Sunday, June 22, 2014

My answers to Sukdev சுகதேவ் அவர்களுக்கு

சுகதேவ் அவர்களுக்கு ,

[1]திரு சுகதேவ் அவர்களீன் சிறுபன்மை மக்களுக்கு எதிரான அவதுறுகளுக்கு வினவு தளத்தில் ஆதாரங்களுடன் எதீர்வினை அற்றி வந்து உள்ளேன் என்பது வினவு வாசகர்களுக்கு தெரியும்.
[2]என் கேள்வி என்ன என்றால் சிறுபன்மை மக்களுக்கு அரசியல் சாசன சட்டம் அளித்து உள்ள பாதுகாப்புகள் தவறா ? More over , Is Article 370 wrong?

சுகதேவ் //எனது நண்பர் பணிபுரியும் இஸ்லாமிய கல்வி நிறுவனத்தில் சிலரை நிரந்தர ஊழியராக சமீபத்தில் நியமித்தார்கள். அப்படி நியமிக்கப்பட்டவர்கள் அனைவருமே இஸ்லாமியர்கள். முன்பெல்லாம் அந்த நிறுவனத்தில் ஊழியர்களாக நியமிக்கப்படுபவர்களில் கணிசமானவர்கள் இந்துக்களாகவும் இருப்பார்கள். இது ஒரு சமூக நல்லிணக்கத்துக்கு — பரஸ்பர புரிதலுக்கு உதவியாக இருந்தது. இன்று இது போன்ற நேர்மறையான அணுகுமுறைகள் மதவாதிகளிடம் குறைந்து வருகிறது. //

[3]வினவு கூறும் கீழ் உள்ள கருத்தாக்கத்தில் இருந்து இஸ்லாமிய பயங்கரவாதம் என்ற சொல்லாடல் எப்படி தவறானது என்று திரு சுகதேவ் உணரவேண்டும்.

“இசுலாமியரை விமரிசிக்க வேண்டுமென்றால் அவர்களை பொதுவாக விமரிசக்காமல், டிஎன்டிஜே போன்று பேர் குறிப்பிட்டு விமரிசிக்கும் போது பார்ப்பனியத்தை மட்டும் நபர்கள் வாரியாக பிரித்து விமரிசிக்காமல் பொதுவாக விமரிசிப்பது சரியா என்று கேட்டிருந்தார் ஒரு நண்பர். மதங்களை விமரிசக்கும் வினவு பாரபட்சமாக இருக்கிறது என்பதாக இந்த விமரிசனத்தில் அவர் சொல்கிறார். முதலில் இந்த நண்பர் கூறியிருப்பது போன்றுதான் வினவு எழுதுகிறது என்பதை ஒத்துக் கொள்கிறோம். ஏன்?பார்ப்பனியம், இஸ்லாம் இரண்டையும் பிரிப்பது எது என்பதிலிருந்து அதை பார்க்கலாம். ஓரிறைக் கொள்கை, உருவ வழிபாடு கிடையாது போன்ற இறைவன் குறித்த மதக் கொள்கை தவிர்த்து வாழ்க்கை குறித்த சட்டங்களில் இசுலாத்திற்கு என்று ஒரே மாதிரியான கொள்கை கிடையாது. புர்கா போடுவது, போடக்கூடாது, இசை கேட்கலாம், கூடாது, திருப்பதி லட்டு சாப்பிடலாம், கூடாது, இனம்-சாதி-பிரிவினைக்கேற்ப மணமுடிக்கலாம், கூடாது என்று நாட்டுக்கு நாடு இது வேறுபடுகிறது. வகாபியிஸ்டுகளும், டிஎன்டிஜேக்களும் இதற்காக கரடியாக கத்தினாலும் அப்படி ஒரு வாழ்வியல் ஒற்றுமையை யாரும் கொண்டுவர முடியாது.” 

சுகதேவ்//இஸ்லாமிய பயங்கரவாதம் என்ற சொன்னாலே அது இந்துத்துவக் குரல் என்பதாகி விடாது. ம.க.இ.கவின் பார்ப்பன பயங்கரவாத எதிர்ப்பு மாநாட்டின் முழக்கத்திலே அது இருக்கிறது. இன்னும் சொல்லப்போனால், இந்து பயங்கரவாதத்தை கண்டிப்பதற்கே கூட இஸ்லாமிய மதவாதத்தை கண்டிப்பது நிபந்தனையாக உள்ளது என்று கருதுகிறேன்//


[4]மோடி BJP ,பெற்ற வாக்குகள் பற்றிய புள்ளியல் விவரங்களை முன்பே அளித்து உள்ளேன்.

###இந்திய மக்கள் தொகையில் மோடி பெற்ற ஒட்டு :17.5 * 100 /124 = 14.11 %
###By percentage out of total no of votes, Modi[BJP] got :17.5 * 100 / 81.45 = 21.49 %

மோடியால் மத்திய ,வட மேற்கு இந்தியாவில் மட்டும் தான் கணிசமான ஆதரவை பெற முடிந்து உள்ளது 

சுகதேவ்//கொஞ்சம் மாறியிருக்கும் சமூக நிலைமைகளையும் நாம் கணக்கில் கொள்ள வேண்டும். இந்த தேர்தல் முடிவுகள் பற்றிய ஆய்வு ஒரு உண்மையை சொல்கிறது. முஸ்லிம் மக்கள் 20 சதவீதம் வரை இருக்கும் 80 தொகுதிகளில் பாதிக்கும் மேல் இந்த முறை பா.ஜ.க வெற்றி பெற்றுள்ளது. வழக்கமாக, இந்த தொகுதிகளில் சிறுபான்மை மக்களின் வாக்குகள் வெற்றி வாய்ப்புள்ள ஒரு மதச்சார்பற்ற கட்சிக்கு குவியும். அதனால், அந்த கட்சி வெற்றி பெறும். ஆனால், இந்த முறை சிறுபான்மை மக்களின் வாக்குகளை மதச்சார்பற்ற கட்சிகள் சிந்தாமல், சிதறாமல் பெற்றிருந்தாலும், இந்து பெரும்பான்மையிடமும் ஒரு எதிர் ஒருங்கிணைவை உருவாக்கியுள்ளது. மதச்சார்பற்ற தேர்தல் கட்சிகள் சிறுபான்மை மதங்களிடம் கடைபிடிக்கும் சந்தர்ப்பவாத அணுகுமுறையும் இதற்கு ஒரு காரணம். இவர்கள் ஒரு நாள் ரம்ஜான் கஞ்சி குடிப்பதையும், கிறிஸ்மஸ் கேக் வெட்டுவதையும் காட்டி ஆர்.எஸ்.எஸ். இந்துக்களின் உணர்வை நிரந்தரமாக குத்தகை கேட்பதில் வெற்றி பெற்று வருகிறது. //

[5]வினவுக்கு திரு சுகதேவ் வைக்கும் கருத்துகளுக்கு உடன்பாடு தானா ? எவ் வித விமர்சனமும் கிடையாதா ?

No comments: