Wednesday, March 26, 2014

ராச ராசன் “மனு நீதி குற்ற ” வழக்கு -தீர்ப்பு Rajarajan case judgement

"......ராஜ ராஜன் மூன்று lawyers க்கும் சம்பளம் கொடுக்க இயலாத நிலையீல் கும்பகோணம் அருகில் பழையாரு என்னும் ஊரில்......"


26/3/2014
சென்னை
ராசராசன் மீது தொடுக்கபட்ட மனு நீதி குற்ற வழக்கில் , ராசராசன் தரப்பில் வாதாடிய வழக்கு அறிஞர்கள் திரு அம்பி ,திரு வியாசன் ,திரு தாயுமானவன் பிள்ளை ஆகியோர் ராசராசன் மீது வைக்கபட்ட குற்றச்சாட்டுகளுக்கு ஆதரவாகவே தம் கருத்துகளை கூறினார்கள்!
[1]திரு அம்பி அவர்கள் “குலத் தொழில் பழகு ” என்ற ராஜாஜியீன் கொள்கைக்கு முன்னேடியே ராஜராசன் தான் என்பதை அழகாக 115.2ல் எடுத்து உரைத்தார் !
[2] திரு தாயுமானவன் பிள்ளை அவர்கள் …
“என்னமோ ராஜ ராஜ சோழன் தான் மனு தர்ம நெறி படி ஆட்சி செய்தது போலவும்.. அவருக்கு முன்பு இருந்த சோழ மன்னர்களின் காலத்தில் பார்பனர்களும், வேளாளர்களும் தாழ்த்தப்பட்ட மக்களிடம் கொள்வனவும், கொடுப்பனவும் வைத்து கொண்டு சகோதரர்கள் போல் சமத்துவமாக வாழ்ந்தது போலவும், அதை என்னமோ தங்கள் நேரில் இருந்து பார்த்தது போலவும் பேசுகிறீர்கள்.. ராஜ ராஜனின் காலம் இன்றோடு 1000 ஆண்டுகள் தான் ஆகிறது.. ஆனால் மனுதர்ம ஆட்சி தமிழ்நாட்டில் கடந்த 1800 ஆண்டுகளாகவே நடைபெற்று வருகிறது.. சோழ ராஜ்யத்தில் மட்டுமல்ல சேர. பாண்டிய, சாளுக்கிய, சாதவாகன, ராஜபுதனம் போன்ற இந்திய தேசம் முழுக்க அப்படி தான் இருந்தது..”
என்று கூறி ராச ராசன் மட்டுமா குற்றவாளி? அனைத்து மன்னர்களும் தான் மனு தர்ம நெறி படி ஆட்சி செய்த குற்றவாளிகள் என்று தம் கட்சிகாரர் ராஜ ராஜ சோழன் அவர்களை குற்றவாளியே என்று வாதாடினார்
[3]புரட்சி புயல் ,உணர்சி புயல் திரு வைகோ மன்னிக்கவும் திரு வியாசன் அவர்கள் சூராவெளியாய் சுழன்று ,சுழன்று வழக்கையே தள்ளுபடி செய்ய கோரினார். வழக்கு தள்ளுபடி ஆகாததால் பின்பு ,
“எந்த அரசனும் சாதி வெறியினால் குறிப்பிட்ட சாதியினருக்கு மட்டும் அதிக வரிகளை விதித்ததில்லை. அக்கால வழக்கம், சமுக கட்டமைப்பு அப்படி, அதை இக்கால மார்க்சிய, பெரியாரிய சிந்தனைகளுடன் ஒப்பிட்டு, எமது முன்னோர்களை இழிவு படுத்துவது முட்டாள் தனமென்பதைத் தான் நான் மீண்டும்,மீண்டும் கூறுகிறேன்” 73.1
என்று கூறியும் ,
“ஆயிரம் வருடம் பின்னோக்கிப் போய் ராஜ ராஜ சோழனைத் தாக்கும், தமிழ்நாட்டில் வாழும் தமிழரல்லாத திராவிட எச்சங்கள் தமது முன்னோர்களாகிய விஜயநகர் ஆட்சியாளர்களை குற்றம் கூறாமல், ராஜ ராஜ சோழனை வசைபாடுவதன் சூக்குமத்தை தமிழர்கள் அறியார் என்று அவர்கள் நினைத்துக் கொள்கிறார்கள்.” 96.1.1.1ல்
என்று கலைஞரின் பாரசக்தி வசனத்தை சிறிது மாற்றி பேசியும் ,
“விஜயநகர் ஆட்சியாளர்களும்” “ராஜ ராஜனை” போன்று குற்றவாளிகள் தான் என்று அருமையாக எடுத்து உரைத்தார்.
[4] இப்படி தம் கட்சிகாரர் ராஜ ராஜனையே குற்றவாளி தான் என்று அவர் தரப்பு lawyers மூவருமே கூறுவதன் உள் நேக்கம் என்ன என்பதை இந்த நீதி மன்றம் “CPI Director திரு மாக்கன்” அவ்ர்களீன் உதவியுடன் ஆய்வு செய்த போது கிடைத்த விடைங்கள் ……
[அ ] குற்றம் சாட்டபட்ட ராஜ ராஜன் மூன்று lawyers க்கும் சம்பளம் கொடுக்க இயலாத நிலையீல் கும்பகோணம் அருகில் பழையாரு என்னும் ஊரில் ஒரு ஏழை குடியானவன் நிலத்தில் உறங்குகிறார்
[ஆ] குற்றம் சாட்டபட்ட ராஜ ராஜன் அவ்ர்களீன் வம்சத்தினர் சிதம்பரம் அருகில் மிகவும் நலிந்த நிலையீல் வாழுகின்றனர்
[இ]எனவே குற்றம் சாட்டபட்ட ராஜ ராஜன் தரப்பில் ,அவர்களால் lawyers மூவ்ருக்கும் சம்பளம் தர இயலாது என்பது தெரிகின்றது.
எனவே இந்த நீதி மன்றம் , ராஜ ராஜன் அவ்ர்களுக்கு இப்போது உள்ள lawyersஐ விலக்கிக்கொண்டு அரசாங்கமே இலவச lawyer ஐ நியமிக்கும் படி உத்தரவு இடுகின்றது.
[5] மேலும் இந்த நீதி மன்றம் குற்றம் சாட்டபட்ட ராஜ ராஜனின் இயல்புகளை கள ஆய்வு செய்ய தன் முக்கிய வேளைகளை[Java ,Struts ,Ajax ,MYSQL, php programming ] தள்ளி வைத்து விட்டு இரு நாட்கள் தஞசை,கும்பகோணம் ,பழையாரு ,உடையார்பாளையம் செல்ல உள்ளது.
[6] திரு அம்பி அவர்கள் வேறு ஒருவருடன்[Univerbuddy] school boys போன்று போசி போசி நீதி மன்றத்தின் கவனத்தை சிதரடித்ததுக்கு “இருவருக்கும்” கண்டனம் தெரிவிக்கின்றது .
[7] திரு வியாசன் அவர்கள் உரையில் பயன் அற்ற பேச்சுகளும் , மொக்கைகளும் நிறைந்து இருப்பது தவறு என்று இந்த நீதி மன்றம் விமர்சிக்கின்றது.
[8] திரு வியாசன் அவர்கள் விரும்பினால் விஜயநகர் ஆட்சியாளர்கள் மீதும் “மனு நீதி குற்ற” வழக்கு தனியாக பதிவு செய்யும் படி இந்த நீதி மன்றம் ஆலோசனை கூறுகின்றது.
judgement copy to :
[a] ராஜ ராஜன்,பழையாரு
[b]திரு வியாசன்
[c ]திரு அம்பி
[d ]திரு தாயுமானவன் பிள்ளை

No comments: