கலாஷ்நிகோவ்,
சரவணன்//இத்தகைய சூழலில் நம் தலித்தியர் மக்கள் தம் வாழ்வியல்
வலிகளையும்,அவர்கள் மீதான சாதீய அடக்கு முறைகளையும் இலக்கியத்தில் பதிவு
செய்வது அவர்களுடைய கடமையும், உரிமையும் ஆகும்//
கலாஷ்நிகோவ்://இதில் நமக்கு எந்தவித சந்தேகமும் இல்லை, ஆனால் இதே
உரிமையை, தலித்தியரின் சமூக அவலங்களை பதிவிடும் உரிமையை, மற்ற சாதியில்
பிறந்த ஒருவர் பெற்றிருந்தால் அதுதான் வர்க்க ஒற்றுமை. தலித் இலக்கியங்கள்
இயற்றும் நண்பர்கள், தலித்களின் நல்வாழ்விற்காக நடைமுறையில் என்ன
களப்பணியாற்றியுள்ளனர், வெறும் இலக்கியம் இயற்றல் மட்டுமே போதுமானதா?
பாட்டாளி வர்க்க இலக்கியங்கள் தலித், தலித் அல்லாதவர் என்ற நிலையை
அடைவதற்கான வழிகளை முன் வைக்கிறது. தலித் இலக்கியங்களும் இத்தகையவற்றை
செய்யும்போது பாட்டாளி வர்க்க இலக்கியம் என்றே அழைக்கப்படும். இங்கே தலித்
என்ற அடைமொழி மட்டுமே விவாதப் பொருளாக உள்ளது. //
[1]கலாஷ்நிகோவ் நீங்கள் அழகாக இயக்கவியல் பார்வையுடன் விவாதத்தை
முன் நகர்த்தி செல்கின்றீர்கள்.ஆம் பாட்டாளி வர்க்க உணர்வு உள்ள
எழுத்தீயல்/இலக்கிய துறையில் பயணிக்கும் ஒரு தோழர் நம் தலித்தியர்
மக்களீன் வலிகளையும் அதை தீர்க்க தீர்வுகளையும் இலக்கியம் மூலம்
வலியுறுத்துவதும் சாதியாத்தின் வேர்கள் ஆழமாக ஊடுருவும் இன்றைய சமுக
சூழலீல் தவிர்க்க முடியாத தேவை.
[2] அதே நேரத்தில் தலித்தியர் மக்களீன் மீது நேசம் உள்ள ஆனால்
பாட்டாளி வர்க்க உணர்வு அற்ற திரு பெருமாள் முருகன் போன்ற ஓரு படைப்பாளி
தம் பெரும் கதைகள்[ஆளாண்டபட்சி] மூலம் கவுண்டர் மக்களை தலித்தியர் மக்களுடன் சமரசம் செய்து கொள்ள வலியுறுத்தும் மார்சீய திரிபையும் நாம் எச்சரிக்கையுடன் அவதானித்து அவர் போன்றவர்களுக்கு அறிவுறுத்த வேண்டும்
கலாஷ்நிகோவ்//ம க இ க போன்ற அமைப்புகள் இதற்கு எதிரானவர்கள் அல்ல. இந்த
சிந்தனை முறை உண்மையான பிரச்சினையைவிட்டு திசை மாற்றி மென்மேலும்
சிக்கலானதாக மாற்றிவிடும் என்பதையே வலியுருத்துகின்றனர். தலித்
இலக்கியங்கள் பிரச்சினைகளை சொன்னால் மட்டும் போதாது. அதற்கான தீர்வாக
என்ன சொல்கிறது என்பதே கம்யூனிஸ்டுகள் ஊக்குவிப்பதற்கான அடிப்படையாக
அமையும்.//
[3]இதற்கான பதிலை கீழ் கண்டவாறு முந்தைய பின்னுட்டத்தில் கூறி
உள்ளேன்.தலித்தியர் மக்கள் வலிகளை பிரதிபலிகும் தலித்தியர் இலக்கியங்களும்
எம் பாட்டாளி வர்க்க இலக்கியமே என்று உரக்க உரிமை கூரல் கொடுத்து
முற்போக்கான தலித்தியர் எழுத்தாளர்களை ஒருங்கினைத்து இலக்கிய/அறிவு
தளத்திலும் கருத்தியல் போரை வர்க்க எதிரிகளுக்கும் ,சாதியவாதிகளுக்கும்
எதிராக தொடுக்க வேண்டும் அல்லவா ?
[4]மேலும் அரசியல் களத்தில் தலித்தியர் மக்களுக்காக,அவர்கள் அரசியல்,
சமுக, பொருளாதார விடுதலைக்கு போராட தயங்காத, அவர்களுக்கு தலைமை ஏற்க
தயங்காத ம க இ க; இலக்கியம் சார்ந்த கருத்தீயல் தளத்திலும்
அவர்களுக்கு வழிகாட்டி பிரச்சனை மட்டும் அல்ல இலக்கியம் அதற்கு
தீர்வுகளும் தலித்தியர் இலக்கியத்தில் இருக்க வேண்டும் என்று மார்சிய அரசியல் கல்வி அளிக்கலாம் அல்லவா ? இதுவும் ம க இ க வின் கடமை தானே ?
கலாஷ்நிகோவ்://தோழர்,அதே வர்க்கக் களம் தான், வர்க்க உணர்வுதான் சாதீயம் இல்லாமல்
போவதற்கான களமாகவும் அமைகிறது. வேறு ஏதேனும் களம் இருந்தால்
விவரிப்பீர்.நன்றி//
[5]பாட்டாளி வர்க்கம் X சுரண்டும் தரகு முத்லாளிகள் என்று
இருக்கும் வர்க்க முரண்பாட்டில் எமக்கு எந்த முரண்படும் உங்களுடன்
இல்லை. அதே சமயம் பாட்டாளி வர்க்கத்துக்குள் உள்ள சாதிய அடுக்கு
நிலைகள் காரணமாக அமைந்து உள்ள அக முரண்பாடுகள் [வன்னியர் தொழிலாளி X
தலித்தீயர் தொழிலாளி] தோழர்,எம் ஆசான் லெனின் அவர்களுக்கு வர்க்க போராட்ட
களத்தில் ஏற்பட வில்லை என்று தான் கூறினேன்.
No comments:
Post a Comment