Sunday, February 1, 2015

How to write like Saru? தேகம் எழுதுவது எப்படி ? பாகம் 6

தேகம் எழுதுவது எப்படி ? பாகம் 6

நவினத்துவ எழுத்தாளர் திரு ஜெயகாந்தனின் அக்கினிப் பிரவேசம் என்ற கதையை மீள்வாசிப்பு உட்படுத்திய போது இந்த பின் நவினத்துவ எழுத்தாளர்களின் எழுத்துக்கள் தூய நதியில் கலக்கும் சாக்கடை நீர் போன்று இலக்கியத்தில் கலந்த கசடுகளாகவே காட்சி அளிக்கின்றன. 1966களில் எழுதப்பட்ட அக்கினிப் பிரவேசம் என்ற கதையாடல் திடீர் என்று ஒருவனின் பாலியல் தேவைக்கு ஆட்படும் ,உட்படும் இளம்பெண்ணை அவளின் அம்மா தூய்மை படுத்துவது என்ற கருத்தை மையம் கொண்டது. இக் கதையில் JK அவர்கள் நினைத்து இருந்தால் எப்படி வேண்டுமானாலும் பாலியல் நிகழ்வுகளை வருனனையுடன் காட்சி படுத்தி இருக்க முடியும். ஆனால் அவரின நோக்கமும் ,கதையின் போக்கும் ஆண் ஒருவனின் பாலியல் தேவைக்கு ஆளாகும் ஒரு சிறுபெண்ணை எப்படி மீண்டும் வாழ்வின் எதார்த்த போக்கில் கொண்டு செலுத்துவது என்பதையே முதன்மையாக கொண்டதாக இருந்தது.

சாருவின் போதைக்கு வருவோம். தனக்கு அறிமுகம் ஆன பெண்களுடன்[காதலிகள் என்று கூற மாட்டேன்] பாலியலில் ஈடுபடும் தேகம்-தர்மாவின் நடவடிக்கைகள் அதனை பற்றிய சாருவின் வருனைகள் மிகவும் விகற்பமாகவும் , தன்னை மிஞ்சி எவரும் காமத்தை காட்சி படுத்த இயலாது என்ற திமிர் போக்கிலும் , காமத்தில் ஈடுபடும் போது கூட அதனை முழுமையாக பகிராமல் பெண்களை உணர்ச்சி வெளியில் சிறுமை படுத்த முடியும் என்ற கருத்தையும் தெளிவாக தன் தர்மாவின் சிந்தனையில் இருந்து visual செய்கின்றார் சாரு.

மாதொருபாகனின் பொன்னா 14 ஆம் நாள் திருவிழாவுக்கு போன முடிவில் இருந்து தொடங்கும் இரு நாவல்களில்[அர்த்தநாரி ,ஆலவாயன்] காளி மரணம் அடைந்தால் .....,காளி மரணம் அடையாமல் இருந்தால் என்ற இரு விதமான வாழ்வியல் சூதாட்டங்களை கொஞ்சம் கூட வெட்கம் இன்றி எழுதித்தள்ளிய பெருமாள் முருகன் இலக்கியத்தில் புதிய வகைமையை கொடுத்துவிட்டதாக நினைத்துக்கொண்டு நிற்கின்றார் !

என்ன இருந்தாலும் JK என்ற இலக்கிய ராசா...., ராஜா தான் !

தொடரும் .....

No comments: