".........வெவ் வேறு [தளங்களில் ,காலக் கட்டத்தில் ,நேக்கத்தில்] பெமு-வின் இக் கட்டுரைகள் எழுதப்பட்டாலும், இவற்றை புத்தகமாக பதிப்பிக்கும் போது வாசகன் சம நிலையில் ஆன விமர்சனத்தை நாடுவது இயற்கை தானே......."
[ 1 ] நிராகரிப்பின்
உந்துதல் என்ற பெயரிட்ட முன்னுரைக்கட்டுரையும் ,இருபது கட்டுரைகளும் , இக்
கட்டுரைகளுக்கான வெளியீட்டு விவரங்களும், இறுதியில் பொருளடைவும் [Indexing Table] கொண்ட எனது "நீண்ட
நாள் நன்பனாகிய" இன் நூல் பல்கலைக்கழகப் பாடத்திட்த்தின் படி தமிழ்,ஆங்கிலம், மொழியியல் போன்ற துறைகளில்
பயிலும் மாணவர்களுக்கு தமிழ்ப் பேராசிரியர்
திரு பொமு-வின் ஒரு அறிவுச்சார் நல்லப்
ப்ரிசு. நிராகரிப்பின் உந்துதல் என்ற
முதல் கட்டுரை[முன்னுரை] ,படைப்புகள் மீதான
விமர்சனப் பார்வை எப்படி
இருக்க வேண்டும் என் எளிமையாக
கூறுகின்றது.
[ ௧ ] படைப்பை நோக்கி
ஈர்த்தல்
[ ௨ ] படைப்பு குறித்த பார்வையை
உருவாக்குதல்
[௩ ] ப்டைப்பின்
உள்ளார்ந்த-நுட்பமான அரசியலை வெளிப்படுத்துதல்
விமர்சனக் கலைக்கான இலக்கணத்தை
முன்று அடியில் இவ்வளவு எளிமையாகவும் ,கருத்துச் செறிவுடனும் இதுவரை
நான் கற்றதும் இல்லை கேட்டதும் இல்லை . இந்த இலக்கணப்படியே இன் நூலை[எந்த நூலையும் ] விமர்சனம் செய்வது
நன்று.
[ 2 ]உதிரக்ககவிச்சி
ப்டிந்த கவிதைகள் என்ற முதல் கட்டுரை ,திரு
சுகந்தி அவர்கள் எழுதிய "பூதையுண்ட வாழ்க்கை" என்ற பெண்ணீயம்
பேசும் கவிதைத் தொகுப்புக்கான வாழ்த்துக்கூறும் நம் தமிழ் மரபுப்
படியான பின்னுரை. நிறைகளை
மட்டும் கூறும் நம் மரபு சார்ந்த
இந்த பின்னுரையின் குறையும்
அதுவே .. வீட்டை விட்டு
அதிகம் வெளிச் செல்ல வாயப்பு இல்லாத
ஒரு பெண்ணின் குரலாக
இந்தக் கவிதை ஒலிக்கின்றது.
"ஆனாலும் ஆறு
போய்க்
கொண்டிருந்தது
ஏனோசிரித்துக் கொண்டேன்"
மிக்க அழகியல் வடிவத்தில்
,நடுத்தர குடும்பப் பெண்களின்
உடல்,மனம் சார்ந்த வலிகளையும், நுட்பபமான
மன இயல்புகளையும் பதிவுச்
செய்யும் இக் கவிதைத் தொகுப்பு ,கீழ் நடுத்தரக் குடும்பப்
பெண்களின் வாழ்க்கை மீதும் கவனம் செலுத்தி இருந்தால்
முழுமைப் பெற்று இருக்கும். [என்பதை பெமு தன்
"உதிரக்ககவிச்சி ப்டிந்த கவிதைகள்"
கட்டுரையில் கூற தவறினார் ]
[ 3 ] "சமையலறையில் தேயும் சாமான்"
கட்டுரை ஆய்வுச் செய்யும் ,திரு அழகிய நாயகி அவர்களால்
எழுதப்பட்ட சுய கதை வடிவத்தில்
ஆன திரு பாமா-வின் "கருக்கு"-யை போன்ற ஒரு பெருங்கதை தான் "கவலை". தன் சாதி மீதான அடக்கு முறைகளை
போராடித் தீர்த்த ஒரு இனக்குழுவைச் சேர்ந்த
அம்மாவின் இந்த சுயக்கதை, தன் வீடு சார்ந்த உரவுச்
சிக்கல்களை நாகர்கோவில்-நாடார் மக்களின்
மொழி நடையில் எழுதப்பட்டு
உள்ளது. பிறரை [தந்தையை] ஏச சாதியத்தின் அடிப்ப்டையில் பயன் படுத்தப்படும்
சொற்கள் [உம்: சண்டாளன்]மீது வைக்கப்பட வேண்டிய விமர்சனம்,
பெமு வின் கட்டுரையில் கூர்மையானதாக இல்லை.
