Sunday, January 12, 2014

சிறுகதை: சுன்னத் கல்யாணம்


Note : 

This is the feedback in http://www.vinavu.com from Mr.Tipu regarding a essay 

http://www.vinavu.com/2013/12/31/vanakkarayya-short-story/

I Said: 
Dear Tipu,

Doing Sunanth is good according to doctors. More over it gives us health [out of infection].
It [Doing Sunanth ] is good and it can be done by a doctor in a safe method instead of done by religious people.


with regards,
K.Senthilkumaran


Tipu replayed:

சுன்னத் கல்யாணம்


நன்றி செந்தில்,மருத்துவ வசதிகள் பெருகி விட்ட இன்றைய கால கட்டத்தில் பெரும்பாலும் மருத்துவ மனைகளில்தான் வலி தெரியாமல் சுன்னத் செய்து கொள்கிறார்கள்.பாரம்பரிய இசுலாமிய மருத்துவர்கள் [ஒசுதார்கள்] கூட மரத்து போக செய்யும் ஊசியை சிறுவனின் தொடையில் போட்டுவிட்டே சுன்னத் செய்கிறார்கள்.இந்த ஊசிகள் பரவலாக புழக்கத்தில் வருவதற்கு முன்பு கூட அவர்களின் பாரம்பரிய மருத்துவ மற்றும் அனுபவ அறிவு காரணமாக சிறுவனுக்கு பெரிய அளவுக்கு துன்பம் ஏற்படாமலேயே சுன்னத் செய்து வந்திருக்கிறார்கள்.
ஒரு சிலர் சித்தரிப்பது போல சுன்னத் நிகழ்வு ஒரு துன்ப நிகழ்வாக சிறுவர்களின் மனதில் தங்கியிருப்பதில்லை.மாறாக ஒரு இன்ப நிகழ்வாக சிறுவர்களின் மனதில் தங்கியிருக்கிறது.முப்பது நாற்பது ஆண்டுகளுக்கு முன் நடந்த ஒரு சில நிகழ்வுகளை சொல்கிறேன்.
சுன்னத் செய்வதை ”சுன்னத் கல்யாணம்” என்றே அழைப்பார்கள்.பொதுவாக மாலையில்தான் செய்வார்கள்.மதியம் உறவினர்,நண்பர்களுக்கு கல்யாண வீட்டில் விருந்து கொடுப்பார்கள்.அவரவர் ஆற்றலுக்கு ஏற்ப இதன் அளவு இருக்கும்.விருந்துக்கு பின் காத்திருக்கும் வேளையில் கலகலப்புக்கு பஞ்சமிருக்காது.அனைவருமே ”கல்யாண மாப்பிள்ளை” யை கொண்டாடுவார்கள்.பையனும் பரிசுப்பணங்கள்,புத்தாடை தரும் மகிழ்ச்சியில் இங்குமங்கும் ஓடியாடிக் கொண்டிருப்பான்.
பையனின் தந்தைக்கு மாமன் மச்சான் உறவுமுறையினரும் பையனின் தாய்வழி பாட்டன்மார்களும் கேலி பேசிக் கொண்டே இருப்பார்கள்.
ஒருமுறை ஒருவர் ”கல்யாண மாப்பிள்ளை”யை அழைத்து காதோடு ஏதோ சொன்னார்.சொல்லிக் கொண்டிருக்கும்போதே தந்தையை ஆச்சரியமாக திரும்பி திரும்பி பார்த்த பையன் நேராக தந்தையிடம் வந்தான்.
அத்தா,உனக்குமாத்தா இன்னைக்கு சுன்னத் கல்யாணம்
அதிர்ந்து போன தந்தை ”யார்ரா சொன்னது.அப்டிலாம் இல்ல”
காசிம் மாமுதா சொன்னாக.அதுனாலதா நீயும் புது சட்டை போட்டிருக்கியாம்.
சுற்றி இருந்தவர்கள் கொல்லென்று சிரித்து விட்டனர்.எல்லோரும் சிரித்தவுடன் பையனும் புரிந்தும் புரியாமலும் சிரிக்க ஆரம்பித்தான்.தந்தைக்கு கோபம் வந்து விட்டது.காசிமை நோக்கி கத்தினார்.
ஏண்டா.கூறு கெட்ட பயலே,சின்ன பயல்ட்ட என்ன பேசுறதுன்னு உனக்கு விவஸ்தை இல்ல.உளறுவாப்பயலே.
அந்த காசிம் பயல் அசருவதாக இல்லை.
”இல்ல மச்சான்,முப்பது நாப்பது வருசத்துக்கு முன்னால பண்ணிருப்பீக மறுபடியும் வளந்துருக்க போவுது.ஏதுக்கும் இன்னொருக்கா பண்ணிக்கங்க”
அடி செருப்பால நாயே,வந்து மிதிச்சன்னா ஊட்டி தெறிச்சு போகும்.
ஆனால் சிரிப்பலை அடங்குவதாக இல்லை.காசிம் பயந்தது போல பாவலா காட்டிக் கொண்டு அவசரமாக இடத்தை காலி செய்து விட்டு பந்தலுக்கு வெளிய போய் புறப்பட ஆயத்தமாக நின்று கொண்டான்.இன்னொருவர் எழுந்து ”காசிம்,நில்ரா நானும் வர்றேன்”என்று சொல்லிவிட்டு தந்தையிடம் வந்தார்.
”அப்ப மச்சான் நானும் புறப்படுறேன்.சாயங்காலம் அசர் தொழுத ஒடன வந்துர்ரென்”
நல்லது,மாப்பிள்ள,, தொழுத ஒடன வந்துரு,சர்பத் கரைக்கணும்.
சரி மச்சான் போற வழிலதான ஒசுதார் வீடு.எதுவும் சொல்லனுமா
இல்ல நேத்தே நா சொல்லிட்டேன்
”இல்ல, ரெண்டு கத்திய ரெடி பண்ணி கொண்டார சொல்லவா உங்களுக்கும் பண்ணனும்னு பேசிக்கிட்டு இருந்தீகளே”
சொல்லிவிட்டு அவசரமாக இரண்டு பேரும் ஓடிப்போகிறார்கள்.தந்தையோ நற நற வென பல்லை கடித்துக் கொண்டு அவர்களை திட்டிக் கொண்டிருந்தார்.
இன்னொரு வீட்டில் அண்ணன் தம்பி இருவருக்கு ”சுன்னத் கல்யாணம்”. சற்று வயதானவர் சின்ன ”கல்யாண மாப்பிள்ளை”யிடம் சொன்னார்.
டேய் பேரப்புள்ள.இன்னைக்கு உனக்கு சுன்னத் கல்யாணமா.இரு ஒசுதார் வர முன்னால உன் குஞ்ச நா அறுத்து எடுத்துட்டு போயிருவேன்.
பையன் சற்று திகைத்து விட்டு சொன்னான்.”போங்க நன்னா , நீங்க சும்மா சொல்றீங்க” ,
சற்று நேரம் கழித்து பெரிய ”கல்யாண மாப்பிள்ளை”யிடமும் அதையே சொன்னார்.தன் கையை பிடித்திருந்த பெரியவரின் கையை உதறி விட்டு சற்று விலகி நின்று அவன் சொன்னான்.
”அது வரைக்கும் என் கை புளியங்கா பறிக்குமா.நா உங்க குஞ்ச அறுத்துருவேன்”
சுற்றி இருந்தவர்கள் சிரிப்பில் பெரியவருக்கு வெட்கம் தாளவில்லை. அதிலிருந்து அவர் இருக்கும் இடத்தில் அந்த பையனின் தலை தட்டுப்பட்டாலே அருகில் இருப்பவர்கள் ”யோவ்,உங்க அண்ணன் பேரன் வர்றாய்யா ஏதுக்கும் கைலிய இறுக்கி கட்டிக்க” என்பார்கள்.அவர் இறக்கும் வரை இந்த மாதிரியான கேலிகள் ஓயவில்லை.
இந்த குதூகலங்களால் கவரப்படும் அதுவரை சுன்னத் செய்யப்படாத சிறுவர்கள் எனக்கு எப்பம்மா சுன்னத் கல்யாணம் பண்ணுவீக என்று கேட்பது கூட உண்டு.

By Tipu

No comments: