What did Arundhati said about Communist people? திரு அருந்ததியீன் கருத்து:
தோழர் கலாஷ்நிகோவ்,
புரட்சிகர இயக்கங்கள் பற்றி, ம க இ க நட்பு பாராட்டும் திரு அருந்ததி அவர்கள் கூறும் கருத்துகளை பார்திர்களா ?
திரு அருந்ததியீன் கருத்து:
————————————————
இங்கே இயல்பான தோழமை என்பது கம்யூனிஸ்டுகளுக்கும் தலித்துகளுக்கும் தான்
ஏற்பட்டிருக்க வேண்டும். அதுதான் இயற்கை. ஆனால் இங்கே அப்படி ஏற்படவில்லை.
அவர்களுக்கிடையேயான பிளவு என்பது 1920களிலேயே சி.பி.அய். உருவான சில
காலத்திலேயே தொடங்கிவிட்டது.
இன்றைக்கு இருக்கும் பல கம்யூனிஸ்ட் தலைவர்களைப் போலவே எஸ்.ஏ.
டாங்கேவும் ஒரு பார்ப்பனர். இந்தியாவின் முதல் கம்யூனிஸ்ட் தொழிற்சங்கமான,
“கிர்னி காம்கார் தொழிற்சங்க’த்தை 70 ஆயிரம் உறுப்பினர்களோடு அவர்
உருவாக்கினார். உறுப்பினர்களில் பெரும் பகுதியினர் அம்பேத்கரை உள்ளடக்கிய
“மகர்’ என்கிற தீண்டத்தகாத சாதியைச் சேர்ந்தவர்கள்.
அவர்கள் எல்லோரும் குறைந்த கூலி வழங்கப்படும் “ஸ்பின்னிங்’ பிரிவில்
மட்டுமே வேலைக்கு அமர்த்தப்பட்டார்கள். ஏனென்றால், நெசவுப் பிரிவில் வேலை
செய்கிறவர் நூலை தன்னுடைய வாயில் கவ்விக் கொள்ள வேண்டியிருக்கும். அதில்
தீண்டத்தகாதவரைச் சேர்த்தால் அவருடைய எச்சில் பட்டு நூலும், துணியும்
தீட்டுப்பட்டு விடும் என்று கருதினார்கள்.
1928 இல் டாங்கே, கர்னி காம்கார் தொழிற்சங்கத்தின் முதல் வேலை
நிறுத்தத்தை முன்னின்று நடத்துகிறார். அம்பேத்கர், போராட்டத்தின் ஒரு
கோரிக்கையாக சமத்துவமும் வேலைப்பிரிவினையில் பாகுபாடு காட்டாத சமவாய்ப்பும்
வழங்கப்பட வேண்டும் என்பதை வலியுறுத்த வேண்டும் என்று கேட்டுக்
கொள்கிறார். இதற்கு டாங்கே ஒப்புக்கொள்ளவில்லை. அது ஒரு கசப்பான பிளவுக்கு
இட்டுச் செல்கிறது.
அப்போதுதான் அம்பேத்கர் சொன்னார்:
சாதி என்பது தொழில்களுக்கு இடையிலான பிரிவினை மட்டும் அல்ல; அது தொழிலாளர்களுக்கு இடையிலான பிரிவினை.
நாம் விவாதீத்தா பாட்டாளி வர்க்கத்துக்குள் உள்ள சாதிய அடுக்கு
நிலைகள் காரணமாக அமைந்து உள்ள அக முரண்பாடுகள் [வன்னியர் தொழிலாளி X
தலித்தீயர் தொழிலாளி] என்ற விடயம் அம்பேத்கர் அவர்கள் கருத்துடன் ஒத்து
போகிறதே!
————————————————