Tuesday, January 13, 2015

எழுத்தாளர் பெருமாள்முருகன் அறிக்கை தொடர்பாக [Regarding Writer Perumal Murugan Announcement ]

எழுத்தாளர் பெருமாள்முருகன் அறிக்கை தொடர்பாக :



மனிதன் இயற்கையில் தனியானவன் கிடையாது. சமுகமயம் ஆக்கப்பட்டவன். IT துறை சார் ஊழியர்கள் வேலை இழக்கும் போது அடையும் மன நெருக்கடி , பெமு இன்று உணரும் தனிமை இதற்கு எல்லாம் மூல காரணம் இன்றைய நாகரிக மனிதர்கள் தம்மை தனிமை படுத்திக்கொண்டு தீவுகளாக வாழ்வது தான் . Let them socialize ! அப்படி என்ன தவறாக இறைவனை பற்றி எழுதப்பட்டு உள்ளது மாதொருபாகனில் ? நாவலை முழுமையாக படிப்பவருக்கு , அத் தம்பதிகள்[காளி-பொன்னா] குழந்தை பேறுக்காக அபாயகரமான சுற்றுதலை தி.கோடு மலையில் செய்யும் போது அடையும் மன உணர்வுகள் காய்நத மனதையும் ஈரமாக்குமே ! நான் கதையில் உள்ஆழ்ந்தபோது காளி-பொன்னா ஆகியவர்கள் இருவரையும் சிவனும் -சக்தியுமாகத்தான் நான் சிந்தனை செய்தேன் . நாத்திகனாக் இருந்த என்னை சிவன் மீது பக்தி ஏற்பட செய்தது இந்நாவல் [மாதொருபாகன்] தான் .சிவனுக்கும் ,சக்திக்கு பிறந்த முருகனின் பிறப்பு இயற்கையில் நடைபெறாதது , முருகனின் கருபிண்டத்தை கார்திகை மகளிர் புவியுலகில் பெற்று கொண்டது , பின்பு சக்தி அக்கருபிண்டங்களை ஒருங்கினைத்து ஆறுமுகனாக மாறியது இவை எல்லாம் அந்நாவல் காட்டிய ஆனால் நாவலில் வெளிப்படையாக இல்லாத படிமங்கள். என் தனிப்பட்ட வாழ்வில் சிவனின் மீது பற்றுடன் மதசார்பற்ற ஹிந்துவாக வாழ்வதே இன்று கேள்விக்குறியாவதால் , இனி என்ன மனதில் உள்ள சிவனையும் ,எதார்தத்தில் ,உண்மையில் சிவனின் புகழ் பாடும் இந்த மாதொருபாகன் நூலையும் எரிக்கத்தான் போகின்றேன் திருசெங்கோடு மலை ஏறிச்சென்று.

pk என்ற திரைபடத்தில் வெளிகிரகவாசியாகிய நாயகன் கேட்பது போன்று கூட கடவுள் மீது எக் கேள்வியும் எழுப்பாத இன் நாவலில் உள்ள ஒரே குறைபாடு திருச்செங்கோட்டை களமாக கொண்டு பதினான்காம் நாள் திருவிழாவையும் [ carnival ]சமுகத்தில் நடைபெறும் விதிவிலக்கான இருதி காட்சிகளையும் கதையாசிரியர் நிகழ்தியதே ![[கள்ளக்காதல் மற்றும் பிற பாலியல் குற்றங்கள் நிகழாத  ஊராக அவ்வூர் இருக்க எனது வாழ்த்துக்கள் ]   ஊர் ,சாதி பெயர் இன்றி எழுதப்பட்ட ஆனால் வலிமையான் பூக்குழி நாவல் போன்று பொதுமைபடுத்த பட்டு இருப்பின் நன்றாக இருந்து இருக்கும். பிரச்சனையில் நகைமுரண் என்னவென்றால் இக்கதையில் நான் சென்சார் செய்யபட்ட வேண்டிய காட்சிகள் என்று உணர்ந்த பக்கங்கள் ஆயிரக்கணக்கில் பிரதி எடுக்கபட்டு ஊர் முழுவதும் விநியோகம் செய்யபட்டதே ! இனி பெருமாள் முருகனே நினைத்தாலும் இந்நாவலை மட்டும் அல்ல ,அவரின் என் நாவலையும், எந்த எழுத்தையும் வாசகர்களிடம் இருந்து நீக்கவோ ,தடை செய்யவோ முடியாது. எழுத்து எழுதப்பட உடன் அதன் எழுத்தாளன் மரணிக்கின்றான் அவன் எழுத்து மட்டுமே வாழும் எனற நவினத்துவ கருத்தாக்கதிற்கு ஏற்ப இன்னும் ஆயிரம் ஆயிரம் ஆண்டுகள் கழித்தும் பெமுவின் எழுத்துக்கள் உயிர் வாழும் . ஒரு பிரதி கூட மிஞ்சாமல் அனைத்து பிரதிகளையும் எரித்து நூலின் கருத்துகளை மறைக்க இது ஒன்றும் சமண மத சுவடிகள் அல்ல !