Thursday, June 12, 2014

The Congress A Treachery History-preface--காங்கிரஸ் ஒரு துரோக வரலாறு-முன்னுரை

காங்கிரஸ் ஒரு துரோக வரலாறு-முன்னுரை


             எழுத்தின்  நோக்கம்  மக்களுடன்  உறவாடுவது , மக்களை அரசியல் தளத்தில்  விழிப்படைய  செய்வது  எனில்  இப்  புத்தகத்தின் தலைப்பும் , நோக்கமும்  அதுவாகவே  இருக்கவேண்டும்   என்பதை  முடிவு  செய்து விட்டு  என் முன்னுரையை  தொடங்குகின்றேன்.



                               இப் புத்தகத்தை  படிக்கும் வாசகர்கள்காங்கிரஸ் மற்றும்  அதன் தலைவர்கள் காந்தி,நேரு,காமராசு  மீது கொண்டு உள்ள    விழுமியங்கள் [values]   சிதைவுறும்  எனில்  அதற்கு நானோ ,இச் சமுகமோ  சிறிதும் பொறுப்பு  ஏற்க்க  முடியாது. அதற்கு  காரணம் இத் தலைவர்கள்    சமுகத்தின் மீது  கொண்டு  இருந்த பார்வையும் ,   அவர்கள்  சமூகத்தீன் மீது  வினையாற்றிய முறைமைகலுமே  காரணம்  என்பதை  வாசகர்கள்  உணர்வார்கள்  என  நம்புகின்றேன்.

            இப்  புத்தகம்  இந்தியா  விடுதலை அடைந்த   போது   ஹைதராபாத் நிஜாமுக்கும்-நிலபிரபுகளுக்கும்  எதிராக நடைபெற்ற ஏழை எளீய மக்களீன் தெலுங்கானா போராட்டம்  முதல் , பேரினவாத சிங்களத்துக்கு எதிரான  ஈழம் போர்  வரை  பேச  உள்ளது. இப்  போராட்டங்களை  காங்கிரஸ் மற்றும்  அதன் தலைவர்கள்  எப்படி  நசுக்கினர்  என்பதையும்  பேச உள்ளது.


                 எனக்கு அட்டை  வகுப்பு [baby class],முதல் வகுப்பு ஆகிவற்றில் தமிழ் எழுத்து கல்வி  அளித்த  என் அன்புக்கும், மதிப்புக்கும்  உரிய ஆசிரியர்கள்  முதல்  அனைத்து   ஆசிரியர்களுக்கும்  என்  நன்றிகளை  கூறி  இப்  புத்தகத்தை தொடங்குகின்றேன்.


அன்புடன் ,
கி.செந்தில்குமரன் [சரவணன்]


தொடர்புடைய பதிவுகள்:

http://vansunsen.blogspot.in/2014/02/karukku-and-aalanta-patsee-complete.html

http://vansunsen.blogspot.in/2014/02/cast-and-i-ksenthilkumaran.html



No comments: