Wednesday, July 30, 2014

தீக்குளித்த செங்கொடி-தமிழச்சி-நம் தங்கையின் கதை அத்தியாயம் II Fired Sengodi True Story Chapter 2

தமிழச்சி 


நம் தங்கையின் கதை

அத்தியாயம் 2  

 

சுய நலம் ததுப்பும்  மக்கள் யார் என்று கேட்டால் எம்மால் கூற முடியும் அது நாம் தான் ,தமிழர்கள் தான் என்று. முத்துகுமரனின் பினத்தின் மீதும் பாகா அரசியல் வியாபாரம் செய்த வைகோகளும், திருமாக்களும்    ஒருபுறம்இருக்க... ......  


 ஊரின்   தண்ணிர்  பஞ்ச  குழாய்களில்
ஒசு போட்டு தன் வீட்டு தொட்டியை
நிரப்பும் சமுகம்  யார் சமுகம் ?

அடுத்த தெரு பெண்ணுக்கு ஒரு
குடம் தண்ணிர் கூட கொடுக்கா
சமுகம் யார் சமுகம் ?

நம் தமிழ் சமுகம்.

 
தமிழர் இவ்வாறு சுய நலமாய் இருக்க 
எம்  தமிழச்சிக்கு மட்டும் பொது நலம் வந்தது ஏன் ?

 தனக்கு என்று வீடு , உறவு , உணவு ,என்று 
எத்னையும் தமக்கு என தனிமை படுத்தா எம் தமிழச்சி, 
ஊரே உறவை, உலகமே வீடாக நினைத்து வாழ்ந்தாள். 

அவள் தியாக செய்தி  கண்டு மார்க்ஸ் துயில் இடம் 
அவளுக்காக  இருதி கண்ணிர்  வடிக்காதா  என்ன ?




தோழன்மையுடன்   ,
கி.சிவகார்த்திகேயன்




தீக்குளித்த செங்கொடி-தமிழச்சி-நம் தங்கையின் கதை அத்தியாயம் I Fired Sengodi True Story Chapter I

தமிழச்சி 


நம் தங்கையின் கதை

அத்தியாயம் I  

                 நம்பிக்கையே வாழ்க்கை  நம்பிக்கையின்மையே மரணம்  என்ற எளிய சமன்பாடு படி வாழும் மானுட சமுகம் இத் தமிழச்சியின்  பொது காரியத்துக்கான  உயிர் தியாகத்தை  எப்படி தரிசனம்[vision] செய்கின்றது?  


தோழர் முத்துக்குமாரின் உடல் தமிழகத்தை எழுப்பியது போல், என்னுடைய உடல் இந்த 3 தமிழர்களின் உயிரை காப்பாற்ற பயன்படும் என்ற நம்பிக்கையுடன் செல்கிறேன்.
இப்படிக்கு
தோழர் செங்கொடி
                               "ஐந்தாம் வகுப்பு தான்டா இருளச்சிக்கு

                              இறுதி கடிதம் எழுத தெரிந்தது எப்படி?

                              என்று தினமலர் தன் சுய வெறியை

                              அரசியல் அற்ற மொக்கை தமிழரிடம் கூவி கூவி

                              விற்க ,அதையும் மானம் கெட்டு 
 
                              நாமும் படித்து மவுனமாக இருக்க


                            தானே செய்தோம் "

தோழன்மையுடன்   ,
கி.சிவகார்த்திகேயன்



தீக்குளித்த செங்கொடி-தமிழச்சி-நம் தங்கையின் கதை முன்னுரை Fired Sengodi True Story Preface

தமிழச்சி 

நம் தங்கையின் கதை

 

முன்னுரை :

தீக்குளித்த செங்கொடி, யார் இவள் ? யாருக்காக அழுதாள் ? எதற்காக தீயை  தண்ணிராய் கொண்டு குளித்தாள்? இவளுக்கு என்று ஏதேனும் சிறப்பு வரலாறு உண்டா ? முருகன் ,சாந்தான்,பேரறிவாளன் இவர்களுக்கும் இத் தமிழச்சிக்கும் என்ன உறவு முறை ? 


தீக்குளித்த செங்கொடி மூட்டிய தீ! நெஞ்சை உலுக்கும் நேரடி ரிப்போர்ட்!! படங்கள்!!!


தமிழ் சமுகத்தால்  சமுக ,பொருளாதார அடுக்குகளில் கடைகோடியில் நிறுத்தபட்ட  இவளுக்கு  ஏன் அச் சமுக்த்திற்காக  உயிர் துறக்கும் அளவுக்கு பாசம்? இவளுக்கு என்று எந்த தனிபட்ட வாழ்வும்,கனவும்  ஏதும் இல்லையா?  இந்த எளிய ஆனால்  வலி எடுக்கும் கேள்விகளுக்கு எல்லாம் பதில் தேடும் முயற்சி தான் இந்த "நம் தங்கையின் கதை".இனி இவளை செங்கொடி என்று அழைக்க போவது இல்லை. அவள் பெயர் இனி தமிழச்சி  மட்டுமே. 

குறிப்பு :

இவள் வரலாற்றை வினவின் பின்னூட்ட பெட்டி மூலமும் , என் வலை தளத்திலும் பதிந்து தமிழ் கூறும் மனங்களை நோக்கி கேள்வி கேட்டு மனஅதிர்வுகளை உண்டாக்குவது மட்டுமே என் நோக்கம்.

தோழன்மையுடன்   ,

கி.சிவகார்த்திகேயன்