Friday, January 24, 2014

திரு பெருமாள் முருகன் அவர்களுடன் சமுக வலையில் ஒரு விவாதம் Tamil Grammar Discussion

என்  ஐயம் :

ஐயா,

[1] பூங்குழி , பூக்குழி, தமிழ் இலக்கணம் சார்ந்து எது சரி ?

உம்:
பூ + காற்று = பூங்காற்று அல்லது பூக்காற்று ?
பூ + சட்டை = பூஞ்சட்டை அல்லது பூச்சட்டை ?
பூ + தோட்டம் = பூந்தோட்டம் அல்லது பூத்தோட்டம் ?
பூ + பெயர் = பூம்பெயர் அல்லது பூப்பெயர் ?

[2]பூ + குழி = பூங்குழி அல்லது பூக்குழி

எந்த புணர்ச்சியில் ஓசை இனிமை கிடைக்கும் ?




திரு  பெருமாள் முருகன்  அவர்களின்  பதில் :

எது மக்கள் வழக்கில் இருக்கிறதோ அது சரி. தீக்குண்டம், அக்கினிக் குண்டம் ஆகியவற்றை மக்கள் ‘பூக்குழி’ என்றே சொல்கின்றனர். எந்த ஓசை இயல்பாக உள்ளதோ அதையே மக்கள் வழங்குவர். இது தொடர்பான இலக்கணக் கருத்துக்கள் இரண்டு வகையையும் ஏற்றுக்கொள்வனவே.

No comments: