Friday, June 20, 2014

வினவுடன் ஒரு விவாதம் DISCUSSION with vinavu

வினவுக்கு ,

[1]திரைபடத்துறை பற்றி விமர்சனம் எழுத வினவுக்கு நேரமும் , மனசும் இருக்கும் போது தலித்தியர் மக்களீன் எழுத்துகளை பற்றி விமர்சனம் செய்ய நேரமும் மனசும் இல்லாமைக்காக சுய விமர்சனம் [Self-criticism] செய்து கொள்ளுமா ? என்ற என் கேள்விக்கு நான் தலித் இளைஞர்கள் சினிமா மாயையில் சிக்கி சீரழியட்டும் என்ற வன்மத்துடன் இருப்பதாக கூறுவது தவறு.

[2]திரைபடத்துறை பற்றி விமர்சனம் எழுதுவது போன்று தலித்தியர் மக்களீன் எழுத்துகளை பற்றியும் விமர்சனம் செய்யுங்கள் என்று பொருள் கொள்ளுவது தான் வினவுக்கு நேர்மை.


VINAVU//வினவில் வரும் சினிமா விமரினசங்களில் சம்பந்தப்பட்டிருக்கும் சினிமாக்களை தலித் இளைஞர்களும் பெரும் எண்ணிக்கையில் பார்க்கிறார்கள். ஆகவே அனைத்து தமிழ் இளைஞர்களையும் மீட்பதற்கே அவை எழுதப்படுகின்றன. அவை அடிக்கடியும், அனைத்து சினிமாக்களையும் எழுத முடியவில்லை என்பதே எமது வருத்தம். இதில் தலித் இளைஞர்கள் சினிமா மாயையில் சிக்கி சீரழியட்டும் என்ற உங்களது வன்மம் கண்டிக்கப்படவேண்டியது. இது போதையில் இளைஞர்கள் சீரழியட்டும் என்று ஆளும் வர்க்கம் நினைப்பதற்கு ஈடானது.//

[1]இந்திய பாட்டாளி வர்க்க புரட்சிக்காக கருத்தீயல் தளத்தில் பணிக்கும் வினவு ,அதன் தோழர்கள் செய்யும் தியாகத்துக்காக பெருமை பட்டுகொள்வதில் எமக்கு மகீழ்ச்சியே!

[2]தலித்தியர் மக்களீன் எழுத்துகளை விமர்சனம் செய்யுங்கள் என நான் கோருவது உங்களுக்கு நான் முறுக்கு கடித்துக் கொண்டே நாவல் ஏன் படிக்க வில்லை என்று கேட்பது போல் உள்ளது என்று ஒப்புமை செய்யும் உங்கள் தர்க்க அழகு மிக்க அருமை !


VINAVU//தலித் மக்களின் சமூக, பொருளியல், அரசியல் விடுதலைக்கு மிகச்சரியான திட்டத்தையும், அதற்கேற்ப உண்மையான நடைமுறையையும், அதனால் தூக்கு, ஆயுள் (இன்றும் எமது தோழர் ஒருவர் ஆயுள் தண்டனையில் சிறையில் இருக்கிறார்) முதல் பல்வேறு அடக்குமுறைகளையும் சந்தித்து வரும் மார்க்சிய லெனினிய இயக்கத்தை பார்த்து விமரிசிப்பதாக இருந்தால் இது குறித்துதான் அதாவது விடுதலைக்கு நாங்கள் முன்வைக்கும் வழியில் என்ன தவறு என்று வைக்க வேண்டும். மாறாக முறுக்கு கடித்துக் கொண்டே நாவல் ஏன் படிக்க வில்லை என்று கேட்பது முட்டாள்தனமானது. கஞ்சிக்கு போராடுபவனைப் பார்த்து ஏன் பாயசத்திற்கு போராடவில்லை என்று கேட்கும் மேட்டிமைத்தனத்தோடும் இதை ஒப்பிடலாம்.//

[1]தலித்தியர் இலக்கியம் பற்றிய [மார்க்ஸ்யிய-தலித்திய] விமர்சகர்களால் கூறப்படும் வரையறைகள் மார்சிய அழகீயல் கோட்பாட்டுக்குள்[பாட்டாளி வர்க்க இலக்கிய கோட்பாட்டுக்குள்] உள் அடங்கி தான் உள்ளது என்பதை வினாவுக்கு தெரிவித்துக் கொள்கின்றேன்.

[2]தலித்தியர் இலக்கியம் பற்றிய [மார்க்ஸ்யிய-தலித்திய] விமர்சகர்களால் கூறப்படும் வரையறைகள்:

[i]புழக்கத்தில் இருந்த பழைய மரபுகளை அனைத்துத் தளங்களிலும் மறுத்தல், மறுதலித்தல், தலை கீழாக்குதல்.

[ii]பார்ப்பனியத்தின் அழகியல் கட்டுமானத்தையும் உன்னதத்தையும் மாயைகளையும் உடைத்தல்.

[iii]கறை படிந்துள்ள இலக்கிய வரலாற்றையும் பாரம் பரியத்தையும் இனம் கண்டு ஒதுக்கிப் புதிய எதிர் வரலாற்றைக் கட்டமைத்தல்.

[iv]குற்ற உணர்ச்சிகளுக்குப் பலியாகிக்கொண்டிருந்த ஆகக்கீழான மனநிலையிலிருந்து தலித்துகளை மீட்டுக் கொண்டு வந்து அத்தகைய நடைமுறை களை உதறித் தள்ளுதல்.

[v]தங்களுக்கான காயங்களை ரத்தக் கவிச்சியோடும் வலியோடும் தங்களாலேயே வெளிப்படுத்த முடியும் என்பதை ஆழ உணர்ந்து வலியுறுத்தல்.

[vi]ஒடுக்கப்படுவதற்கான பொது அம்சங்களை தலித்துகளும் பெண்களும் உணர்ந்து கிளர்ந்தெழச் செய்தல்.

[vii]புனிதக்கட்டுக்குள் சிக்கிக் கொள்ளாத இலக்கியச் செயற்பாடுகளால் தவிர்க்க இயலாத எதார்த்தத்தை மீறிய புதிய வடிவத்தை உருவாக்குதல்.

தலித்தியர் இலக்கியம் பற்றிய இந்த வரையறைகள் மார்சிய அழகீயல் [பாட்டாளி வர்க்க இலக்கிய] வரையறைகளை மீறாமல் உள்ளதை வினவு உணருமா ?


VINAVU//அடுத்து தலித் இலக்கியம் எனும் கோட்பாட்டு விளக்கத்தோடு கூடிய இலக்கிய வகைமையை நாங்கள் ஏற்கவில்லை. பொதுவில் தமிழ் இலக்கியம், வங்க இலக்கியம், பெண்ணிய இலக்கியம் என்று சொல்வது போல தலித் இலக்கியம் என்று சொன்னால் பிரச்சினையில்லை. மாறாக அதற்கு கோட்பாட்டு விளக்க்த்தை அளித்து வரையறுக்க முன்வந்தால் அதை விட சரியான விளக்கம் கொண்டிருக்கும் பாட்டாளி வர்க்க இலக்கியம் எனும் வகைமைதான் கம்யூனிஸ்டுகளின் இலக்கியக் கொள்கை.//

[1]என்ன வினவு , நீங்களும் கஞ்சியை விட்டுட்டு பாயசம் குடிக்கும் மேட்டிமைத்தனத்த்துக்கு வந்து விட்டீர்களா ?


VINAVU//இறுதியாக நீங்கள் குறிப்பிட்டிருக்கும் இலக்கியங்களை விமரிசிக்க கூடாது என்பது எமது கருத்தல்ல. வரம்பிற்குட்பட்டு அவை நடந்தே வருகிறது. புதிய கலாச்சாரத்தில் “கோவேறு கழுதைகள்” உள்ளிட்டு அப்படி சில வந்திருக்கின்றன. இவையும் இன்னும் பல நூல்களும் பாட்டாளி வர்க்க இலக்கியம் எனும் புரிதலோடுதான் வந்தது என்பதையும் மறந்து விடவேண்டாம். ஆனால் அந்த கோவேறு கழுதைகள் தலித் மக்களின் உள்முரண்பாடுகளை பெரிது படுத்துகிறது என்று பல தலித்திய இலக்கியவாதிகள் அதை எதிர்த்ததும் வரலாறு.//

[1]என்னது என்னிடம் உள்ள மாக்சீம் கோர்கியீன் தாய் நாவலை தூக்கி எறிய சொல்கிண்றீர்களா ? முடியாது தோழர் !


VINAVU://மேலும் இலக்கியங்களை விட தலித் மக்களின் பல்வேறு பிரச்சினைகள் குறித்து வேறு எந்த தமிழ் ஊடகங்களையும் விட வினவுதான் காத்திரமான கட்டுரைகளை கொடுத்து பெரும் விவாதத்தையும் எழுப்பியிருக்கிறது. இளவரசன் தற்கொலையின் போது கூட வேறு எவரும் வன்னியசாதி வெறி என்றோ பாமக சாதிவெறி என்றோ சொல்வதற்கு அஞ்சிய நேரத்தில் எமது அமைப்புகள் மட்டுமே களத்தில் அதுவும் வன்னியர்கள் வாழும் பகுதிகளின் அப்படி பிரச்சாரம் செய்தன. இதையெல்லாம் விட நாவல்கள் முக்கியமா சரவணன் அவர்களே?//

[1]Dear ComradeS,

I follow my life according to my Beloved Teacher Lenin words…,

“Practice without theory is blind.

Theory without practice is sterile.

Theory becomes a material force as soon as it is absorbed by the masses.”

WHAT ABOUT YOU ?


VINAVU//இறுதியாக தலித் உள்ளிட்டு அனைத்து மக்களின் விடுலைக்காக தன்னலமின்றி போராடி வரும் புரட்சிகர அமைப்புகளில் இணைந்து கொண்டு களப்பணியாற்றாமல், புத்தகங்களுக்கு மதிப்புரை எழுதுவதையே பெரும் பணியாக முன் வைத்து, மட்டுமல்லாமல் அதை நீங்கள் ஏன் செய்ய வில்லை என்று எகத்தாளத்துடன் கேட்டதற்கு நீங்கள்தான் சுயவிமரிசனம் ஏற்க வேண்டும்.//

No comments: