Tuesday, September 9, 2014

திரைக்கதை படம் : சிவ-கார்திகேயன் காட்சி #6 பின்னணி காட்சி II Screen Play for the Movie Siva-karthikeyan scene #6 Flashback Scene II


காட்சி #6 : பின்னணி காட்சி காட்சி II : காலை 6.36 மணி EXT @ I I M - B வளாகத்தின் மாணவிகள விடுதி வெளிப்புறம்


திரைக்கதை படம் : சிவ-கார்திகேயன் 

By K.Senthilkumaran


கார்த்திகேயன் செல்போனை நோண்டிக்கொண்டு மரத்தடியில் கையில் flower bokeh உடன் ஒற்றை காலில் நிற்கின்றான். 

Waiting for You here....,come out pls என்று SMS அனுப்பிக்கொண்டும் ,missed calls கொடுத்துக்கொண்டும் இருக்கின்றான்.

Wait karthi ...., coming now என்று பதில் வர .... மாணவிகள விடுதி உள் பார்வையை செலுத்துகின்றான்.

உள் இருந்து NIKE WOMEN'S STYLE Running and Jogging உடையில் சிவசங்கரி வெளியேவருகின்றாள்.

"Thanks Lot Karthic ..Your Music selection very excellent , I love you karthic " என்று கூறி மென்மையாக அணைக்கின்றாள் [hug]

"நேற்று super performance " என்று கூறி flower bokeh வை கார்த்திக் கொடுக்க இருவரும் நடக்கின்றனர்.

"எப்படி இது ....., எனக்கு என்ன என்ன எப்ப எப்ப தேவை என்று உனக்கு மட்டும் perfect ஆ தெரியுது ?" என்று ஆச்சிரியம் மிக்க குரலில் கூறியவள் "நீ சொன்ன protein power ஐ 15 days ஆ சாப்பிடுறேன் ..., பாதத்தில் வலி இப்ப சுத்தமா இல்லை " என்றாள் .

நட்புடன் அவள் கையை கோர்த்தவன் இறுக்க பற்றுகிறான். "just 45days have left .., campus interviews .. selecting employers... After Hum We are leaving Each other " என்று சோகமாக கூறுகின்றான்.

"Are You fall in love with me ? " என்று புன்னகையுடன் கூறியவள் "Do not worry karthic....., இந்த உலகத்தில் நான் எங்கு சென்றாலும் என் மனசு உன்னுடன் தான் இருக்கும் " என்றவாறே அவன் தோள்களில் நட்புடன் கை போடுகின்றாள்.


காட்சி #6 : பின்னணி காட்சி காட்சி II முற்றும்

திரைக்கதை படம் : சிவ-கார்திகேயன் காட்சி #5 பின்னணி காட்சி காட்சி I Screen Play for the Movie Siva-karthikeyan scene #5 Flashback Scene I

காட்சி #5 : பின்னணி காட்சி காட்சி I  : இரவு மாலை 6 மணி  INT  @ I I M வளாகத்தின் அரங்கம் [auditorium] பகுதி  


திரைக்கதை படம் : சிவ-கார்திகேயன் 

By K.Senthilkumaran 


இரைசலான அரங்கில்  ஒளி விளக்குகள் ஒளிர  மேல்நிலை ப்ரொஜெக்டர் திரையில் [OHP screen] 


Welcome To  IIM-B

 Carnival Feast

[with art work on  the screen] 

என்று முதல் ஸ்லைடு [slide] ஒளிர

அடுத்த ஸ்லைடில்

Dance by

Miss Sivasankarai

என்று ஒளிர

பரதநாட்டியம் ,ஒடிசி ஆகிய நடன அமைப்பில் தமிழ் பாடலுடன் நாட்டியம் தொடங்குகின்றது.[ Hit Song ]

காட்சி #5 : பின்னணி காட்சி காட்சி I  முற்றும்

 திரைக்கதை படம் : சிவ-கார்திகேயன் காட்சி #4 Screen Play for the Movie Siva-karthikeyan scene #4

திரைக்கதை படம் : சிவ-கார்திகேயன் 

By K.Senthilkumaran


காட்சி #4 : காலை 7  மணி INT  @ வேளச்சேரியில் உள்ள அப்பர்ட்மெண்ட்,பிளாட்,மொட்டை மாடி நிழல் பகுதி 


மொட்டை மாடியின்  நிழல் பகுதியில் குழதையை  படுக்க வைத்துவிட்டு [குழதை தூங்குகின்றது ] சோகமான முகத்துடன் வான்வெளியை பார்த்து பெருமூச்சு விடுகின்றான்.  பிளாஷ் பேக் தொடங்குகின்றது.

காட்சி #4 முற்றும்

திரைக்கதை படம் : சிவ-கார்திகேயன் காட்சி #3 Screen Play for the Movie Siva-karthikeyan scene #3

திரைக்கதை படம் : சிவ-கார்திகேயன் 

By K.Senthilkumaran 

 காட்சி #3 : காலை 4 மணி INT @ வேளச்சேரியில் உள்ள அப்பர்ட்மெண்ட்,பிளாட் 

 

போலிஸ் ஜீப்பில் வரும் அதிகாரி ,சிவ-கார்திகேயன்கள் ,செக்யூரிட்டி கதவை திறக்க உள் நுழைகின்றனர்.

கீழே இறங்கும் அதிகாரி "surveillance camera இருக்கா ?" என்று கேட்கின்றார்.

"இருக்கு மேடம் ஆனா பயன் படுத்துரது இல்லை " என்கின்றான்.

சிரித்துக்கொண்டே "Middle Class idiots" என்கின்றார்.

தூங்கும் குழந்தையை வலது கையில் வைத்துக்கொண்டு அனுபவபட்ட அப்பா போல கதவை திறப்பவனை பார்த்து " குழந்தையை கொடுங்க " என்று போலிஸ் அதிகாரி கூற சிரித்துக்கொண்டே கதவை திறக்கின்றான்.

உள் நுழையும் அதிகாரி living room மற்றும் மூடியுள்ள இரு அறைகளையும் நின்றவாறே பார்வை இடுகின்றார். நேரே living room க்கு பின் பக்கம் சமையல் அறை.இடப்பக்கம் இரு படுக்கை அறைகள்.

குளிர்சாதன பெட்டியை திறந்து ஆவின் பால் பாக்கெட்டை எடுக்கும் கார்த்திகேயன் "மேடம் குழந்தைக்கு ஆவின் பால் கொடுக்கலாமா ..., ஒத்துக்குமா என்று கேட்கின்றான்.

சிரித்துக்கொண்டே "யாருக்கு தெரியும் ...அதன் அம்மாவிடம் தான் கேட்க வேணும் " என்றவள்
"குழந்தைக்கு ஒரு வயசு இருக்குமா ? இன்னும் நடக்கல இல்லையா ?" என்கின்றார்.

1 க்கு 2 என்று பாலும் ,நீரும் கலந்து கொதிக்க வைத்தவன் ,சக்கரை கலந்து இரண்டு ஆற்று ஆற்றி அப்படியே பெரியவர்கள் குடிக்கும் சூட்டில் குழந்தைக்கும் கொடுக்க போனவனை பார்த்து " பாவி மக்கா இந்த சூட்டில் கொடுத்த என்ந்த்துக்கு ஆகும் ?" என்றவள் சக்கரை போடாமல் மறுபடியும் பாலை எடுத்து இளம் சூடு வரும்வரை நன்கு ஆற்றி வாயில் உற்றிப்பார்த்து "சூடு வெத வெதனு இருக்கு கொடுங்க என்றவள் சக்கரை போட்டு ஆற்றாத பாலை தான் குடிக்கின்றாள்.

பாலை உடலில் வழிய குடிக்கும் குழந்தை வயிறு நிறைந்த உடன் ஒருகட்டத்தில் பாலை வாயில் இருந்து ஓசையுடன் spray செய்து அவனை பார்கின்றது. இருவரையும் பார்க்கும் அதிகாரி நமுட்டு சிரிப்பு சிரித்துக்கொண்டு தொலைகாட்சி பெட்டியை ரிமோட் மூலம் on செய்ய செய்திகள் ஓடிக்கொண்டு உள்ளது.

"நேற்று இரவு இந்திய நேரப்படி 11.45க்கு மலேசிய விமானம் உக்ரைன் ,ருஷ்ய நாட்டு எல்லையில் சுட்டு வீழ்த்தபட்டது... அதில் பயணம் செய்த இந்தியர்கள் 7 பேர் பலி..... விபத்தில் பலியான தமிழ் நாட்டை சேர்ந்த சிவசங்கரி ஐயர் அவர் தந்தை கனேஷ் ராம்  பற்றி உறவினர்கள் கண்ணிர்பேட்டி....... " 

காட்சி #3 முற்றும்

 

திரைக்கதை படம் : சிவ-கார்திகேயன் காட்சி #2 Screen Play for the Movie Siva-karthikeyan scene #2

திரைக்கதை படம் : சிவ-கார்திகேயன் 

By K.Senthilkumaran 

 

காட்சி #2 : இரவு 11.55 மணி INT @ வேளச்சேரி போலிஸ் நிலையம் 

இரவு விளக்குகள் மின்ன போலிஸ் நிலையத்தின் போர்டு வேளச்சேரி காவல் நிலையம் என்று மங்கலாக ஒளிருகின்றது. கார்திகேயன் யாரோ ஒருவரின் பைக்கிளிருந்து இறங்கி குழந்தையுடன் போலிஸ் நிலையம் உள் செல்கின்றான். பெண் போலிஸ் அதிகாரி அன்று இரவு நடந்த வேளச்சேரி அப்பர்ட்மெண்ட் கொலை ,கொள்ளை பற்றி தன் காவலர்களுடன் விவாதித்துக்கொண்டு இருக்கின்றார். 

"excuse me madam" என்றவன் குழந்தையின் உடையை பார்க்கின்றான். அதன் வயிற்று பகுதியில் ஈரமான புதிய இரத்தக்கறை. அவன் மார்பிலும் ஒட்டி இருக்க ..., பதட்டத்துடன் குழந்தையின் மேல் உடையை தூக்கி பார்க்கின்றான். குழந்தையின் உடம்பில் ஏதும் காயம் இல்லை. 

குழப்பத்துடன் அவன் பெண் போலிஸ் அதிகாரியை பார்க்க .....

அவர் " என்ன கொலையா ;பொண்டாட்டியை போட்டு தள்ளிட்டு சரண்டர் ஆக குழந்தையுடன் வந்துட்டியா " என்று கோபமான குரலில் கேட்ட்கின்றார்.

பதறியவன் " Mind your words... madam, குழந்தை கிண்டி ரயில்வே ஸ்டேஷன் அருகில் வேளச்சேரி ரோட்டில் கிடந்தது " என்றான். 

"இருக்கிற பிரஸ்சர் போதாது என்று இது வேறையா" என்று காவலரை பார்த்து சலிப்புடன் கூறியவர்.....

கார்த்திகேயனை பார்த்து "குழந்தையின் டிரஸ்-ஐயும் ,உங்க சட்டையையும் கழட்டி கொடுங்க.... police forensic department க்கு அனுப்பனும் " என்றார். 

கடுப்படைந்த கார்த்திகேயன் கோபத்தை வெளிகாட்டிக்கொள்ளாமல் " மேடம் நான் டைரக்டர் பார்திபன் சாருடைய அசிஸ்டென்ட் ..., வேலை முடிந்து வரப்ப வேளச்சேரி ரோட்டில் பார்த்தேன் ....இதை அதனுடைய parents இடம் ஒப்படைச்சுடுங்க ....நான் ஏதாவது லெட்டர் எழுதித்தரதுனாலும் தருகின்றேன் " என்றான்.

ரைட்டர் கொடுத்த அவரின் தொல தொல சட்டையை அணிந்து கொண்டு தன் சட்டையையும் , குழந்தையின் மேல் உடையையும் ரைட்டரிடம் கொடுக்க அவர் தனி தனி பாலிதின் காவர்களில் pack செய்கின்றார் 

"வெயிட் பன்னுங்க.... வேளச்சேரியில் ஒரு மர்டர் அண்ட் ராபாரி" அதை பார்த்துவிட்டு வருகின்றேன் என்றவர் 

ரைட்டரை "பார்த்து இவர்கிட்ட ஒரு கம்ப்ளைன்ட் வாங்கிக்குங்க நான் வர வரைக்கும் வெயிட் பண்ணட்டும்" என்று கூறி வெளியே சென்றார். 

போலிஸ் நிலைய கெடிகாரம் இரவு 2.35 மணி காட்டியது. குழந்தையை பெஞ்ச்சில் படுக்க வைத்துவிட்டு அதன் கால்களை தொட்டுக்கொண்டே , பெஞ்ச்சில்அமர்ந்தவாரே அரை தூக்கத்தில் இருந்தவனை குழந்தையின் அழுகை எழுப்பியது. 

குழந்தையை வாரி எடுத்து சமாதானபடுத்த முயன்றவனை பார்த்து ரைட்டர் " தம்பி இந்த பிஸ்கட்டை கொடுங்க... பசியில் அழுது" என்றார். 

வட்ட வட்ட வடிவ அந்த பிஸ்கட்டை கையில் வாங்கி கடித்த குழந்தை அவனை பார்த்து சிரிக்க....

பெண் போலிஸ் அதிகாரி தன் காவலர்களுடன் போலிஸ் நிலையம் உள் வந்தவர் ரைட்டரை பார்த்து "கிண்டி இண்டஸ்டிரியல் எஸ்டேட் to சைதா பேட்டை  ரோட்டில் ஒரு பெண் வெட்டபட்டு சுய நினைவு இன்றி இருந்தாங்க....   hospitalise செய்து இருக்காங்க.. கிண்டி SI  சொன்னார். அதே ரோட்டில் அடையார்  bridge  கிட்ட ஒரு ஆண் வெட்ட பட்டு இறந்துவிட்டார் ...பைக் எரிக்கப்பட்டு  பக்கத்தில் கிடக்கு"  

பெண் போலிஸ் அதிகாரி கார்திகேயனை பார்த்து "குழந்தை வேளச்சேரி to கிண்டி ரோட்டில் left சைடு இருந்ததா அல்லது right   சைடு இருந்ததா? என்று கேட்க 

கார்திகேயன் யோசித்து விட்டு left சைடு  மேடம் " என்று கூற 

பெண் போலிஸ் அதிகாரி எதோ புரிந்தது போல தலை ஆட்டுகின்றார்.  

குழந்தையை கவர்மென்ட் ஹாஸ்பிடலில் ஒப்ப்டைக்கனும் ...டாக்டர் கிட்ட பேசிட்டேன்....டாக்டர்,  குழந்தையை குழந்தைகள் காப்பகத்தில் சேர்க்க சொல்றார்.,இவர் கிட்ட கம்ப்ளைன்ட் எழுதிவாங்கிட்டிங்களா ?" என்று ரைட்டர் இடம் கேட்டார்.

"மேடம் தொ எழுதிகொடுத்துடறேன்" என்றவன் "மேடம் ஹாஸ்பிடலில் குழந்தையை யார் பாத்துப்பாங்க" என்று அப்பாவியாக கேட்டான். 

"நீங்க கூட இருந்து பார்த்துகொள்ளுங்கள் " என்று கோபத்தில் பதில் கூறியவர் "உங்க ID ,அட்ரஸ் புருப் காட்டுங்க என்று கூற"

"ID புருப் ரூமில் இருக்கு மேடம்...,,,,,  மேடம் பேரண்ட்ஸ் கிடைக்கும் வரை குழந்தையை நானே பார்த்து கொள்ளட்டுமா என்று " பாவமாக கேட்டான்.

பதில் கூறாமல் தன் நாற்காலியில் அமர்ந்தவர் அப்படியே அரை மணிநேரம் தூங்கி போனார்.

போலிஸ் நிலைய கெடிகாரம் இரவு 3.24 மணி காட்டியது.

"சார் உங்க வீடு எங்க இருக்கு..?,  என்று கேட்ட போலிஸ் அதிகாரியை தலை உயர்தி பார்த்தவன்

"உங்க பேரன்ட்ஸ் இந்த குழந்தையை தற்சமயம் பார்த்துபாங்களா ?ஆனா அதுக்கு நிறைய பார்மான்லிட்டிஸ் இருக்கு ...,கோர்ட் ஆர்டர் வாங்கனும் .., A C கிட்ட பேசிப்பார்க்கின்றேன். Child story complicated  ஆ இருக்கும் போல இருக்கு !   " என்று  கூறினார் போலிஸ் அதிகாரி


"மேடம் நான் bachelor .., ரெண்டட் பிளாட்டில் தங்கி இருக்கேன்" என்றான் 

"அப்ப குழந்தையை உங்க கிட்ட விட்டா யார் பார்த்துப்பாங்க? என்று கேட்டார்.

"டே டைம்ல நைட் ஷிப்ட் வேலைக்கு போகும் என் I I M ஓல்ட் காலேஜ் மெட் அனுஷ்கா பட்டேல் பார்த்துப்பாங்க.., நைட்டில் நான் பார்த்துபேன் " என்றான்.

