழந்த     நிலம்  உடமை  கவுண்டர்  சாதியை  சேர்ந்த ஒருவரின் புது  நிலம்  நோக்கிய  அகதிப்  பயணத்தில்  தன்  அடிமையுடன்  நடத்தும்  கதையாடல்களின்  தொகுப்பு.

இரண்டையும் படித்த பின்   "ஆளண்டாப்   பட்சி" தீய்க்கும்  "கருக்குளின்  [கருக்குகளின்  கலகக்  குரலை மொக்கையாக்கும் ஆளண்டாப்   பட்சியின் சமரசத்தை  ] வாசத்தை  என்னால்    உணராமல்   இருக்க  முடியவில்லை

முற்றும்


கி.செந்தில்குமரன்

பாமாவின் "கருக்கு"களை தீய்க்கும் பெருமாள் முருகனின் "ஆளாண்டாப் பட்சி" -விமர்சனம் [A Working Class View]

"..........எல்லா மனிதர்களுக்கும்    வலியும்,தேடல்களும் பொதுவனது தான் என்றாலும்   அவர்கள் வர்க்கம்  சார்ந்து அதன்  நோக்கம்  வேறுபடுகின்றது....."

          ஒரே காலக்  கட்டத்தில்  [1990களின்  ஆரம்பத்தில்]  நாவல்  வடிவ  சுய மற்றும் புனைக்  கதைகளை  எழுதத்  தொடங்கிய   பாமா  ,பெமு-  வின்  முதல் ,ஆறாம்  கதைகள்  தான் கருக்கு மற்றும் ஆளாண்டாப்   பட்சி. இரு  கதைகளுமே  நாட்டார்  வழவியலை  மையமாக  கொண்டு, "மதுரை--தலித்"  மற்றும்  "கொங்கு--கவுண்ட" வட்டார  வழக்கில்  எழுதப்பட்ட   மண்  சார்  கதைகள். இக்  கதைகளை  படித்து  உனர   மண்  சார்ந்த  மக்கள்  மீது  கரிசனமும் , மொழி மீது  குறைந்த  பற்றும் இருந்தாலே  போதும். 


கருக்கு,ஆளாண்டாப்   பட்சி   கதைகள்   மனிதர்களின்  வலிகளையும்,தேடல்களையும்  முன்னிலைப்  படுத்தும் வகையில்  அமைந்து  இருந்தாலும்  கதை  மாந்தர்கள்  வெளிப்  படுத்தும் உள்ளார்ந்த அரசியலும்  ,வர்க்கப்  பார்வையும்  வேறு  வேறாக  உள்ளது. துறவு  வாழ்வை  துறந்த  பாமாவின்   கருக்கு நிலம்  இல்லாத தலித் விவசாயத்   தொழிலாளர்களின்   வாழ்க்கையையும்  ,முன்னால்  புரட்சியாளர்  பெமு வின்  ஆளாண்டாப்   பட்சி  நிலவுடைமை  கவுண்ட விவசாயிகளையும்    முன்னிலை  படுத்துகின்றன. 


எல்லா மனிதர்களுக்கும்    வலியும்,தேடல்களும் பொதுவனது தான் என்றாலும்   அவர்கள் வர்க்கம்  சார்ந்து அதன்  நோக்கம்  வேறுபடுகின்றது. 

தொடரும் 

கி.செந்தில்குமரன்