Sunday, February 1, 2015

How to write like Saru தேகம் எழுதுவது எப்படி ? பாகம் 5

தேகம் எழுதுவது எப்படி ? பாகம் 5


               பின் நவினத்துவ எழுத்து என்றால் இன்றைய எழுத்தளர்களுக்கு அலாதியான பிரியம். ஏதும் வரைமுறை இன்றி தறிகெட்ட எழுத்து எழுதுவதை தானே இவர்கள் தமது சிந்தனை வெளியின் உள்நோக்கிய சிதறல் என்று பெருமைபடுகின்றார்கள். தேகம் நிகழ்கால வாழ்வை பின் நவினத்துவ வடிவத்துடன் இணைகின்றது என்றால் பெருமாள் முருகனின் மாதொருபாகன் வரலாற்றை பின் நவினத்துவ கூறுகளுடன் சங்கமம் செய்கின்றது. எது எப்படியாயினும் சாரு மற்றும் பெருமாளில் எழுத்து வெளி அவர்களை பொறுத்தவரை மிகவும் தெளிவானது. அந்த தெளிவில் இருந்து தானே அவர்கள் வாழ்க்கையை பயில்கின்றார்கள். பெருமாள் காட்டும் 14 ஆம் நாள் திருவிழா நிகழ்வுகள் உண்மையாக இருப்பினும் அதை நோக்கிய பொன்னாவின் மகப்பேறுக்கான பயணம் மிகவும் செயற்கையானது. “மாதொரு பாகன்” நாவலில் திருவிழா ஒன்று கூடலை படிமப்படுத்தும் நாவலாசிரியர் “ஆதி மனிதன் தன்னைக் கண்டடைகிறான்” என்று குறிப்பிடுகிறார். திருவிழாவிற்கு கூட வந்த அம்மாவை பிரிந்த பிறகு தனக்கென இணை தேடுகிறாள் நாயகி பொன்னா. பின்நவீனத்துவத்தின்படி இந்த ஒன்று கூடல் பல்வேறு மக்கள் குழுக்களில் இருந்த, இருக்கும் ‘கார்னிவல்’ கொண்டாட்டம். அடக்கப்பட்ட பாலியல் உறவுகளில் வெந்து நோகும் மக்கள் தணித்துக் கொள்ளும் ஒரு கலாச்சார நடவடிக்கை. இந்த பார்வை சரியானது தானா ? பெருமாள் அப்படியே இருக்கட்டும் ! தேகத்துக்கு வருவோம்.


                சாருகாட்டும் பாலியல் சார்ந்த மனிதனுக்குள் நிகழும் உயிர் வேதியல் நிகழ்வுகள் மிகவும் எளிமையாக தேகத்தில் காட்சிபடுத்த படுகின்றது."உன்னை நினைத்தால் எனக்குக் ஈரமாயிடுது, நீ பார்த்தாலே எனக்கு நிதம்பத்தில் நீர் சுரக்குது, நீ என்னைப் பார்த்தாலே ஆர்கசம் வந்துடுது." என்ற எழுத்துக்கள் எல்லாம் எனக்கு எதனை நினைவுபடுத்துகின்றது என்றால் பெருமாளின் “மாதொரு பாகன்” பின்நவினதுவத்தை விவரிக்கும் கோனார் நோட்ஸ் என்றால் சாருவின தேகம் அதே வேலையின் தென்றல் நோட்ஸ் போன்றது தானே ?


தொடரும் .....

No comments: