Tuesday, May 31, 2016

If Hitler Wins part 1 Novel

"ஹிட்லர் ஜெயித்து இருந்தால்....."

அத்தியாயம் 1 

 


என்ன செய்யப்போறிங்க....வேடிக்கைபார்த்துக்கொண்டு இருந்தது போதும்... *Abwehr சீப்பை கூப்பிடு...

ஹிட்லரின் உதவியாளர் தொலைபோசியில் யாரையோ அழைகின்றார்.

போனை கொடு.

Admiral Wilhelm தலைமையகத்துக்கு வாங்க....யாரோ ஒரு யூதன் அமெரிக்காவில் வினோத குண்டு செய்துகொண்டு இருக்கான்.... Abwehr என்ன செய்துகொண்டு இருக்கு? இத்தாலிய பத்திரிக்கையாளர் மூலமா செய்தி வருது...நீங்க என்ன செய்து கொண்டு இருக்கிங்க?

ஐயா வணக்கம் உளவுத்துறை தலைவர் Admiral Wilhelm பேசுறேன்....விவரங்கள் கிடைக்க பெற்றோம்... உங்களுக்கான தகவல் தட்டச்சில் இருக்குங்க... நான் தான் அந்த பத்திரிக்கையாளரை அமெரிக்காவுக்கு அனுப்பிவைத்தேன்... அவர் அவசரப்பட்டு விசயத்தை பத்திரிகையில் உடைச்சிட்டார்...

நேர்ல வாங்க பேசலாம்....

ஐயா அந்த யூதன் பேரு ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் ...இங்கிருந்து போனவன் தான் அவன்...

ஹிட்லர் தன் அந்தரங்க நாட்குறிப்பில் 12.04.1939 தேதியில் சிலகுறிப்புகளை ஆஸ்திரிய-ஜெர்மனிய மொழியில் எழுதிக்கொண்டு இருந்தார்......Albert Einstein Sollte innerhalb von sechs Monaten vergeben.... தமிழ்படுத்துவது மிக எளிது...ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் அவர்களுக்கு ஆறு மாதங்களில் "பதவி" வழங்கப்பட வேண்டும்.

Admiral Wilhelm அவர்களின் வருகை 24 நிமிடங்களில் நிகழ்ந்தது....ஹிட்லரின் தலைமையகத்தில் இருந்து 4 மைல் தொலைவில் உள்ள ஒரு மெழுகுவத்தி தொழில்சாலையில் தான் உளவுநிறுவனம் செயலாறிக்கொண்டு இருந்தது... Admiral Wilhelm ராணுவ உடையை தவிர்த்து சிவில் தலைமை அதிகாரியின் உடையில் இருந்தார். கழுதுப்பட்டைக்கு மேல் அணிந்து இருந்த கோர்ட் பனியில் நனைந்து இருந்தது. கேர்டுக்குள் நீர் புகா கவரினுள் தட்டச்சு காகிதங்கள் பாதுகாப்பாக இருந்தன.

காத்திருப்பு இல்லை...நேரடியாகவே ஹிட்லரின் அலுவலகத்துக்குள் நுழைந்தார் அட்மிரல். நாஜி கலாச்சாரபபடி அட்மிரல் வணக்கம் தெரிவித்தார்..தலை அசைத்தார் ஹிட்லர். இருவரிடையே பேச்சு ஏதும் இல்லை... தட்டச்சு காகிதங்கள் ஹிலரிடம் கொடுக்கப்பட்டன. காகிதங்களை படிக்காமலேயே இறுதி பக்கத்தில் அட்மிரலின் கையப்பதுக்கு பக்கதில் ஆஸ்திரிய-ஜெர்மனிய மொழியில் Albert Einstein Sollte innerhalb von sechs Monaten vergeben. என்று எழுதி திருப்பி அளித்தார்.

காகிதத்தை வாங்கி பார்த்த அட்மிரல்
ஐயா  என் பையன் லண்டனில் இருக்கான்..பிரிட்டன் குடியுரிமை...அங்கேயே பிறந்து வளர்ந்தவன்..ஜெர்மானியன் என்று யாருக்கும் வெளியே தெரியாது... இயற்பில் மேற்படிப்பு படிக்கின்றான்...அவனை அமெரிக்காவுக்கு....

 அவனுக்கு ஜெர்மன் தெரியுமா?

ஐயா அவனுக்கு இங்கிலீஷ் ,பிரஞசு மொழிகள் மட்டும் தான் தெரியும்...என்ன ஆனாலும் நம்ம நாட்டை காட்டிக்கொடுக்க மாட்டான்..

சரி அனுப்பு ..ஐன்ஸ்டீனுக்கு சிக்கிரம் பதவி கொடுக்கச்சொல்லு...

தொடரும்....

*Abwehr German Spy Agency

No comments: