பிணவாடையில் மனிதம் :
பிப் 2009 தமிழ் ஈழத்து உயிர்களின் கருக்கள்கள் தமிழ் நாட்டில் வாடை அடித்துகொண்டு இருந்த கொடுர தருணங்கள் அவை. அடையாறு ,சென்னையில் கணினி பயிற்று நிறுவனத்தில் என் பிழைப்பு சி ,சி++,ஜாவா என்று பேசிக்கொண்டு ஓடிக்கொண்டு இருந்தது. தினம் தினம் படிக்கும் மாலை பத்திரிக்கைகளின் ஈழத்து கொலைகளின் தாக்கம் எனக்கு மரண வேதனையை அளித்துக்கொண்டு இருந்து. ஈழத்து பெண் சிறுமி 17 அல்லது 18 வயது இருக்கும் ., எனது கணினி பயிலும் மாணவியாக வந்து சேர்ந்தாள். குறைந்த நேரத்தில் அதிக மென்பொருட்களை பயின்றாள். எனக்கு ஏனோ எம் அண்ணன் பிரபாகரனின் மகளையே இவளும் அடிக்கடி எனக்கு நினைஊட்டினாள். மேலும் அடையாரில் உள்ள நாட்டிய பள்ளியிலும் பயின்று கொண்டு இருந்தாள்.
மார்ச் மாத முதல் வாரங்கள் , எனக்கு ஈழத்து போர் முடிவுகள் புலப்பட தொடங்கிய தருணங்கள் அவை. எனக்குள் அளவில்லாத வேதனை ., மனதில் கடுங் கோபம் .. , உக்கிரம் .., அறிவை அழிக்கும் வெறி.., இத்தகைய தருணத்தில் அண்ணன் பிரபாகரன் எதிரியின் மகள் மீது என்ன முடிவெடுப்பார் என்று சிந்திதேன்.
அன்று உடல் சுகமற்று கணினி கற்க வந்து இருந்தாள். உன்னை சிங்கள பெண் என்று இங்கு சென்னையில் யாரிடமும் வெளிகாட்டிகொள்லாதே என்று ஆங்கலத்தில் கூறினேன். மார்ச் மாத இரண்டாவது வாரத்தில் கணக்கியல் கற்க அவள் ஆஸ்திரேலியா சென்று விட்டாள் . எனக்கு ஏனோ அப்போது தான் மனதுள் நிம்மதி. தமிழனாய் தோற்று விட்டாலும் அண்ணன் வழியில் நானும் மனிதனாய் நிமிர்ந்து நிற்பதாக உணர்ந்தேன்.
No comments:
Post a Comment