Monday, February 24, 2014

மாதொருபாகன் - பெருமாள்முருகன் -காட்சி படுத்தும் ஆய்வு [Mathorupakan-Perumalmurugan A Complete Screen Play Analysis ]

"...............................குழந்தைப்  பேறு  இன்மையின் வலியும்,சமுக  தாக்கமும்  பெண்களுக்கே  மிகுதியாக  இருப்பதாலும் , இக்  கதையை    பொன்னாவின் பார்வையில்  இருந்து தொடங்கி பின்கதைகளை  இணைத்து  துயரங்களைக்  கூறி  ,பின்பு    நேரலைக்   காட்சிகளாக கொண்டு செல்வது  இந்த நல்ல படைப்பை  காட்சி  ரசிகருக்கு [screen  viewer ]  எளிமையாக்கும்............."

திரு பெமுவின்  நாவல்கள்  ஒன்றோடு  ஒன்று  கதை  உள்ளட்க்கத்தில்  வேறுபட்டு  இருந்தாலும் , மானுடவியல்-வரலாற்று நிகழ்வுகளை  காட்சிப்  படுத்துவதில்   இயைந்து வரிசையில்  நின்று ,திரு  பிரபஞசனின்  மானுடன் வெல்லும்  என்ற மானுடவியல் சார்ந்த  நாவல்  போல சிறப்புத்  தோற்றம்  அளிப்பதில்  எந்த வியப்பும்  இல்லை ! மானுடவியல்  பின்னணியுடன் எழுதப்பட்ட,  1930-40 களின் கொங்கு  நிலத்ததின்  வரலாற்று கூறுகளுடன்  வடிக்கப் பட்ட  சொற்  சிற்பம் தான்     மாதொருபாகன்.   மொத்தம் 190 பக்கங்களுடனும் ,ரூ 140 விலையுடனுன் ,34 அத்தியாயங்களுடனும்[scenes ] எழுதப்பட்ட  இன்நூல்  காலச்சுவடு பெரும் பதிபகத்தால்  பதிக்கப்பட்டு  உள்ளது. இக் கதையில் நடக்கும் 24 மணி நேர  நிகழ்வுகளை  கதைநாயகன்  காளியின்  போக்கில்  ,பின் கதைகளுடன்[flashbacks]  இணைத்து பெமு கூறியுள்ளார்.

 இக்  கதையை  காட்சிப்  படுத்த[writing screen play ]  முடியுமா  ? முயன்று  பார்ப்போம் !  கதையின்  அத்தியாயங்களை [scenes] முதலில்  வரிசைப்  படுத்துவோம்.



பாகம்  அ
[1] மாமன்  வீட்டு  பூவரச மரம்  பூத்து  ஏற்க,  திரு விழாவுக்கு  வந்த  காளி !
[2]பூவரச மரத்தீன் வயதான   12 ஆண்டுகளும்  குழந்தை பேறு   இல்லா  காளி-பொன்னா
[3]மறுமணம்  பற்றிய  பொன்னாளின்  ஊடல்     [ பின் காட்சி 1 [flashback ]]
[4]பூவரச மர நிழலில்  காளி-பொன்னா உரையாடலும் ,குழந்தை பேறு  இன்மைக்கான  சாபம்  பின் காட்சி [ பின் காட்சி 2 [flashback ]]
[5]குழந்தை பேறு  இன்மைக்கான  பாவாத்தாவின் சாபம்  பின் காட்சி3[[ பின் காட்சி 3 [flashback ]]
[6]பாவாத்தாவுக்கு  சிறு  தெய்வ  வழிபாட்டு  பூசை பின் காட்சி4[பின் காட்சி 4 [flashback ]]


பாகம்  ஆ
[7]பின் காட்சியுடன்  நண்பன் ,மச்சான்  முத்துவின்  அறிமுகம் [பின் காட்சி 5 [flashback ]]
[8]திருச்செங்கோடு -மலை -வறடி கல் -சுற்றுதல்   [பின் காட்சி 6]
[9]நங்கையுடன்  முரண்பாடு -காளி  மாமன்  வீட்டுடன்  சண்டை [ பின் காட்சி 7]
[10]நல்லுப்பையன்  சித்தப்பா  கதை1 [பின் காட்சி 8]
[11]காளியீன்  கோயிலாட்ட நினைவுகள் [பின் காட்சி 9]
[12]நல்லுப்பையன்  சித்தப்பா  கதை2[பின் காட்சி 10]
[13]அம்மா ,மாமியார் "சாமீப்  பிள்ளை சதி"  ஆரம்பம் [பின் காட்சி 11]
[14]காளியீன்  திருச்செங்கோடு  "திருவிழா சாமீயாடலும்  ",கருப்புவின்  மற்றான்  மனை  நோக்கலும் பின் காட்சி 12]


பாகம்  இ
[15]நல்லுப்பையன்  சித்தப்பா  கதை3ம்  காளி-பொன்னா "சாமீப்  பிள்ளை சதி"  பற்றிய  உரையாடல் [பின் காட்சி 13]
[16]குழந்தை பேறு  இன்மையால் ஏற்படும் சமுகப்  புறக்கணிப்பு  நிகழ்வுகள்  [பின் காட்சி14]
[17]பொன்னாவின்  சாமீப்  பிள்ளை சதி"  ஒப்புதலும் ,காளியீன்  வெறுப்பும் [பின் காட்சி15]
[18]முத்துவின்  வருகை ,திருவிழாவுக்கு  அழைத்தல் ,கரிக்குருவி  கூடு  [பின் காட்சி16]
[19]தொண்டுப்பட்டியில் முத்து-காளி  உரையாடல் 1[பின் காட்சி17]
[20]தொண்டுப்பட்டியில் முத்து-காளி  உரையாடல் 2[பின் காட்சி18]
[21]முத்து-காளி மாமன்  வீட்டில்  சந்திப்பு  ,குடிக்கச்  செல்லுதல்


பாகம்  ஈ
[22]பொன்னா அப்பன் ,அம்மாவுடன்  திருவிழாவுக்கு செல்லுதல் 1
[23]பொன்னா அப்பன் ,அம்மாவுடன்  திருவிழாவுக்கு செல்லுதல் 2 ம்  பின் காட்சி19ம்
[24]பொன்னா அப்பன் ,அம்மாவுடன்  திருவிழாவுக்கு செல்லுதல் 3
[25]முத்து-காளி குடிக்கச்  செல்லுதல் 2
[26]முத்து-காளி குடிக்கச்  செல்லுதல் 3ம்  மண்டையன் ,காத்தாயி கதையும்  [பின் காட்சி20]
[27]பொன்னா அப்பன் ,அம்மாவுடன்  திருவிழாவுக்கு செல்லுதல் 4
[28]காளியின்  தாத்தாவும்  கல்  எறி விளையாட்டும்  [பின் காட்சி21]
[29]முத்து-காளி குடித்தலும் ,மண்டையன் ,காத்தாயி  குழந்தையை  கேட்பதும்
[30]  பொன்னாவின்  சாமீத்  தேடல்1 !
[31] பொன்னாவின்  சாமீத்  தேடல்2 !
[32]பொன்னாவின்  சாமீத்  தேடல்3 !
[33]குடித்த  காளி  கலையில்  மாமன் வீடு  திரும்புதல்
[34] ஐயோ  பாவம்  காளி [சாமீப்  பிள்ளை சதி நிறைவு  பெறுதல்]

 34 காட்சிகள்  [scenes ]  உள்ள  இக்  கதையில்  21 க்கும்  மேலான பின் காட்சிகள்-கதைகள்  [flashbacks ] உள்ளது ,காட்சிபடுத்துபவருக்கும்[Screen  paly  writer ] ,காட்சியை  கண்பவருக்கும் [viewer ] தொடர்சி சார்ந்த  மனச்சிக்கலை  ஏற்படுத்தும்.

என்னச்   செய்யலாம் ?

இப் படைப்பின்  வேர்களும்  அறுந்துவிடக்கூடாது ,   காட்சிபடுத்துவதும்,காண்பதும்   எளிமையாக்கப்பட  வேண்டும் !

என்னச்   செய்யலாம் ?

கதையில்  சிறு  மாற்றம் கூடச்  செய்யாமல்  எப்படி   எளிமையாகக்  காட்சிபடுத்துவது? முடியுமா ?

முடியும் !

எப்படி  என்று  பார்ப்போம்.

கதையீன்  கூறுகள்  என்ன ? 

குழந்தைப்  பேறு  இன்மை,அதன்  மீதான காளி-பொன்னாவின்  அக உணர்ச்சி வெளிபாடுகள் ,அதன் மீதான சமுகப் புறம்  போசுதல்   , நல்லுப்பையன்  சித்தப்பாவின்  ஆறுதல்  பேச்சு ,உறவுகளின் "சாமீப்  பிள்ளை சதி",சாபங்கள், திருச்செங்கோடு கோவில்  வழிபாடுகள்[சிறு,பெரு தெய்வ  வழிபாடுகள்] தானே !

இவற்றை மனம்  கவரும் முறையில் வரிசைப்  படுத்த  முடியாதா  என்ன ?

காட்சி 22 ல் [பொன்னா அப்பன் ,அம்மாவுடன்  திருவிழாவுக்கு செல்லுதல் 1] கதைக்காட்சியை  தொடங்கி  பிறகாட்சிகளை  [பின்கதைகளை ] இவ்  வரிசையில்  கோர்த்தால்  நன்று !

பாகம்  அ  : காட்சிகள் (scenes  ) :[22],[3],[4],[5][6] [8]         {சாபமும் ,சாப  மீட்பும்  }

பாகம்  ஆ : காட்சிகள் (scenes  ) :[7][8][9][11] [14] [16]         { சமுகப் புறம் போசுதல்}

பாகம்  இ  : காட்சிகள் (scenes  ) :[10],[12],[15]                    {நல்லுப்பையன்  சித்தப்பாவின்  ஆறுதல்  பேச்சும்  கதையும் }

பாகம்  ஈ  :காட்சிகள் (scenes  ) :  [13][17][18][19][20]          {சாமீப்  பிள்ளை சதி}

பாகம்  உ  :காட்சிகள் (scenes  ) : [1][2][21]                  {பின் கதைகள்   முடிந்தன  }

பாகம்  ஊ   :காட்சிகள் (scenes  ) : இனி முடிவை நோக்கி பயணிக்கும் நேரலை  காட்சிகள் :பொமு காட்சிப்படுத்திய  வரிசைப்  படியே !

[23][24][25][26][27][28][29][30][31][32][33][34]

கதை  இப்போது  முடிவை நோக்கி பயணிக்கும் நேரலைக்   காட்சிகளாக இருப்பதால்  கீழ்  கண்ட காட்சியில்  உள்ள  பின் கதையை  தவிர்த்தல்  நன்று.
  
[26]முத்து-காளி குடிக்கச்  செல்லுதல் 3ம்  மண்டையன் ,காத்தாயி பின் கதையும்  [பின் காட்சி20]


கதை  காளியீன்  பார்வையில்  எழுதப்பட்டு இருந்தாலும்  , குழந்தைப்  பேறு  இன்மையின் வலியும்,சமுக  தாக்கமும்  பெண்களுக்கே  மிகுதியாக  இருப்பதாலும் , இக்  கதையை    பொன்னாவின் பார்வையில்  இருந்து தொடங்கி பின்கதைகளை  இணைத்து  துயரங்களைக்  கூறி  ,பின்பு    நேரலைக்   காட்சிகளாக கொண்டு செல்வது  இந்த நல்ல படைப்பை  காட்சி  ரசிகருக்கு [screen  viewer ]  எளிமையாக்கும்.


அன்புடன் ,

கி.செந்தில்குமரன்




Sunday, February 23, 2014

பெருமாள்முருகன்: எருமைச் சீமாட்டி - ஆனந்த விகடன் சிறுகதை

பெருமாள்முருகன்: எருமைச் சீமாட்டி - ஆனந்த விகடன் சிறுகதை: அம்மாவின் கத்தல் சத்தம் கேட்டு எல்லாரும் எழுந்துவிட்டார்கள் . கோடை நிலவின் குளிர் ஒளியில் வாசலில் கட்டில் போட்டுப் படுத்திருந்தார்கள் .   ‘...

Thursday, February 20, 2014

ஒரு ஹைக்கு கவிதை[ Poem Permission From Wife]

"மனைவியிடம் கேட்ட அனுமதி"

பீர் குடிக்கும் நேரம் வந்து விட்டது 

தம்பி பேரறிவாளன் சிறை மீளும் நாளுக்காகத் 


தான் காத்து இருக்கிறேன் 

அன்புடன் ,
கி.செந்தில்குமரன்

Wednesday, February 19, 2014

கட்டுரைப்  போட்டி
தலைப்பு :
தமிழ்  வட்டார வழக்குச்  சொற்கள்  


குறிப்பு :

[1]மேலே  திருவள்ளூர்  மாவட்டம்  முதல்  கீழே  குமரி  மாவட்டம் வரையிலான எல்லா  மாவட்ட  வட்டார  வழக்குச்  சொற்கள்  மீதும்  கட்டுரை  எழுதலாம்.

[2]தமிழக  எல்லை      மாவட்ட[உம் : குமரி, திருவள்ளூர்,கோவை] வட்டார  வழக்குச்  சொற்கள் பிற  மானிலச் சொற்களுடன்  கொண்டு உள்ள  உறவுகள்    பற்றியும்  கட்டுரையில்   எழுதலாம்.

[3]கட்டுரையில் கருத்தற்ற தனிநபர் தாக்குதல்,அநாகரீக மொழிகளை தவிர்க்க வேண்டும். அத்தகைய கட்டுரைகள்  போட்டியில்  இருந்து  நீக்கப்படும்

[4]இவ்  வலைப்பூவில்  போட்டியில்  தெரிவு  செய்யப்பட்டு  பதிப்பிக்கப்படும்   சிறந்த 10 கட்டுரைகளுக்கு  தமிழ்ப் பேராசிரியர் மற்றும்  எழுத்தாளார், முனைவர் திருபெருமாள் முருகன்  அவர்கள்  எழுதிய  புத்தகங்கள்  வழங்கப்படும்.

[5]கட்டுரைகளை  sunjava6@yahoo.com என்ற  மின்  முகவரிக்கும்  26/2/2014அன்றுக்குள்  அனுப்பி  வைக்க  வேண்டும்

அன்புடன் ,
கி.செந்தில்குமரன் 

http://vansunsen.blogspot.in/
https://www.facebook.com/senthilkumaran.krishnamurth
sunjava6@yahoo.com

Friday, February 14, 2014

வான் குருவியின் கூடு[கட்டுரைகள் ] விமர்சனம் - திரு பெருமாள் முருகன் [Net of the Spiro Essays Critics]

"............மூடர்முன்னே பாடல் மொழிந்தால் அறிவரோ

        ஆடெடுத்த தென்புலியூர் அம்பலவா.........."

தனிப்பாடல்கள்  மீது அன்பு கொண்ட  மனதின்  கட்டுரைகளாய்  விரிகின்றது  இன் நூல்.    தனிப்பாடல்கள்  மரபு  சார்  யாப்பு  கவிதைகள்.   புதுக் கவிதைகள்  போன்றே  வாழ்வைச்    சுவாசிக்கும் , நேசிக்கும்   இயல்பு  உடையவை தான் தனிப்பாடல்களும்.    தனி மனித  வாழ்வில்  வழக்கு  இழந்த  யாப்பு  இலக்கணக்  கவிதைகள்  மீது  பொமு-வின்  தமிழ்  ஆசிரியமனம்  தவழும்  அழகு நிறைந்த  விளையாட்டுக்கள் தான்    இக் கட்டுரைகள்.

பொருள்  சார்  இவ்  உலகில்  ,வன்மம்  நிறைந்த  வழிகளில்  பயணிக்கும்  மனித  மனங்களுக்கு  வேகத்தடையாய்  நிற்கின்றன இக் கட்டுரைகள். [ முன்னுரையும் ,பின்னிணைப்பும் கொண்ட 2 +14 கட்டுரைகள்.] முன்னுரையே  தனிப்பாடல்கள்  மீதான  ஆய்வை  அழகுடனும்  ,பொருளுடனும்  செய்கின்றன. தலைவனைப் பிரிந்த தலைவிக்கு  நிலவுக்கூட நெருப்பாய் தகிக்கும்  கொடுமை ,பிச்சைகாரர்  பாடல்  மூலம்  வெளிப்படுகின்றது.['ஊரைச் சுடுமோ"... பாடல் ].  "யாப்பும்"  தெரிந்த  மனிதன்    பிச்சைகாரரனாக அலையும்  அவலம்  இப்  பாடலில்  சொல்லப்படாத  உள்  பொருள்.

[1]காடும் செடியும்  கட்டுரை ,தமிழ்  கற்க கல்லூரிச்  சென்ற  மாணவன்  பட்டப்  பாட்டை  கூறி  அவனுக்கு  கிடைத்த  ஊன்றுகோலாக  அமைந்த  காலமேகத்தாரின்  பாடல்களையும் ,பிற      தனிப்பாடல்களையும் அறிமுகப்படுத்தி  ,   தனிப்பாடல்களுக்கான  கால-பொருள்  வரையாரைகளையும்   கூறுகின்றது. [புணர்சி விதிகளை  கற்கும்  பருவம்  முதலா இல்லை மூன்றாமாண்டா என  "கழகங்கள்"  தீர்க்கமாக முடிவு  செய்யுமா ?]     

[2]வான்  குருவியின்  கூடு கட்டுரை, "எல்லார்க்கும்  ஒவ்வொன்று  எளிது"  என்று  கூறும்  தமிழ்ப்  பாட்டியின்  செயுளுடன்  விரிகின்றது. இக்  கட்டுரையைப்  படிக்கும்  போது  என்  நண்பர்  முதிர்ந்த தமிழ் பேராசிரியர்  முனைவர் கரு நாகராசன் அவர்கள்  செய்த  "தமிழர்  மனம்  பற்றிய  கோட்பாடு"  மீதான  ஆய்வின்   தேவைகளையும்   ,முக்கியத்துவத்தையும்    உணர  முடிகின்றது.

[3]சிவனானேன்  கட்டுரை , பொமு-வும் ,இராம  கவிராயரும்  சென்னாபுரி [சென்னை] பட்டினத்தில் அடைந்த இடம் -பொருள்  சார் துன்பங்களை    "சென்னபுரி மைவிச் சிவனானேன் " பாடல்  மூலம் கூறுகின்றது. [தமிழ்  கற்ற "கற்றது  தமிழ்"  பிரபாகரன்  சென்னை வாழ்வு  அனுபவத்தையும்   நம்மால்     மறக்க  முடியுமா?]

[4]அந்தகனே  நாயகன்  கட்டுரை,இரட்டைப்  புலவர்  பாடல்  ஒன்றை  பற்றியது.ஒருவர்  கண்ணும் ,மறுவர்  கால்களும்  அற்ற புலவர்கள். கண் அற்றவர், கால் அற்றவரின் வழிகாட்டுதளில்    தூக்கி  ந்டந்து ஊர்  ஊராகச்  செல்வர்தனை  நாடிச் செல்வார். இருவரும் கவி  கூறி  பொருள்  நாடுவர்.   கல்வி  அறிவு  இல்லா  பொருளாலாளர்  புற  முதுகுக்  காட்ட  ,நொந்து போன  புலவர்களின்  புலம்பலுடன் கூடிய  நையாண்டிக்  கவிதை தான்     இக் கட்டுரை.

  மூடர்முன்னே பாடல் மொழிந்தால் அறிவரோ
  ஆடெடுத்த தென்புலியூர் அம்பலவா - [ஏடாகேள்!!!! ]அல்லது [ஆடகப்பொன்!!!!!]
  செந்திருவைப் போலணங்கைச் சிங்காரித் தென்னபயன்
  அந்தகனே நாயகனா னால்.

பொருள் :

 தென்புலியூர் ->சிதம்பரம்
 வடபுலியூர்->திருப்பாதிரிப்புலியூர் [கடலூர் ]
 அம்பலவா->சிவனே
செந்திருவைப் போலணங்கைச் சிங்காரித்->அழகிய  திருமகள்  போல்  அலங்காரம்
 அந்தகனே->கண் அற்றவர்
  
முதல்  இரு  அடிகளை  பாடியது  யார் ? மறு  இரு  அடிகளை  பாடியது  யார்? என்று  தர்க்க புத்தியுடம்(Logical Mind ) நம்மாலும் கேட்க முடிந்தால்  நாமும்  பொமு-வைப்   போல  கவி  மனம்  உள்ளவர்  ஆவோம்!

[5]பழம் படு  ப்னையின் கிழங்கு  கட்டுரை, சங்க காலப் புலவர்களில் ஒருவரான சத்திமுத்தப் புலவர்  பாடிய , நாம்  பள்ளியில்  கற்ற பாடல்  பற்றியது. இவர் வறுமையால் வாடி  தம் ஊர்விட்டு அயலூர் சென்று ஒரு குட்டிச் சுவரின் அருகில் குளிருக்கு ஒதுங்கியிருக்கும் போது பறக்கும்  நாரை  கண்டு, வறுமையிலும் தன் பிரிவாலும் வருந்திக் கொண்டிருக்கும் தன் மனைவிக்கு அதைத் தூதாக அனுப்புவது போல்  பாடியது  தான்

"நாராய் நாராய் செங்கால் நாராய்
பழம்படு பனையின் கிழங்கு பிளந்தன்ன
பவளக் கூர்வார்ச் செங்கால் நாராய்
நீயுநின் மனைவியும் தென்றிசைக் குமரியாடி
வடதிசைக்கேகுவீராயின்
எம்மூர்ச் சத்திமுத்த வாவியுள் தங்கி
நனைசுவர்க் கூரைக் கனைகுரற் பல்லி
பாடு பார்த்திருக்குமென் மனைவியைக் கண்டு
எங்கோன் மாறன்வழுதி கூடலில்
ஆடையின்றி வாடையின் மெலிந்து
கையது கொண்டு மெய்யது பொத்திக்
காலது கொண்டு மேலது தழீஇப்
பேழையுள் இருக்கும் பாம்பென உயிர்க்கும்
ஏழையாளனைக் கண்டனம் எனுமே"

இப்  பாடலின்  எளிமை கண்டு  வியக்கும் பொமு , பாடலின்  அழகையும் ,ஒப்பற்ற உவமையையும்  இரசிக்கின்றார்.  [நீங்களும்  தான்  நாரையின் நீண்ட  மூக்கை  எதோ  ஒன்று  உடன்  உவமைப்  படுத்தி  பாருங்கலேன் !] 

இது  போல  மொத்தம் 2+14  கட்டுரைகள் கொண்ட  இப்  புத்தகம்  ,பொமு-வின்  சுய  அனுபவத்துடன்  தனிப்பாடல்களை வருடிச்  சென்று  வாசகர்களுக்கு   புதுப்  பார்வையை  கொடுக்கின்றது . 

அன்புடன் ,
கி.செந்தில்குமரன்
https://www.facebook.com/senthilkumaran.krishnamurth
http://vansunsen.blogspot.in/2014/02/net-of-spiro-essays-critics.html

குறிப்பு :
இக் கட்டுரை  விமர்சனத்தை  , இயற்கை ஒளியுடன்  இயைந்த நம்  திரைக் கலைஞன்  திரு  பாலுமகேந்தரனுக்கு கணிக்கை  செய்கின்றேன்.    

Saturday, February 8, 2014

சாதியும் நானும் -கி.செந்தில்குமரன்[Cast and I -K.Senthilkumaran]

 "........பள்ளிப்   பருவம் முடியும்  வரை அவ் உடற்பயிற்சி  ஆசிரியர்   கண்களில்  படாமல்  கால் பந்தாட்ட  களத்தில்  புயல்  போல  ஓடிக்கொண்டு தானே    இருந்தேன்......"

தமிழ்ப் பேராசிரியர்,படைப்பாளி  திரு பொமு-வின் "சாதியும் நானும் "என்ற  கட்டுரை நூலுக்கான  முன்னுரையைப்   படித்த  போது ,எனக்கும்   இப்படி ஒருக்  கட்டுரை எழுதினால்  என்ன  என்று  தோன்றியது. விரல்கள் கணினிப்  பலகையைத்  தானாகவேத்  தட்டத்  தொடங்கின. பற் பல  சம்பவங்கள்  திரைப்படப்  பின்கதைப்  போல  மனதுல்  சுழன்று  அடித்தனஅச்       சம்பவங்களை  காலவரிசைப்படியே  தொகுபாக்கப்  போகின்றேன்.

[1] நான்  மூன்றாவது அல்லது நான்காவது  வகுப்பு  படித்த போது ,எம் உடற்பயிற்சி  ஆசிரியர்  வேப்ப மரத்தடியில்  சும்மாகவே  நின்று  கொண்டு  இருந்த என்னை கூப்பிட்டு  என்ன  சாதி  என  கேட்டார். சாதி தெரிந்தாலும்  தெரியாதது  போல  "திரு  திருஎன  முழித்த  என்னை  அய்யர்  வீட்டுப்  பையனா  எனறு  மீண்டும்    கேட்டார். இல்லை  என்று  பொருள்  பட  தலையாட்டினேன். என்ன  நினைத்துக்  கொண்டாரோ  எனக்குத்  தெரியாது , பின்பு  போகச்  சொல்லிவிட்டார். அதற்கு பின்பு   உடற்பயிற்சி வகுப்புகளில்  நான் ஏன்  ஆசிரியர்  அருகில்  , மரத்தடியில் நிற்கின்றேன் ! பள்ளிப்   பருவம் முடியும்  வரை அவ் உடற்பயிற்சி  ஆசிரியர்   கண்களில்  படாமல்  கால் பந்தாட்ட  களத்தில்  புயல்  போல  ஓடிக்கொண்டு தானே    இருந்தேன்நான் பெரியவன்   ஆனப்  பின்பு     பெரியப்பா  அவ் உடற்பயிற்சி  ஆசிரியரை  தன்  கூடப்  பயின்ற  சகத்  தோழன்  என  தற்ச்  செயலாக கூறியப்  பின்பு தான்  அச்  சம்பவத்தின்  மீதான  என்  மன  இறுக்கம்  தளர்ந்தது.

[2]பத்தாவது  அல்லது  அடுத்த வகுப்பு  பயின்ற  காலக்  கட்டத்தில் "சாதிச்  சான்று  இதழ்" ன்  முக்கியத்தும்  கருதி  அதை  வாங்க நான்  எடுத்த முயற்சிகள் ! ஒன்று ,இரண்டு  நாட்களில்  வாங்கப்பட  வேண்டிய       VAO,RI கையேழுத்துகளை  நம் தமிழகத்தின் "சிறப்பானநடைமுறைகள்   அன்று  உண்மையாகவே  தெரியாததால்  பத்து  நாட்களுக்கு  மேல்  ஆனப்  பின்பு  தமிழகத்தின் எளிய   நடைமுறைகள்  மூலமே பெற்றேன். கையில்   சாதிச்  சான்று  இதழ் கிடைததும்  எதோ  சாதித்த மகிழ்ச்சி !

[3]கல்லூரிப்  படிப்புகாக நான்  வெளியூரில்  இருநத போது  ஆசிரியரான  என்  அம்மா  ,என்  சாதியில்  +2 வில்  முதல்  இடம்  வந்தமைக்காக  சென்னைச்  சென்று  அவர் சாதித்  சங்கத்தில்  பரிசுப்  பெற்றது என்  மனதை  மிகவும்  பாதித்தது. அம்மாவுடன்  பல  மாதங்கள் தீராத சண்டை.     ஆனால் கல்லூரியில்  பயிலவே , திருமணத்துக்கோ     சாதிச்  சான்று  இதழும் ,சாதீயும்  பயன்படாதது [நான்  பயன்படுத்தாத்து] என்  அளவில்   மகிழ்ச்சியை  கொடுக்கின்றது. கல்லூரி நாட்களில்  கம்யூனிஸ்ட்  தோழர்களுடனான  நட்பு [      ] ,அவ்ர்களின்  சாதிய  அடக்கு  முறைக்கு எதிரான  போராட்டங்கள், கருவறை   நுழைவுப்  போராட்டம் ,    ஆகியவை  சாதியத்த்துக்கு  எதிரான  என்  பார்வையை  கூர்மைப்  படுத்தியது. அய்யர்  வைத்து  நல்ல  நாள்  எல்லாம்  பார்க்காமல், யார்  வற்புறுத்தலும் இல்லாமல்     எதோ  ஒரு நாள் சாதிச்  சான்று  இதழ்-யை  கிழித்து  ஏறிய  வைத்தது.

[4]வேலை ,வேலை  என  பல  ஊர்  ஓடினாலும்  ,மல்லச்சமுத்திரம்  செல்லும்  வரை  சாதீ  என்னைச்   தொட்டது  இல்லை.விசைத்  தறி  சிறு  முதலாளிகள்  தம்  குடும்பத்துடன்  எளிய வாழ்க்கை வாழும் சிற்றூர்  அது. அழகீய  ஊர்அங்கு நான்  வாழ்ந்த நான்கு  ஆண்டுளில்  என்  சாதியை  அறியும்  ஆவல்  அங்கு வாழும்  மக்களுக்கு    இரண்டு ,மூன்று  முறை  ஏற்பட்டது. அப்போது எல்லாம்  தமிழன்  எனக்  கூறி  எதிர்கொண்டேன்.

[5] 30+ வயதுகள்  ஆனப்பின்பும்   திருமணமாகாமல்  இருந்த என்னை , என்  நண்பனும்நான்  வேலைச்  செய்த கல்லூரியில்  என்  துறைத்தலைவரும் ] "பிள்ளை சாதியா  ?" , "கேரளப் பெண்  பார்கலாமா" என  அக்கறையுடன்  கேட்பார்முதல்  கேள்விக்கு  குசும்புச்  சிரிப்பையும் ,இரண்டாம்     கேள்விக்கு பதட்டத்துடன்
வேண்டாம்   எனக்  கூறியும் தப்பிப்பேன்.[ திரு பொமு-வின் கங்கணம்  படித்தப்  பின்பு  தான் இரண்டாம்     கேள்விக்கான  பொருள்  விளங்கியது ]

[6] இன்று  நம்மத் தல பெரியார் ,கம்யூனிஸ்ட்டுகள்  , என்   பெரியப்பா  இவர்களை  வழிகாட்டியாக  வைத்து  நானும் கலப்புத் திருமணம்  செய்து  கொண்டு  என்  பொன்சாதியுடனும் ,மகன்  சிவகார்திகேயன் உடனும்     மகிழ்ச்சியாகத்தான்  வாழ்கின்றேன்.


[7] இதைப்  படிக்கும்  உங்களால்  ,நான் பிறந்த சாதீயை  கண்டுபிடிக்க முடிந்தால்  , நான்  இவ்வளவு  நாள் [பிறவிப்  பெருங்கடலின்  பாதியை  கடந்துவாழும்  வாழ்க்கைக்கு  அர்தமே   இல்லை.   

பின் குறிப்பு :

இக்  கட்டுரையில்  இட ஒதுக்கீடுக்கு  எதிராக  பொருள்  கொள்ள  படக்கூடிய  அபாயம்  உள்ளது. என்  அளவில் சாதியை  நான் எதற்கும்  பயன்  படுத்தக்  கூடாது என்பது  தான்  என்  நோக்கம், என் கொள்கைமேலும்  எம்  மாணவர்கள்  பலர் , என்  நண்பர்கள் ,என்  மனைவி  ஆகியவர்கள்   இட ஒதுக்கீடு மூலம்  அடைந்தச்  சமுக ,பொருளாதார முன்னேற்றங்களை   உணர்ந்தும் ,ஆதரித்தும்   தான்    இக்  கட்டுரையை  நான் எழுதியுள்ளேன்.

அன்புடன் ,
கி.செந்தில்குமரன்

Thursday, February 6, 2014

துயரமும் துயர நிமித்தமும் கட்டுரைகள் – பெருமாள் முருகன் [ஓரு சிறு விமர்சனம்](Critics About Causes Of Sadness -Essays -Perumal Murugan)

".........வெவ் வேறு  [தளங்களில் ,காலக் கட்டத்தில் ,நேக்கத்தில்] பெமு-வின்  இக்  கட்டுரைகள்  எழுதப்பட்டாலும், இவற்றை புத்தகமாக  பதிப்பிக்கும்  போது  வாசகன்  சம  நிலையில்  ஆன    விமர்சனத்தை  நாடுவது  இயற்கை  தானே......."


[ 1 ] நிராகரிப்பின்  உந்துதல் என்ற  பெயரிட்ட  முன்னுரைக்கட்டுரையும் ,இருபது கட்டுரைகளும் , இக் கட்டுரைகளுக்கான  வெளியீட்டு  விவரங்களும், இறுதியில்  பொருளடைவும் [Indexing Table]  கொண்ட  எனது  "நீண்ட  நாள்  நன்பனாகிய" இன்  நூல் பல்கலைக்கழகப்  பாடத்திட்த்தின் படி   தமிழ்,ஆங்கிலம்,  மொழியியல் போன்ற  துறைகளில்  பயிலும் மாணவர்களுக்கு  தமிழ்ப் பேராசிரியர் திரு பொமு-வின் ஒரு    அறிவுச்சார்  நல்லப்  ப்ரிசு. நிராகரிப்பின்  உந்துதல் என்ற முதல் கட்டுரை[முன்னுரை] ,படைப்புகள்  மீதான விமர்சனப்  பார்வை  எப்படி  இருக்க வேண்டும்  என்  எளிமையாக   கூறுகின்றது.

[ ௧  ] படைப்பை  நோக்கி  ஈர்த்தல்
[ ௨ ] படைப்பு  குறித்த  பார்வையை  உருவாக்குதல்
[௩  ] ப்டைப்பின் உள்ளார்ந்த-நுட்பமான  அரசியலை  வெளிப்படுத்துதல்

விமர்சனக்  கலைக்கான  இலக்கணத்தை  முன்று  அடியில் இவ்வளவு    எளிமையாகவும் ,கருத்துச் செறிவுடனும்  இதுவரை  நான் கற்றதும்  இல்லை கேட்டதும்  இல்லை .  இந்த இலக்கணப்படியே  இன்  நூலை[எந்த   நூலையும் ] விமர்சனம்  செய்வது  நன்று.

[ 2 ]உதிரக்ககவிச்சி  ப்டிந்த கவிதைகள் என்ற  முதல்  கட்டுரை ,திரு  சுகந்தி  அவர்கள்  எழுதிய "பூதையுண்ட  வாழ்க்கை" என்ற  பெண்ணீயம்  பேசும் கவிதைத்  தொகுப்புக்கான  வாழ்த்துக்கூறும்  நம்  தமிழ்  மரபுப்   படியான  பின்னுரை.   நிறைகளை  மட்டும்  கூறும்  நம்  மரபு  சார்ந்த  இந்த  பின்னுரையின்  குறையும்  அதுவே ..   வீட்டை  விட்டு  அதிகம்  வெளிச்  செல்ல  வாயப்பு  இல்லாத  ஒரு  பெண்ணின்  குரலாக   இந்தக்  கவிதை   ஒலிக்கின்றது.

"ஆனாலும்  ஆறு போய்க்
கொண்டிருந்தது
ஏனோசிரித்துக்  கொண்டேன்"

மிக்க  அழகியல்  வடிவத்தில்  ,நடுத்தர  குடும்பப்  பெண்களின்  உடல்,மனம்  சார்ந்த வலிகளையும்,  நுட்பபமான  மன  இயல்புகளையும்  பதிவுச்  செய்யும்  இக் கவிதைத்  தொகுப்பு ,கீழ் நடுத்தரக்  குடும்பப்  பெண்களின் வாழ்க்கை  மீதும்  கவனம்  செலுத்தி  இருந்தால்  முழுமைப்   பெற்று இருக்கும். [என்பதை  பெமு  தன் "உதிரக்ககவிச்சி  ப்டிந்த கவிதைகள்" கட்டுரையில்  கூற  தவறினார் ]



[ 3 ] "சமையலறையில் தேயும்  சாமான்"  கட்டுரை  ஆய்வுச்  செய்யும் ,திரு அழகிய நாயகி  அவர்களால்  எழுதப்பட்ட  சுய கதை  வடிவத்தில்  ஆன  திரு பாமா-வின்  "கருக்கு"-யை  போன்ற  ஒரு  பெருங்கதை தான் "கவலை".   தன்  சாதி  மீதான  அடக்கு  முறைகளை  போராடித்  தீர்த்த  ஒரு  இனக்குழுவைச்  சேர்ந்த    அம்மாவின்  இந்த சுயக்கதை, தன்  வீடு  சார்ந்த   உரவுச்  சிக்கல்களை  நாகர்கோவில்-நாடார்  மக்களின்  மொழி  நடையில்  எழுதப்பட்டு  உள்ளது. பிறரை [தந்தையை] ஏச  சாதியத்தின்    அடிப்ப்டையில் பயன்  படுத்தப்படும்  சொற்கள்  [உம்: சண்டாளன்]மீது    வைக்கப்பட வேண்டிய    விமர்சனம்,  பெமு  வின் கட்டுரையில் கூர்மையானதாக  இல்லை.



[4]தலித்தியர்  இலக்கியம் பற்றிய [மார்க்ஸ்யிய-தலித்திய] விமர்சகர்களால்  கூறப்படும் வரையறைகளுடன்  தொடங்கும் "மீள்வாசிப்பில்  பாமாவின்  நாவல்கள்" என்ற இக்  கட்டுரை மிகவும்  நேர்மையாகவும்,பெமு அவர்கள் முன்னுரையில் சொன்ன இலக்கிய விமர்சன வரையரைக்கு   உட்பட்டும்     திரு  பாமா  அவர்களின் இரு சுயக்கதைகளையும் [கருக்கு ,சங்கதி]   விமர்சிக்கிறது.   தலித்தியர்களில்  தமக்கும்  கீழ் கட்டுமனத்தில்  உள்ள சாதியினரை "ன்" விகுதியுடன்  அழைக்கும்  பாமாவின் உள்ளார்ந்த அரசியல்  பார்வை  பெமு  அவர்களால்  சரியான  முறையில்   விமர்சிக்கப்பட்டு  உள்ளது. மேலும்  நாட்டார்  சிறு  தெய்வங்கள்  மீது  பாமா  அவர்கள்  கூறும் இழிச்  சொற்கள் [உம் : கண்டாரோளி]   பெமு  அவர்களால்  சரியான  முறையில்   விமர்சிக்கப்பட்டு  உள்ளது. இந்த கட்டுரையில்  கருக்கு கதை நேர்காணல்[கேள்வி பதில்  வடிவில்] உள்ளது  என  பெமு  கூறியப்படி   பார்த்தால் ,எந்தப்  படைப்புக்கும்  இந்த    அபாயம்  உள்ளது  என்பதை  நாம்  மறுக்க முடியாது .[ திரு  பெருமாள்  முருகனின்  முதல்  பெருங்கதை  ஏறுவெய்யிலை  கோனார்  பதிப்பக்கம்  மாணவர்  நன்மை  கருதி!!!  வெளியிட்ட  கதையை  நாம்  மறக்க  முடியுமா?]. பாமாவின்  படைப்புகள்  மீது  திரு  பெமு  வைக்கும்  கறாரான  விமர்சப்  பார்வை  மற்ற  இரு  பெண்  படைப்பாளிகளின் படைப்புகள்  மீது  இல்லாதது  இந்த  நூலின்  பெருங்குறை[ஆளண்டாப்     பட்சி  பங்களிப்  பாகப்  பிரிவினைப்  போல பெருங்குறை]  .  வெவ் வேறு  [தளங்களில் ,காலக் கட்டத்தில் ,நேக்கத்தில்] பெமு-வின்  இக்  கட்டுரைகள்  எழுதப்பட்டாலும்,இவற்றை புத்தகமாக  பதிப்பிக்கும்  போது  வாசகன்  சம  நிலையில்  ஆன    விமர்சனத்தை  நாடுவது  இயற்கை  தானே.


துயரமும்  துயர  நிமித்தமும் கட்டுரைகள்  நூல் ஒன்று+இருபது   விமர்சன கட்டுரைகள்  கொண்டு  இருந்தாலும்  நேரம்,இடம் கருதி  நம் தமிழ்  நாட்டின்  படைப்புத் துறையில்  ஆர்வம்  உள்ள முன்று தமிழ்  மகளிர் படைப்புகள்  மீது  பெமு  வைக்கும்   விமர்சனங்களை   மட்டுமே  என்னால்  ஆய்வுச்  செய்ய  முடிந்தது.

அன்புடன் ,

கி.செந்தில்குமரன்