"...............................குழந்தைப் பேறு இன்மையின் வலியும்,சமுக தாக்கமும் பெண்களுக்கே மிகுதியாக இருப்பதாலும் , இக் கதையை பொன்னாவின் பார்வையில் இருந்து தொடங்கி பின்கதைகளை இணைத்து துயரங்களைக் கூறி ,பின்பு நேரலைக் காட்சிகளாக கொண்டு செல்வது இந்த நல்ல படைப்பை காட்சி ரசிகருக்கு [screen viewer ] எளிமையாக்கும்............."
திரு பெமுவின் நாவல்கள் ஒன்றோடு
ஒன்று கதை உள்ளட்க்கத்தில் வேறுபட்டு
இருந்தாலும் , மானுடவியல்-வரலாற்று நிகழ்வுகளை காட்சிப்
படுத்துவதில் இயைந்து வரிசையில் நின்று ,திரு
பிரபஞசனின் மானுடன் வெல்லும் என்ற மானுடவியல் சார்ந்த நாவல் போல
சிறப்புத் தோற்றம் அளிப்பதில்
எந்த வியப்பும் இல்லை ! மானுடவியல் பின்னணியுடன் எழுதப்பட்ட, 1930-40 களின் கொங்கு நிலத்ததின்
வரலாற்று கூறுகளுடன் வடிக்கப் பட்ட சொற் சிற்பம்
தான் மாதொருபாகன். மொத்தம் 190 பக்கங்களுடனும் ,ரூ 140 விலையுடனுன்
,34 அத்தியாயங்களுடனும்[scenes ] எழுதப்பட்ட
இன்நூல் காலச்சுவடு பெரும் பதிபகத்தால் பதிக்கப்பட்டு
உள்ளது. இக் கதையில் நடக்கும் 24 மணி நேர
நிகழ்வுகளை கதைநாயகன் காளியின்
போக்கில் ,பின் கதைகளுடன்[flashbacks] இணைத்து பெமு கூறியுள்ளார்.
இக் கதையை காட்சிப் படுத்த[writing screen play ] முடியுமா
? முயன்று பார்ப்போம் ! கதையின்
அத்தியாயங்களை [scenes] முதலில் வரிசைப் படுத்துவோம்.
பாகம் அ
[1] மாமன் வீட்டு பூவரச மரம்
பூத்து ஏற்க, திரு விழாவுக்கு வந்த காளி
!
[2]பூவரச மரத்தீன் வயதான 12 ஆண்டுகளும் குழந்தை பேறு
இல்லா காளி-பொன்னா
[3]மறுமணம் பற்றிய பொன்னாளின்
ஊடல் [ பின் காட்சி 1
[flashback ]]
[4]பூவரச மர நிழலில்
காளி-பொன்னா உரையாடலும் ,குழந்தை பேறு
இன்மைக்கான சாபம் பின் காட்சி [ பின் காட்சி 2 [flashback ]]
[5]குழந்தை பேறு
இன்மைக்கான பாவாத்தாவின் சாபம் பின் காட்சி3[[ பின் காட்சி 3 [flashback ]]
[6]பாவாத்தாவுக்கு
சிறு தெய்வ வழிபாட்டு
பூசை பின் காட்சி4[பின் காட்சி 4 [flashback ]]
பாகம் ஆ
[7]பின் காட்சியுடன்
நண்பன் ,மச்சான் முத்துவின் அறிமுகம் [பின் காட்சி 5 [flashback ]]
[8]திருச்செங்கோடு -மலை -வறடி கல் -சுற்றுதல் [பின் காட்சி 6]
[9]நங்கையுடன் முரண்பாடு
-காளி மாமன் வீட்டுடன்
சண்டை [ பின் காட்சி 7]
[10]நல்லுப்பையன்
சித்தப்பா கதை1 [பின் காட்சி 8]
[11]காளியீன் கோயிலாட்ட
நினைவுகள் [பின் காட்சி 9]
[12]நல்லுப்பையன்
சித்தப்பா கதை2[பின் காட்சி 10]
[13]அம்மா ,மாமியார் "சாமீப் பிள்ளை சதி" ஆரம்பம் [பின் காட்சி 11]
[14]காளியீன் திருச்செங்கோடு "திருவிழா சாமீயாடலும் ",கருப்புவின் மற்றான்
மனை நோக்கலும் பின் காட்சி 12]
பாகம் இ
[15]நல்லுப்பையன்
சித்தப்பா கதை3ம் காளி-பொன்னா "சாமீப் பிள்ளை சதி" பற்றிய
உரையாடல் [பின் காட்சி 13]
[16]குழந்தை பேறு
இன்மையால் ஏற்படும் சமுகப் புறக்கணிப்பு நிகழ்வுகள்
[பின் காட்சி14]
[17]பொன்னாவின்
சாமீப் பிள்ளை சதி" ஒப்புதலும் ,காளியீன் வெறுப்பும் [பின் காட்சி15]
[18]முத்துவின்
வருகை ,திருவிழாவுக்கு அழைத்தல் ,கரிக்குருவி கூடு [பின்
காட்சி16]
[19]தொண்டுப்பட்டியில் முத்து-காளி உரையாடல் 1[பின் காட்சி17]
[20]தொண்டுப்பட்டியில் முத்து-காளி உரையாடல் 2[பின் காட்சி18]
[21]முத்து-காளி மாமன்
வீட்டில் சந்திப்பு ,குடிக்கச்
செல்லுதல்
பாகம் ஈ
[22]பொன்னா அப்பன் ,அம்மாவுடன் திருவிழாவுக்கு செல்லுதல் 1
[23]பொன்னா அப்பன் ,அம்மாவுடன் திருவிழாவுக்கு செல்லுதல் 2 ம் பின் காட்சி19ம்
[24]பொன்னா அப்பன் ,அம்மாவுடன் திருவிழாவுக்கு செல்லுதல் 3
[25]முத்து-காளி குடிக்கச் செல்லுதல் 2
[26]முத்து-காளி குடிக்கச் செல்லுதல் 3ம்
மண்டையன் ,காத்தாயி கதையும் [பின் காட்சி20]
[27]பொன்னா அப்பன் ,அம்மாவுடன் திருவிழாவுக்கு செல்லுதல் 4
[28]காளியின் தாத்தாவும் கல் எறி
விளையாட்டும் [பின் காட்சி21]
[29]முத்து-காளி குடித்தலும் ,மண்டையன் ,காத்தாயி குழந்தையை
கேட்பதும்
[30] பொன்னாவின் சாமீத்
தேடல்1 !
[31] பொன்னாவின்
சாமீத் தேடல்2 !
[32]பொன்னாவின்
சாமீத் தேடல்3 !
[33]குடித்த காளி கலையில்
மாமன் வீடு திரும்புதல்
[34] ஐயோ பாவம் காளி [சாமீப்
பிள்ளை சதி நிறைவு பெறுதல்]
34 காட்சிகள் [scenes ]
உள்ள இக் கதையில்
21 க்கும் மேலான பின் காட்சிகள்-கதைகள் [flashbacks ] உள்ளது ,காட்சிபடுத்துபவருக்கும்[Screen paly
writer ] ,காட்சியை கண்பவருக்கும்
[viewer ] தொடர்சி சார்ந்த மனச்சிக்கலை ஏற்படுத்தும்.
என்னச் செய்யலாம்
?
இப் படைப்பின் வேர்களும் அறுந்துவிடக்கூடாது , காட்சிபடுத்துவதும்,காண்பதும் எளிமையாக்கப்பட வேண்டும் !
என்னச் செய்யலாம்
?
கதையில் சிறு மாற்றம் கூடச்
செய்யாமல் எப்படி எளிமையாகக்
காட்சிபடுத்துவது? முடியுமா ?
முடியும் !
எப்படி என்று பார்ப்போம்.
கதையீன் கூறுகள் என்ன ?
குழந்தைப் பேறு இன்மை,அதன்
மீதான காளி-பொன்னாவின் அக உணர்ச்சி
வெளிபாடுகள் ,அதன் மீதான சமுகப் புறம் போசுதல் , நல்லுப்பையன் சித்தப்பாவின்
ஆறுதல் பேச்சு ,உறவுகளின் "சாமீப் பிள்ளை சதி",சாபங்கள், திருச்செங்கோடு கோவில் வழிபாடுகள்[சிறு,பெரு தெய்வ வழிபாடுகள்] தானே !
இவற்றை மனம் கவரும்
முறையில் வரிசைப் படுத்த முடியாதா
என்ன ?
காட்சி 22 ல் [பொன்னா அப்பன் ,அம்மாவுடன் திருவிழாவுக்கு செல்லுதல் 1] கதைக்காட்சியை தொடங்கி
பிறகாட்சிகளை [பின்கதைகளை ] இவ் வரிசையில்
கோர்த்தால் நன்று !
பாகம் அ : காட்சிகள் (scenes ) :[22],[3],[4],[5][6] [8] {சாபமும் ,சாப மீட்பும்
}
பாகம் ஆ : காட்சிகள்
(scenes ) :[7][8][9][11] [14] [16] { சமுகப் புறம் போசுதல்}
பாகம் இ : காட்சிகள் (scenes ) :[10],[12],[15] {நல்லுப்பையன் சித்தப்பாவின்
ஆறுதல் பேச்சும் கதையும் }
பாகம் ஈ :காட்சிகள் (scenes ) :
[13][17][18][19][20] {சாமீப் பிள்ளை சதி}
பாகம் உ :காட்சிகள் (scenes ) : [1][2][21] {பின் கதைகள் முடிந்தன
}
பாகம் ஊ :காட்சிகள் (scenes ) : இனி முடிவை நோக்கி பயணிக்கும் நேரலை காட்சிகள் :பொமு காட்சிப்படுத்திய வரிசைப்
படியே !
[23][24][25][26][27][28][29][30][31][32][33][34]
கதை இப்போது முடிவை நோக்கி பயணிக்கும் நேரலைக் காட்சிகளாக இருப்பதால் கீழ் கண்ட
காட்சியில் உள்ள பின் கதையை
தவிர்த்தல் நன்று.
[26]முத்து-காளி குடிக்கச் செல்லுதல் 3ம்
மண்டையன் ,காத்தாயி பின் கதையும் [பின்
காட்சி20]
கதை காளியீன் பார்வையில்
எழுதப்பட்டு இருந்தாலும் , குழந்தைப் பேறு இன்மையின்
வலியும்,சமுக தாக்கமும் பெண்களுக்கே
மிகுதியாக இருப்பதாலும் , இக் கதையை
பொன்னாவின் பார்வையில் இருந்து தொடங்கி
பின்கதைகளை இணைத்து துயரங்களைக்
கூறி ,பின்பு நேரலைக்
காட்சிகளாக கொண்டு செல்வது இந்த நல்ல
படைப்பை காட்சி ரசிகருக்கு [screen viewer ]
எளிமையாக்கும்.
அன்புடன் ,
கி.செந்தில்குமரன்
No comments:
Post a Comment