தேகம் எழுதுவது எப்படி ? பாகம் 7
பின்நவினதத்துவத்தை புரிந்துகொள்வது எப்படி ?மனிதன் தன்னை உள்நோக்கி பார்த்தல். அந்த உள்நோக்களில் நாம் உலகை எப்படி கான்கின்றோம் என்ற பார்வையை மனிதனுக்கு கொடுக்கும் முறை. தேகம்-தர்மா வின் பார்வையும் அப்படி பட்ட பாவையே ! அவன் மனம் கூறும் நியாயங்கள் /அநியாயங்கள் அனைத்துமே அவன் உள்உணர்வு சார்ந்ததே ! பின் நவினத்துவம் என்ற போக்கு மனிதனின் பார்வையை உள் உணர்வுகள் அடிப்படையில் சாதி சார்ந்தும் ,மதம் சார்ந்தும் வெளி உலகை நோக்கிய தேடலை கொடுக்கும் போது அது தேகம்-தர்மாவின் செயல்களிலும் அவன் பிறரை செய்யும் வதைகளிலும் பிரதி எடுக்கின்றது. பின்நவினதத்துவத்தின் ஒரு முக்கிய கூறான தொடச்சி அற்ற தன்மை தேகம்-தர்மாவின் கதை ஓட்டத்திலும் எதையும் முடிக்காமல் அங்கங்கே தாவிசெல்லும் போக்கில் இருந்து காண முடியும்.பின்நவினதத்துவத்துவம் இரட்டைப்படுத்துதலை ஏற்பதில்லை. முதலாளி தொழிலாளி, இயற்கை மனிதன் போன்ற முரண் இருமைகளை அது மறுக்கிறது என்பதை தேகம்-தர்மாவின் செயல்கள் மூலம் காணமுடிகின்றது. ஒரு பெண்ணை கற்பழித்ததற்காக ஒரு போலிஸ் இன்ஸ்பெக்டர் மகனையும் காடை எனும் தாதாவையும் வதைக்கும் அதே தர்மா தான் பின்னொரு இடத்தில் ஒரு நாயை கல்லடித்ததற்காக ஒரு சிறுவனையும் வதைக்கிறான். ஒரு பெண்ணை கற்பழிப்பதும் நாயை கல்லடிப்பதும் ஒரே மாதிரி குற்றங்களா? பின்நவினதத்துவத்துவம் எல்லாவற்றையும் முழுமையாகத் தர்க்கப்படுத்த முடியாது என அது சொல்கிறது. மன எழுச்சிகள் தர்க்கத்துக்கு அப்பாற்பட்டவை என்று கூறுகின்றது. தேகம்-தர்மா செலின் என்ற காதலியை நிறைவாய் புணராமல் மறைமுகமாய் அவளை வதைக்கிறான்.அடுத்து நேஹா என்றொரு காதலி. அவளை மேலும் நுட்பமாக தனது விலகலின் மூலம் உளவியல் ரீதியாக வதைக்கிறான். அவள் பைத்தியம் பிடித்து சாகிறாள். கடைசியாக அவன் மீனா என்றொரு “மிடில் கிளாஸ்” பெண்ணை மணந்து கொள்கிறான்.
எது எப்படி இருந்தாலும் தன்னை பின் நவினத்துவ முதல்வன் என்று பறைசாற்றிக்கொள்ளும் ஒரு எழுத்தாளன் தேகம்-தர்மாவை போன்று பின் நவினத்துவமாக வாழாமல் தர்மாவின் வாழ்க்கையை எழுத்தில் வடித்து இருக்க முடியாது.
பெருமாள் முருகனின் மாதொருபாகன் என்ற பின்நவினத்துவ கூறுகள் உள்ள வரலாற்று புனைவில் சமுக அழுத்தம் காரணமாக குழந்தை பேறுக்காக மாற்று முறையில் முனையும் பெண்ணின் மன உணர்வுகள் எப்படி இருக்கும் ? பாலியல் விடுதலையை மையம் கொண்டதாகவா ? அல்லது வலியுடைய தேடலாகவா ? இந்த இடத்தில் பொன்னாவின் மன் உணர்வுகளை வெளிகாட்டுவதில் பெருமாள் தன் நிலை இழகின்றார். வருனனைகளுடன் வேறுவிதமான தேடலை காட்சி செய்கின்றார் ! மானுட விடுதலையே பாலியல் தேடலில் தான் உள்ளது போன்று தன் பின் நவினத்துவ trend ,வாலை ஐ அவிழ்த்து விடுகின்றார் ! எத்தகைய பின் நவினத்துவ கூறுகள் இதில் பதிந்து உள்ளது என்றால் வரலாற்றை மீண்டும் எழுதும் முறையாகிய [மெடபிக்ஷன்] முறையாகும் .
தொடரும் .....