Monday, February 3, 2014

பாமாவின் "கருக்கு"களை தீய்க்கும் பெருமாள் முருகனின் "ஆளாண்டாப் பட்சி" -விமர்சனம் [A Working Class View]

"..........எல்லா மனிதர்களுக்கும்    வலியும்,தேடல்களும் பொதுவனது தான் என்றாலும்   அவர்கள் வர்க்கம்  சார்ந்து அதன்  நோக்கம்  வேறுபடுகின்றது....."

          ஒரே காலக்  கட்டத்தில்  [1990களின்  ஆரம்பத்தில்]  நாவல்  வடிவ  சுய மற்றும் புனைக்  கதைகளை  எழுதத்  தொடங்கிய   பாமா  ,பெமு-  வின்  முதல் ,ஆறாம்  கதைகள்  தான் கருக்கு மற்றும் ஆளாண்டாப்   பட்சி. இரு  கதைகளுமே  நாட்டார்  வழவியலை  மையமாக  கொண்டு, "மதுரை--தலித்"  மற்றும்  "கொங்கு--கவுண்ட" வட்டார  வழக்கில்  எழுதப்பட்ட   மண்  சார்  கதைகள். இக்  கதைகளை  படித்து  உனர   மண்  சார்ந்த  மக்கள்  மீது  கரிசனமும் , மொழி மீது  குறைந்த  பற்றும் இருந்தாலே  போதும். 


கருக்கு,ஆளாண்டாப்   பட்சி   கதைகள்   மனிதர்களின்  வலிகளையும்,தேடல்களையும்  முன்னிலைப்  படுத்தும் வகையில்  அமைந்து  இருந்தாலும்  கதை  மாந்தர்கள்  வெளிப்  படுத்தும் உள்ளார்ந்த அரசியலும்  ,வர்க்கப்  பார்வையும்  வேறு  வேறாக  உள்ளது. துறவு  வாழ்வை  துறந்த  பாமாவின்   கருக்கு நிலம்  இல்லாத தலித் விவசாயத்   தொழிலாளர்களின்   வாழ்க்கையையும்  ,முன்னால்  புரட்சியாளர்  பெமு வின்  ஆளாண்டாப்   பட்சி  நிலவுடைமை  கவுண்ட விவசாயிகளையும்    முன்னிலை  படுத்துகின்றன. 


எல்லா மனிதர்களுக்கும்    வலியும்,தேடல்களும் பொதுவனது தான் என்றாலும்   அவர்கள் வர்க்கம்  சார்ந்து அதன்  நோக்கம்  வேறுபடுகின்றது. 

தொடரும் 

கி.செந்தில்குமரன் 


No comments: