Tuesday, July 15, 2014

The Word Dalith A Discussion-தலித் என்ற மாற்று மொழி[மராட்டிய] பெயர்ச் சொல்லுக்கு “இன் இர்” விகுதி பொருந்தா?

வினவு,

[1]தலித் என்ற மாற்று மொழி[மராட்டிய] பெயர்ச் சொல்லுக்கு “இன் இர்” விகுதி பொருந்தா என்று தமிழுக்கு தொல்காப்பியம், நன்னூல் இவைகளையும் தாண்டி புது இலக்கணம் படைக்கும் வினவின் புத்தமிழ் முயற்சிக்கும் என் வாழ்த்துக்கள்.

[2] பிராமணர் என்ற வட மொழி பெயர்ச் சொல் “இர்” விகுதியுடன் பயணிப்பதையும் ,வினவு நோக்கி அறிக !

[3]சூத்திரன் என்ற வட மொழி பெயர்ச் சொல் “இன்” விகுதியுடன் பயணிப்பதையும் ,வினவு நோக்கி அறிக !

[4]சிவகாமியின் தலித்திய சபதம் – குற்றம் நடந்தது என்ன ? வினவு கட்டுரையீல்

“அதில் முக்கியமானது ‘தலித் அல்லாதவர் அம்பேத்கரை குறித்து எழுத தகுதியில்லை’ என்பது. இது தலித்திய அரசியல், தலித் தலைமை….”
“தலித்திய” என்று “இர்” விகுதி வராமல் வராமல் தயங்கும் காரணம் என்னவோ ?

//இது வேற்று மொழியில் இருந்து வந்த ஒரு பெயர்ச் சொல். அதை அப்படியே பயன்படுத்துவதுதான் சரி. இன் இர் விகுதி இங்கே பொருந்தாது. எந்த இலக்கணத்தை எங்கே பயன்படுத்த வேண்டும் என்று நீங்கள் ஒரு தமிழாசிரியரிடமாவது அறிந்து கொள்ள வேண்டும்.//

No comments: