Tuesday, May 31, 2016

if Hitler Wins....? part 2

"ஹிட்லர் ஜெயித்து இருந்தால்....."

அத்தியாயம் 2Admiral Wilhelm அடுத்த நாள் தன் அலுவலகத்தில் அமர்ந்து இருக்கின்றார். அலுவலக டெலிபிரிண்டர் மெல்லிய சத்தத்துடன் தொடந்து அச்ச்டித்துக்கொண்டு இருக்கிறது.செயலர் நான்சி பாவெல் செய்திகளை கண்காணித்துக்கொண்டு இருக்கின்றார். Admiral Wilhelm பிரிட்டன் பையனுக்கு கடிதத்தை எழுத முயற்சிக்கின்றார்.


13.04.1939
பாரிஸ் 


அன்புள்ள வில்சன் படிப்பு எப்படி செல்கின்றது. உன் ஆங்கிலேய அம்மா என் முன்னால் மனைவி எப்படி இருக்கிறாள்? அவளுக்கு என்னுடைய வாழ்த்துகளை தெரிவி. பிரான்சில் என் வாழ்க்கை அதிக நெருக்கடியுடன் செல்கிறது.தொழிலில் இறக்கங்கள் அதிகம். போர் வரும் போல இருக்கிறது. ஜெர்மனி போருக்கான் தயாரிப்புகளில் ஈடுபட்டுகொண்டு  உள்ளது. யுத்த பொருளாதாரம் மனிதர்களின் தேவையை  மதிக்காமல் ஆயுத தளவாட உற்பத்தியில் இறங்கிஉள்ளதாக பாரிஸ் முழுவதும் பேச்சு. யுத்தம் என்றால் மகா யுத்தமாக இருக்கும் என்று என் முன்னாள் ராணுவ நண்பன் கூறுகின்றான்.

உன் பாதுகாப்புக்காக நான் என்ன வேண்டுமானாலும் செய்ய தயார். ஆமாம் என் பேச்சை மீறாமல் நீ அமெரிக்காவுக்கு செல். என் நண்பர்கள் பலர் அங்கு இருக்கிறார்கள். உன்னை நல்லமுறையில் வழி நடத்துவார்கள். சரி நீ விரைவில் பாரிஸுக்கு வந்து என்னை சந்திக்கவும். நிறைய பேசவேண்டும். கட்டாயம் வா. சிக்கிரம் வா.

அன்புடன் ,

அஸ்டர்

Admiral Wilhelm தன்னை பார்ப்பதை நுண் உணர்வுடன் அறிந்த செயலர் திரும்பிப்பார்கின்றார். அருகில் வருமாறு தலை அசைக்கிறார் அட்மிரல்.

கடிதத்தை கவனமாக படி நான்சி...நம் அலுவலக விதிகளுக்கு உட்பட்டு இருக்கிறதா பார். தவறு என்றால் சுட்டிகாட்டு..எல்லாம் சரி என்றால் பிரான்ஸ் ஜெர்மானிய துதரகம் மூலமாக இதனை லண்டனுக்கு அனுப்பு.

கடிதத்தை கவனமாக படித்த நான்சி

இந்த காகிதம் ஜெர்மானியில் தயாரிக்கபட்டது பரவாயில்லையா? உங்கள் மகனா நமது பிரிட்டன் உளவுபடை தலைவர் வில்லியம்? ஐயா இதுவரையில் சொல்லவே இல்லையே ?

புன்னகைக்கும் அட்மிரல்..

ஏன் பிரான்சுக்கு நாம் காகிதங்களை ஏற்றுமதி செய்யவில்லையா என்ன? பரவாயில்லை இந்த கடிதத்தை உடனே அனுப்பு.பாரிஸில் இருந்து லண்டனுக்கு  அஞசல் செய்ய சொல். அது தான் ரொம்ப முக்கியம்..

சரி ஐயா உங்கள் முன்னால் மனைவியும் லண்டனில் தான் இருகிறார்களா ? தலைமைக்கு தெரியுமா இது? பிரச்சனை ஆகிவிட போகின்றது..

 உன்னுடைய  அக்கறைக்கு மிக்க நன்றி நான்சி. தலைவருக்கு தெரியாமல் என் வாழ்க்கையில் எதுவுமே இல்லை.

அட்மிரல் ஹிட்லரின் புகைபடத்தை பார்த்து புன்னகைகின்றார்.நான்சி அட்மிரலின் மகனுடைய லண்டன் விலாசத்தை அவரிடம் இருந்து பெற்று  சிறு காகிதத்தில் எழுதிகொள்கின்றார்.

ஐயா அடுத்த வாரம் சாலமன் நமது பிரான்ஸ் துதரகதுக்கு செல்கிறார். கொடுத்து அனுப்புகிறான்.. 


தொடரும்

If Hitler Wins part 1 Novel

"ஹிட்லர் ஜெயித்து இருந்தால்....."

அத்தியாயம் 1 

 


என்ன செய்யப்போறிங்க....வேடிக்கைபார்த்துக்கொண்டு இருந்தது போதும்... *Abwehr சீப்பை கூப்பிடு...

ஹிட்லரின் உதவியாளர் தொலைபோசியில் யாரையோ அழைகின்றார்.

போனை கொடு.

Admiral Wilhelm தலைமையகத்துக்கு வாங்க....யாரோ ஒரு யூதன் அமெரிக்காவில் வினோத குண்டு செய்துகொண்டு இருக்கான்.... Abwehr என்ன செய்துகொண்டு இருக்கு? இத்தாலிய பத்திரிக்கையாளர் மூலமா செய்தி வருது...நீங்க என்ன செய்து கொண்டு இருக்கிங்க?

ஐயா வணக்கம் உளவுத்துறை தலைவர் Admiral Wilhelm பேசுறேன்....விவரங்கள் கிடைக்க பெற்றோம்... உங்களுக்கான தகவல் தட்டச்சில் இருக்குங்க... நான் தான் அந்த பத்திரிக்கையாளரை அமெரிக்காவுக்கு அனுப்பிவைத்தேன்... அவர் அவசரப்பட்டு விசயத்தை பத்திரிகையில் உடைச்சிட்டார்...

நேர்ல வாங்க பேசலாம்....

ஐயா அந்த யூதன் பேரு ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் ...இங்கிருந்து போனவன் தான் அவன்...

ஹிட்லர் தன் அந்தரங்க நாட்குறிப்பில் 12.04.1939 தேதியில் சிலகுறிப்புகளை ஆஸ்திரிய-ஜெர்மனிய மொழியில் எழுதிக்கொண்டு இருந்தார்......Albert Einstein Sollte innerhalb von sechs Monaten vergeben.... தமிழ்படுத்துவது மிக எளிது...ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் அவர்களுக்கு ஆறு மாதங்களில் "பதவி" வழங்கப்பட வேண்டும்.

Admiral Wilhelm அவர்களின் வருகை 24 நிமிடங்களில் நிகழ்ந்தது....ஹிட்லரின் தலைமையகத்தில் இருந்து 4 மைல் தொலைவில் உள்ள ஒரு மெழுகுவத்தி தொழில்சாலையில் தான் உளவுநிறுவனம் செயலாறிக்கொண்டு இருந்தது... Admiral Wilhelm ராணுவ உடையை தவிர்த்து சிவில் தலைமை அதிகாரியின் உடையில் இருந்தார். கழுதுப்பட்டைக்கு மேல் அணிந்து இருந்த கோர்ட் பனியில் நனைந்து இருந்தது. கேர்டுக்குள் நீர் புகா கவரினுள் தட்டச்சு காகிதங்கள் பாதுகாப்பாக இருந்தன.

காத்திருப்பு இல்லை...நேரடியாகவே ஹிட்லரின் அலுவலகத்துக்குள் நுழைந்தார் அட்மிரல். நாஜி கலாச்சாரபபடி அட்மிரல் வணக்கம் தெரிவித்தார்..தலை அசைத்தார் ஹிட்லர். இருவரிடையே பேச்சு ஏதும் இல்லை... தட்டச்சு காகிதங்கள் ஹிலரிடம் கொடுக்கப்பட்டன. காகிதங்களை படிக்காமலேயே இறுதி பக்கத்தில் அட்மிரலின் கையப்பதுக்கு பக்கதில் ஆஸ்திரிய-ஜெர்மனிய மொழியில் Albert Einstein Sollte innerhalb von sechs Monaten vergeben. என்று எழுதி திருப்பி அளித்தார்.

காகிதத்தை வாங்கி பார்த்த அட்மிரல்
ஐயா  என் பையன் லண்டனில் இருக்கான்..பிரிட்டன் குடியுரிமை...அங்கேயே பிறந்து வளர்ந்தவன்..ஜெர்மானியன் என்று யாருக்கும் வெளியே தெரியாது... இயற்பில் மேற்படிப்பு படிக்கின்றான்...அவனை அமெரிக்காவுக்கு....

 அவனுக்கு ஜெர்மன் தெரியுமா?

ஐயா அவனுக்கு இங்கிலீஷ் ,பிரஞசு மொழிகள் மட்டும் தான் தெரியும்...என்ன ஆனாலும் நம்ம நாட்டை காட்டிக்கொடுக்க மாட்டான்..

சரி அனுப்பு ..ஐன்ஸ்டீனுக்கு சிக்கிரம் பதவி கொடுக்கச்சொல்லு...

தொடரும்....

*Abwehr German Spy Agency

நாவல்


ஹிட்லர் வென்றிருந்தால்...


முன்னுரை :


வரலாற்றின்  வழியில் சென்று பாரிய தவறுகளை செப்பனிட முடியுமா? என்ற கேள்வி எழும் தருணத்திலேயே ஹட்லர் போன்றவர்கள் வென்றிருந்தால் உலகம் என்னவாகியிருக்கும் என்றும் எண்ணத்தொன்றுகின்றது. அதன் அடிப்டையில் கால இயந்திரத்தில் நாமும் பயணித்து இரண்டாம் உலகப்போர் தருணங்களில் ஹட்லர் செய்த தவறுகளை களைந்து அவர் எப்படி வெற்றி பெறுகின்றார் என்று விவரிப்பது தான் இந்த நாவல்.

ஹிட்லரின் தோல்விகளுக்கான காரணங்களை சரி செய்யப்போறேன்....அப்படி நடத்து இருந்தால்...? இந்திய வரலாறு சுபாசுக்கு சாதகமாக மாறியிருக்கும்.... ரஷ்யாவில் கம்யுனிசம் 1940களின் இறுதியிலேயே அழிக்கபட்டு இருக்கும்..... பிரான்ஸ்,பிரிட்டன் ஹிட்லரின் சொல்லுக்கு கட்டுபட்டு அடிமைகளாக மாறியிருக்கும்..... அமெரிக்கா அதிகம் பாதிப்பு அடையாமல் தன்னை காத்துக்கொண்டு இருக்கும்..... இது போல நிறைய க்கும்..... இருக்குங்க....

என்னை பொறுத்தவரையில் ஹட்லர் செய்த மாபெரும் தவறுகள்  அமெரிக்காவை அணுகுண்டு செய்ய விட்டு வேடிக்கை பார்த்தது....,  பனி ,கடுங்குளிர் ,மழைகாலத்தில் தக்க ஏற்பாடுகள் இல்லாமல் சோவியத் ருஷ்யாவினுள் படை எடுத்து சென்று கூண்டில் சிக்கிய சிறுத்தை போன்று பரிதவித்தது..., தேவையே இல்லாமல் யூதர்களை பகைத்த்துக்கொண்டு அவர்களை நாட்டைவிட்டு விரட்டி அடித்தது,கொன்று குவித்தது... இப்படி அடுக்கிக்கொண்டே போகலாம்....

அன்புடன்
கி.செந்தில்குமரன்