Saturday, June 28, 2014

Proving Evoluation Theory By Mutation மரபியல் மாற்றம் மூலம் பரிணாமம் கோட்பாட்டை நிரூபித்தல்

மரபியல் மாற்றம் மூலம் பரிணாமம் கோட்பாட்டை நிரூபித்தல்

அறிமுகம் :

டார்வின், உயிரினங்களின் தோற்றம், இயற்கைத் தேர்வு – ஒரு அறிமுகம் என்ற இக் கட்டுரைக்கு உறுதுணையாக எழுதப்படும் “மரபியல் மாற்றம் மூலம் பரிணாமம் கோட்பாட்டை நிரூபித்தல்” என்ற இந்த துணைகட்டுரையீன் நோக்கம் தலைப்பை போன்றே மிக எளிமையானது.அனைத்து உயிரினங்களும் செல்களால் ஆனவை.மனிதஉடலுக்குள் கோடிகணக்கான கண்ணுக்கு புலப்படாத செல்கள் உள்ளன்.இச் செல்களை காண பல வகைபட்ட நுண்ணோக்கிகள் மட்டுமே பயன்படும்.ஒவ்ஒரு செல் உள்ளும் DNA[Deoxyribonucleic acid] உள்ளது.இந்த DNA, இரட்டை சுருள் அமைப்புடன் உள்ளது என்பதை கண்டு உணர்ந்ததுக்காக ஜேம்ஸ் வாட்சன் மற்றும் பிரான்சிஸ் கிரிக் ஆகியவர்கள் நோபல் பரிசு பெற்றனர்.DNA உள் காணப்படும் நான்கு மூலக்கூறுகள் அடினைன் ( A), சய்டோசின் (C ), குவானைன் (G) மற்றும் தைமின் (T) ஆகியவை. Aவும் Tயும் நண்பர்கள் என்பதால் இவர்கள் இருவரும் மட்டுமே கை கோர்ப்பார்கள். அதுபோலவே Gயும் C யும் இணைவார்கள். [ AT, G C ]இந்த DNA கோடிகணக்கான A ,T,G ,C மூலக்கூறுகளால் உருவானது.


Genes [மரபியல் தொகுப்புகள்] 

பல நூறு கோடி a-t, g-c இணைப்புகள் மூலம் கட்டமைக்கபட்ட DNA வை எளிமைபடுத்த ஒரு ரயில் வண்டியீன் அனைத்து தொடர் பெட்டிகளுக்கு உதாரணமாக கொள்ளலாம் எனில் அதில் உள்ள தொட்ற்சியான 5 பெட்டிகளை Gene [மரபியல் தொகுப்பு] க்கு ஒப்பிடலாம்.மனித செல்லில் உள்ள DNA வுக்குள் 20,000 முதல் 25,000 வரையிலான மரபியல் தொகுப்புகள்[Genes]பொதித்து வைக்கபட்டு உள்ளன. ஒவ்வொரு Genes [மரபியல் தொகுப்பும்]ஒரு குறிப்பிட்ட நம் உடல்சார்ந்த பண்புகளை[physical traits] கொண்டு உள்ளன. இந்த உடல்சார்ந்த பண்புகள் ஒரு தலைமுறையில் இருந்து அடுத்த தலைமுறைக்கு இனபெருக்கத்தீன் போது கடத்தபடுவதால் தான் நாம் நம் பெற்றோர்கள் உடல்சார்ந்த பண்புககளை பெருகின்றோம். 

மரபுவழி உடல் குறைபாடுகள் [genetic disorders]

மரபுவழி உடல் குறைபாடுகள் [genetic disorders] ஏற்பட காரணம் ,இனபெருக்க செயலின் போது இணையும் கருமுட்டையும்[Ovum] ,விந்து அணுவும் [sperm cell] பெற்றோர்கள் இடம் இருந்து குழந்தைக்கு கடத்தபடும் Gene [மரபியல் தொகுப்பில்] உள்ள குறைபாடுகளே முக்கிய காரணம். ஒரு Gene [மரபியல் தொகுப்பில்] உள்ள குறைபாடு காரணமாக 6000 வரையீலான மரபுவழி உடல் குறைபாடுகள் [genetic disorders] பிறக்கும் 200 குழந்தைகளில் ஒரு குழந்தைக்கு ஏற்பட சாத்தீயம் உள்ளது கண்டு அறிய பட்டு உள்ளது.
உதாரணம் :
cystic fibrosis, sickle cell disease, Fragile X syndrome, muscular dystrophy, or Huntington disease
ஒன்றுக்கு மேல்பட்ட Genes [மரபியல் தொகுப்பில்] ஏற்படும் குறைபாடு காரணமாகவும் மரபுவழி உடல் குறைபாடுகள் [poly genetic disorders] ஏற்பட வாய்ப்பு உண்டு.
உதாரணம் :
Alzheimer’s disease, breast cancer, leukemia, Down syndrome, heart defects, and deafness.
Genes [மரபியல் தொகுப்பில்] குறைபாடு அல்லது மாற்றம் [mutation] ஏற்பட காரணம் என்ன ? என்ற கேள்வி நம் உள் எழும் எனில் நாமும் டார்வின் பரிணாமம் கோட்பாட்டை ஒட்டி சிந்திக்கீன்றோம் என்பது புலன் ஆகும்.

Genes [மரபியல் தொகுப்பின் ] விவரங்களை பொருவது எப்படி ?
 
மனித மரபுத்தொகுதி ஆய்வு திட்டம்[ Human genome project] மூலம் கடந்த 27 ஆண்டுகலாக மனித DNA மீதான ஆய்வுகள் நடத்தபட்டு DNA வில் உள்ள 25,000 வரையிலான Genes [மரபியல் தொகுப்பிகள் ] கண்டு அறியபட்டு அவை தரவுதளங்களில் [database] வரிசை[sequence] படுத்த பட்டு உள்ளன.உதாரணத்துக்கு இத் தகவலை கீழ் கண்ட இணைய தளத்தீன் தரவுதளங்களில் [database] இருந்து நாம் பெற முடியும்.
[1]DNA Data Bank of Japan [DDBJ]
http://www.ddbj.nig.ac.jp/
[2]National Center for Biotechnology Information [ NCBI]
http://www.ncbi.nlm.nih.gov/
[3]European Molecular Biology Laboratory [EMBL ]
http://www.embl.org/


கதிரியக்கத்தால் ஏற்படும் Genes [மரபியல் தொகுப்பில்] ஏற்படும் குறைபாடு அல்லது மாற்றம் [mutation] :

1927 டாக்டர் H.J. முல்லர் அவர்கள் ஆய்வுக்காக டிரோசோஃபைலா பழ ஈக்களை கதிரியக்கத்துக்கு உட்படுத்தீனார்.இவை மிக விரைவாக இனபெருக்கம் செய்யும் என்பதால் அவற்றீன் நூற்றுகணக்கான சந்ததிகளையும் Dr. H.J. Muller அவர்களால் குறுகிய காலத்தில் பரிசோதனைக்கு உட்படுத்த முடிந்தது. கதிரீயக்கம் காரணமாக டிரோசோஃபைலா பழ ஈக்களீல் ஏற்பட்ட கோணலான இறக்கைகள்[crooked wings ] பழ ஈக்களீன் பல தலைமுறைகளுக்கும் தொடர்வதை கண்டு அறீந்தார். டாக்டர் முல்லர் அவர்களுக்கு இந்த ஆய்வுக்காக நோபல் பரிசு வழங்கப்பட்டது. இவ் ஆய்வு நடந்த கால கட்டத்தில் அறிவியல் சமுகத்துக்கு Genes [மரபியல் தொகுப்பு] பற்றிய அறிவு முழுமை அடையாமல் இருந்ததையும் நாம் கணக்கில் கொள்ளவேண்டும். 


மரபியல் தொகுப்பில்[Genes] ஏற்படும் மாற்றங்கள் [Mutations] மூலம் பரிணாம வளர்ச்சி கோட்பாட்டை புரிந்துகொள்ளுதல் [Understanding evolution theory by Gene Mutation]

[1]Hox ஜீன்கள் கரு வளர்ச்சியை[ embryonic development] கட்டுப்படுத்தும் வலிமை வாய்ந்தவை. Hox ஜீன்கள் (ஈக்கள் மற்றும் மனிதர்கள் உட்பட) பல விலங்குகளில் காணப்படுகின்றன.இவை கட்டுப்பாடுத்தும் ஜீன்கள் என்று அழைக்கபடுவதற்கு காரணம் இவை மற்ற ஜீன்களீன் செயல்பாடுகளை கட்டுப்டுத்துகீன்றன. மேலும் Hox ஜீன்களில் ஏற்படும் மாற்றம் [mutation] உயிரிங்களீன் உடல் அமைப்பை மாற்றும் அளவுக்கு வலிமையானவை. மரபியல் விஞ்ஞானிகள் நடத்தீய ஈக்கள் ஆய்வு மூலம், Hox ஜீன்களில் ஏற்படும் மாற்றம் ஏற்படுத்துவதன் மூலம் ஈக்களீன் நெற்றியில் உள்ள உணர் கொம்புகளுக்கு [antennae] பதிலாக கால்களை முளைக்க வைக்க முடியும் என்பதை நிறுபித்தார்கள்.
[2]MWS/LWS ஜீன்களில் ஏற்பட்ட மாற்றம் [mutation] காரணமாக வெவ்வேறு ஸ்பெக்ட்ரம் [நிறங்களை]நம்மால் கண்டறிய முடிகின்றது.
[3]ஜீன்களில் ஏற்படும் மாற்றங்கலே [mutation] பரிணாம வளர்சிக்கு அடிப்படை. சுற்றுச்சூழலில் உள்ள கதிர்வீச்சு,இரசாயன பொருட்கள் காரணமாகவும் , DNA வை மறுபிரதி[ DNA replication] எடுக்கும் போதும் ஜீன்களில் மாற்றம்[gene mutation] நடைபெறுகின்றன.


முடிவுரை [conclusion ]:

இக் கட்டுரையை எளிமைபடுத்தும் நோக்கத்துடன் குரோமோசோம்கள் ,அவற்றுக்குள் ஜீன்கள் தர்க்கபடி [logically but not physically] பொதித்து வேக்கபட்டு உள்ள விவரங்கள் , XX ,XY செக்ஸ் குரோமோசோம்கள் [XX/XY sex chromosomes] பற்றீய விவரங்களையும் தவீர்த்து உள்ளேன்.மேலும் எவரேனும் இனியும் டார்வின் அவர்களீன் பரிணாமம் கோட்பாட்டை மறுதலிபார்கள் எனில் அவர்களீன் ஸ்டெம் செல்களை சாம்பிள் எடுத்து அதன் HOX ஜீன்களில் மாற்றம்[gene mutation] செய்து ஒற்றை கொம்புகள் உடைய ஆனால் அவர்களை போன்ற மனிதர்களாகவே cloning Technology மூலம் உருவாக்கி உலகில் நடமாட விடுவேன் என்பதை அழுத்தமாக தெரிவித்துகொள்கின்றேன் :-)