"சரி வாங்க உங்க பிளாட்டுக்கு போகலாம் " என்றவர் "ரைட்டரை பார்த்து எவினிங் 3 o clock க்கு வரேன், child  missing என்று ஏதாவது complaint   வந்தா, வேற ஸ்டேஷனில் இருந்து மெசேஜ் வந்தா எனக்கு உடனே போன் பண்ணுங்க"   என்று கூறி சிவ-கார்த்திகேயன்களுடன் வெளியே செல்கின்றார் ......

காட்சி #2 முற்றும்

  கதை பிடித்து உள்ளதா நண்பா ?
https://www.facebook.com/groups/Perumalmurugan/
திரைக்கதை தயாராகின்றது.
https://www.facebook.com/groups/618141481573698/

திரைக்கதை படம் : சிவ-கார்திகேயன் காட்சி #1 Screen Play for the Movie Siva-karthikeyan scene #1

திரைக்கதை படம் : சிவ-கார்திகேயன் 

By K.Senthilkumaran


காட்சி #1 : இரவு 11.30 மணி EXT @ கிண்டி இரயில் நிலையம், வெளிப்புரம் ,வேளச்சேரி சாலை 

இரயிலின் ஆரன் ஓசை ,

இரயில் நகர , கார்திகேயன் பிளாட்போரத்தில் நடந்து படி ஏறி, அம்ர்ந்து இருக்கும் கண் தெரியாத வியாபாரியை கடக்கின்றான். இரண்டு அடி வைத்தவன் திருப்பி "ஐயா மணி 11.30 ஆகிறது வீட்டுக்கு போகலையா" என்கின்றான்.

குரல் மூலம் அடையாளம் கண்டவர் "கார்த்திக் சாரா ... இன்னிக்கி இங்க தான் தூக்கம்..... ஏன் தம்பி நீங்க லேட் ?" என்கின்றார்.

வாங்க நம்ம வீட்டில் தங்கி நாளைக்கு காலையில் பிரெஸ்ஆ வரலாம் என்கின்றான் கார்திகேயன்.

"இருக்கட்டும் கார்திக் " என்று கூறிய கண் தெரியாத வியாபாரி சிகரெட் அட்டையில் உள்ள 10 இலக்க செல்போன் எண்னை படிக்கச்சொல்கின்றார்.

கார்திகேயன் முதல் ஐந்து இலக்கங்களை படிக்க அவர் செல்போனில் தட்டுகின்றார் அடுத்த ஐந்து இலக்கங்களையும் படிக்க அதனையும் தட்டி யாரையே அழைக்கின்றார்

"குட் நைட் அண்ணா" என்றவன் படி இறங்கி வேலச்சேரி சாலையில் நடக்கின்றான்.

தூரத்தில் இருந்து குழந்தையில் அழு குரல் கேட்கின்றது. கார் ,பை ஆகியவை கார்திகேயனை கடந்துச்செல்கின்றன. சாலை ஓரத்தில் இருட்டில் தவழும் குழந்தையை காண்கின்றான். பதட்டத்துடன் அருகில் விரைந்து சென்றவன் குழந்தையை தூக்கி பார்க்கின்றான். அதன் கழுத்தில் ஒரு உத்துராச்ச கொட்டையுடன் கருப்பு கயிறு. தன்னை அறியாமல் " ருத்துரா ....,சிவா... யாரட நீ" என்கின்றான்.

இது வரை அழுத குழந்தை .., இப்போது இவனைபார்த்து சிரிக்க .........டைட்டிலில் " சிவ-கார்திகேயன்" என்று மின்ன ...........

காட்சி #1 முற்றும்

 கதை பிடித்து உள்ளதா நண்பா ?
https://www.facebook.com/groups/Perumalmurugan/
திரைக்கதை தயாராகின்றது.
https://www.facebook.com/groups/618141481573698/

திரைக்கதை படம் : சிவ-கார்திகேயன் கதை Screen Play for the Movie Siva-karthikeyan

கதை : சிவ-கார்திகேயன் 

By K.Senthilkumaran 


ஒரு வயது குழந்தை "சிவா"ஒன்று விபத்தில் பெற்றோரிடம் இருந்து காணாமல் போகிறது. குழந்தையை கண்டு எடுக்கும் திரைபட உதவி இயக்குனர் கார்திகேயன் போலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கும் நோக்கில் செல்கின்றான். போலிசாரின் கடினமான வேலைச் சூழல் குழந்தையை அங்கு விட்டு விட்டு செல்ல கார்திகேயனை தடுக்கின்றது. பெண் போலிஸ் அதிகாரியுடன் ``பேசி ,குழந்தையின் பெற்றோர் கிடைக்கும் வரை தானே குழந்தையை பார்த்துக்கொள்வதாக ஒப்பந்தம் செய்து கொள்கின்றான். இந்த நிலையில் அவன் I I M கல்லூரி தோழியின்,முன்னாள் காதலியின்[ சிவசங்கரி ] மரணம் அவனை தாகுகின்றது குழந்தையை வளர்க்க அவன் தன் சொந்த பழக்க வழக்கங்களை குடி ,சிகரெட் ஆகியவற்றை விடும் நிலைக்கு குழந்தையுடன் ஐக்கியம் ஆகின்றான். குழந்தையை வளர்பதற்கு கற்கின்றான்.குழந்தைக்கும் தனக்கும் ஒரே நாளில் பிறந்த நாள் கொண்டாடுகின்றான். குழந்தைக்காக குழந்தையின் பெயரில் R d மூலம் சேமிக்க தொடங்குகின்றான். இதனிடையில் பெண் போலிஸ் அதிகாரி அவன் குழந்தையை முறையாக வளர்கின்றானா என்று அவன் அப்பார்ட்மெண்ட்க்கு ,பிளட்ட்டுக்கு வந்து பார்வையிடுகின்றார். குழந்தைக்கு பெண் போலிஸ் அதிகாரியை பிடித்து போகின்றது. யாருமற்றவாளான அவள் அதே அப்பார்ட்மெண்ட்க்கு வந்து குடியேருகின்றாள். நைட் ஷிபிட்டில் கால் சென்டரில் வேலை செய்யும் அவன் தோழி குழந்தையை பகலிலும் , கார்திகேயன் இரவிலும் பார்த்துகொள்கின்றார்கள். இதனிடையில் கார்திகேயன் குழந்தையின் பெற்றோரை கண்டுபிடிக்க பலவாறாக முயல்கின்றான். ஒரு ஆண்டு கழிகின்றது. விபத்தின் காரணமாக மருத்துவ மனையில் சுயநினைவின்றி ,யாருமற்று சேர்க்கபட்டு இருந்த பெண் சிறிது சிறிதா நினைவு திருப்புகின்றாள். தன் கணவன் விபத்தின் இறந்ததை அறிந்தவள் ,குழந்தை எங்கே என்று நினைத்து வருந்துகின்றாள். மருத்துவ மனைக்கு வேறு ஒரு விடயமாக வரும் பெண் போலிஸ் அதிகாரியிடம் தன் குழந்தை பற்றி கூறுகின்றாள்.ஆனால் குழந்தையின் அடையாளங்கள் அவளுக்கு நினவிற்க்கு வர மறுக்கின்றது. இரத்த மாதிரிகள் மூலம், DNA டெஸ்ட் மூலம் குழந்தையின் "தாய் அவள் இல்லை" என்பது என்பது அறியப்படுகின்றது.ஆனாலும் சட்டப்படி அவள் தான் குழந்தையின் தாய் என்பது நிருபணம் ஆகிறது. எப்படி ??? கார்திகேயன் தாயிடம் குழந்தையை ஒப்படைக்கும் நாளும் வருகின்றது. குழந்தையின் பிரிவை மனதளவில் ஏற்க முடியாமல் தன் காருக்குள் சென்று கண்ணீர் விட்டு அழுகின்றான். குழந்தை தாயின் கையில் இருந்து துள்ளி வெளிவர முலலுகின்றது. கார்திகேயன் எங்கு எல்லாம் இருபானோ அங்கு எல்லாம் கை காட்டி அழுகின்றது. எங்குமே கார்திகேயனை காணாத குழந்தை பேறழுகையில் துடிக்க குழந்தையையும் தாயையும் ஆதரவற்றோர் விடுதியில் சேர்க்கும் பொருட்டு பெண் போலிஸ் அதிகாரி அவர்களை அழைத்து செல்ல முயலுகின்றார். போர்டிகோவில் உள்ள காரினை பார்க்கும் குழந்தை அதனை காட்டி அழ ,பாசமிகுதியில் கார்திகேயன் காரில் இருந்து வெளிவந்து குழந்தையையும் அதன் தாயையும் ஏற்கின்றான்.

கதை பிடித்து உள்ளதா நண்பா ?
https://www.facebook.com/groups/Perumalmurugan/
திரைக்கதை தயாராகின்றது.
https://www.facebook.com/groups/618141481573698/