Monday, March 3, 2014

அன்புடையீர்,

இவ்விணைய  தளத்தில்  தமிழில்  எழுதப்பட்ட  நூல்கள் [கதை,கட்டுரை,கவிதை]     மீது விமர்சனம்  எழுதப்படுகிறது. எனவே  கீழ்  கண்ட  முகவரிக்கு  உங்கள்  நூட்களை  அனுப்பலாம்.  விமர்சனங்கள் பின் வரும்  கொள்கைகள்  அடிப்படையில்  எழுதப்படும்.

[ ௧  ] படைப்பை  நோக்கி  ஈர்த்தல்
[ ௨ ] படைப்பு  குறித்த  பார்வையை  உருவாக்குதல்
[௩  ] ப்டைப்பின் உள்ளார்ந்த-நுட்பமான  அரசியலை  வெளிப்படுத்துதல்

உம் :
vansunsen.blogspot.in/2014/02/critics-about-causes-of-sadness-essays.html



அன்புடன்,
கி.செந்தில்குமரன் M.Sc.,M.Phil
17 / 9 சங்கரதாஸ்  தெரு ,
NH II ,மறைமலை  நகர் ,603209

Email: sunjava6@yahoo.com

Commons Attribution-ShareAlike 3.0 Unported

அன்புடையீர்,

இன்று முதல் இந்த வலைப்பதிவின் உள்ளடக்கம் அனைத்தையும் Creative Commons Attribution-ShareAlike 3.0 Unported உரிமத்தின் அடிப்படையில் வழங்குகிறேன். இதன் மூலம்,

[1] இந்த வலைப்பதிவின் உள்ளடக்கத்தை நீங்கள் எப்படி வேண்டுமானாலும் பயன்படுத்தலாம்.

[2] திருத்தி மேம்படுத்தலாம்.

[3] விற்கலாம்.

[4] முழுக்கட்டுரையாக இன்னொரு தளத்தில் இடலாம்.

[5]அச்சிட்டோ, ஒலிப்பதிவாகவோ, EPUB, PDF, MOBI போன்ற வடிவங்களிலோ பகிரலாம்

இவற்றைச் செய்ய என்னுடைய முன் ஒப்புதல் தேவையில்லை. ஆனால், அவ்வாறு பயன்படுத்தும் போது, நீங்கள் வெளியிடும் உள்ளடக்கமும் மேற்கண்ட அனைத்து உரிமங்களையும் அதனைப் பயன்படுத்துபவருக்குத் தர வேண்டும். உள்ளடக்கத்தின் மூலமாக இந்த இணையத்தளத்தின் முகவரியையும் கட்டுரையையும் குறிப்பிட வேண்டும். இணையத்தை அணுகவல்ல ஊடகமாக இருப்பின், சொடுக்கவல்ல இணைப்பு ஒன்றைத் தருவதும் வரவேற்கப்படுகிறது.

அன்புடன்,
கி.செந்தில்குமரன்

நன்றி  : திரு பெருமாள்முருகன்
http://www.perumalmurugan.com/

Part IV
உங்கள் கேள்விக்கு practical ஆக பதில் கூறட்டுமா ?
தமிழகத்தில் புரட்சி சாத்தியமா ?
————————————————————
[13] இந்தியா என்பதே ஒரு தேசம் அல்ல. பல்வேறு தேசிய இனங்களீன் கூடமைப்பு தான். ஒவொரு தேசிய இனத்துக்கும் ஒரு நில பரப்பு ,மொழி,மத்திய அரசின் அதிகரத்துக்கு உட்பட்ட ஆட்சி உள்ளன. மேலும் எல்லா மாநிலமும் ஒரே சிரான வளர்சியை பெற வீல்லை. இன் நிலையில் ஏழை ,எளீய ,பழங்குடி மக்கள் cpi(maoist) கட்சிக்கு மத்திய இந்தியாவில் ஆதரவு அளிப்பது போல தமிழக மக்கள் புரட்சிக்கு யாரை தலைமை ஏற்க்க அழைப்பர்கள் என்பது ஒரு வினா.
[a ]தமிழகத்தில் சமுக-அரசியல் மாற்றம்[socio-political revolution] ஏற்பட ஒரு புரட்சிகர Communist கட்சி தேவை. ஆனால் cpi(maoist) கட்சியும் தமிழகத்தில் 100% இல்லை. அப்படி என்றால் புதீய சனநாயக புரட்சிக்கு வழி இல்லையா என்ற கேள்வியும் எழுகின்றது. cpi(maoist) தவிர வேறு ஏதாவது Communist கட்சி தமிழகத்தில் உள்ளதா என்ற கேள்வியும் எழுகின்றது.
[b]Communist கட்சி என்றால் கட்சியே நேரடியாக பிரச்சாராத்தில் ஈடுபடாது. கம்யூனிஸ்ட் கட்சியின் மக்கள் திரல் அமைப்புகள் தான் வெகுசன பிரச்சாராத்தில் ஈடுபடும்.
[i ] Communist கட்சியீன் கலை இலக்கிய கழகம்
[ii] Communist கட்சியீன் சனநாயக தொழிலாளர் முன்ணனி
[iii]Communist கட்சியீன் மாணவர் இளைஞர் முன்ணனி
[iv]Communist கட்சியீன் விவசாயிகள் முன்ணனி
[v]Communist கட்சியீன் பெண்கள் முன்ணனி
என்பது போன்ற மக்கள் திரல் அமைப்புகள் மூலம் மக்களுக்கு வர்க அரசியல் அறிவு புகட்டப்பட்டு ,மக்கள் ஒருங்கிணைக்க பட்டு Communist கட்சி மூலம் புதீய சனநாயக புரட்சிக்குக்கு வழி நடத்த படுவார்கள்.
[c] மேலும் நகர மயமாக்கபட்டு கொண்டு உள்ள தமிழகத்தில் எம் மாதிரியான புரட்சி நடை பெறும் என்பது சிந்தனைக்கு உரியது.சீனா model ,or Russian Model revolution ? சீனாவில் விவசாயிகலும் ரஷ்யாவில் தொழிலாளர்களும் பொரும் அளவுக்கு புரட்சியில் பங்கு எடுத்தனர் என்பது ஏன் என்பதை சிந்தித்து பார்க்க வேண்டும்.
தொடரும்….