Sunday, September 13, 2015

ஏன் இப்படி ஆனார்கள் ? Why did they behave like this?

ஏன் இப்படி ஆனார்கள் ? 

ஏன் இப்படி ஆனார்கள் ? நவீன இலக்கியம் படைக்கும் நோக்குடன் கதை ,சிறுகதை எழுதும் எழுத்தாளர்கள் சாதிய பிரச்சனைகளை கையாளும் போது தடம் மாறி போகின்றார்கள். ஈழத்து எழுத்தாளர் ஜெயபாலன் [ஆடுகளம் பேட்டைகார நடிகர்]அவர்கள் தன் புனைவில் [ அவளது கூரையின்மீது நிலா ஒளிர்கிறது குறுநாவல்] தன் சக மனுசியை எந்த அளவுக்கு முடியுமோ அந்த அளவுக்கு சிறுமை படுத்தி திரைஅரங்கின் இருட்டில் சல்லாபிக்கின்றார். கதையின் போக்கில் தன்னை ஒடுக்கப்பட்ட சாதியை சேர்ந்தவராகவும், தம் சினேகிதியை,காதலியை மேல் சாதி பெண்ணாகவும் கதாபாத்திரங்களை கட்டமைத்த அவர் சாதிய பிரசனைகளை கதையின் ஊடே பேசும் போக்கை ஒரு புறமும் , அந்த பெண்ணை சல்லாபிக்கும் போக்கை மறுபுறமும் கதையை கொண்டு செல்ல முனைகின்றார்.
இங்கு தமிழ் நாட்டில் தென்னாற்காடு வட்டார வழக்கில் எங் கதெ என்ற குப்பையை நாவலை எழுதியுள்ள இமையம் அவர்கள் ஆணின் பார்வையில் கதையின் போக்கை கொண்டு செல்கின்றேன் என்ற நோக்கத்துடன் , பெண்ணிய நியாங்களை மூடி மறைத்து விட்டு அவளை ஊமையாகி , வார்த்தைகளை எண்ணி பேசும் சிக்கனவாதியாகி [தஞ்சாவூரு பொண்ணு பேசாமலா இருக்கும்?] அவள் பக்க நியாயங்களை மறைத்து விட்டு எந்தளவுக்கு அவளை சிறுமை படுத்த முடியுமோ அந்த அளவுக்கு கொச்சை படுத்தி அவளை வேசியாக்கி அழகு பார்கின்றார் இமையம் அவர்கள்.
வர்க்க அமைப்பில் மேல் சாதியில் உள்ள ஆண்டான்களின் மேல் உள்ள கோபத்தை காட்டவேண்டுமானால் அந்த கால தஞ்சை பகுதி நக்சலைட்டுகள் போல ஆண்டான்களை அழித்தொழிப்பு செய்து சிறைக்கு போவதை விட்டு விட்டு அந்த மேல் சாதி பெண்களின் உடையை வக்கிர மனதுடன் அவிழ்த்து பார்க்கும் மன நோய் தனம் இவர்களுக்கு எதற்கு?

எங் கதெ ஒப்பாய்வு விமர்சனம் : Comparative Critic about Imaiyam and Tanjai Prakash writtings

எங் கதெ ஒப்பாய்வு விமர்சனம் :

இமையத்தின் கலவாடிய  லும்பனும்  தஞ்சை பிரகாஸின்  உழைத்து கொடுத்த கள்ளனும் 


நேற்றும் முன்தினமும் இமையம் எழுதிய எங் கதெ  என்ற சிறு நாவலை படிக்க நேரம் கிடைத்தது.  கணவனை இழந்த கமலா என்ற பெண்ணுக்கும் அவளை மோகிக்கும் ஒரு லும்ப்னுக்கும் இடையிலான உறவை பற்றிய பதிவாக இந்த கதையை பார்க்கலாம். 110 பக்கங்கள்  கொண்ட இந்த கதையில் இவர்கள் இருவருக்கும் இடையிலான கூடல் ஊடல் தான் முதன்மை பெற்று விளங்குகின்றது. "கொள்கைகளை கோட்பாடுகளை முன்னிருத்தியோ அவற்றை பிரச்சாரம் செய்யவோ எழுதப்படுபவை இலக்கியம் அல்ல. பிரச்சாரம் செய்வது இலக்கியத்தின் அடிப்படை நோக்கம் அல்ல " என்று கூறும் இந்த கதையாடிக்கு  மகஇக போன்ற முற்போக்கு இயக்கங்கள் எல்லாம் முற்போக்கு பட்டம் கொடுத்து புல்லரித்துக் கொள்கின்றன.

கதையின் இறுதியில் லும்பன் ,கமலாவை கொல்லும் வெறியுடன் பிளேடு உடன் அவள் வீட்டுக்கு வருவான். கமலாவுடன் கலவாடும் போது அவளை கிழித்துக் கொல்ல நினைப்பான். நினைத்தது போன்றே அவளின் மூக்கை பிளேடால் கீறி  அதனை நெகக்கீரல் என்று சாதிப்பான்.தன் கொலைவெறியை ஆற்றுப்படுத்திக்கொள்கின்றவன்  அவளை விட்டு விலகி யார் கூடவேண்டுமானாலும் நீ வாழ்ந்துகொள்  என்று கூறி பிரிவான். இந்த கதையை படிக்கும் பொது தஞ்சை பிரகாஸ் அவர்கள் எழுதிய மற்றுமொரு கதை மனதுள் அலையாடியது. கணவனை இழந்த பொண்ணின் குடும்பத்தை தன் உழைப்பால் சுமப்பவன் கதை அது.  இறுதியில் அவன் அந்த பெண்ணின் மீது தனக்கு உள்ள அன்பை கூறுவான்.   எவர் படித்தாலும் மறக்க இயலாத கதை அது . எதுவென்று தேடி பாருங்கள் !

கலை இலக்கியங்கள் எல்லாம் சமுகத்தை ஒரு அடியாவது முன்னோக்கி நகர்த்தவில்லை என்றால் அப்படி பட்ட இலக்கியம்  என்ன மயிதுக்கு ஆசிரியர் இமையம் அவர்களே!? 

அயிலான் கவிதை II - பயணம் Refugee Ayelan Poem II Refugee Travel

அயிலான் கவிதை II -  பயணம் 

தேசம் கடந்து கடல்மிதந்து

சென்றாலும் கிடைத்தது என்ன?

மீன்கள் சுறாக்களுக்கு இரையாக

மான்கள் புலிகளுக்கு உணவாக

நான் சர்வ தேச சதிகளுக்கு

காவு ஆனேன்.

அயிலான்

அயிலான் கவிதைகள் I - நாங்கள் Refugee Ayelan Poem 1 WE

அயிலான் கவிதைகள்  I  - நாங்கள் 

என் பெயர் :

சிரியாவில் அயிலான்

ஈழத்தில் பாலா

ஈராக்கில் யாரோ

சூடானில் யார் யாரோ

ஆனாலும் எங்கள் அம்மா அப்பா

இந்த உலகத்தவரே !

அயிலான்