Tuesday, September 9, 2014

திரைக்கதை படம் : சிவ-கார்திகேயன் காட்சி #2 Screen Play for the Movie Siva-karthikeyan scene #2

திரைக்கதை படம் : சிவ-கார்திகேயன் 

By K.Senthilkumaran 

 

காட்சி #2 : இரவு 11.55 மணி INT @ வேளச்சேரி போலிஸ் நிலையம் 

இரவு விளக்குகள் மின்ன போலிஸ் நிலையத்தின் போர்டு வேளச்சேரி காவல் நிலையம் என்று மங்கலாக ஒளிருகின்றது. கார்திகேயன் யாரோ ஒருவரின் பைக்கிளிருந்து இறங்கி குழந்தையுடன் போலிஸ் நிலையம் உள் செல்கின்றான். பெண் போலிஸ் அதிகாரி அன்று இரவு நடந்த வேளச்சேரி அப்பர்ட்மெண்ட் கொலை ,கொள்ளை பற்றி தன் காவலர்களுடன் விவாதித்துக்கொண்டு இருக்கின்றார். 

"excuse me madam" என்றவன் குழந்தையின் உடையை பார்க்கின்றான். அதன் வயிற்று பகுதியில் ஈரமான புதிய இரத்தக்கறை. அவன் மார்பிலும் ஒட்டி இருக்க ..., பதட்டத்துடன் குழந்தையின் மேல் உடையை தூக்கி பார்க்கின்றான். குழந்தையின் உடம்பில் ஏதும் காயம் இல்லை. 

குழப்பத்துடன் அவன் பெண் போலிஸ் அதிகாரியை பார்க்க .....

அவர் " என்ன கொலையா ;பொண்டாட்டியை போட்டு தள்ளிட்டு சரண்டர் ஆக குழந்தையுடன் வந்துட்டியா " என்று கோபமான குரலில் கேட்ட்கின்றார்.

பதறியவன் " Mind your words... madam, குழந்தை கிண்டி ரயில்வே ஸ்டேஷன் அருகில் வேளச்சேரி ரோட்டில் கிடந்தது " என்றான். 

"இருக்கிற பிரஸ்சர் போதாது என்று இது வேறையா" என்று காவலரை பார்த்து சலிப்புடன் கூறியவர்.....

கார்த்திகேயனை பார்த்து "குழந்தையின் டிரஸ்-ஐயும் ,உங்க சட்டையையும் கழட்டி கொடுங்க.... police forensic department க்கு அனுப்பனும் " என்றார். 

கடுப்படைந்த கார்த்திகேயன் கோபத்தை வெளிகாட்டிக்கொள்ளாமல் " மேடம் நான் டைரக்டர் பார்திபன் சாருடைய அசிஸ்டென்ட் ..., வேலை முடிந்து வரப்ப வேளச்சேரி ரோட்டில் பார்த்தேன் ....இதை அதனுடைய parents இடம் ஒப்படைச்சுடுங்க ....நான் ஏதாவது லெட்டர் எழுதித்தரதுனாலும் தருகின்றேன் " என்றான்.

ரைட்டர் கொடுத்த அவரின் தொல தொல சட்டையை அணிந்து கொண்டு தன் சட்டையையும் , குழந்தையின் மேல் உடையையும் ரைட்டரிடம் கொடுக்க அவர் தனி தனி பாலிதின் காவர்களில் pack செய்கின்றார் 

"வெயிட் பன்னுங்க.... வேளச்சேரியில் ஒரு மர்டர் அண்ட் ராபாரி" அதை பார்த்துவிட்டு வருகின்றேன் என்றவர் 

ரைட்டரை "பார்த்து இவர்கிட்ட ஒரு கம்ப்ளைன்ட் வாங்கிக்குங்க நான் வர வரைக்கும் வெயிட் பண்ணட்டும்" என்று கூறி வெளியே சென்றார். 

போலிஸ் நிலைய கெடிகாரம் இரவு 2.35 மணி காட்டியது. குழந்தையை பெஞ்ச்சில் படுக்க வைத்துவிட்டு அதன் கால்களை தொட்டுக்கொண்டே , பெஞ்ச்சில்அமர்ந்தவாரே அரை தூக்கத்தில் இருந்தவனை குழந்தையின் அழுகை எழுப்பியது. 

குழந்தையை வாரி எடுத்து சமாதானபடுத்த முயன்றவனை பார்த்து ரைட்டர் " தம்பி இந்த பிஸ்கட்டை கொடுங்க... பசியில் அழுது" என்றார். 

வட்ட வட்ட வடிவ அந்த பிஸ்கட்டை கையில் வாங்கி கடித்த குழந்தை அவனை பார்த்து சிரிக்க....

பெண் போலிஸ் அதிகாரி தன் காவலர்களுடன் போலிஸ் நிலையம் உள் வந்தவர் ரைட்டரை பார்த்து "கிண்டி இண்டஸ்டிரியல் எஸ்டேட் to சைதா பேட்டை  ரோட்டில் ஒரு பெண் வெட்டபட்டு சுய நினைவு இன்றி இருந்தாங்க....   hospitalise செய்து இருக்காங்க.. கிண்டி SI  சொன்னார். அதே ரோட்டில் அடையார்  bridge  கிட்ட ஒரு ஆண் வெட்ட பட்டு இறந்துவிட்டார் ...பைக் எரிக்கப்பட்டு  பக்கத்தில் கிடக்கு"  

பெண் போலிஸ் அதிகாரி கார்திகேயனை பார்த்து "குழந்தை வேளச்சேரி to கிண்டி ரோட்டில் left சைடு இருந்ததா அல்லது right   சைடு இருந்ததா? என்று கேட்க 

கார்திகேயன் யோசித்து விட்டு left சைடு  மேடம் " என்று கூற 

பெண் போலிஸ் அதிகாரி எதோ புரிந்தது போல தலை ஆட்டுகின்றார்.  

குழந்தையை கவர்மென்ட் ஹாஸ்பிடலில் ஒப்ப்டைக்கனும் ...டாக்டர் கிட்ட பேசிட்டேன்....டாக்டர்,  குழந்தையை குழந்தைகள் காப்பகத்தில் சேர்க்க சொல்றார்.,இவர் கிட்ட கம்ப்ளைன்ட் எழுதிவாங்கிட்டிங்களா ?" என்று ரைட்டர் இடம் கேட்டார்.

"மேடம் தொ எழுதிகொடுத்துடறேன்" என்றவன் "மேடம் ஹாஸ்பிடலில் குழந்தையை யார் பாத்துப்பாங்க" என்று அப்பாவியாக கேட்டான். 

"நீங்க கூட இருந்து பார்த்துகொள்ளுங்கள் " என்று கோபத்தில் பதில் கூறியவர் "உங்க ID ,அட்ரஸ் புருப் காட்டுங்க என்று கூற"

"ID புருப் ரூமில் இருக்கு மேடம்...,,,,,  மேடம் பேரண்ட்ஸ் கிடைக்கும் வரை குழந்தையை நானே பார்த்து கொள்ளட்டுமா என்று " பாவமாக கேட்டான்.

பதில் கூறாமல் தன் நாற்காலியில் அமர்ந்தவர் அப்படியே அரை மணிநேரம் தூங்கி போனார்.

போலிஸ் நிலைய கெடிகாரம் இரவு 3.24 மணி காட்டியது.

"சார் உங்க வீடு எங்க இருக்கு..?,  என்று கேட்ட போலிஸ் அதிகாரியை தலை உயர்தி பார்த்தவன்

"உங்க பேரன்ட்ஸ் இந்த குழந்தையை தற்சமயம் பார்த்துபாங்களா ?ஆனா அதுக்கு நிறைய பார்மான்லிட்டிஸ் இருக்கு ...,கோர்ட் ஆர்டர் வாங்கனும் .., A C கிட்ட பேசிப்பார்க்கின்றேன். Child story complicated  ஆ இருக்கும் போல இருக்கு !   " என்று  கூறினார் போலிஸ் அதிகாரி


"மேடம் நான் bachelor .., ரெண்டட் பிளாட்டில் தங்கி இருக்கேன்" என்றான் 

"அப்ப குழந்தையை உங்க கிட்ட விட்டா யார் பார்த்துப்பாங்க? என்று கேட்டார்.

"டே டைம்ல நைட் ஷிப்ட் வேலைக்கு போகும் என் I I M ஓல்ட் காலேஜ் மெட் அனுஷ்கா பட்டேல் பார்த்துப்பாங்க.., நைட்டில் நான் பார்த்துபேன் " என்றான்.

"சரி வாங்க உங்க பிளாட்டுக்கு போகலாம் " என்றவர் "ரைட்டரை பார்த்து எவினிங் 3 o clock க்கு வரேன், child  missing என்று ஏதாவது complaint   வந்தா, வேற ஸ்டேஷனில் இருந்து மெசேஜ் வந்தா எனக்கு உடனே போன் பண்ணுங்க"   என்று கூறி சிவ-கார்த்திகேயன்களுடன் வெளியே செல்கின்றார் ......

காட்சி #2 முற்றும்

  கதை பிடித்து உள்ளதா நண்பா ?
https://www.facebook.com/groups/Perumalmurugan/
திரைக்கதை தயாராகின்றது.
https://www.facebook.com/groups/618141481573698/

No comments: