Tuesday, September 16, 2014

திரைக்கதை படம் : சிவ-கார்திகேயன் காட்சி #14 பின்னணி காட்சி X Screen Play for the Movie Siva-karthikeyan scene #14 Flashback Scene X

காட்சி #14: பின்னணி காட்சி காட்சி X : மாலை 4.15 மணி EXT @ IIM -B உள் சாலை
திரைக்கதை படம் : சிவ-கார்திகேயன் 
By K.Senthilkumaran


கார்திகேயன்,சிவசங்கரி தொலைவில் நடந்து வரும் காட்சி


அருகாமையில் .....

"என்ன கார்த்திக் ஏன் இப்படி டென்ஷன் ஆகிற ? ரிலாக்ஸ் பா " என்று கூறி அவன் தோள்களை தன் இடது கையால் மெல்ல பற்றியவளை ....

கார்திகேயன் தன் தோள் பட்டையை மெல்ல நெகிழ்த்தி விடுவித்துக்கொண்டு நடக்கிறான்.

அவனுடன் நடக்கும் சிவசங்கரி "நான் நேத்து evening போன் செய்தேனே ! ..... உன்னிடம் permission வாங்கிட்டு தான் பா egg donate செய்யனும்னு இருந்தேன்...நீ தூங்கிட்ட பா " என்கின்றாள்.

எவ்வித உணர்சிகளையும் காட்டாத கார்திகேயன் மேலும் நடக்கிறான்.
"இல்ல பா தாமரை என்னேட close frind தெரியுமா ? அவ பாவம் பா " என்று சோகமான முகத்துடன் கூறுகின்றாள்.
எவ்வித உணர்சிகளையும் காட்டாத கார்திகேயன் மேலும் நடக்கிறான்.

அவன் பேசாமல் நடப்பதை கண்டு கோபமுற்ற சிவசங்கரி "இதுல என்ன தப்பு இருக்கு கார்த்திக் ? blood donate செய்வது போல தானே இதுவும் ? என் உயிரையே காப்பாத்தியவளுக்கு நான் இது கூட செய்யக் கூடாதா ? " என்று கூறி அமைதியாகிறாள்.அவள் கண்கள் கலங்குகின்றன.

தூரத்தில் எங்கோ பார்வையை செலுத்தி "கரு முட்டையை தானம் கொடுக்க அவங்களுக்கு relations யாருமில்லையா ?" என்கின்றான்

"" donate செய்ய relations இருக்காங்களா இல்லையானு தெரியல கார்த்திக் ..... ஆனா என்னிடம் தாமரை கேட்டப்ப நான் சரி தறேனு சொன்னப்பவே உன்னை நினைத்து பார்க்காதது.... ,உன்னிடம் பேசி முடிவெடுக்காது தவறு தான் I am very sorry கார்த்திக் " என்று கூறி அவன் வலது கையை தன் இடது கையால் பற்றுகின்றாள்.

தன் கையை மெல்ல விடுவித்துக்கொண்டவன் அவள் முகத்தை, கண்களை உற்று நோக்கி .....,

" உனக்கு செக்குக்கும் சிவலிங்கலிங்கத்துக்கும் வித்தியாசம் தெரியாதா சிவா ?"
என்று கேட்க...

அதிர்ந்து போனவள்.....

" நக்கிற நாய்க்குச் செக்கென்ன சிவலிங்கமென்னனு திட்டுறியா ..., நான் என்ன நாயா பா ? [அழுகை] நாம என்ன சாதி, சமுகம் எல்லாம் பார்த்தா காதலிக்கின்றேம் ....,.marriage செய்துக்க போறேன் ? என்னை உன்னோட share செய்துக்க முடியும் போது என் friend க்காக நான் ஒரு கரு முட்டையை donate செய்ய  கூடாதா ? "

என்று கூறி அழுதவள் அவர்கள் நடந்த திசைக்கு எதிர் திசையில் வேகமாக நடக்கின்றாள்

தன்னை விட்டு விலகி எதிர் திசையில் செல்லுபவளை பார்த்து

"சிவசங்கரி நில்... நான் சொல்லாததையும் நீயா கற்பனை செய்து கொண்டு கோபப்படுவது என்ன நியாயம்"

என்று கூறியவாறே அதிர்ந்து போய் சிலையாக நிற்கின்றான்.

இருவரும் எதிர் எதிர் திசையில் நடப்பதை காட்சி படுத்த .....
காட்சி #14: பின்னணி காட்சி காட்சி X முற்றும்
[வாசகர்கள் இக் காட்சிக்கு கண்டிப்பாக விமர்சனம் வைக்கவும்]

திரைக்கதை படம் : சிவ-கார்திகேயன் காட்சி #13 பின்னணி காட்சி IX Screen Play for the Movie Siva-karthikeyan scene #13 Flashback Scene IX

காட்சி #13: பின்னணி காட்சி காட்சி IX : காலை 11 மணி INT @ IIM -B வகுப்பறை
கார்திகேயன் கருத்தரங்கு [seminar] நடத்திகொண்டு உள்ள காட்சி.
திரைக்கதை படம் : சிவ-கார்திகேயன் 
By K.Senthilkumaran

My dear friends This seminar is about "Child labour in India" என்றவனை பார்த்து சிவசங்கரி சிரிக்க

அவளை பார்க்காமல் பார்வையை மாணவர்கள் பக்கம் திருப்பி .....

INTRODUCTION
Child Labour, consisting of children below 14 years of age, is defined by the International Labour Organization (ILO)
Child labour is a universal problem and as a citizen of India we must strive to take stern actions against child labour.
Who Is a Child Labour?
Children are the greatest gift to humanity and the same gift is being misused for personal gains as child labour..
person who has not completed his 14th year of age ,such person engaged for wages, whether in cash or in kind, is a child worker.
Child labour is more a rural phenomenon than an urban phenomenon. Due to acute poverty poor families residing in rural areas send their children to urban areas for bread and butter.

என்று பேசிக்கொண்டு அறுபவனை பார்த்து "excuse me I feel vomiting sensation" என்று கூறி வகுப்பறையை விட்டு வெளியேறும் சிவசங்கரி அவனை கடக்கும் போது அவன் அருகில் சென்று

"குழந்தையை உருவாக்கிட்டு Child Labour பத்தி செமினார் கொடுகிறியா பா "

என்று கூறி நமுட்டு சிரிப்பு சிரித்தவாறே வெளியே செல்கின்றாள்.
வகுப்பிற்கு வெளியே வந்தவள் தன் தோழி தாமரைக்கு call செய்கின்றாள்

"தாமரை எப்படி இருக்க பா "
......
....
"டாகடர் என்னிக்கு கருவை inject செய்ய போறாங்க தாமரை ?"
.....
...
....
"அப்படியா சரி நல்லா ரெஸ்ட் எடுத்துக்க "
.......
....
....
"ஆமாம் டாகடர் சொல்லுவாங்க பாரு பெட் ரெஸ்ட் எடுக்கனும் என்று "
......
......
"சரிபா செமினார் நடக்குது பாதியில் வெளியே வந்துட்டேன் evening பேசுறேன் என்ன ? " என்று கூறி செல் போனை அனைத்து விட்டு .....

வகுப்பறை உள் நுழையும் போது கழுவிய வாயை கைகுட்டையால் வாயை துடைப்பது போல பாவனை செய்து கொண்டு போகின்றாள்

டென்ஷன் ஆனா கார்திகேயன் முகம் close-up ல்

காட்சி #13 : பின்னணி காட்சி காட்சி I X முற்றும்

திரைக்கதை படம் : சிவ-கார்திகேயன் காட்சி #12 பின்னணி காட்சி VIII Screen Play for the Movie Siva-karthikeyan scene #12Flashback Scene VIII

காட்சி #12: பின்னணி காட்சி காட்சி VIII : காலை 9 மணி INT @ IIM -B விடுதி உணவகம் அல்லது கேண்டீன்
திரைக்கதை படம் : சிவ-கார்திகேயன் 
By K.Senthilkumaran

கேன்டீனில் அமர்ந்து தேனீர் அருந்தும் கார்திகேயனை நோக்கி செல்லும் சிவசங்கரி

"ஹாய் கார்த்திக் how are you ? " என்றவாறே அவன் முன் உள்ள இருக்கையில் அமருகின்றாள்.

தலையை சற்றே உயர்தி புன்னகை பூத்தவாறே "ஹாய் சிவா" என்றவன் "just wait ..,I bring a cup of tea " என்றவாறே எழுகின்றான்.

"No கார்த்திக் I finished my breakfast in flight " என்றவள் "கை கொடு நான் அம்மா ஆக போறேன்" என்றவாறே கையை கொடுக்க...

"என்னப்பா சொல்லரே " என்றவாறே அவள் கையை மிருதுவாக பற்ற அவனியும் மீறிய பதட்டத்தில் அவன் கைகள் நடுங்க.....

அவனை கலாய்க்கும் முடிவுடன் " குழந்தையின் அப்பா நீங்க என்ன சொல்றீங்க" என்றவாறே அவனை நோக்கி கையை காட்டி புன்னகை பூக்கின்றாள்.

மேலும் பதறும் கார்திகேயன் ,பூக்கும் நெற்றி வியர்வை துளிகளை கையால் துடைத்துக்கொண்டே "முத்தம் கூட கொடுத்துகிளியே பா...... எப்படி இது சாத்தியம் ஆச்சு " என்றான்.

மேலும் அவனை கலாய்க நினைத்தவள் " பீர் அடித்தாலே என்ன நடக்குதுனு தெரியாது...., ஹாட் அடிச்சியே Carnival Feast அன்னிக்கு அப்ப தான் எல்லாம் நடந்தது " என்றவாறே "என்ன குழந்தை வேணும்பா ?" என்கின்றாள்

டென்ஷன் ஆன கார்திகேயன் முகம் close-up ல்

காட்சி #12 : பின்னணி காட்சி காட்சி VI I I முற்றும்