கரித்தாள்
தெரியவில்லாயா தம்பீ...? கட்டுரைகள் – பெருமாள் முருகன்[ஓரு முழுமையான விமர்சனம்](
Carbon Paper You Do Not Know ?- Perumal Murugan - Essays - A Complete Critic)
"........கருவறையில்
மொட்சம் ஆனா எலி ; கருவறை உள்ளே சென்று எலியை எடுத்து , கருவறையை புனிதப்படுத்திய உங்கள்
மாணவனின் கதை கேடு கெட்ட இந்து சனாதனத்தின் அழகிய முரண்........ "
ஐயா பெருமாள் முருகன் ,
உங்கள்
கட்டுரைகள் , சிறுகதைக்கான ஈர்ப்பு[உயிர்ப்பு ] உடன் உள்ளன . உங்கள் நாவல்,சிறுகதைகளை
விட உங்கள் கட்டுரைகள் [ கரித்தாள் தெரியவில்லாயா தம்பீ கட்டுரைகள் – பெருமாள் முருகன்]
மிகவும் பயன் உள்ளதாகவும் ,எளிய நடையில் அனைவருக்கும் புரியும் படியும் உள்ளன. முதல்
முறை உங்கள் எழுத்தை படிக்கும் உறவுகளுக்கு உங்கள் கட்டுரைகளை தான் சுட்டுவேன். தமிழில்
நிறைய கட்டுரைகள் எழுத்து தமிழிலேயே எழுதுங்கள்.நாவல்,சிறுகதைககளில் வட்டார வழக்கையும்,தலித்தியத்தையும்
பயன் படுத்துவது மிக்க நன்று.
கரித்தாள்
தெரியவில்லாயா தம்பீ ? கட்டுரைகள் – பெருமாள்முருகன்[விமர்சனம்]
23
கட்டுரைகள் உள்ள இப்புத்தகம் கடந்த 20 ஆண்டுகள் தமிழகத்தின் சமுக-அரசியல் நிகழ்வுகளை
மிக நூட்பமாக ஆய்துள்ளது.
[1]"மாங்குயில்
கூவிடும் பூஞ்சோலை " யில் புரட்சிகர அரசியலை விட்டு வெளியேறிய பின், தாங்கள் சனநாயக
முறையில் வேலை கேட்டு போராடியதையும்,போலிஸ் காட்டிய பூச்சாண்டி [உரிமை மீறல்களையும்]
பதிவு செய்துள்ளீர்கள்.
[2]"எருமைபாலும்
பத்திரிகை வேலையும்" யில் தமிழ் கற்றவனின் கோபம் [கற்றது தமிழ் பிரபாகரனை விட]
பல மடங்கு தெறிக்கின்றது. உங்களால் குறைந்த ஊதியத்தைக்கூட பொறுத்து இருக்க முடியும்.
"ஓற்றுப்பிழைகளை திருத்தக்கூடாது" என்ற தடை உங்களை அப்பத்திரிகையை விட்டு
வெளியேறியது.இக்காரணத்தையே நீங்கள் கூறி வெளியேறி இருந்தால் மிக்க பொருத்தமாக இருந்து
இருக்கும்.
[3]
"கரித்தாள் தெரியவில்லாயா தம்பீ" யில் புலவர் பெருஞ்சித்தனார் [ சித்திரனார்
?] அவர்களிடம் தாங்கள் கொண்டுள்ள மதிப்பீடுகள் ,தனித்தமிழ் மீது உள்ள உங்கள் நம்பிக்கை
வெளிபடுகிறது. நான் கூகிளிட்டப்பொது "பெருஞ்சித்தனார்" என்று தான் அதிக பதில்கள்
கிடைக்கின்றது.[ 5,000 மேலான பதில்கள்]
[4]"ஆட்டோ
வாசகங்கள்" கட்டுரையில் தனிமை மனிதனின் கிறுக்குத் தனங்களை காட்டியுள்ளிர்கள்.
இக்கட்டுரையை படிக்கும் போது நீங்கள் "கற்றது தமிழ் பிரபாகரனை" நினைக்க வைக்கின்றிர்கள்.
[5]"வேகம்
இழந்த விசைத்தறிகள்" கட்டுரை நம் மக்களின் மொக்கைத்தனமான போராட்ட முறைகளை கவனமாக
விமர்சனம் செய்து உள்ளது. தமிழகத்தில் புரட்சிகர அரசியலில் தன்னை ஈடுபடுத்திக்கொள்ளும்
ம க இ க போன்ற இயக்கங்களுக்கும் இந்த விமர்சனம் பொருந்தும். புதிய போராட்ட முறைகளை
கூறாதது இக்கட்டுரையின் மிகப்பெரிய குறை.
[6]"கருவறை
எலி" கட்டுரையில் நந்தன் முதல் ம க இ
க வரை கோவில்[கருவறை] நுழையும் உரிமைக்காக போராடியதை நேர்மையாக பதிவு செய்து உள்ளீர்கள்.
கருவறையில் மொட்சம் ஆனா எலி ; கருவறை உள்ளே சென்று எலியை எடுத்து , கருவறையை புனிதப்படுத்திய
உங்கள் மாணவனின் கதை கேடு கெட்ட இந்து சனாதனத்தின் அழகிய முரண்.இந்த இரு கட்டுரைகளும்
ம க இ க மற்றும் வினவு.காம் ஆகியவர்களால் கவனிக்கப்படவேண்டியவை. ஈழம் சார்ந்த கட்டுரைகளை
திரு பெமு எழுதாதது அவரின் 'கவனமான கவனக்குறை' என்று அய்யம் அடைகின்ரேன் .
[7]"வண்ண
வண்ணப் பூக்கள் " கட்டுரை திரு பெருமாள் முருகன் அவர்களின் முதல் பெருங்கதை
"ஏறு வெயில்" வெண் திரை நோக்கி பயனித்த கதை. திரு பாலு மகேந்திரா ஏறு வெயிலை
திரைக்கு தெரிவு செய்தது ;திரைக்கு பொருந்துமா என்ற திரு பெமு வின் ஐயம்; இறுதியில்
வாய்ப்பு கை நழுவி போனதன் கதை.தமிழ்த் திரைக்கு ஓரு "பதேர் பன்சாலி" வாய்க்கவில்லை.
[8]"முதல்
கடிதம்" கட்டுரை சினேகிதி, திரு பெமுவுக்கு எழுதிய முதல் பதில் கடிதம் கிடைத்தும்,
கைக்கு கிடைக்காத "அறம் சார் நீதி " சோகக்கதை.
[9]"உள்ளது
கொண்டு உண்ணுதல் " கட்டுரை , எம் கொங்கு மக்களின் [நான் வாழ்த மல்லசமுத்திர வாழ்க்கையை
மறக்க முடியுமா ?] எளிய உணவு முறைகளை அவற்றின் வட்டார வழக்குச்சொற்களுடன் அறிமுகப்படுத்துகின்றது.
திரு பெமு வின் கருத்துருக்கள் :
[௧]மக்களின்
உணவுமுறை ,அவர்கள் வாழும் நிலம் ,பொருளாதார வலிமை சார்தது.[இக்கட்டுரையில் ,கொங்கு
மக்கள் "வீட்டுக்கு வெளியே" தனிப் பாத்திரத்தில் "பெரியாட்டுக்கறி"
சமைக்கும் அழகியல் விடுபட்டு உள்ளது ]
[௨]ஆண்டானும்,அடிமையும்
ஒரே மாதிரியான உணவுமுறைகளை பெரும்பாலும் கொண்டு உள்ளனர். [1980கள் வரை உண்மை தான் என்றாலும்,
இன்று இருவருமே ரேசன் அரிசியை தானா சமைத்துண்கின்றனர் ?]
[௩]குக்கர்
இல்லாமல் ,கஞ்சி வடிக்காமல் சோறு ஆக்கும் முறை [எரிபொருள் சேமிப்பு ]
[௪]கொங்கு
மக்களின் "அரிசி-பருப்பு" சோறு செய்முறை [அரிசி-மாவுச்சத்து ,பருப்பு-புரதம்
நன்று. ; எம் கொங்கு மக்கள் இத்துடன் ஏதோ ஒரு காய்கறி[விட்டமீன்] சேர்தால் மிக்க நன்று
]
[௫]"விக்கவிக்கத்
தின்னாலும் கெழக்க வெளுக்கப் பீதான்" என்ற கொங்கு வட்டார பழமொழியுடன் முடியும்
இக்கட்டுரை, பெரு-சிறு நகர, நடுத்தர-உயர்நடுத்தர மக்களின் ஆடம்பர-சக்கை உணவுமுறைகளுக்கு
எதிராக நல்ல மாற்று வழியை விவாதிக்கின்றது.
[10]"ஹர
ஹர மகாதேவா!சம்போ மகாதேவா!" கட்டுரை, நாட்டார் வழ்வியலுக்கு எதிராக, இந்து சனாதனத்திற்கு
ஆதரவாக தமிழக அரசு கொண்டு வந்த பலியிடல் தடுப்புச் சட்டம் மீது எதிர்வினை ஆற்றிய கையேடு.அசைவ
முருகன் "சைவன்" ஆன கதையில் தொட்ங்கி ,உலகமயமாக்கலில் முடியும் கட்டுரை.
திரு
பெமு அவர்கள், வெளிப்படுத்தும் கருத்துக்கள் :
[௧]"சிறுதினை
மலரொடு,மறி அறுத்து" உண்டு வாழ்ந்த "திருமுருகாற்றுப்படை அசைவ முருகன்",
பார்பனர்களால் குட முழுக்கு சிகிச்சை மூலம் சைவனாக மாற்றப்பட்டான்.
[௨]கோவில்
அசைவம் ,மூலவர் சைவம் என்ற நிலையை மாற்றி கோவிலும் சைவம் ,மூலவரும் சைவம் என்ற நிலைக்கு
மாற்ற முயலும் சட்டம் இது.
[௩]இச்சட்டம்
சிறுதெய்வங்களை பொருந்தெய்வங்களுடன் இணைக்கும் முயற்சி .[இணைக்கும் முயற்சியா ?அல்லது
அழிக்கும் முயற்சியா ?]
[௪]இச்சட்டம்,
நாட்டார் சிறுதெய்வ கோவில்களில் நிகழும் சமுக செயல்களை [இனக்குழுகளின் கூட்டங்களுக்கு
இடையிலான திருமண பேச்சு , பஞ்சாயத்துகள்] குலைக்கின்றன.[திரு பெமு அவர்கள் ,இச்சட்டம்
மூலம் , இனக்குழுகளின் சாதீய கட்டுமானத்தை தளர்த்த சாத்தியம் உள்ளதா என ஆய்வு செய்ய
தவறிவிட்டார் ]
[௫]
கோவில்களை சைவமாக்கும் முயற்சி, இந்து மத அமைப்புகள் உலகமயமாக்கலுக்கு துணைபோகும் செயல்
.
[௬]
த.அ வின் "கள்ளுக்கு தடை ,பிராந்திக்கு ஏற்புரை" கொள்கையை இச்சட்டத்தின்
சிறுதெய்வ அழீப்பு கொள்கையுடன் ஓப்பீடு செய்யும் திரு பெமு அவர்கள் , இரண்டுமே [மதம்
-மது ] போதைக்கான விடயங்ககள் தான் என்பதை ஏனோ கூறவில்லை.
முற்றும்.
அன்புடன்
,
கி.செந்தில்குமரன்
-------------------------------------------------------------------------------
திரு பெருமாள்முருகன் அவர்களின்
பதில் :
ஒவ்வொரு
கட்டுரையையும் வாசித்து எழுதியிருக்கிறீர்கள். நன்றி. இவற்றை முழுமையான வடிவில் உங்கள்
முகநூலில் வெளியிடுங்கள். அதைப் பகிர வசதியாக இருக்கும்.
மல்லசமுத்திரமா
உங்கள் சொந்த ஊர்?
அன்புடன்,
பெமு
-------------------------------------------------------------------------------
ஐயா
பெருமாள் முருகன் ,
உங்கள்
கேள்வி "மல்லசமுத்திரமா உங்கள் சொந்த
ஊர்? "
உண்மையில்
ஆம் அல்லது இல்லை என்ற இரு
பதில்களுக்குள் அடங்குமா ?
1960
களில் தொடங்கி ,இன்று வரை உள்ள நிகழவுகளை இரண்டு
பூக்குழி , ஓரு ஏறுவெயில் கதை அளவுக்கு சொல்ல வேண்டி இருக்குமே !
பூக்குழி
1:
1960
களில் பி.கே சின்னப்பன் (ஆசிரியர் ஓய்வு) [பாவாண்டகவுண்டனூர், அய்யம்பாளையம் பிரிவு ,கோபி
வழி ] அவர்கள் என் பெரியம்மாவை[அரசு
பாய் (ஆசிரியர் ஓய்வு) கடலூர்] காதலித்து இரு
பக்க உறவினர் ஆதரவு இன்றி திருப்பதி கோவிலில் "கலப்பு மணம்"
செய்து இன்றும் பாவாண்டகவுண்டனூரிலேயே
" என் தல சின்னப்பன் [Yes He Is My Real Hero]" வாழும் கதை [நமக்கு
எல்லாம் முன் உதாரணமாக வாழும் மக்களின்
கதை ].
பூக்குழி
2:
இரு
பக்க உறவினர் ஆதரவுடன்
"கலப்பு மணம்" செய்து
வாழும் எங்கள்[கி.செந்தில்குமரன்,கடலூர்----கோ.வணிதா,
கீழக்கரனை] கதை இது.
ஏறுவெயில்:
நகரமயமாக்கப்பட்டு, நிலம் இழந்து
, வாழ்வு இழந்து அகதியாக வாழும்
"கீழக்கரனை" [போர்ட் மறைமலை நகர் ]கிராமத்தின் கதை இது.
இம் மூன்று
கதைகளையும் நான் கூறினால் தான் உங்கள் கேள்வி "மல்லசமுத்திரமா உங்கள் சொந்த ஊர்? "
க்கு பதில் கிடைக்கும்.
ஐயா, "இக்கதையில்" பதில் கூறவா
?
அன்புடன்
,
கி.செந்தில்குமரன்
--------------------------------------------------------------------------------------
அன்புள்ள
குமரன்,
இவ்வளவு
பின்னணிக் கதைகள் நினைவுக்கு வந்தது மகிழ்ச்சி. மல்லசமுத்திரத்திற்கும் உங்களுக்குமான
தொடர்பு குறித்து ஒரு வரி எழுதிச் சென்றிருந்தீர்கள். மல்லசமுத்திரம் எனக்கும் முக்கியமான
ஊர். ஆகவேதான் அந்த ஊரோடு உங்கள் தொடர்பு எப்படியானது என அறிய ஆவல் கொண்டேன். பின்னணிக்
கதைகளோடுதான் அறிய முடியும் என்றால் அறியக் காத்திருக்கிறேன்.
அன்புடன்,
பெமு
--------------------------------------------------------------------------------------
அன்புள்ள
அய்யா பெமு ,
"யாதும்
ஊரே யாவரும் கேளிர்
தீதும்
நன்றும் பிறர்தர வாரா
நோதலும்
தணிதலும் அவற்றோ ரன்ன
சாதலும்
புதுவது அன்றே, வாழ்தல்
இனிதென
மகிழ்ந்தன்றும் இலமே முனிவின்
இன்னா
தென்றலும் இலமே, மின்னொடு
வானம்
தண்துளி தலைஇ யானாது
கல்
பொருது மிரங்கு மல்லல் பேரியாற்று
நீர்வழிப்
படூஉம் புணைபோல் ஆருயிர்
முறை
வழிப் படூஉம் என்பது திறவோர்
காட்சியில்
தெளிந்தனம் ஆகலின், மாட்சியின்
பெரியோரை
வியத்தலும் இலமே,
சிறியோரை
இகழ்தல் அதனினும் இலமே" [நன்றி விக்கிபீடியா
]
என்ற
நம் கணியன் பூங்குன்றனார் அவர்களில்
கவிதையின் முதல் இரு அடிக்
கருத்தை சார்ந்து ,[கல்லூரி
ஆசிரியர் மற்றும் கணினி பயிற்றுநர்]
வேலை நிமித்தமாக நான் வாழ்ந்த ஊர்களில், [பாண்டிச்சேரி, விழுப்புரம், கும்பகோணம்,
மயிலாடுதுறை, ஆவடி, ஓசூர், மாம்பலம்,கள்ளக்குறிச்சி, கொடைக்கானல்,மல்லசமுத்திரம், மீண்டும்
மல்லை இப்போது மறைமலை நகர்] எனக்கு
மிகவும் பிடித்த ஊர் என் மல்லசமுத்திரம். நான்கு ஆண்டுகள்
என்னை சிறையிட்ட ஊர்.
மல்லையில்
இருந்த போது தான் உங்கள்
மாணவர் [ என் நண்பர்] திரு சின்னதுரை
மூலம் உங்கள் தொடர்பு கிடைத்தது.
ஒரு முறை பெரியார்
பல்கலைக்கழகத்தில் விடைத்தாள் திருத்தும்
பணியின் போது நாம் சந்தித்து
,ஏறுவெயில் ,கற்றது தமிழ் ,மக்கள் தொலைக்காட்சியில் உங்கள் உரைகள்
பற்றி விவாதித்து உள்ளோம்.
அன்புடன்
,
கி.செந்தில்குமரன்
--------------------------------------------------------------------------------
திரு பெருமாள்முருகன் அவர்களின்
பதில் :
நினைவிருக்கிறது
குமரன். உங்கள் முகம் மறந்திருந்தது அவ்வளவுதான்.
அன்புடன்,
பெமு