"........இரண்டுமே சரியான படைப்புக் கொள்கையான யதார்த்தவாதத்துக்கு[Realism] எதிரானது, எனவே இரண்டுமே படைப்பின் உள்ளடக்கத்துக்கு முக்கியத்துவம் தருவது இல்லை....."
தமிழ்ப் பேராசிரியர் முனைவர்
க.பூரணச்சந்திரன் அவர்களால் எழுதப்பட்ட
இன்நூல்[அமைப்பியமும் பின்அமைப்பியமும்] அடையாளம்
பதிப்பகத்தால் பதிப்பிக்கப்பட்டு ரூபாய் 100 க்கு கிடைக்கிறது. இன் நூலின் பொருளடக்கம் முன்னுரை,அறிமுகம் , 11 அத்தியாயங்கள் என்று விரிந்து கலைச்சொற்கள் மற்றும்
சுட்டி[இன்டெக்ஸ்] யுடன் முடிகின்றது.
முன்னுரையிலேயே தீவிரமாக[sincere not
terror ] சிந்தனை செய்பவருக்கே
இன் நூல் எழுதப்பட்டு
உள்ளது என்று ஆசிரியர் கூறுகின்றார். அறிமுக
உரையில் அறிவியல் மற்றும்
கொள்கைகளை எவ்வாறு வேறுபடுத்துவது என்பதை
எளிமையாக விலக்குகின்றார். [உம் : அறிவியலின் பிரிவுகள் logy என்று [ Biology ,Neurology] கொள்கைகள் ism என்று [Gandhism ,Marxism] முடியும் என்பதனை
நம்மால் உணர்ந்து கொள்ள முடியும்.]
குறியியல் [Semiotics ] என்ற தலைபிடப்பட்ட முதல் அத்தியாயம் , இன் நூலுக்கான
அடிப்படையாக அமைந்து உள்ளது. குறியியல் என்பது மானுடம்
உறவாட பயன்படுத்தும் மொழிகளின் எழுத்துக்கள் [symbols] ,எழுத்துக்கள் மூலம் உருவாகும்
வார்த்தைகள் அல்லது குறிகள் [words or
signs ] ,குறிகள் ஒருகினைந்து உருவாக்கும் அர்த்தங்கள் அல்லது சங்கேதங்கள்[meaning or codes] மற்றும்
சங்கேதங்களின் கருத்தாக்கம் ஆகியவற்றின் மொழியியல்[linguistics] சார்ந்த ஆய்வுத் தொகுப்பு என
பொருள் காண்பது வாசகர்களுக்கு
இவ் அத்தியாயத்தை எளிமையாக்கும். எளிமைபடுத்த இவ்வாறு கூறினாலும் குறியியல் என்ற துறை, உயிர்குறியியல்[Bio-semiotics],கணினிக்குறியியல்
[Computational semiotics] ,இசைகுறியியல் [ Music Semiotics ]என்று அறிவு மற்றும் கலை
சார் பல்வேறு துறைகளிளும் முக்கிய
பங்கு ஆற்றுகின்றது. குறியிலலின் [Semiotics ] முக்கிய நோக்கம் அத்துறைக்ளின் அடிப்படை அம்சங்களை
புரிந்து கொள்ளுதல் மற்றும் மேம்படுத்துதல் தான். மொழியீயல் துறையில்
"அம்மா" என்ற வார்த்தை மற்றும்
அதன் ஒலியாக்கம் குறிப்பான் என்றால்
அவ் வார்த்தை ஏற்படுத்தும்
மன பிம்பம் [Mental Image ] தான் குறிப்பீடு.
குறியியல் பற்றிய
புரிதலுடன் இரண்டாம் அத்தியாயத்துல்[ அமைப்பியம்] நுழையும் போது தான் இதை
பற்றிய தெளிவு வாசகர்களுக்கு
கிடைக்கும். தமிழ் மொழியின் இலக்கணம்
தொல்காப்பியம் ,நன்நூல் ஆகியவற்றில்
சிறப்பாக கட்டமைக்கபட்டு உள்ளது அமைப்பியத்துக்கு எளிய எடுத்துகாட்டுக்கள். அமைப்பியத்தின் நேக்கமே
ஒரு இலக்கிய படைப்பினை
ஆய்வு செய்வது தான். எனவே
படைப்பின் மீதான விமர்சன கொள்கையை உருவாக்க
அமைப்பியம் உதவுகின்றது. அமைப்பியம் வழிகாட்டும் படைப்பின்
மீதான விமர்சன கொள்கை படைப்பின் வடிவத்துக்கே
முக்கியத்துவம் அளிக்கின்றது. அமைப்பியத்தை படைப்பின்
மீதான விமர்சன கொள்கையாக நாம் உணர்ந்தால் நவீனத்துவத்தை படைப்பாக்கத்துக்கான கொள்கையாக நாம் உணர முடியும். எனவே நவீ த்துவம்
என்ற படைப்பாக்கக்கொள்களையும் படைப்பின்
வடிவச் செம்மைக்கும் ,சோதனை முயற்சிகளுக்கும் முக்கியத்துவம் அளிக்கின்றது. அமைப்பியத்தை ஆதரிக்கும்
விமர்சகன் உணவக மெனு கார்டின்
அழகை இரசிக்கும் போது உணவின் தரம் பற்றி சிந்திக்க
மாட்டான் என எளிமையாக உதாரணம்
கொள்ளலாம்.
மூன்றாம் அத்தியாயமான பின்அமைப்பியம் கூறும் கருத்துக்கள் ,அமைப்பியத்துக்கு எதிரான படைப்பின் மீதான விமர்சன கொள்கையாக பொருள்
கொள்ளாமல் ,அமைப்பியத்தின் நீட்சியாக பொருள்
கொள்வது நம்மை சரியான
திசையில் அழைத்துச்செல்லும். இரண்டுமே சரியான
படைப்புக் கொள்கையான யதார்த்தவாதத்துக்கு[Realism] எதிரானது, எனவே இரண்டுமே படைப்பின் உள்ளடக்கத்துக்கு முக்கியத்துவம் தருவது இல்லை. பின்அமைப்பியம் என்ற படைப்பு விமர்சன கொள்கை
பின்நவீனத்துவத்துடன் [படைப்பு கொள்கையுடன்]
நேரடியான தொடர்பு உடையது.
இன் நூலின் இதர அத்தியாயங்கள் அமைப்பிய,
பின்அமைப்பிய கொள்கைகளை ஆதரிக்கும் பிரெஞ்சு
மற்றும் பிற நாட்டு படைப்பாக்கக்கோட்பாட்டாளார்களை பற்றியும் ,அவர்கள்
எவ்வாறு அமைப்பியத்திலிருந்து பின்அமைப்பியத்திற்க்கு மாறினார்கள்
என்பதையும் ஆய்வு செய்கின்றது. தமிழ் இலக்கிய
படைப்புகள் மீது இக்கொள்கைகளைச் செலுத்தி
ஆய்வு செய்யாதது தான் இன் நூலின்
பெருங்குறை.
கி.செந்தில்குமரன்
No comments:
Post a Comment