எங் கதெ ஒப்பாய்வு விமர்சனம் :
இமையத்தின் கலவாடிய லும்பனும் தஞ்சை பிரகாஸின் உழைத்து கொடுத்த கள்ளனும்
நேற்றும் முன்தினமும் இமையம் எழுதிய எங் கதெ என்ற சிறு நாவலை படிக்க நேரம் கிடைத்தது. கணவனை இழந்த கமலா என்ற பெண்ணுக்கும் அவளை மோகிக்கும் ஒரு லும்ப்னுக்கும் இடையிலான உறவை பற்றிய பதிவாக இந்த கதையை பார்க்கலாம். 110 பக்கங்கள் கொண்ட இந்த கதையில் இவர்கள் இருவருக்கும் இடையிலான கூடல் ஊடல் தான் முதன்மை பெற்று விளங்குகின்றது. "கொள்கைகளை கோட்பாடுகளை முன்னிருத்தியோ அவற்றை பிரச்சாரம் செய்யவோ எழுதப்படுபவை இலக்கியம் அல்ல. பிரச்சாரம் செய்வது இலக்கியத்தின் அடிப்படை நோக்கம் அல்ல " என்று கூறும் இந்த கதையாடிக்கு மகஇக போன்ற முற்போக்கு இயக்கங்கள் எல்லாம் முற்போக்கு பட்டம் கொடுத்து புல்லரித்துக் கொள்கின்றன.
கதையின் இறுதியில் லும்பன் ,கமலாவை கொல்லும் வெறியுடன் பிளேடு உடன் அவள் வீட்டுக்கு வருவான். கமலாவுடன் கலவாடும் போது அவளை கிழித்துக் கொல்ல நினைப்பான். நினைத்தது போன்றே அவளின் மூக்கை பிளேடால் கீறி அதனை நெகக்கீரல் என்று சாதிப்பான்.தன் கொலைவெறியை ஆற்றுப்படுத்திக்கொள்கின்றவன் அவளை விட்டு விலகி யார் கூடவேண்டுமானாலும் நீ வாழ்ந்துகொள் என்று கூறி பிரிவான். இந்த கதையை படிக்கும் பொது தஞ்சை பிரகாஸ் அவர்கள் எழுதிய மற்றுமொரு கதை மனதுள் அலையாடியது. கணவனை இழந்த பொண்ணின் குடும்பத்தை தன் உழைப்பால் சுமப்பவன் கதை அது. இறுதியில் அவன் அந்த பெண்ணின் மீது தனக்கு உள்ள அன்பை கூறுவான். எவர் படித்தாலும் மறக்க இயலாத கதை அது . எதுவென்று தேடி பாருங்கள் !
கலை இலக்கியங்கள் எல்லாம் சமுகத்தை ஒரு அடியாவது முன்னோக்கி நகர்த்தவில்லை என்றால் அப்படி பட்ட இலக்கியம் என்ன மயிதுக்கு ஆசிரியர் இமையம் அவர்களே!?

No comments:
Post a Comment