“..........சிறுதினை மலரொடு,மறி அறுத்து” உண்டு வாழ்ந்த திருமுருகாற்றுப்படை அசைவ முருகன் பார்பனர்களால் குட முழுக்கு சிகிச்சை மூலம் சைவனாக மாற்றப்பட்டான்........."
ஆதாரம் :
ஆதாரம் :
திருமுருகாற்றுப்படை 6 – பழமுதிர்சோலை
சிறுதினை மலரொடு விரைஇ மறிஅறுத்து //ஆட்டுக் கிடாயை அறுத்து,
வாரணக்கொடியொடு வயிற்பட நிறீஇ
ஊர்ஊர் கொண்ட சீர்கெழு விழவினும்
ஆர்வலர் ஏத்த மேவரு நிலையினும்
வேலன் தைஇய வெறிஅயர் களனும்
காடும் காவும் கவின்பெறு துருத்தியும்
யாறும் குளனும் வேறுபல் வைப்பும்
சதுக்கமும் சந்தியும் புதுப்பூங் கடம்பும்
மன்றமும் பொதியிலும் கந்துடை நிலையினும் …
தெளிவுரை:
“சிறிய தினைஅரிசியைப் பூக்களுடன் கலந்து பல பாத்திரங்களில்
பரப்பி ‘பிரப்பு அரிசி’யாய் வைத்து, ஆட்டுக் கிடாயை அறுத்து,”
கோழிக் கொடியை அதற்குரிய இடத்தில் நிறுத்தி ஊர்தோறும்
கொண்டாடப்படும் பெருமையுடைய விழாவிலும், அன்புடைய பக்தர்கள்
திருமுருகப்பெருமானை வழிபட்டு போற்றும் பொருத்தமான இடத்திலும்
வேலன் மிக்க மகிழ்ச்சியுடன் ஆடும் ‘வெறியாடு’ களத்திலும், காட்டிலும்,
சோலையிலும், அழகான [தீவு போன்ற] ஆற்றிடைக்குறையிலும், ஆறு,
குளம் ஆகியவற்றின் கரைகளிலும், வேறு பல இடங்களிலும், நான்கு
தெருக்கள் சந்திக்கும் சதுக்கத்திலும், மூன்று தெருக்கள் சந்திக்கும்
முச்சந்தியிலும், புதுமலர்களை உடைய கடம்பு மரத்தினடியிலும், ஊரின்
நடுவில் உள்ள மரத்தினடியிலும், அம்பலத்திலும், கந்து நடப்பட்டுள்ள
இடத்திலும் …”
நன்றி
நன்றி
No comments:
Post a Comment