Wednesday, September 10, 2014

திரைக்கதை படம் : சிவ-கார்திகேயன் காட்சி #11 பின்னணி காட்சி VII Screen Play for the Movie Siva-karthikeyan scene #11 Flashback Scene VII

காட்சி #11: பின்னணி காட்சியின் உள் மற்றும் ஒரு காட்சி பின்னணி காட்சி VII : இரவு 10.15 மணி INT @ சென்னை சிவசங்கரியின் வீடு , சிவசங்கரியின் படுக்கை அறை,பள்ளி கூடம் ,வகுப்பு அறை 


தனிமையிலே இனிமை காண முடியுமா ? என்ற பாடல் கணினியில் இசைத்துக்கொண்டு இருக்க .....

சிவ சங்கரி தன் சிறு வயது பள்ளி நினைவுகளில் முழ்கிபோகின்றாள் [பின்னணியில் பாடல் low volume ல் ஒலிக்கின்றது ]

5 ஆம் வகுப்பு அறையின் வெளியே உணவு இடைவேளையில் அருகருகே அமர்ந்து இருக்கும் தோழிகள் : சிவசங்கரி மற்றும் தாமரை

உணவை பகிருகின்றார்கள்.

பள்ளியின் வெளிதோற்றம் long shot

வகுப்பறையின் வெளிதோற்றம் long shot

"நானும் இப்ப எல்லாம் முட்டை கூட சாப்பிடுறது இல்லை தெரியுமா... சங்கரி" என்கின்றாள் தாமரை

"ஏன் என்னாலையா பா" என்கின்றாள் சிவசங்கரி

"இல்ல பிரிண்ட்ஸ்காக எதையாவது ஒன்னை விட்டு கொடுத்தா தானே அது பிரிண்ட்ஸ்ஷிப்...சங்கரி" என்கின்றாள் தாமரை

"அப்ப நானும் உனக்காக முட்டை சாப்பிடட்டுமா பா " என்கின்றாள் சிவசங்கரி

"வேண்டாம் உங்க வீட்டில் திட்டுவாங்க அதனால நானே சாப்டாம இருக்கேன்" என்ற தாமரை கை கழுவ எழுந்து நிற்க மேல் இருந்து சரிந்து விழும் கட்டிட சாரத்தின் சவுக்கு கட்டைகளை பார்க்க அதிர்ந்தவள்

தன் தோழியை , சிவசங்கரியை தர தர வென்று இழுத்து நகர்த்தி காப்பாத்துகின்றாள்
காட்சி #11: பின்னணி காட்சியின் உள் மற்றும் ஒரு காட்சி பின்னணி காட்சி VII முற்றும்

----------------------------------------------------------------------------------------
காட்சி #11-A : பின்னணி காட்சியின் உள் மற்றும் ஒரு காட்சி பின்னணி காட்சி VII-A : மாலை 4.45  மணி INT சிவசங்கரியின் வீட்டு வாசல்

சென்னை சிவசங்கரியின் வீட்டு வாசல் ...... [பின்னணியில் பாடல் low volume ல் ஒலிக்கின்றது ]

பள்ளியில் இருந்து வீடு வரும் சிவசங்கரி தன் காலில் உள்ள சிராய்ப்பு காயத்தை பார்த்தவாறே shoe வை கழற்றுகின்றாள்.

சிவசங்கரியின் அம்மா காயத்தை கானுகின்றார்."என்னடி இது எங்க விழுந்து வாரிட்டு வர..." என்கின்றார்.

"இல்ல.. மா... தாமரை என்ன தர தரனு பிடிச்சி இழுத்துட்டா தெரியுமா "

"அவங்க கூட சேராதனுசொன்னா கேட்டியா நீ "

"இல்ல மா மேல இருந்து சாரம் விழுந்துதா அப்ப தான் என்னை இழுத்து காப்பாத்தினா மா "

மனம் நெகிழும் அம்மா சிவசங்கரியை கட்டி அனைத்துக்கொண்டே நாளைக்கு "அவளை வீட்டுக்கு கூட்டிகிட்டு வாடி" என்கின்றாள்.

"என் பிரண்டு எனக்காகவே முட்டை சாப்பிடாம நிறுத்திட்டா... நாளைக்கு அவளுக்கு கேக் வாங்கி தரட்டுமா மா?"

காட்சி #11-A : பின்னணி காட்சியின் உள் மற்றும் ஒரு காட்சி பின்னணி காட்சி VIII-A முற்றும்

------------------------------------------------------------------------------------------------------
காட்சி #11-B: பின்னணி காட்சியின் உள் மற்றும் ஒரு காட்சி பின்னணி காட்சி VII-B : மாலை 4.45  மணி INT பள்ளி கூடம் ,வகுப்பு அறை 


சிவ சங்கரி காலையில் தன் சிநேகிதி தாமரைக்கு ரோசா பூவை கொடுத்துகொண்டே , 
"அம்மா இன்னிக்கு உன்னை கூட்டிக்கொண்டு வர சொன்னாங்க தாமர " 
என்கின்றாள்.

"சரி பா வறேன் " என்கின்றாள்  தாமரை


"என் உயிரையே காப்பாத்தி இருக்க ..., திருப்பி நான் என்னப்பா செய்ய போறேன் ? " 

என்றவாறே தாமரையின் நோட் புக்கில் " உன்னால் தானே இன்று நான்உயிருடன் ...என்று எழுதுகின்றாள் 


" சரி math home work முடிச்சிட்டியா கொஞ்சம்கொடு  ......" என்னும் தாமரையை பார்த்து 



math home work  நோட்டை நீட்டிய வாறே " இல்லை தாமர நான் ஏதாவது உனக்கு செய்யனும்........ எதுவா இருந்தாலும்  என்கிட்ட கேளு என்ன ?" என்று கூறுகின்றாள்  



-----------------------------------------------------------------------------------------
பிளாஷ்பேக் cut
"அப்பா நாளை காலை flightல் பெங்களுருக்கு ticket book செய்துடார் " என்ற அம்மாவின் குரல் கேட்டு நிகழுக்கு வருபவள் அணிச்சையாக தன் உடைகளை சரி செய்து கொண்டே படுக்கையில் இருந்து எழுந்து வந்து லிவிங் ரூமுக்கு செல்கின்றாள்
-----------------------------------------------------------------------------------------


[தனிமையிலே இனிமை காண முடியுமா ? என்ற பாடல்
ஆண்:
தனிமையிலே..தனிமையிலே
தனிமையிலே இனிமை காண முடியுமா
பெண்:
நல் இரவினிலே சூரியனும் தெரியுமா
தனிமையிலே இனிமை காண முடியுமா
ஆண்: துணையில்லாத வாழ்வினிலே சுகம் வருமா
பெண்: அதை சொல்லி சொல்லித் திரிவதனால் துணை வருமா
ஆண்: துணையில்லாத வாழ்வினிலே சுகம் வருமா
பெண்: அதை சொல்லி சொல்லித் திரிவதனால் துணை வருமா
பெண்:
மனமிருந்தால் வழி இல்லாமல் போகுமா
மனமிருந்தால் வழி இல்லாமல் போகுமா
வெறும் மந்திரத்தால் மாங்காய் வீழ்ந்திடுமா
(தனிமையிலே… தனிமையிலே இனிமை காண முடியுமா)
பெண்:
மலர் இருந்தால் மணம் இருக்கும் தனிமையில்லை
செங்கனி இருந்தால் சுவை இருக்கும் தனிமையில்லை
மலர் இருந்தால் மணம் இருக்கும் தனிமையில்லை
செங்கனி இருந்தால் சுவை இருக்கும் தனிமையில்லை
கடல் இருந்தால் அலை இருக்கும் தனிமையில்லை
கடல் இருந்தால் அலை இருக்கும் தனிமையில்லை
நாம் காணும் உலகில் ஏதும் தனிமை இல்லை
(தனிமையிலே… தனிமையிலே இனிமை காண முடியுமா)
பெண்:
பனி மலையில் தவமிருக்கும் மா முனியும்
கொடி படையுடனே பவனி வரும் காவலரும்
கவிதையிலே நிலை மறக்கும் பாவலரும்
கவிதையிலே நிலை மறக்கும் பாவலரும்
இந்த அவனியெல்லாம் போற்றும் ஆண்டவனாயினும்
(தனிமையிலே… தனிமையிலே இனிமை காண முடியுமா)]

திரைக்கதை படம் : சிவ-கார்திகேயன் காட்சி #10 பின்னணி காட்சி VI Screen Play for the Movie Siva-karthikeyan scene #10 Flashback Scene VI

காட்சி #10: பின்னணி காட்சி காட்சி VI  : இரவு  8.15 மணி INT  @  சென்னை  சிவசங்கரியின் வீடு 


திரைக்கதை படம் : சிவ-கார்திகேயன் By K.Senthilkumaran


சிவசங்கரி டைனிங் டேபிளில் அமர்ந்து ,அம்மா ,அப்பாவுடன் பேசிக்கொண்டு இருக்கின்றாள்.

"TCS இண்டர்வியுவில் சென்னைக்கே placement  கேட்டு இருக்கலாமே சிவா..." என்கின்ற அம்மாவை பார்த்து

"என் friend  சென்னை TCSல் GM ஆ இருக்கார் ...அவர் மூலமா முயற்சிக்கட்டுமா " என்ற அப்பாவை பார்த்து

"Thanks Lot Dad Just one year தானே ...,நானே கேட்டு transfer வாங்கிகிறேன்    "  என்ர்கின்றாள்

சிவசங்கரியின் செல் போன் ஒலிக்க "ஹாய் கார்த்திக் என்ன busy யா ? " என்கின்றாள்

Inter Cut

"Sunday lazy evening sleeping சங்கரி .... என்ன மேட்டர் evening போன் செய்தாய் போல இருக்கு  " என்கின்றான்

Inter Cut

"ஒரு surprise  matter ...,நாளைக்கு பெங்களூர் வரும் போது சொல்றேனே " என்கின்றாள்.

Inter Cut

"என்ன உன் dad கிட்ட பேசிட்டியா ? என்ன சொல்றார் என் மாம்ஸ்,என்  boss ....  HCL சென்னை HR  Vice President? "

Inter Cut

"அது இல்லப்பா, அதைவிட முக்கியமான மேட்டர் ..,நான் அம்.... " என்று அம்மாவை பார்த்தவாறே பேச்சை நிறுத்தியவள்

"நாளைக்கு சொல்றேன் கார்த்திக் ஏன் surprise தாங்க  மாட்டியா"  என்றவள்

"Good Night கார்த்திக்" என்று கூறி call ஐ கட் செய்து ....

அப்பாவை பார்த்து  சிரித்துகொண்டே "  கார்த்திக் உங்க சென்னை ஆபீஸ்சில்  தான் placed ஆகி இருக்கார்... கொஞ்சம் பாத்துக்குங்க என் friend ஐ " என்றவள்

"Business Analist ஆ select ஆகி இருக்காரு பா   " என்கின்றாள்



 காட்சி #10: பின்னணி காட்சி காட்சி VI   முற்றும் 

திரைக்கதை படம் : சிவ-கார்திகேயன் காட்சி #9 பின்னணி காட்சி V Screen Play for the Movie Siva-karthikeyan scene #9Flashback Scene V


காட்சி #9 : பின்னணி காட்சி காட்சி V : மாலை 5.15 மணி INT @ சென்னை வடபழனி கருவுறுதல் மருத்துவ மையம் டாக்டர் அறையில் சிவசங்கரி,இளம் வயது தம்பதிகள் மற்றும் பெண் டாக்டர்


திரைக்கதை படம் : சிவ-கார்திகேயன் By K.Senthilkumaran


டாக்டர் சிவ சங்கரியின் மெடிக்கல் ரிப்போர்ட்டை பார்த்துகொண்டே ...."Sivasankarai Are You Okey for donating Egg? It is metered enough today. இன்றே கூட donate செய்யலாம் " என்கின்றார்.



குழப்பத்தில் முகம் சுருங்கியவள் "just a minute Doctor " என்றவள் இரண்டு முறை கார்த்திகேயனுக்கு ring கொடுக்க INTER CUT ல் அவன் செல் போனை silent model வைத்து விட்டு தூங்கும் காட்சி.


"Okey doctor I ready " என்றவளை டாக்டர் புன்னகை பூத்தவாறே


"உன் friend தாமரையின் கருப்பையில் எந்தக்கோளாறுமில்லை  it is perfect ஆனா   கருமுட்டை mature  ஆவதில்  தான் சிக்கல் இருக்கு...... ஹம் இந்த காலத்து youngster's ரொம்ப matured மா " என்று கூறி சிரித்தவாறே சிவசங்கரிக்கு கைகொடுக்க .....

"labக்கு போங்க இன்னிக்கே  process ஐ முடித்துடலாம்! " என்ற டாக்டரை பார்த்து 

"தேங்க்ஸ் லாட் டாக்டர்" என்கின்றாள்  தாமரை


தாமரை,சிவசங்கரி இருவரும் அறையை விட்டு வெளியேறி  லேப் க்குள் நுழைவதுடன் காட்சி முடிகின்றது. 


காட்சி #9 : பின்னணி காட்சி காட்சி V முற்றும்

திரைக்கதை படம் : சிவ-கார்திகேயன் காட்சி #8 பின்னணி காட்சி IV Screen Play for the Movie Siva-karthikeyan scene #8 Flashback Scene IV

காட்சி #8 : பின்னணி காட்சி காட்சி IV : மாலை 4.30 மணி INT @  சென்னை வடபழனி கருவுறுதல் மருத்துவ மையம் கேன்டீன் உள்புறம்

திரைக்கதை படம் : சிவ-கார்திகேயன் By K.Senthilkumaran


இளம் வயது தம்பதிகள் இருவர் சோகமான மன நிலையில் அமர்ந்து உள்ளார்கள். கணவன் கைகொடிகாரத்தையும்,செல்போனையும் மாற்றி மாற்றி பார்த்து கொண்டு இருகின்றான்.

INTER CUT

சிவசங்கரி விடுமுறையில் சென்னைக்கு தன் வீட்டிற்கு வந்தவள் ....." அம்மா ஹோஸ்பிடல் வரைக்கும் போயிட்டு வறேன் ...ஒரு சின்ன வேலை " என்கின்றவளை அவள் அம்மா
"ஒரு நாள் லீவில் வீடு வந்தா கூட எங்கேடி போற ?"
தன் வண்டியின் கீயை எடுத்தவாறே "என் பிரண்ட தாமரையை  பார்த்துட்டு வரேன்.... ஹோஸ்பிட்டலில் இருக்கா " என்றவாறே வண்டியை ஸ்டார்ட் செய்கின்றாள்.

INTER CUT
கணவன் தன் மனைவியை பார்த்து "உன் ஸ்கூல் மேட் என்று சொன்ன இல்லை ? கருமுட்டை தானம் செய்ய ஒத்துப்பாங்கலா ? " என்று கேட்க

காப்பி கப்பை dust bin ல் போட்ட வாறே " அவ ரொம்ப நல்லவ... அதிகம் படித்தவ ... ஒத்துகொண்ட பின்பு தானே வறேன் என்று சொன்ன ?" என்கின்றாள்.

"அவங்க பேரன்ட்ஸ் ?" என்றவனை பார்த்து

"எனக்காக இந்த ஹெல்ப்பை கூடவா என் friend செய்ய மாட்டா ? ஏன் இதுக்கு கூட பேரன்ட்ஸ் கிட்ட permission வாங்கணும்?" தன் கணவனின் நெற்றியில் வியர்வையில் வழியும் செந்துரத்தை துடைத்து விடுகின்றாள் "

செல்போன் ஒலிக்க எடுத்தவன் "ஹோஸ்பிட்டல் கேன்டினில் இருகோம் மேடம் என்கின்றான்.

கையில் ஹெல்மட் உடன் ஹோஸ்பிட்டல் கேன்டினுக்குள்வேகமாக நூழையும் சிவசங்கரி தன் தோழியை கண்ட உடன் கட்டி அனைத்து "தாமரை எப்படி இருக்கடா செல்லம்... really I missed you pa" என்றவள் ....

தோழியின் கணவர் முன் அமர்ந்து "எப்படி இருக்கிங்க professor sir ? தாமரை உங்களை நல்லா பார்த்துகிறாளா ? " என்ற வாறே அவருக்கு கை கொடுகின்றனர்.

"sorry சிவா உன்னை ரொம்ப disturb செய்யறேன்.....   எங்க இரன்டு பேர் relationனும் எங்களை கை கழுவிட்டாங்க சிவா "  என்றவாறே சிவ சங்கரியின் கையை பற்றுகின்றாள் தாமரை

" ஏன் தாமரை  கவலை படறே ...,நானு,உன் சார் எல்லாம் உனக்காக இல்லையா Do 't  worry pa  "

சிவ சங்கரியின் தோளில் தலை சாய்த்து அழுபவளை தன் இடது கையால் அனைத்தவாரே தாமரையின் கணவனை பார்த்து " professor ......,  என்னோட மெடிக்கல் டெஸ்ட் எல்லாம் இப்ப தான் முடிச்சுட்டு வரேன் ரிசல்ட் இன்னும் 2 hrs ல் தெரியும் " என்கின்றாள் சிவ சங்கரி



காட்சி #8 : பின்னணி காட்சி காட்சி III முற்றும்

திரைக்கதை படம் : சிவ-கார்திகேயன் காட்சி #7 பின்னணி காட்சி III Screen Play for the Movie Siva-karthikeyan scene #7 Flashback Scene III


காட்சி #7 : பின்னணி காட்சி காட்சி III : காலை 11 மணி INT @ I I M வளாகத்தின் வகுப்பு அறை [Class Room ] பகுதி 

திரைக்கதை படம் : சிவ-கார்திகேயன் By K.Senthilkumaran


வளாக நேர்முகத்தேர்வுக்கான [campus Interview] முன்னேர்பாடுகளுடன் அந்த வகுப்பறைகள் உள்ளன.
ஒரு வகுப்பறையில் TCS ,மற்றோன்றில் HCL நிறுவனங்கள் நேர்முகத்தேர்வை நடத்துகின்றன. சிவசங்கரி,கார்த்திகேயன் அறைகளுக்கு வெளியே அமர்ந்து பேசிக்கொண்டு இருக்கின்றார்கள் முதலாம் ஆண்டு மாணவர்கள்[ வாலண்டியர்கள் ] நேர்முகத்தேர்வுக்கு வந்து உள்ள சீனியர் மாணவர்களை பெயரிட்டு அழைத்து உள் அனுப்பிக்கொண்டு உள்ளார்கள்.
சிவசங்கரி TCS நேர்முகத்தேர்வு அறைக்கும் , கார்த்திகேயன் HCL நேர்முகத்தேர்வு அறைக்கும் செல்கின்றார்கள்.
TCS நேர்முகத்தேர்வு அறை : "Good Morning every one here " என்று கூறி உள் நுழையும் சிவசங்கரி...
IINTER CUT
HCL நேர்முகத்தேர்வு : "I am Karthikeyan Ramaswamy ..., Happy morning all my elders ...." என்றவாறே உள் நுழையும் கார்திக் பேராசிரியர்கள் நின்று பேசும் மேடையில் உள்ள நாற்காலியில் அமருகின்றான்.
INTER CUT
TCS நேர்முகத்தேர்வு அறை : சிவசங்கரி நாற்காலியில் அமராமல் மேசை மீது இடது கையை வைத்துக்கொண்டு "Gentlemen..., Shall I answer for your questions now ? " என்று கூறியவாறே புன்னகை பூக்கின்றாள்.
INTER CUT
HCL நேர்முகத்தேர்வு : "Can you answer me for this silly question Mr Karthik Ram ?... Who have entered in the next room for TCS interview session just now and Can you say some thing about that person ?"
அட இது என்ன கேள்வி என்று முகத்தில் ஆச்சரியத்தை காட்டிய கார்த்திக் ,"
Of course She is my best friend and She is only my life " என்கின்றான்.
INTER CUT
TCS நேர்முகத்தேர்வு அறை : முதல் கேள்வி மிக எளிமையாகவும் ,அதே சமயம் மிக ஆழமான விடயத்துடனும் கேட்க படுகின்றது.
"Who is Your competitor in your class room ? and tell the relationship with him or her "
"He is Mr Karthikeyan Ramaswamy who care me lot ...,I can not compete with him in this regard " என்று தன்னை அறியாமல் கூறியவளை பார்த்து interviewer கள் நட்புடன் புன்னகை செய்கின்றனர். சிவசங்கரி வெட்கப்படும் தன் முக பாவனையை மறைக்க விரல்களால் நெற்றியை தடவுகின்றாள்.
"Are you going to marry him and settle in life very soon ?"
"Yes....., We can settle in life soon.., if We are placed in the same city" என்று கூறி மெல்ல தலை அசைக்கின்றாள்
INTER CUT
....
...
INTER CUT
...
...
INTER CUT
....
....
[ஒலி முடக்கப்பட[ Mute ] இரு அறைகளிலும் நிகழும் நேர்முகத்தேர்வு காட்சிப்டுத்தபடுகின்றது ]
நேர்முகத்தேர்வு அறையை விட்டு வெளி வரும் சிவசங்கரி,கார்த்திகேயன் இருவரும் மகிழ்வுடன் கை கொடுத்துக்கொள்ள ....

காட்சி #7 : பின்னணி காட்சி காட்சி III முற்றும்