Monday, February 2, 2015

தேகம் எழுதுவது எப்படி ? பாகம் 8

தேகம் எழுதுவது எப்படி ? பாகம் 8




சாருவை பற்றிய பெருமாளின் மிக பழைய கருத்து பின்நவினத்துவ ஐரோப்பிய இலகியங்களை காப்பி அடிக்கின்றார் என்பது. பெருமாளை பற்றிய சாருவின் கருத்து : பெருமாள் முருகன் மானிடவியலை ஆய்வு செய்து புத்தகம் எழுதியதாக கூறினார். நான் படித்தவரையில் அப்படியொரு ஆய்வு எதுவும் நடத்தி எழுதியதாக தெரியவில்லை’’ என்று. மேலும் பெருமாள் முருகன் ஏதோ அவருக்கு தெரிந்த்தி எழுதிவிட்டார். அது உலக பிரச்னையாக மாறி வருகிறது. அந்த புத்தகத்துக்கு புக்கர் விருது கிடைத்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. தஸ்லிமா நஸ்ரின் என்பவர் எழுதிய லஜ்ஜா என்ற குப்பைக்கும் விருது கிடைத்தது என்று.


பின்நவினத்துவ எழுத்தளர்களான இருவருமே ஒருவரை ஒருவர் ஒளிவு மறைவு இன்றி விமர்சனம் செய்து கொள்வது என்பது தமிழ் இலக்கிய உலகில் புதியது ஒன்றும் அல்லவே ! இலாப நோக்கத்துடன் இயங்கும் எழுத்தாளர்கள், குழுக்களாக பிரிந்து இருக்கும் சூழலின் வெளிப்பாடும் அவர்கள் தம்மை இணைத்துக்கொண்ட பதிபகங்களின் தேவைக்கும் அவற்றின் அரசியலுக்கும் ஏற்ற முறையில் காய்களை நகர்த்துவது என்பது தொடர்சியாக நடந்துகொண்டு தான் இருக்கும் .. இது இந்த ஆண்டு சென்னை புத்தக விழாவை ஒட்டி எளிய வாசகனும் அறிந்து கொண்ட நிகழ்வு. போன ஆண்டு அகடமி விருது பெற்ற காலச்சுவடு பதிப்பகத்தின் நாவல் போன்று இந்த ஆண்டு அகடமி விருது பெற்ற பூமனியின் அஞ்சாடி[க்ரியா பதிப்பகம் ] விற்பனை ஆகாதது தான் பெரிய சோகம் ! அடுத்த ஆண்டு அதிக விற்பனைக்கான திரைமறைவு காய் நகர்த்தல்களை அகடமி விருது பெருவதற்கான முயற்சிகளுடன் இப்போதே தொடங்கி இருப்பார்கள் !


முற்றும்

No comments: