Saturday, January 25, 2014

கரித்தாள் தெரியவில்லாயா தம்பீ கட்டுரைகள் – பெருமாள் முருகன்[விமர்சனம்-2]( Carbon paper You do not know -Perumal Murugan -Essays-Critic-2 )


ஐயா பெருமாள் முருகன் ,


கரித்தாள் தெரியவில்லாயா தம்பீ கட்டுரைகள் – பெருமாள் முருகன் [விமர்சனம் தொடர்கின்றன] 

23 கட்டுரைகள்  உள்ள  இப்புத்தகம் கடந்த 20 ஆண்டுகள் தமிழகத்தின்   சமுக-அரசியல்  நிகழ்வுகளை  மிக  நூட்பமாக  ஆய்துள்ளது.

"வேகம்  இழந்த விசைத்தறிகள்"  கட்டுரை  நம் மக்களின்  மொக்கைத்தனமான  போராட்ட  முறைகளை  கவனமாக   விமர்சனம் செய்து  உள்ளது.  தமிழகத்தில்  புரட்சிகர  அரசியலில்  தன்னை  ஈடுபடுத்திக்கொள்ளும்  ம க இ க  போன்ற இயக்கங்களுக்கும்  இந்த விமர்சனம் பொருந்தும். புதிய போராட்ட  முறைகளை  கூறாதது  இக்கட்டுரையின்  மிகப்பெரிய  குறை.

"கருவறை எலி" கட்டுரை  நந்தன்  முதல்  ம க இ க வரை  கோவில் நுழையும்  உரிமைக்காக  போராடியதை  நேர்மையாக  பதிவு  செய்து  உள்ளீர்கள்.  கருவறையில்  மொட்சம்  ஆனா  எலி ;   கருவறை உள்ளே சென்று எலியை  எடுத்து  , கருவறையை  புனிதப்படுத்திய உங்கள் மாணவனின்  கதை  கேடு  கெட்ட இந்து சனாதனத்தின் அழகிய   முரண் .

இந்த இரு   கட்டுரைகளும்   ம க இ க மற்றும்  வினவு.காம்  ஆகியவர்களால்  கவனிக்கப்படவேண்டியவை.  

ஈழம்  சார்ந்த  கட்டுரைகளை  திரு  பெ  மு  எழுதாதது  அவரின்  'கவனமான கவனக்குறை' என்று அய்யம் அடைகின்ரேன் .


விமர்சனம் தொடரும்…

அன்புடன் ,
கி.செந்தில்குமரன்

No comments: