Tuesday, May 31, 2016

if Hitler Wins....? part 2

"ஹிட்லர் ஜெயித்து இருந்தால்....."

அத்தியாயம் 2



Admiral Wilhelm அடுத்த நாள் தன் அலுவலகத்தில் அமர்ந்து இருக்கின்றார். அலுவலக டெலிபிரிண்டர் மெல்லிய சத்தத்துடன் தொடந்து அச்ச்டித்துக்கொண்டு இருக்கிறது.செயலர் நான்சி பாவெல் செய்திகளை கண்காணித்துக்கொண்டு இருக்கின்றார். Admiral Wilhelm பிரிட்டன் பையனுக்கு கடிதத்தை எழுத முயற்சிக்கின்றார்.


13.04.1939
பாரிஸ் 


அன்புள்ள வில்சன் படிப்பு எப்படி செல்கின்றது. உன் ஆங்கிலேய அம்மா என் முன்னால் மனைவி எப்படி இருக்கிறாள்? அவளுக்கு என்னுடைய வாழ்த்துகளை தெரிவி. பிரான்சில் என் வாழ்க்கை அதிக நெருக்கடியுடன் செல்கிறது.தொழிலில் இறக்கங்கள் அதிகம். போர் வரும் போல இருக்கிறது. ஜெர்மனி போருக்கான் தயாரிப்புகளில் ஈடுபட்டுகொண்டு  உள்ளது. யுத்த பொருளாதாரம் மனிதர்களின் தேவையை  மதிக்காமல் ஆயுத தளவாட உற்பத்தியில் இறங்கிஉள்ளதாக பாரிஸ் முழுவதும் பேச்சு. யுத்தம் என்றால் மகா யுத்தமாக இருக்கும் என்று என் முன்னாள் ராணுவ நண்பன் கூறுகின்றான்.

உன் பாதுகாப்புக்காக நான் என்ன வேண்டுமானாலும் செய்ய தயார். ஆமாம் என் பேச்சை மீறாமல் நீ அமெரிக்காவுக்கு செல். என் நண்பர்கள் பலர் அங்கு இருக்கிறார்கள். உன்னை நல்லமுறையில் வழி நடத்துவார்கள். சரி நீ விரைவில் பாரிஸுக்கு வந்து என்னை சந்திக்கவும். நிறைய பேசவேண்டும். கட்டாயம் வா. சிக்கிரம் வா.

அன்புடன் ,

அஸ்டர்

Admiral Wilhelm தன்னை பார்ப்பதை நுண் உணர்வுடன் அறிந்த செயலர் திரும்பிப்பார்கின்றார். அருகில் வருமாறு தலை அசைக்கிறார் அட்மிரல்.

கடிதத்தை கவனமாக படி நான்சி...நம் அலுவலக விதிகளுக்கு உட்பட்டு இருக்கிறதா பார். தவறு என்றால் சுட்டிகாட்டு..எல்லாம் சரி என்றால் பிரான்ஸ் ஜெர்மானிய துதரகம் மூலமாக இதனை லண்டனுக்கு அனுப்பு.

கடிதத்தை கவனமாக படித்த நான்சி

இந்த காகிதம் ஜெர்மானியில் தயாரிக்கபட்டது பரவாயில்லையா? உங்கள் மகனா நமது பிரிட்டன் உளவுபடை தலைவர் வில்லியம்? ஐயா இதுவரையில் சொல்லவே இல்லையே ?

புன்னகைக்கும் அட்மிரல்..

ஏன் பிரான்சுக்கு நாம் காகிதங்களை ஏற்றுமதி செய்யவில்லையா என்ன? பரவாயில்லை இந்த கடிதத்தை உடனே அனுப்பு.பாரிஸில் இருந்து லண்டனுக்கு  அஞசல் செய்ய சொல். அது தான் ரொம்ப முக்கியம்..

சரி ஐயா உங்கள் முன்னால் மனைவியும் லண்டனில் தான் இருகிறார்களா ? தலைமைக்கு தெரியுமா இது? பிரச்சனை ஆகிவிட போகின்றது..

 உன்னுடைய  அக்கறைக்கு மிக்க நன்றி நான்சி. தலைவருக்கு தெரியாமல் என் வாழ்க்கையில் எதுவுமே இல்லை.

அட்மிரல் ஹிட்லரின் புகைபடத்தை பார்த்து புன்னகைகின்றார்.நான்சி அட்மிரலின் மகனுடைய லண்டன் விலாசத்தை அவரிடம் இருந்து பெற்று  சிறு காகிதத்தில் எழுதிகொள்கின்றார்.

ஐயா அடுத்த வாரம் சாலமன் நமது பிரான்ஸ் துதரகதுக்கு செல்கிறார். கொடுத்து அனுப்புகிறான்.. 


தொடரும்

No comments: