கரித்தாள் தெரியவில்லாயா தம்பீ கட்டுரைகள் – பெருமாள் முருகன்[விமர்சனம்-5]( Carbon paper You do not know -Perumal Murugan -Essays-Critic-5 )
ஐயா பெருமாள் முருகன் ,
கரித்தாள் தெரியவில்லாயா தம்பீ கட்டுரைகள் – பெருமாள் முருகன் [விமர்சனம் தொடர்கின்றன]
23 கட்டுரைகள் உள்ள இப்புத்தகம் கடந்த 20 ஆண்டுகள் தமிழகத்தின் சமுக-அரசியல் நிகழ்வுகளை மிக நூட்பமாக ஆய்துள்ளது.
"உள்ளது கொண்டு உண்ணுதல் " கட்டுரை எம் கொங்கு மக்களின் [நான் வாழ்த மல்லசமுத்திர வாழ்க்கையை மறக்க முடியுமா ?] எளிய உணவு முறைகளை அவற்றின் வட்டார வழக்குச்சொற்களுடன் அறிமுகப்படுத்துகின்றது.திரு பெமு வின் கருத்துருக்கள் :
[௧]மக்களின் உணவுமுறை ,அவர்கள் வாழும் நிலம் ,பொருளாதார வலிமை சார்தது.[இக்கட்டுரையில் ,கொங்கு மக்கள் "வீட்டுக்கு வெளியே" தனி பாத்திரத்தில் "பெரியாட்டுக்கறி" சமைக்கும் அழகியல் விடுபட்டு உள்ளது ]
[௨]ஆண்டானும்,அடிமையும் ஒரே மாதிரியான உணவுமுறைகளை பெரும்பாலும் கொண்டு உள்ளனர். [இன்று இருவருமே ரேசன் அரிசியை தானா சமைத்துண்கின்றனர் ?]
[௩]குக்கர் இல்லாமல் ,கஞ்சி வடிக்காமல் சோறு ஆக்கும் முறை [எரிபொருள் சேமிப்பு ]
[௪]கொங்கு மக்களின் "அரிசி-பருப்பு" சோறு செய்முறை [அரிசி-மாவுச்சத்து ,பருப்பு-புரதம் நன்று. ; எம் கொங்கு மக்கள் இத்துடன் ஏதோ ஒரு காய்கறி[விட்டமீன்] சேர்தால் மிக்க நன்று ]
[௫]"விக்கவிக்கத் தின்னாலும் கெழக்க வெளுக்கப் பீதான்" என்ற கொங்கு வட்டார பழமொழியுடன் முடியும் இக்கட்டுரை, பெரு-சிறு நகர, நடுத்தர-உயர்நடுத்தர மக்களின் ஆடம்பர-சக்கை உணவுமுறைகளுக்கு எதிராக நல்ல மாற்று வழியை விவாதிக்கின்றது.
முற்றும்
அன்புடன் ,
கி.செந்தில்குமரன்
No comments:
Post a Comment