கரித்தாள் தெரியவில்லாயா தம்பீ கட்டுரைகள் – பெருமாள் முருகன்[விமர்சனம்-4]( Carbon paper You do not know -Perumal Murugan -Essays-Critic-4 )
ஐயா பெருமாள் முருகன் ,
கரித்தாள் தெரியவில்லாயா தம்பீ கட்டுரைகள் – பெருமாள் முருகன் [விமர்சனம் தொடர்கின்றன]
23 கட்டுரைகள் உள்ள இப்புத்தகம் கடந்த 20 ஆண்டுகள் தமிழகத்தின் சமுக-அரசியல் நிகழ்வுகளை மிக நூட்பமாக ஆய்துள்ளது.
"ஹர ஹர மகாதேவா!சம்போ மகாதேவா!" கட்டுரை, நாட்டார் வழ்வியலுக்கு எதிராக, இந்து சனாதனத்திற்கு ஆதரவாக தமிழக அரசு கொண்டு வந்த பலியிடல் தடுப்புச் சட்டம் மீது எதிர்வினை ஆற்றிய கையேடு.அசைவ முருகன் "சைவன்" ஆன கதையில் தொட்ங்கி ,உலகமயமாக்கலில் முடியும் கட்டுரை.
திரு பெமு அவர்கள், வெளிப்படுத்தும் கருத்துக்கள் :
[௧]"சிறுதினை மலரொடு,மறி அறுத்து" உண்டு வாழ்ந்த "திருமுருகாற்றுப்படை அசைவ முருகன்", பார்பனர்களால் குட முழுக்கு சிகிச்சை மூலம் சைவனாக மாற்றப்பட்டான்.
[௨]கோவில் அசைவம் ,மூலவர் சைவம் என்ற நிலையை மாற்றி கோவிலும் சைவம் ,மூலவரும் சைவம் என்ற நிலைக்கு மாற்ற முயலும் சட்டம் இது.
[௩]இச்சட்டம் சிறுதெய்வங்களை பொருந்தெய்வங்களுடன் இணைக்கும் முயற்சி .[இணைக்கும் முயற்சியா ?அல்லது அழிக்கும் முயற்சியா ?]
[௪]இச்சட்டம், நாட்டார் சிறுதெய்வ கோவில்களில் நிகழும் சமுக செயல்களை [இனக்குழுகளின் கூட்டங்களுக்கு இடையிலான திருமண பேச்சு , பஞ்சாயத்துகள்] குலைக்கின்றன.[திரு பெமு அவர்கள் ,இச்சட்டம் மூலம் , இனக்குழுகளின் சாதீய கட்டுமானத்தை தளர்த்த சாத்தியம் உள்ளதா என ஆய்வு செய்ய தவறிவிட்டார் ]
[௫]கோவில்களை சைவமாக்கும் முயற்சி, இந்து மத அமைப்புகள் உலகமயமாக்கலுக்கு துணைபோகும் செயல்.
[௬]த.அ வின் "கள்ளுக்கு தடை ,பிராந்திக்கு ஏற்புரை" கொள்கையை இச்சட்டத்தின் சிறுதெய்வ அழீப்பு கொள்கையுடன் ஓப்பீடு செய்யும் திரு பெமு அவர்கள் , இரண்டுமே [மதம் -மது ] போதைக்கான விடயங்ககள் தான் என்பதை ஏனோ கூறவில்லை
விமர்சனம் தொடரும்…
அன்புடன் ,
கி.செந்தில்குமரன்