Thursday, September 18, 2014

திரைக்கதை படம் : சிவ-கார்திகேயன் காட்சி 16 பின்னணி காட்சிக்கான பாடல் Song for scene #16 Flashback Scene XII

காட்சி #16: பின்னணி காட்சிக்கான பாடல்
[இளையராசாவின் "How to Name it " போன்ற பின்னணி இசையுடன் பாடல் காட்சி தொடங்குகிறது. அடுத்து மென்மையும் அழகும் தரும் தமிழ் ராகங்களில் ஒன்றான ஹம்சானந்தி மற்றும் பூர்விகல்யாணி, மற்றும் சுநாதவினோதினி ராகங்களின் கலவையாக "நினைத்து நினைத்து பார்த்தேன் நெருங்கி விலகி நடந்தேன்" போன்ற நா. முத்துக்குமார் பாடல் தொடங்குகின்றது
http://fileraja.com/Tamil/01/7G_Rainbow_Colony_160kbps/Ninaithu_Ninaithu_Parthal-VmusiQ.Com.mp3
]
மாதிரி பாடல் [Template Song]
கதைத்து கதைத்து பேசினால்
காலம் எல்லாம் உன்னுடன் இருப்பேன்
நம்மால் தானே பூக்கள் பூக்கின்றன ஓ......
என்னில் இன்று உன்னை காண்கிறேன்
தொட்டுச்சுட்டு அறியும் முன்னே
தெரியும் காதல் உனக்கு தானே
நம்மால் தானே பூக்கள் பூக்கின்றன ஓ......
என்னில் இன்று உன்னை காண்கிறேன்

நடந்து போகும் பாதையின் சுவடும்
எனது காதலை நாளும் கதைக்கும்
நெகிழ்ந்து போன உடையின் துயரமா
நாவில் சுவைத்த தேனீர் சுவையை
நாள் தோறும் மேசைகள் கதைக்கும்
நொறுங்கி போன மனதின் வருத்தமா
பிஞ்சுநெஞ்சில் இன்பம் சேர்க்கும்
இறகுகள் உந்தன் மனதில்
களத்தில் நின்று சண்டைகள் போட
நமது ஊழில் சாத்தியம் இல்லை
கன்னி சண்டை போதுமே நண்பா கோபம் துறந்திடு

கடந்து போன காட்சிகள் எல்லாம்
எனது மனதில் உயிரோடு உலவும்
காலம் அழியும் கனவுகள் அழியுமா
சிரித்து பேசிய உணர்வுகள் எல்லாம்
இன்றும் என்றும் என்னுடன் வாழும்
எந்தன் நெஞ்சம் உன்னை மறுக்குமா
முறிந்து போன உறவின் சாட்சி நின்று நின்று பார்க்கும்
மறைந்து போன வலிகள் என்றும்
மீண்டு வருவாய் நீயும்
என் நொடியும் வெப்பம்
தகிக்க என்னுள் இருக்கிறாய்

(கதைத்து கதைத்து பேசினால் ....)

No comments: