Thursday, September 17, 2015

திரைக்கதை எழுதுவது ஒரு கலை அல்ல அது தொழில்நுட்பம் I

சில அடிப்படைகள் :

கதையை காட்சி படுத்துகின்ற சினிமா என்ற வெகுசன கலையின் ஆதார அம்சம் திரைக்கதை எழுதுவது. ஒரு சாதாரண கதை பலவாறாக பலராலும் திரைக்கதையாக்கப்பட்ட முடியும்.  ஆனால் அவை அனைத்துமே வெற்றிகரமான சினிமாவாக்கப்பட்ட  முடியமா என்பது சந்தேகத்துக்கு உரியதே. நாடகக்கலை அனுபவம் உள்ள ஒருவர் அந்த கதையை    திரைக்கதையாக்கும் போது  என்ன செய்வார்? உதாரணத்துக்கு கலைஞனின்  பராசக்தியையும் மகேந்திரனின் முள்ளும் மலரும் படத்தையும்  ஆய்வுக்கு எடுத்துக்கொள்வோம்.  1950களில் இருந்து  நாடகங்களில் ஆழ ஒன்றியிருந்த  தமிழ் மக்களுக்கு சிவாஜி கணேசனின் பராசக்தி வசனங்கள்  கண்டிப்பாக மெய் சிலிர்க்க வைப்பதாக தானே இருந்து இருக்கும்?  அதுவும் அந்த படம்  சிவாஜி கணேசனின்  முதல் திரைப்படம் என்று நினைக்கின்றேன்.  முதல் படத்திலேயே  தமிழக மக்களை கவர்ந்து இருக்கும்  அவரின்  நடிப்புக்கு காரணம் சிறப்பான நாடகத்தன்மைவாய்ந்த வசனங்களே என்று கூறினால் அது மிகையாகாது.  அதே நேரத்தில் அபூர்வ ராகங்கள் திரைப்படத்தில் அறிமுகமான  ரஜனி , தொடர்ந்து  மகேந்திரனின் முள்ளும் மலரும் படத்த்தில் நடித்த ரஜனியின் நடிப்பு என்பது சிறப்பானதாக இருந்ததற்கு  காரணம் நாடகத்தன்மை  வாய்ந்த வசனங்களா அல்லது கதை காட்சி படுத்தப்பட நவீன முறையா?  50களுக்கு  70களுக்கு இடைப்பட்ட காலங்களில் தமிழ் சினிமா என்பது  பழைய நாடக-வசன  திரைக்கதை முறைக்கும்  நவீன காட்சி படுத்தும் திரைக்கதை முறைக்கும் இடையே பெரும் போராட்டங்களை நடத்தியுள்ளது என்பதனையும் நாம்   யூகிக்க முடிகிறது.  50களில் நாடகத்துறையில் இருந்து சினிமாவிற்கு  வந்த  சிவாஜியின்  வசன உசரிப்பு , நடிப்பாற்றலையும் மீறி தமிழ் சினிமா பரிணாமவளர்ச்சி அடைந்து  உலக திரைப்படங்களுடன்  இயைந்து பயணித்ததை நம்மால் உணர முடிகின்றது அல்லவா?  நடிப்புலக ஜாம்பவான் சிவாஜி அவர்கள் தொடந்து    நாடக-வசன  திரைக்கதைகளில் நடித்து வந்தாலும்  அத்தகைய திரைக்கதை  வடிவம்   காலத்தாலும் , கலை அம்சத்தாலும் , தொழில் நுட்பத்தாலும் மிகவும் பின்தங்கிய ஒன்று தான் என்பதை  இறுதி காலங்களில் அவர் நடித்த இருபடங்கள் கமலின் தேவர் மகன்  மற்றும்  பாரதி ராஜாவின்  முதல் மரியாதை ஆகியவை நிருபித்துவிட்டன அல்லவா? எனவே 50களில் இருந்து 70களுக்கு தமிழ் சினிமா  நாடக-வசன முறை திரைக்கதை முறையில் இருந்து காட்சி படுத்துதலுக்கு  உரிய ஊடகமாக மாறியது என்பதை நாம் உறுதியாக கூறமுடியும்.


தொடரும் 

No comments: