Friday, January 24, 2014

கதை – கவிதை -கணினி தளம் welcome new content

Dear  friends,

[1]கதை – கவிதை -கணினி தளம்
http://vansunsen.blogspot.in/
தொடங்கி உள்ளேன்.

[2]இத்தளத்தில் சில கதை,கவிதை-களையும் ,பல 
ஜாவா மொழியின் நிரல்களையும் பதிப்பித்து 
உள்ளேன்..நேரம் இருந்தால், உங்களின் ஒரு சிறிய,புதிய கதை அல்லது கவிதை அல்லது கட்டுரை-யை இந்த இணைய வலையில் பதிப்பிக்க அனுப்பி வைக்கவும்.

[2]I welcome you to send contents[ poem,story,Computer science ]to be published in  this blog  with “secular” ,“democratic” and “socialistic” in nature.

நன்றி

அன்புடன்,

கி.செந்தில்குமரன்
sunjava6@yahoo.com

திரு பெருமாள் முருகன் அவர்களுடன் சமுக வலையில் ஒரு விவாதம் Tamil Grammar Discussion

என்  ஐயம் :

ஐயா,

[1] பூங்குழி , பூக்குழி, தமிழ் இலக்கணம் சார்ந்து எது சரி ?

உம்:
பூ + காற்று = பூங்காற்று அல்லது பூக்காற்று ?
பூ + சட்டை = பூஞ்சட்டை அல்லது பூச்சட்டை ?
பூ + தோட்டம் = பூந்தோட்டம் அல்லது பூத்தோட்டம் ?
பூ + பெயர் = பூம்பெயர் அல்லது பூப்பெயர் ?

[2]பூ + குழி = பூங்குழி அல்லது பூக்குழி

எந்த புணர்ச்சியில் ஓசை இனிமை கிடைக்கும் ?




திரு  பெருமாள் முருகன்  அவர்களின்  பதில் :

எது மக்கள் வழக்கில் இருக்கிறதோ அது சரி. தீக்குண்டம், அக்கினிக் குண்டம் ஆகியவற்றை மக்கள் ‘பூக்குழி’ என்றே சொல்கின்றனர். எந்த ஓசை இயல்பாக உள்ளதோ அதையே மக்கள் வழங்குவர். இது தொடர்பான இலக்கணக் கருத்துக்கள் இரண்டு வகையையும் ஏற்றுக்கொள்வனவே.

திரு பெருமாள் முருகன் அவர்களுக்கு ஒரு கடிதம் Letter to Thiru Perumal Murugan



ஐயா ,

உங்கள் "பூங்குழி" [ பூக்குழி ]முடித்தேன். 

முடிவு ?

சரோஜாவின் கனவா ? 

சரோஜாவின் நிசமா ?

உங்கள் கட்டுரைகள் , சிறுகதைக்கான ஈர்ப்பு[உயிர்ப்பு ] உடன் உள்ளன .

உங்கள் நாவல்,சிறுகதைகளை விட உங்கள் கட்டுரைகள் [ கரித்தாள் தெரியவில்லாயா தம்பீ கட்டுரைகள் – பெருமாள் முருகன்] மிகவும் பயன் உள்ளதாகவும் ,எளிய நடையில் அனைவருக்கும் புரியும் படியும் உள்ளன.

முதல் முறை உங்கள் எழுத்தை படிக்கும் உறவுகளுக்கு உங்கள் கட்டுரைகளை தான் சுட்டுவேன்.

தமிழில் நிறைய கட்டுரைகள் எழுத்து தமிழிலேயே எழுதுங்கள்.

நாவல்,சிறுகதைககளில் வட்டார வழக்கையும்,தலித்தியத்தையும் பயன் படுத்துவது மிக்க நன்று.

அன்புடன் ,
கி.செந்தில்குமரன்

சென்னைப் புத்தகக்காட்சியில் அன்று: Chennai Book fare on 21th Jan,2014



இன்று சென்னைப் புத்தகக்காட்சிக்கு செல்ல நேரமும் ,பணமும் அமைந்தது. நைந்து போன பதிப்பகங்கள் வலிமையான பதிப்பகங்களுடன் நொண்டியடித்துக்கொண்டு இருந்தன. மதிய உணவை தவீர்த்து சென்றதால் ,அந்த ஒழுங்கற்ற தளத்தில் நடப்பது மது போதைக்கு ஏற்ற தள்ளாட்டத்தை கால்களுக்கு ஏற்படுத்தியது.

புத்தகங்களை தேர்வு செய்வது பெருங்குப்பையில் இருந்து குண்டுமணியை தேடுவது போல இருந்தது. வினவின் “சென்னைப் புத்தகக்காட்சியில் வாங்க வேண்டிய நூல்கள்” கட்டுரை திசைக்காட்டியது. வாங்கிய புத்தக்ங்கள் :

[1] கருக்கு நாவல் -பாமா

[2]பூக்குழி நாவல் – பெருமாள் முருகன்

[3]அமைப்பியமும் பின்அமைப்பியமும் -க.பூரணச்சந்திரன் [என் கல்லூரி என் தமிழ் ஆசிரியர்]

[4]மதொருபாகன் நாவல் – பெருமாள் முருகன்

[5]திருச்செங்கோடு சிறுகதை தொகுப்பு -பெருமாள் முருகன்

[6]ஆண்டாள் பட்சி நாவல் -பெருமாள் முருகன்

[7]அந்நியப்படும் கடல் -கீழைக்காற்று பதிப்பகம்

[8]இதுவல்லவோ கதை -கீழைக்காற்று பதிப்பகம்

[9]வேப் பெண்ணைய்க் கலயம் சிறுகதை தொகுப்பு-பெருமாள் முருகன்

[10]கரித்தாள் தெரியவில்லாயா தம்பீ கட்டுரைகள் – பெருமாள் முருகன்

[11] கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை -கீழைக்காற்று பதிப்பகம்

[12]கணிதத்தின் கதை -ஆயிஷா இரா.நடராசன்

[13] தண்ணீர் தாகத்திற்கா இலாபத்திற்கா?-கீழைக்காற்று பதிப்பகம்

[14] வான் குருவியின் கூடு கட்டுரைகள் – பெருமாள் முருகன்

கீழைக்காற்று பதிப்பகத்தில் புத்தக பட்டியல் கிடைக்காதது பெருங்குறை. காலச்சுவடு பதிப்பகத்தில் கொற்கை நாவல் ஓட்டமாய் ஓடிக்கொண்டு இருந்தது. டீ ,காப்பி விலை முறையே ரூ10,ரூ 12. 3 இட்லி ரூ 30. எல்லாம் முடிந்து வெளியேறும் போது பெரியவர் கூவி கூவி விற்ற கை பை , புத்தகங்களை இன்று சுமக்கவும் நாளை காய்கறிகளை சுமக்கவும் பயன்படும் என்பதால் வாங்கிச்சென்ரேன் .

எது அறிவு சார்ந்த மற்றும் முன்னேறும் மானிலம் ? குஜராத்தா அல்லது தமிழ்நாடா ? Knowledge based State

எது அறிவு சார்ந்த மற்றும் முன்னேறும் மானிலம் ? குஜராத்தா அல்லது தமிழ்நாடா ?
தமிழ்நாடு
—————–
தமிழ்நாடு கால்நடை பாதுகாப்பு சட்டம் 1958:
அனைத்து வயது எருமைகள் ; எருதுகள் ,பசுக்கள் , காளைகள் வயது 10 ஆண்டுகலுக்கு மேல் இருந்து , வேலை மற்றும் இனப்பெருக்கத்திற்கான தகுதி பெறாத அல்லது நிரந்தரமாக வேலை செய்ய முடியாத மற்றும் காயம் குறைபாடு அல்லது எந்த தீரா நோய் காரணமாக இனப்பெருக்கத்திற்கான திறன் இல்லதாது எனில் …..
நாம் அவற்றை உணவு மற்றும் எந்த வேறு தேவைக்கும் Industrial use பயன்படுத்தலாம்!!!!
குஜராத்
————-
மும்பை விலங்கு பாதுகாப்பு சட்டம் 1954:
குஜராதில் மாநில கால்நடை படுகொலை , மாடுகள் படுகொலை , மாடுகள் , எருதுகள் மற்றும் எருதுகள் மற்றும் கன்றுகளுக்கு “முற்றிலும்” தடைசெய்யப்பட்டுள்ளது . எருமைகள் படுகொலை சில நிபந்தனைகளை அனுமதிக்கப்பட்டது
எது அறிவு சார்ந்த மற்றும் முன்னேறும் மானிலம் ? குஜராத்தா அல்லது தமிழ்நாடா ?
அன்புடன் ,
கி.செந்தில் குமரன்

பசு வதை சட்டம் cow slaughter act

1]இந்தியாவில் பசு வதை சட்டம் எல்லா மாநிலதிலும் ஒரே மாதிரியாகவா உள்ளது ?
ஏன் இந்த மாறுபாடு? பல்வேறு மொழி, வெவ்வேறு இனம், வெவ்வேறு பண்பாடு உள்ள மக்கள் நாம் அல்லவா !! மக்கள் தங்கள் சம்பிரதாயப்படி மாட்டு இறைச்சியை சாப்பிட அல்லது சாப்பிடாமல் இருக்க உரிமை உண்டு அல்லவா ?
[2]இந்து மத உணவு வழக்கங்கள் பன்முக பட்டது அல்லவா ! தமிழ் நாட்டில் மாட்டுக்கறி உண்ணும் ஹிந்து, காஷ்மீரில் மாட்டுக்கறி உண்பது இல்லை அல்லவா !! கேரளாவில் மிக பெரும்பான்மையான ஹிந்து மக்கள் மாட்டுக்கறி உண்ணும் மக்கள் அல்லவா ?ஏன் ஹிந்து மக்களிடமே இந்த மாறுபாடு? ஏன் என்றால் உணவு பழக்கம் என்பது நமது தட்பவெப்ப நிலை , வேலை தன்மை, உணவு கிடைக்கும்தன்மை ஆகிய காரனிகளை சார்தது.
[3]நீங்கள் ஒரு குறிப்பிட்ட உணவு பழக்கத்தை உங்கலுக்காக தடை செய்ய விரும்பினால்,நாம் எப்படி மற்ற மக்களையும் கட்டாயப்படுத்த முடியும்? நமது இந்திய அரசியலமைப்பு சட்ட படி, நாம் நமது சொந்த உணவு,உடை,கலாச்சாரதை,பழக்கத்தை பின்பற்ற உரிமைகள் உண்டு அல்லவா !!
[4] மிகவும் சட்ட திட்ங்கள் கடுமையாக உள்ள சிவப்பு சீனாவில் கூட உணவு விசயதில் இந்த கட்டுபாடு இல்லையே ! நாம் குப்பை உணவு [junk food],சிகரெட் இவற்றை தடை செய்ய வேண்டுமா அல்லது ……!
[5]நாம் பசு வதை சட்டதை ஹிந்து மக்களுக்காக நடைமுறை படுதினால்…,முஸ்லிம் மக்களுகாக பன்றி வதை சட்டதையும், புத்த மற்றும் ஜைன மக்களுக்காக அனைத்து விலங்கு வதை சட்டதையும் நடைமுறை படுத்த வேண்டும் அல்லவா? சட்ட மோதல்[conflict of law] ஏற்படும் அல்லவா ?
[6]இந்த உலகத்தில் எந்த நாட்டிலாவது இத்தனை இனம் ,மதம் ,மொழி பேசும் மக்கள் உள்ளார்களா ? இந்தியாவில் ஒரே மொழி ,ஒரே மதம், ஒரே இனம் என்ற கோட்பாடு இந்தியாவில் சாத்தியமா ?
சாத்தியமாக்க முயன்றால் நாடு பிரியாதா ?ரத்த ஆறு ஓடாதா?
[7] இவை என் சிந்தனை மட்டும் அல்ல, ஆனால் என் ஆழ்ந்த கவலையும் தான்.இந்தியாவின் வரலாற்றை திரும்பி பார்த்தால் மதம் சார்ந்த போர்களும்- படுகொலைகளும் ,இன மோதல்களும் மிக்க அச்சத்தை எனக்கு உண்டாகுகிறது.
அன்புடன்,
கி.செந்தில்குமரன்

கவிதை: மாட்டு மந்திரம் [cow magic]

என் அன்பு தம்பி அம்பி[in vinavu.com] ,

ஓடி விளையடு பாப்பா
பால் குடித்து புரதம் ஏற்று பாப்பா !
பால் தரும் கல்சியம்-பாப்பா எலும்பு,பல் வளர்திடும்!!
கன்றுக்குட்டியையும் கொஞ்சம் குடிக்கவிடு பாப்பா!!!.//
ஓடி விளையடு பாப்பா
பசு ஈன்ற கன்றோடு!
கன்றை குளிப்பாடி-மீண்டும் பால் குடித்து அறிவை வளர்திடு பாப்பா
அடிக்கடி பால் குடிப்பது ஒரு வகையில் நல்லதுதான் பசுவும் கன்றும் என்ன நினைத்துக் கொள்ளுமோ//
ஓடி விளையடு பாப்பா
பசும் பாலை அப்பாவுக்கு கொடு
அப்பாவின் இரத்த அழுத்தம் சீராகும் !!!
நன்று, நன்று..//
ஓடி விளையடு பாப்பா
ஓடிய ஓட்டததில் நீ வளர்ந்தால்
பசுவிற்கும் வயது ஆகும் அல்லவா!!
கட்டாயமாக பாப்பாவுக்கும் பசுவுக்கும் வயதாகும்…..//
ஓடி விளையடு பாப்பா
கிழட்டு பசுவை என்ன செய்ய?
நீ கிழட்டு பசுவை என்ன செய்வாய் ?
தொந்தரவு செய்யாமல் இருந்தால் போதாதா..//
ஓடி விளையடு பாப்பா
கிழட்டு பசுவை–ரோட்டில் விட்டால் பஸ் மோதும்
ட்ரக்க்ல் விட்டால் ரயில் மோதும்
பாப்பா ஏன் பசுவை ரோட்டில்-[ட்ரக்க்ல்] விடவேண்டும்..//
//நம்ம பாப்பா அடிக்கடி சாப்பிடும்போதெல்லாம்…
அந்த பசுவுக்கும் நாலு கைப்பிடி வைக்கோலைப் போட்டால்
அதுவும் அசை போட்டுக் கொண்டு,
ஓடி விளையாட முடியாவிட்டாலும், தேமே என்று இருக்குமே..//
ஓடி விளையடு பாப்பா
கிழட்டு பசுவின் இறைச்சி சாப்பிடு !!
கிழட்டு பசுவின் இறைச்சி சாப்பிடு-அது
உன் குழதைக்கும் பி 12 உரமாகும் !!!!
//பாப்பா, உன் பாப்பாவுக்கு பி12 வேணும்னா ஊசி போட்டுக்கோ பாப்பா.. பால் கொடுத்து, கூட விளையாடிய பசுவை பி12-க்காக நீ அடித்துத் தின்றால், நாளை உன் பாப்பா, தேவைப்பட்டால் உன் கிட்னியை உருவத் தயங்காது பாப்பா.. பெரிய பாப்பா.. இப்போதாவது நான் நான் என்று ஓடாமல் கொஞ்சம் உக்காந்து யோசி பாப்பா.. என் செல்லப் பாப்பா..// Ampi said
பாப்பாவின் தொப்புல் கொடியை
பாதுகாத்தல்-செல் சிகிச்சை முறையில் [stem cell therapy]
சிறுநீரக செயலிழப்பை
சரி செய்துகொள்லுமே பாப்பா!
அம்மாவின் கிட்னியை ஏன் உருவ போவுது பாப்பா!!
பாப்பாவும், அம்மாவும் இன்னும் அருந்தும்
அனைத்து இரும்பு டானிக்லும் மாட்டின் இறைச்சியின் [ஈரல்] b12 vitamin
தான் உள்ளது !!!
அன்புடன் ,
கி.செந்தில் குமரன்
நன்றி:
இந்த கவிதை சிறப்பு அடைய செய்த திரு என் அன்பு தம்பி அம்பி அவர்களுக்கு

கவிதை: உயிரியல் வாழ்க்கை சுழற்சியில் [biological life cycle] எதுவும் வீண் ஆகாது


என் அன்பு தம்பி அம்பி[in vinavu.com] ,
நமக்குள் உள்ள ஒரே முரண்….கிழட்டு பசுவை என்ன செய்ய?
கிழட்டு பசுவை B 12 உயிர்ச்சத்து[vitamin] மூலப்பொருள் [Raw material] ஆக்கலாமா ?
உயிரியல் வாழ்க்கை சுழற்சியில் [biological life cycle] எதுவும் வீண் ஆகாது !!!!
கிழட்டு பசுவின் இறைச்சி சாப்பிட்டால் நமக்கு பி 12 உரமாகும்!!
கிழட்டு பசுவின் சடலத்தை புதைத்தால் தாவரத்துக்கு எறு ஆகும் !!!
தாவரத்தை நீயும் , பசுவின் இறைச்சிஐ நானும் வாயால் தானே உண்கிறோம்
உயிரியல் வாழ்க்கை சுழற்சியில் [biological life cycle] எதுவும் வீண் ஆகாது !!!!
நீ உன் வழக்க படி கிழட்டு பசுவின் சடலத்தை புதைத்து …. B 12 ஊசி ஏற்றிகொள்!!
நான் என் வழக்க படி கிழட்டு பசுவின் இறைச்சி சாப்பிட்டு B 12அய் செறித்து ஏற்றிகொள்கின்றேன்!!!
நான் உன் பண்பாட்டில் தலைஇட மாட்டேன் ! நீயும் என் பண்பாட்டில் தலைஇடாதே!!!!
உயிரியல் வாழ்க்கை சுழற்சியில் [biological life cycle] எதுவும் வீண் ஆகாது !!!!
பல மொழி , பல இனம் ,பல மதம் இந்த நாடு
ஒத்திசைவு சமநிலையில்[harmonic balance] இருக்க…
நாம் மற்றவர் முறைக்கும் இடம் கொடுப்போம்
உயிரியல் வாழ்க்கை சுழற்சியில் [biological life cycle] எதுவும் வீண் ஆகாது !!!!
அன்புடன் ,
கி.செந்தில் குமரன்