ஒரு எழுத்தாளரின் உள் முகம் : பெருமாள் முருகன் நல்கை முரண்
--------------------------------------------------------------------------------------------
--------------------------------------------------------------------------------------------
ஒருபக்கம் போர்ட் நிறுவனத்தின் , டாட்டா நிறுவனத்தின் கொடுங்கரங்கள் ஏழை எளிய இந்திய மக்களின் வாழ்வு ஆதரங்களை அபகரிக்க மறுபக்கம் பெமு போன்ற முன்னாள் புரட்சியாளர்கள் அந்நிறுவனங்க்ளுடன் சமரசம் செய்துகொள்ள அதை பார்த்துக்கொண்டு எல்லாம் நாம் சும்மா இருக்க முடியாது.
காசு பெறுவது என்பதற்கு நாகரிகமான வார்த்தை நல்கை என்று நான் அறிவேன் . ஆனால் மக்கள் வாழ்வை அழிக்கும் டாட்டா ,போர்ட் போன்ற நிறுவனங்க்ளிடம் நல்கை பெறுவதை அநாகரிகமான வார்த்தையில் காசு பெறுவது என்று தானே கூற முடியும் ? நூறு கணக்கான ஏக்கர் விளைநிலங்களை போர்ட் அபகரிக்க , பல ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பு இந்திய இயற்க்கை வளங்கள் டாட்டா வால் கொள்ளை அடிக்கபட அதன் காரணமாக பழங்க்குடி மக்கள் தங்கள் வாழ்விடங்களில் இருந்து விரட்டப்பட அத்தகைய கொள்ளையர்களிடம் இருந்து பெருமாள் முருகன் போன்ற எழுத்தார்கள் பெறும் நல்கைக்கு காசு பெறுவது என்று தான் கூறமுடியும்
இதை எல்லாம் ,இந்த அவலங்களை எல்லாம் எழுத்தாளர்கள் தன் எழுத்தில் வெளிக்காட்ட கூடாது என்பதற்காக தானே நல்கை என்ற கையுட்டு டாட்டா ,போர்ட் போன்ற நிறுவனங்களால் இவர்களுக்கு அளிக்கபடுகின்றது.
எழுதுங்க எழுதுங்க ..., புளியமரத்தின் கதையில் மரத்தடியில் சிறு வியாபாரம் செய்யும் ஏழை எளிய பொண்ணை விபச்சாரமும் செய்வாள் என்று அடங்காம எழுதுங்க ...., அப்படி பட்ட எழுத்தாளர்கள் தானே பெமுவும் !
கேட்ட கேள்விகளுக்கு பதில் கூற முடியாமல்பெமு என்னை FB நட்பு வட்டத்தில் இருந்து விடுவித்து விட்டார் .அவர் ரசிகர் கிருஷ்ண பிரபுவும் ஒடிபோயிட்டார் !