[4]தலித்தியர் இலக்கியம்
பற்றிய [மார்க்ஸ்யிய-தலித்திய] விமர்சகர்களால்
கூறப்படும் வரையறைகளுடன் தொடங்கும்
"மீள்வாசிப்பில் பாமாவின் நாவல்கள்" என்ற இக் கட்டுரை மிகவும் நேர்மையாகவும்,பெமு அவர்கள் முன்னுரையில் சொன்ன
இலக்கிய விமர்சன வரையரைக்கு உட்பட்டும் திரு
பாமா அவர்களின் இரு சுயக்கதைகளையும்
[கருக்கு ,சங்கதி] விமர்சிக்கிறது. தலித்தியர்களில் தமக்கும்
கீழ் கட்டுமனத்தில் உள்ள சாதியினரை
"ன்" விகுதியுடன் அழைக்கும் பாமாவின் உள்ளார்ந்த அரசியல் பார்வை
பெமு அவர்களால் சரியான
முறையில் விமர்சிக்கப்பட்டு உள்ளது. மேலும் நாட்டார்
சிறு தெய்வங்கள் மீது பாமா அவர்கள்
கூறும் இழிச் சொற்கள் [உம் : கண்டாரோளி] பெமு அவர்களால் சரியான
முறையில் விமர்சிக்கப்பட்டு உள்ளது. இந்த கட்டுரையில் கருக்கு கதை நேர்காணல்[கேள்வி பதில் வடிவில்] உள்ளது என பெமு கூறியப்படி
பார்த்தால் ,எந்தப் படைப்புக்கும் இந்த
அபாயம் உள்ளது என்பதை
நாம் மறுக்க முடியாது .[ திரு பெருமாள்
முருகனின் முதல் பெருங்கதை
ஏறுவெய்யிலை கோனார் பதிப்பக்கம்
மாணவர் நன்மை கருதி!!!
வெளியிட்ட கதையை நாம் மறக்க முடியுமா?]. பாமாவின் படைப்புகள்
மீது திரு பெமு வைக்கும் கறாரான
விமர்சப் பார்வை மற்ற இரு பெண் படைப்பாளிகளின்
படைப்புகள் மீது இல்லாதது
இந்த நூலின் பெருங்குறை[ஆளண்டாப் பட்சி
பங்களிப் பாகப் பிரிவினைப்
போல பெருங்குறை] . வெவ் வேறு
[தளங்களில் ,காலக் கட்டத்தில் ,நேக்கத்தில்] பெமு-வின் இக் கட்டுரைகள் எழுதப்பட்டாலும்,இவற்றை புத்தகமாக பதிப்பிக்கும்
போது வாசகன் சம நிலையில் ஆன விமர்சனத்தை நாடுவது
இயற்கை தானே.
துயரமும் துயர நிமித்தமும் கட்டுரைகள் நூல் ஒன்று+இருபது விமர்சன கட்டுரைகள் கொண்டு
இருந்தாலும் நேரம்,இடம் கருதி நம் தமிழ்
நாட்டின் படைப்புத் துறையில் ஆர்வம்
உள்ள முன்று தமிழ் மகளிர் படைப்புகள் மீது பெமு வைக்கும்
விமர்சனங்களை மட்டுமே என்னால்
ஆய்வுச் செய்ய முடிந்தது.
அன்புடன் ,
கி.செந்தில்குமரன்